Tuesday 30 October 2012 | By: Menaga Sathia

காலிபிளவர் 65 சாதம் /Cauliflower 65 Rice

சிம்பிளான இந்த சாதத்தை என்னுடைய சுவைக்கேற்ப செய்துள்ளேன்.நன்றி கல்பனா!!

காலிபிளவர் 65 செய்ய

தே.பொருட்கள்

காலிபிளவர் - 1 நடுத்தரளவு
சோளமாவு+ அரிசி மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு புட் கலர் - 1 சிட்டிகை
வரமிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*காலிபிளவரை  சிறுபூக்களாக நறுக்கி உப்பு கலந்த நீரில் 1/2 வேக்காடு வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.

*அதனுடன் மேற்கூறிய பொருட்களில் ஒன்றாக கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சாதம் செய்ய

பாஸ்மதி - 2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -2
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி -  1 கைப்பிடி
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+ கீறிய பச்சை மிளகாய்+தூள் வகைகள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒனறாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் ஊறவைத்த அரிசி+உப்பு+ 3 கப் நீர் சேர்த்து  3 விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் புதினா கொத்தமல்லி+ காலிபிள்வர் 65 சேர்த்து சாதத்தை உடையாமல் கிளறவும்.

*ராய்த்தாவுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

Sunday 28 October 2012 | By: Menaga Sathia

மட்டன் வறுவல் -2/Mutton Varuval - 2

தே.பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 1
நசுக்கிய இஞ்சி பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 20
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*மிளகாயை 2ஆக கிள்ளி விதை நீக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை+காய்ந்த மிளகாய்  போட்டு தாளித்து வெங்காய்ம்+இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

*பின் உப்பு+மஞ்சள்தூள்+கறி சேர்த்து வதக்கி தேவையான நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும்,கறியை நீர் சுண்டும் வரை வதக்கி பரிமாறவும்.
Wednesday 24 October 2012 | By: Menaga Sathia

பால் பாயாசம்/Paal Payasam (Rice Kheer)

ஆஹா என்ன ருசி -இல் பார்த்து பலதடவை செய்துவிட்டேன்.மற்ற பாயாசங்களை விட இந்த பாயாசம் மிகவும் பிடித்துவிட்டது.விரும்பினால் முந்திரி,திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.அது சேர்க்காமலே நன்றாக இருக்கும்.

தே.பொருட்கள்

பாஸ்மதி - 1/4 கப்
பால் - 1 லிட்டர்
சர்க்கரை = 4 - 5 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*குக்கரில் நெய் விட்டு அரிசியை போட்டு லேசாக வறுத்து ஆறவைக்கவும்.
*ஆறியதும் மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
*பொடித்த அரிசி+பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.வெயிட் போட்டதும் சிறுதீயில் 1/2 மணிநேரம் வேகவிடவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் நன்றாக மசித்து சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
*சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும்.

பி.கு


*பாயாசம் ஆறியதும் கெட்டியாகிவிடும்.சர்க்கரை அவரவர் இனிப்பிற்கேற்ப சேர்க்கவும்.
Monday 22 October 2012 | By: Menaga Sathia

வல்லாரைக்கீரை சாலட்/Vallarai Keerai(Indian Penny Wort) Salad

அக்காவிடம் கற்றுக்கொண்ட குறிப்பு.இந்த சாலட் கசப்பு,புளிப்பு ,காரசுவையுடன் இருக்கும்.

இந்த கீரையில் நிறைய மருத்துவக்குணங்கள் இருக்கு.

*வெண்டைக்காய் போலவே இந்தக்கீரைக்கு ஞாபகசக்தியினை அதிகப்படுத்தும் தன்மை உண்டு.

*இந்த கீரை வயிற்றுப்புண்ணுக்கும்,தோல் அலர்ஜி உள்ளவர்களுக்கும்,நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும்,இரத்தசோகைக்கும்,சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் மிக நல்லது.

