Thursday, 31 January 2013 | By: Menaga Sathia

சீரக ரசம் /Jeera(Cumin Seeds) Rasam

தே.பொருட்கள்

புளி கரைசல் - 2 கப்
தக்காளி -1
மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்துப் பொடிக்க

மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க
கடுகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
நெய் - 1 டீஸ்பூன்



செய்முறை
*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

*புளிகரைசல்+தக்காளி+உப்பு+மஞ்சள்தூள்+பெருங்காயத்தூள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கலந்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் பொடித்த பொடியை தூவி 5 நிமிடம் கழித்து நுரை வரும்போது இறக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
Tuesday, 29 January 2013 | By: Menaga Sathia

மரவள்ளிகிழங்கு சூப்/Tapioca (Maravalli kizhangu) Soup



நார்மலாக மரவள்ளிக்கிழங்கில் தோசைபுட்டு, வடை, பொரியல் என செய்வோம்.கீதாவிடம் பேசியபோது மரவள்ளிகிழங்கில் புது ரெசிபி சொல்லுங்க என கேட்டபோது அதில் சூப் செய்தால் நன்றாக இருக்கும் என சொன்னாங்க.அதன்படி செய்ததில் ரொம்ப சூப்பரா இருந்தது.

தே.பொருட்கள்

மரவள்ளிகிழங்கு - 1 நடுத்தர அளவு
பால் - 4 கப்
உப்பு - தேவைக்கு
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*கிழங்கை கழுவி குக்கரில் 2 விசில் வரை வேகவைத்து தோலெடுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் பாலை கொதிக்கவைத்து வெண்ணெய்+உப்பு+அரைத்த கிழங்கு சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

*கொஞ்சம் கெட்டியான பதத்தில் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

*இந்த சூப் மிக சுவையாக இருக்கும்.

பி.கு

*நான் கிழங்கினை என் விருப்பத்திற்கேற்ப கொரகொரப்பாக அரைத்தேன்,அவரவர் விருப்பப்படி நைசாக அரைத்தும் சேர்க்கலாம்.




Monday, 28 January 2013 | By: Menaga Sathia

பாகற்காய் ஜூஸ்/Bitter Gourd Juice


பாகற்காயில்  விட்டமின் பி1,பி2,பி3  மற்றும் விட்டமின் சி,மாக்னீசம்,போலிக் ஆசிட்,இரும்புசத்து  என நிறைய விட்டமின்கள் இருக்கு..இது மிகவும் குறைந்த கலோரி மற்றும் அதிகளவு நார்சத்து கொண்ட காய்.

இது ப்ரோக்கலியை விட இருமடங்கு பீடா கரோட்டின்      கொண்டது. ஸ்பீனாச்சைவிட இருமடங்கு  கால்சியம் சத்துக் கொண்டது.வாழைப்பழத்தை விட இருமடங்கு பொட்டசியம் நிறைந்தது.

தே.பொருட்கள்

பாகற்காய் -1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+மிளகுத்தூள்  -தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை

*பாகற்காயை விதை நீக்கி அரிந்து 3/4 நீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

*அதனுடன் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து கலக்கி மிளகுத்தூள் மேலூ தூவி பருகவும்.

பி.கு

*பாகற்காயின் கசப்பிற்கேற்ப எலுமிச்சை சாறை சேர்த்து குடித்தால் கசப்பு தெரியாது.
Sending to Vimitha's Hearty n Healthy Event
Friday, 25 January 2013 | By: Menaga Sathia

மா விளக்கு/ Maa Vilakku

மெயிலில் சிலபேர் கேட்டதால் அவர்களுக்காக இந்த பதிவு....மாவிளக்கு போட்டு அம்மனை வழிபடுவது நலம்..செய்தால் நான் மட்டும் சாப்பிடவேண்டும் என்பதால் கொஞ்சமாகதான் செய்வேன்.மாவிளக்கு உடன் தேங்காய்ப்பல் சேர்த்து சாப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும்.

தே.பொருட்கள்

பச்சரிசி - 1/4 கப்
துருவிய வெல்லம் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும்.

*உலர்ந்ததும் நைசாக   பொடிக்கவும்

*அதனுடன் வெல்லம் சேர்த்து பிசையவும்.அரிசியின் ஈரபதத்திலயே    வெல்லம் பிசைய ஈசியாக இருக்கும்.

*உருண்டையாக பிடித்து நடுவில் குழிபோல் செய்து நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி படைக்கவும்.

பி.கு

அரிசி+வெல்லம் சேர்த்து பிசையும் போட்டு தண்ணீர் தெளித்து பிசையக்கூடாது.

