Monday, 31 August 2009 | By: Menaga Sathia

சோயா பொடிமாஸ்

தே.பொருட்கள்:

சோயா உருண்டைகள் - 25
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
கேரட் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணேய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை :

*சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து நீரை ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் என்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாயை வதக்கவும்.

*பின் சோயா+கேரட் துறுவலை சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.

பி.கு:

இந்த பொடிமாஸ் சத்து நிறைந்தது.டயட்டில் இல்லாதவர்கள் தேங்காய்த்துறுவலையும் சேர்க்கலாம்.
Friday, 28 August 2009 | By: Menaga Sathia

மேலும் 3 விருதுகள்!!திருமதி.கீதா ஆச்சல் எனக்கு மேலும் 3 விருது குடுத்து சந்தோஷப்படுத்தியிருக்காங்க.அவங்களுக்கு என் நன்றி!!நன்றி!!

இவ்விருதினை ஹர்ஷினி அம்மா,பாயிஷாகாதர் மற்றும் ப்ளாக் நண்பர்களுக்கு வழங்குகின்றேன்.

முட்டை வெஜ் பாஸ்தா

தே.பொருட்கள்:

பாஸ்தா - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 3
கேரட் - 1 சிறியது
உருளைக்கிழங்கு - 1 சிறியது
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+தக்காளி இவைகளை பொடியாக கட் செய்யவும்.

*கேரட்+உருளையை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து பாஸ்தாவை போட்டு சிறிது உப்பு+எண்ணெய் விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.

*வெந்ததும் வடிகட்டி குளிர்ந்தநீரில் அலசி வைக்கவும்.

*கடாயில் பட்டர் போட்டு உருகியதும் வெங்காயம்+தக்காளியை நன்கு மசிக்க வதக்கி காய்கள் அனைத்தையும் போட்டு குறைந்த தீயில் தண்ணீர் விடமால் வதக்கவும்.

*காய்கள் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து லேசா வதக்கவியபின் பாஸ்தாவை போட்டு கிளறவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.

*பின் முட்டையை ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.

*இப்போழுது சுவையான பாஸ்தா ரெடி.
Thursday, 27 August 2009 | By: Menaga Sathia

வாழைக்காய் வடை

தே.பொருட்கள்:

வாழைக்காய் -1 பெரியது
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லித்தழை - சிறிது
கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்
அரிசிமவு - 1/2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:

*வாழைக்காயை தோலோடு கொதிக்கும் நீரில் வேகவைக்கவும்.

*வெந்ததும் தோலை நீக்கிவிட்டு மசிக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லி அனைத்தையும் பொடியாக அரிந்து வாழைக்காயோடு சேர்த்து மாவு வகைகளை உப்பு+சோம்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.

*பிசைந்த மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

பி.கு:

இந்த வடை ரொம்ப ஸாப்டாக இருக்கும்.அதுவும் மிளகாய் சாஸோடு சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

இந்த அளவில் 8 வடைகள் வந்தது.
Wednesday, 26 August 2009 | By: Menaga Sathia

TAG

Priya Raj has Tagged me for this wonderful questions.Thank u Priyaraj!!

The Rules:
1. Link the person who tagged you.
2. Post the rules on your blog.
3. Share the ABCs of you.
4. Tag 4 people at the end of your post by linking to their blogs.
5. Let the 4 tagged people know that they have been tagged by leaving a comment on their website.
6. Do not tag the same person repeatedly but try to tag different people, so that there is a big network of bloggers doing this tag

The Tag:

1. A – Available/Single? No

2. B – Best friend? My mother&Sister

3. C – Cake or Pie? Cake

4. D – Drink of choice? Grapes&oranges juices

5. E – Essential item you use every day? computer&books

6. F – Favorite color? Black& sky blue

7. G – Gummy Bears Or Worms? Gummy Worms

8. H – Hometown? Pondicherry

9. I – Indulgence? blogging&playing with my daughter

10. J – January or February? January

11. K – Kids & their names? One girl - Shivani

12. L – Life is incomplete without? my parents&aim

13. M – Marriage date? 20th Jan 2006

14. N – Number of siblings?3 Brothers& 1 Sister

15. O – Oranges or Apples? Oranges

16. P – Phobias/Fears?Dogs

17. Q – Quote for today? Always be happy

18. R – Reason to smile? My daughter & Tamil films jokes

19. S – Season? Spring&Summer

20. T – Tag 4 People? Kurai ondrum illai, Mrs.Faizakader ,sarusriraj,piriyamudan vasanth

21. U – Unknown fact about me? Unknown

22. V – Vegetable you don't like? I love all veggies

23. W – Worst habit? I believe others easily, so sensitive.

24. X – X-rays you've had? No

25. Y – Your favorite food?sambhar rice&pickle

26. Z – Zodiac sign?Capricorn

சௌசௌத் தோல் துவையல்

நாம் சாதரணமாக சௌசௌ (பெங்களூர் கத்திரிக்காய்) தோலை தூக்கிப் போடுவோம்,அப்படி செய்யாமல் துவையல் செய்து சாப்பிட்டால் நன்றாகயிருக்கும்.

தே.பொருட்கள்:

சௌசௌத் தோல் - ஒரு காயின் தோல்பகுதி மட்டும்.
உளுத்தம்பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
வடகம் -1 டேபிள்ஸ்பூன்
புளி - 1 கொட்டைப்பாக்குளவு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை :

*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு வருத்துக்கொள்ளவும்.

*சிறிது எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியாக வைக்கவும்.

*மீதிருக்கும் எண்ணெயில் சௌசௌத் தோல்+தேங்காய்த்துருவல்+கறிவேப்பில்லை+காய்ந்த மிளகாயை வதக்கவும்.