*இதில் அதிகளவு விட்டமின் B1(Thiamin) ,விட்டமின் B2 (Riboflavin),விட்டமின் B3 (Niacin) ,விட்டமின் B6(Pyridoxine),விட்டமின் K, கால்சியம்,மாக்னீசியம்,சோடியம் என நிறைய இருக்கு.

*இந்த கீரையின் சாறை பயன்படுத்தினால் முடிஉதிர்வை தடுக்கும்.இந்தக்கீரையின் சாறை எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெயைக் கலந்து சூடுபடுத்தி ஆறவைத்து தினமும் பயன்படுத்தவும்.

*கீரை சாறு எடுக்க - இலைகளை நேரடியாக அடுப்பில் வாட்டி சாறினை எடுக்கவும்.

தே.பொருட்கள்
பொடியாக அரிந்த வல்லாரைக்கீரை - 1/2 கப்
பொடியாக நறுக்கிய சிகப்பு வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

பி.கு

சிகப்பு வெங்காயத்திற்கு பதில் நான் வெள்ளை வெங்காயம் சேர்த்து செய்துள்ளேன்.
Thursday 18 October 2012 | By: Menaga Sathia

பனீர் கேபேஜ் ரோல்ஸ்/Paneer Cabbage Rolls

தே.பொருட்கள்

கோஸ் இலைகள் - 4

ஸ்டப்பிங் செய்ய

துருவிய பனீர் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்+தக்காளி - தலா 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+ இஞ்சிபூண்டு விழுது +தூள் வகைகள்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் பனீர் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.


*கோஸ்  இலைகளை முழுதாக எடுத்து கொதிக்கும் நீரில் 3-4 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
*கோஸின் அடிப்பகுதியில் மொத்தமாக இருக்கும் தண்டினை மேலாக வெட்டி எடுத்தால் சுருட்டுவதற்க்கு எளிதாக இருக்கும்.

*இலையில் ஸ்டப்பிங்கை வைக்கவும்.
*மெதுவாக பாதிவரும் சுருட்டி ஒருபக்க முனைகளை உள்நோக்கி மடக்கி கடைசி வரை சுருட்டவும்.இலைகள் பிரியாது.ஒட்டிக்கொள்ளும்.

*அப்படி ஒட்டவில்லை என்றால் டூத்பிக்கினைக் கொண்டு குத்தி விடவும்.
*ரோலினை ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
*இதனை அவனில் வைத்தும் பேக் செய்து எடுக்கலாம்.200°C  ல் 10 -15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கலாம்.

*கோஸ் இலைகளை முழுதாக எடுக்க முழு கோஸின் அடிப்பகுதி வட்டமாக உள்ள தண்டினை மேலோடும்,சிறிது உள்நோக்கியும் வெட்டி எடுத்தால் இலைகளை பிரியாமல் முழுதாக எடுக்கலாம்.

*இந்த ரோலினை சில்லி கார்லிக் சாஸுடன் பரிமாற நன்றாக இருக்கும்.
Tuesday 16 October 2012 | By: Menaga Sathia

இத்தாலியன் ப்ரெட் சூப்/Italian Bread Soup

இந்த சூப் செய்வதற்கு நாம் வேண்டாம் என ஒதுக்கும் ப்ரெட்டின் ஓரங்களில் இருந்து செய்தது.நன்றி ஜெயஸ்ரீ!!

தே.பொருட்கள்

ப்ரெட்டின் ஓரங்கள்(ப்ரவுன் பகுதி/Bread Crust) - 4/5 ப்ரெட்களிலிருந்து
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 /பாஸ்தா சாஸ் -3 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
வெண்ணெய் -1/2  டீஸ்பூன்
தண்ணீர் -3 கப்
ஆரிகனோ - 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை
*கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டுப்பல்+வெங்காயம்+தக்காளி+ப்ரெட்டின் ஓரங்கள் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் 2 கப் அளவு நீர் சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

*இவற்றை ஆறவைத்து நைசாக அரைத்து மீண்டும் பாத்திரத்தில் உப்பு+மிளகுத்தூள் +ஆரிகனோ +1 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கெட்டியான பதத்தில் இறக்கவும்.