Tuesday, 22 January 2013 | By: Menaga Sathia

தோசை உப்புமா / Dosa Upma

தே.பொருட்கள்:

தோசை - 4
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -1
இட்லிபொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :

*தோசையை ப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைத்து எடுத்து நன்கு  உதிர்த்துக்கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய்+நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+வெங்காயம்+பச்சை மிளகாய் +உப்பு+சர்க்கரை என ஒன்றன் பின் ஒன்றாக  சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் உதிர்த்த இட்லி சேர்த்து கிளறி இட்லிப்பொடி தூவி கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

*இனிப்பு+புளிப்பு+காரம் நிறைந்த சுவையில் இருக்கும் இந்த உப்புமா.

பி.கு

*இந்த உப்புமா செய்வதற்கு இட்லி / தோசையை ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் உதிர்க்க சுலபமாக இருக்கும்.

Monday, 21 January 2013 | By: Menaga Sathia

வெந்தயக்கீரை புலாவ்/Methi Pulao



தே.பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
வெந்தயக்கீரை - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
பூண்டுப்பல் - 4
இஞ்சி - சிறுதுண்டு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 3

தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2
 
செய்முறை:
*கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி வைக்கவும்.

*குக்கரில் நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது+மஞ்சள்தூள்+வெந்தயக்கீரை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.


*பின் மஞ்சள்தூள்+உப்பு+1 கப் நீர்+2 கப் தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.


*ப்ரெஷர் அடங்கியதும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி அப்பளம் அல்லது வறுவலுடன் பரிமாறவும்.
Sending To Vimitha's Hearty & Healthy Event
Thursday, 17 January 2013 | By: Menaga Sathia

சரவணபவன் ஹோட்டல் டிபன் சாம்பார் /Saravana Bhavan Hotel Tiffin Sambhar

ஏற்கனவே இட்லி சாம்பார் காய்கள் சேர்த்து நான் செய்வதுண்டு.இந்த முறை ஹோட்டலில் செய்வதுபோல் செய்தேன்.

தே.பொருட்கள்

துவரம்பருப்பு - 2/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு+ உளுத்தம்பருப்பு+சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1

செய்முறை

*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.அரைகக் கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி+தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

*பின் அரைத்த விழுது +உப்பு+1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்.


*இந்த சாம்பார் இட்லி,தோசை,சப்பாத்தி,வெண்பொங்கல்,ஊத்தாப்பம் என  அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.

பி.கு

*சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

*சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும்.  நான் சேர்க்க மறந்துவிட்டேன்.

*2/3 கப் = 10 டேபிள்ஸ்பூன்+ 2 டீஸ்பூன்

*இதில் விரும்பி்னால் முருங்கைக்காய்,கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்.
Thursday, 10 January 2013 | By: Menaga Sathia

தென்னிந்திய சைவ உணவு/South Indian Veg Thali

நீண்ட நாட்களாக சைவ ஒட்டல்களில் உணவு பரிமாறுவதுப்போல் செய்ய வேண்டும் என்று ஆசை.கடைசியாக கிறிஸ்துமஸ் முதல்நாளன்று செய்தேன்.

இடமிருந்து வலமாக  

ஆரஞ்சுப்பழ கேசரி, கத்திரிக்காய் சாம்பார்,தக்காளி ரசம்,தயிர், உருளை வறுவல், பச்சைப் பட்டாணி கோஸ் பொரியல்,கேரட் பீன்ஸ் பொரியல்,அப்பளம்,மோர் மிளகாய் மற்றும் சாதம்..

பச்சைப் பட்டாணி கோஸ் பொரியல்

தே.பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கோஸ் -1 கப்
நறுக்கிய வெங்காயம் -1
கீறிய பச்சை மிளகாய் -2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும். அந்த நீரை கீழே ஊற்றவேண்டாம்

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+கோஸ்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி பட்டாணி வேகவைத்த நீரை ஊற்றி வேகவிடவும்.

*கோஸ் வெந்ததும் வேகவைத்த பட்டாணி+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு
*இதற்கு ப்ரோசன் பட்டாணி மற்றும் ப்ரெஷ் பட்டாணியை விட காய்ந்த பட்டாணியை ஊறவைத்து செய்தால்தான் நன்றாக இருக்கும்.

*இதே போல் கோஸ் பதிலாக பீட்ரூட்டிலும் செய்யலாம்.


Monday, 7 January 2013 | By: Menaga Sathia

க்ரோசண்ட்/ Croissant

Recipe Source: Julia Child

கொடுத்துள்ள அளவில் நான் பாதி அளவில்  சேர்த்து செய்துள்ளேன்.இந்த அளவில் 6 க்ரோசண்ட் வரும்.

தே.பொருட்கள்

ஈஸ்ட் கலவை

டிரை ஈஸ்ட் -1/2 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 டேபிள்ஸ்பூன்
வெதுப்வெதுப்பான நீர் - 1/8 கப் (100°F/38°C)

வெதுப்பான நீரில் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

க்ரோசண்ட் கலவைக்கு

மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
பால் - 1/3 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் -1/4 கப் (= 60 கிராம் /Half Stick = 1/8 lb)
முட்டை - 1 / பால் -மேலே தடவ

செய்முறை

*பாலில் உப்பு+சர்க்கரை+எண்ணெய்+பொங்கிய ஈஸ்ட் கலவை இவறை ஒன்றாக கலந்து மாவில் சேர்த்து பிசையவும்.