பி.கு

*ஒரிஜினல் ரெசிபியில் பாஸ்தா சாஸ் சேர்த்து செய்திருந்தாங்க,நான் அதற்கு பதில் தக்காளி சேர்த்து செய்தேன்

*பாஸ்தா சாஸ் சேர்ப்பதாக இருந்தால் ப்ரெட்டின் ஒரங்கள் வதங்கிய பிறகு சாஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.

*அவர்கள் செய்த அளவிற்கு சூப் நிறம் வரவில்லை,ஒருவேளை சாஸ் சேர்த்து செய்திருந்தால் வந்திருக்கும்னு நினைக்கிறேன்,ஆனாலும் சுவை மிக நன்றாக இருந்தது.
Sunday 14 October 2012 | By: Menaga Sathia

தந்தூரி சிக்கன் - 2/Tandoori Chicken - 2


ந்த தந்தூரி சிக்கன் செய்முறையில் ஓமம்,கடலைமாவு,கடுகுத்தூள் இவற்றெல்லாம் சேர்ப்பதால் நல்ல வாசனை+சுவையுடன் இருக்கும்.நன்றி சரஸ்வதி!!

தே.பொருட்கள்

சிக்கன் லெக்பீஸ் - 5
எண்ணெய் - தேவைக்கு

மசாலா பொருட்கள் -1

எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
வர மிளகாய்த்தூள் -  1/2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

மசாலா பொருட்கள் - 2

வறுத்து பொடித்த ஓமம் - 1டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்

மசாலா பொருட்கள் - 3

கெட்டி தயிர் - 1 கப்
சிகப்பு கலர் - 2 சிட்டிகை
கடுகு எண்ணெய்/ எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1  டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
வறுத்து பொடித்த கடுகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து மசாலா பொருட்கள் -1ல் கொடுத்துள்ள பொருட்களுடன் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
 *கடாயில் எண்ணெய் விட்டு வறுத்து பொடித்த ஓமம் போட்டு தாளித்து கடலைமாவை போட்டு கட்டிவிழாமல் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
 *மசாலா பொருட்கள் - 3ல் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து அதனுடன் வறுத்த கடலைமாவினை நன்றாக கலக்கவும்.அதனுடன் சிக்கனையும் ஊறவைத்த எலுமிச்சை சாறுடன் கலந்து 2-3 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*முற்சூடு செய்த அவனில் 200 ல் 40 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
Thursday 11 October 2012 | By: Menaga Sathia

கார்ன்மீல் பொங்கல்&தேங்காய் சட்னி -2/Cornmeal Pongal &Coconut Chutney - 2

கார்ன்மீல் பொங்கல்

தே.பொருட்கள்
கார்ன்மீல்(சோளரவை ) - 1/2 கப்
பாசிபருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க 

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
முந்திரி - தேவைக்கு
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/2 டீஸ்பூன்

செய்முறை

*பாசிபருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து கார்ன்மீல் சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.

*பின் வேகவைத்த பாசிபருப்பு+உப்பு + தேவையானளவு கொதிநீர் சேர்த்து கிளறவும்.

*வெந்ததும் நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.
அம்மா தேங்காய் சட்னியை விதவிதமாக செய்வாங்க,அதில் இந்த செய்முறை எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஹோட்டல் தேங்காய் சட்னி போலவே இருக்கும்.

தேங்காய் சட்னி

தே.பொருட்கள்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
புளி -ப்ளூபெர்ரி பழளவு
சின்னவெங்காயம் - 2
பச்சை மிளகாய் -4
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டு -2 பல்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை
*1 டீஸ்பூன் எண்ணெயில் சின்ன வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+பூண்டு  இவற்றை வதக்கவும்.