*இந்த அளவே மாவு பிசைவதற்கு சரியாக இருக்கும்.தேவையானால் மட்டும் நீர் சேர்த்து பிசையவும்.

*மிருதுவாக 10 நிமிடங்கள் பிசையவும்.
*ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் வைக்கவும்.

*2 மணிநேரம் கழித்து இருமடங்காக உப்பியிருக்கும் மாவை பிசைந்து மீண்டும் வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைத்து எடுக்கவும்.
*வெண்ணெயை அறைவெப்பநிலையில் வைத்து நன்றாக பிசையவும்.
*உப்பியிருக்கும் மாவை Rectangle வடிவில்  உருட்டில் மேல்பாகத்தில் வெண்ணெயை வைக்கவும்.

*வெண்ணெய் தடவாத பகுதியை உள்பக்கமாகவும்,தடவிய பக்கத்தை மேல்பக்கமாகவும் மடிக்கவும்.
*இவற்றை க்ளியர் ராப் கவரில் மடித்து ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
*ப்ரிட்ஜிலிருந்து எடுத்து வடிவில் வெண்ணெய் கலவை வெளியவராதபடி உருட்டி இப்பொழுது மடிப்பு பக்கத்தை மாற்றி முன்பு கூரியதை போலவே அல்லது படத்தில் காட்டியள்ளதுபோல் மடிக்கவும்.

*இது போல் 3 அல்லது 4 முறை செய்யவும்.ஒவ்வொரு மடிப்புக்கு பிறகும் க்ளியர் ராப் கவரில் சுற்றி 1/2 மணிநேரத்துக்கொருமுறை செய்யவும்.

*மீண்டும் Rectangle வடிவில் உருட்டி 3 பாகமாக வெட்டி ஒரு பாகத்தை உபயோகபடுத்தவும்,மற்ற இரண்டியும் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*வெட்டிய பக்கத்தை ஒன்றை Square வடிவில் உருட்டி Diagonale ஆக வெட்டவும்.
*வெட்டியதில் ஒன்றை எடுத்து அடியிலிருது உருட்டினால் படத்தில் உள்ளது போல் வரும்.

*இதுபோல் அனைத்தையும் செய்து பேக்கிங் டிரேயில் இடைவெளி வைத்து அடுக்கி 2மடங்காக உப்பும்வரை வைக்கவும்.

*உப்பியதும் பால்/முட்டையில் சிறிது நீர் கலந்து ப்ரெஷ்ஷால் க்ரோசண்ட் மேல் தடவவும்.
*240 °C முற்சூடு செய்த அவனில் 10-12 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

பி.கு

*இதனை செய்ய எனக்கு 2 நாளானது.

*முதல்நாள் வெண்ணெய் கலவையை மாவில் வைத்து மடித்ததும் ஒர் இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் மீதியுள்ள ஸ்டெப்படி செய்தேன்.

* எத்தனை முறை மடிக்கிறமோ அத்தனை லேயர்கள் வரும்.நான் 5-6 தடவை மடித்து செய்தேன்.அதனால் அதிக அளவில் லேயருடன் மிருதுவாக இருந்தது.
Wednesday, 2 January 2013 | By: Menaga Sathia

அசோகா அல்வா /Asoka Halwa

தே.பொருட்கள்

பாசிப்பருப்பு - 1/4 கப்
சர்க்கரை - 1/2 கப்
கோதுமைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதா  - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் -1/2  கப்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் + கேசரி கலர் - தலா 1/4 டீஸ்பூன்
முந்திரி - 6

செய்முறை

*குக்கரில் சிறிது நெய்விட்டு பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.

*பின் முழ்குமளவு நீர் விட்டு நன்கு குழைய வேகவிடவும்.
*வெந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.
*கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுக்கவும்.

*அதே கடாயில் மைதா+கோதுமைமாவு போட்டு வறுக்கவும்.
*பின் அரைத்த பாசிபருப்பு விழுது+சர்க்கரை சேர்த்து கிளறவும்.

*இடையிடையே நெய் +எண்ணெய் சேர்த்து கிளறி விடவும்.
*இடையே கேசரி கலர்+ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
* நெய் பிரிந்து வரும் போது முந்திரி சேர்த்து இறக்கவும்.
*இதனை இளஞ்சூடாக இருக்கும்போது சாப்பிட சுவையாக இருக்கும்.

பி.கு

*இதில் மைதா சேர்த்து செய்தால்தான் அல்வா போல மினுமினுப்பாக இருக்கும்.
01 09 10