*ஆறியதும் இதனுடன் தேங்காய்த்துறுவல்+உப்பு+பொட்டுக்கடலை+புளி தேவையான நீர் சேர்த்து மைய அரைத்து தாளித்து சேர்க்கவும்.
Monday 8 October 2012 | By: Menaga Sathia

வெள்ளை பூசணிக்காய் பொரியல்/Simple Ash Gourd Poriyal

தே.பொருட்கள்

துண்டுகளாகிய வெள்ளை பூசணி -2 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பூசணித்துண்டுகள்+உப்பு சேர்க்கவும்.

*தண்ணீர் ஊற்றவேண்டாம்,மூடி போட்டு வேகவிடவும்.

*10 - 15 நிமிடங்களில் வெந்துவிடும்,இடையிடையே கிளறிவிடவும்.

*வெந்ததும் கரகரப்பாக பொடித்த வேர்க்கடலையை தூவி இறக்கவும்.

பி.கு
*வேர்க்கடலைக்கு பதில் தேங்காய்த்துறுவலும் சேர்க்கலாம்.

Sunday 7 October 2012 | By: Menaga Sathia

மார்கண்டம் சூப் /Markandam Soup

மார்கண்டம் என்பது ஆட்டின் நெஞ்செலும்பு பகுதி.குழந்தைகளுக்கு இதில் சூப் செய்து கொடுப்பது நல்லது.

தே.பொருட்கள்

மார்கண்டம் -1/4 கிலோ
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*குக்கரில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள்வகைகள்+மார்கண்டம் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் 2 அல்லது 3 கப் நீர்+உப்பு சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பின் சீரகம்+கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். மிளகுத்தூள் சேர்த்து சிறிது கொதித்ததும் இறக்கவும்.

*சூடாக பரிமாற நன்றாக இருக்கும்.


Wednesday 3 October 2012 | By: Menaga Sathia

எலுமிச்சை பழரசம் /Lemon Rasam

 தே.பொருட்கள்:

எலுமிச்சை பழம் - 1
தக்காளி - 4
வேக வைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை -சிறிது
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
கீறிய பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
நெய் - 1 1/2  டீஸ்பூன்
 
செய்முறை :

*பாத்திரத்தில் தக்காளியை பொடியாக அரிந்து 2 கப் நீரில் உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் ரசப்பொடியை தூவி 5 நிமிடம் வெந்த பருப்பை கொட்டி 1 கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*ரசம் லேசாக ஆறியதும் எலுமிச்சைசாறு பிழிந்து கலக்கவும்.சூட்டோடு சாறு பிழிந்து விட்டால் ரசம் கசக்கும்.

*கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.
Monday 1 October 2012 | By: Menaga Sathia

நெய் பிஸ்கட் /Nei (Ghee) Biscuit

தே.பொருட்கள்

மைதாமாவு - 1 கப்
 நெய் - 1/2 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்

செய்முறை

*அவனை 180°C  10 நிமிடம் முற்சூடு செய்யவும்.

*பாத்திரத்தில் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.


*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் வைத்து ,மாவை சிறு உருண்டையாக எடுத்து லேசாக அழுத்தி இடைவெளிவிட்டு வைக்கவும்.


*அவனின்  வெப்பநிலையை குறைத்து 120°C ல் 10 -15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு

* பிஸ்கட் அவனில் இருந்து எடுக்கும் போது வேகாதமாதிரி இருக்கும்.ஆறியதும் சரியாக இருக்கும்.

*அதிகநேரம் வேகவைத்தால் பிஸ்கட் நிறம் மாறிவிடும்.

*இந்த அளவில் 10 பிஸ்ட்கள் வரும்...மாவு பிசையும்போதே நானும்,என் பொண்ணும் கொஞ்சம் சாப்பிட்டாச்சு,கடைசியில் 8 பிஸ்கட்கள் தான் வந்தது.

*அலுமினியம் பாயிலுக்கு பதில் நான் பயன்படுத்தியிருப்பது மீள்சுழற்சி துணி,அவனில் வைத்து பேக்கிங் செய்வதற்கென்றே கடையில் கிடைக்கிறது.இந்த துணியை ஒரு முறை பயன்படுத்திய பின் நீரில் அலசி காயவைத்தாலே போதும்.



01 09 10