*ஆறியதும் அனைத்தையும் உப்பு+புளி சேர்த்து கொஞ்ச கொஞ்சமாக நீர் சேர்த்து மைய கெட்டியாக அரைக்கவும்.

*தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து நன்கு வதக்கி ஆறவைத்து பயன்படுத்தவும்.
Tuesday, 25 August 2009 | By: Menaga Sathia

ரவை புட்டு

தே.பொருட்கள்:

ரவை - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
ஏலக்காய் -2
உப்பு - 1சிட்டிகை
நெய் - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை :

*ரவையை சிறிது நெய்விட்டு பிசிறி கடாயில் வறுக்கவும்.ஏலக்காயை பொடிக்கவும்.

*உப்பு கரைத்த நீரை சிறிது சிறிதாக தெளித்து புட்டுமாவு பதத்தில் பிசிறி ஆவியில் வேகவிடவும்.

*வெந்ததும் நெய் தொட்டு கையால் கட்டியில்லாமல் உதிர்த்து ஏலக்காய்ப்பொடி+சர்க்கரை+தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பி.கு:

இந்த புட்டு செய்வது மிகவும் எளிது.விருப்பட்டால் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.
Monday, 24 August 2009 | By: Menaga Sathia

இறால் ஊறுகாய்

நேற்றுதான் ஆனந்தவிகடன் வாங்கிப் பார்த்தேன்.என் ப்ளாக் ஆனந்தவிகடன் வரவேற்பரையில் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் எனக்கு.வெளியிட்ட விகடனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இச்செய்தியை முதலில் தெரிவித்து வாழ்த்து சொன்ன வால்பையனுக்கும் மற்ற தோழர் தோழியர்க்கும் மனமார்ந்த நன்றி!!நன்றி!!நன்றி!!


தே.பொருட்கள்:


இறால் - 500 கிராம்
வினிகர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் -1 1/2குழிக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்து பொடிக்க:

கடுகு - 1/2டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

*இறாலை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*வறுத்து பொடிக்க குடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*கடாயில் இறாலை சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு தனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் உற்றி இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு நன்கு வதக்கி,மிளகாய்த்தூளை சேர்க்கவும்.

*உடனே வருத்த பொடி+உப்பு+வினிகர்+இறால் இவற்றை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.

*மீதமிருக்கும் எண்ணெயை ஊற்றவும்.

*ஆறியபின் உபயோகப்படுத்தவும்.

*1 வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.


கவனிக்க:

இறாலை எண்ணெயில் வதக்கும் போது நீர் விடும்.அது சுண்டும் வரை கிளறி இறக்கவும்.தண்ணீர் சேர்த்து வதக்ககூடாது.
Sunday, 23 August 2009 | By: Menaga Sathia

விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவசை வந்து 4 அல்லது 5 ம் நாள் வரும் சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

எந்த ஒரு பூஜை செய்தாலும் அல்லது நல்லகாரியம் செய்தாலும் விக்னேஸ்வர பூஜை செய்துவிட்டு தான் தொடங்குவார்கள்.

இவருக்கு செய்யவேண்டிய வைவேத்தியங்கள்

அவல்,பொரி,சோளம்,விளாம்பழம்,நாவல்பழம்,வடை,சுண்டல்,மோதகம்,வாழப்பழம்,ஆப்பிள்,கரும்பு.

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல்,விநாயகர் கவசம்,காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.காரிய சித்திமாலை துதியை 3 வேளைகள் அதாவது காலை,மதியம்,மாலை உரைப்பவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும்.8 நாட்கள் ஒதிவர மகிழ்ச்சி உண்டாகும்.சங்கடஹர சதுர்த்தியன்று 8 ஒதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும்,செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

"அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே" என்று இவர் முன் நின்றவுடன் தலையில்க் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு.ஏன் இப்படித் தோப்புக்கரனம் போடவேண்டும் என்பதற்க்கு புராணக்கதை ஒன்று உள்ளது.


ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் மையுமாக வந்துக் கொண்டிருந்தார்.அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகர் அக்கமண்டல நீரை தட்டிவிட்டு ஓடி விட்டார்.காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஒடியது.காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஒடியது என்பதால் "காவிரி" என்று பெயர் அந்நதிக்கு உண்டானது.அகத்தியர் தட்டிவிட்ட காகத்தை திரும்பி பார்த்தார்.அதைக் காணவில்லை.காகம் நின்ற இடத்தில் கொழுகொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அவர் தான் கணபதி.செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்து சிரித்தான்.

கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரைக் கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார்.ஆனால ச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றார்.குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர் அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு,மன்னிக்குமாறு வேண்டினார்.அது முதல் விநாயகருக்கு தோப்புகரணம் இடும் முறை உண்டானது.

பூஜை செய்யும் முறை

பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் போட்டு விநாயகர் படம் வைக்கவும்.அவர் முன் வாழையிலை வைத்து அதன்மேல் பச்சரிசி வைத்து கலசம் வைக்கவும்.கலசத்தில் நீர் அல்லது அரிசி போட்டு அதனுள் எலுமிச்சைபழம்,மஞ்சள்,குங்குமம்,வெற்றிலை,பாக்கு,பூ போட்டு அதன்மேல் தேங்காய் வைக்கவும்.அதன் பிறகு நைவேத்தியங்கள் செய்து,மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யவும்.பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை தொடர்ந்து பூஜௌ செய்ய வேண்டும்.அன்று மாலை சந்திரனைப் பார்த்தல் கூடாது,பூஜை முடிந்த பிறகு பார்த்தல் நலம்.


நாமும் முதல் கடவுளான விநாயகரை வணங்கி அனைத்து நலங்களும் பெறுவோமே.

மோதகம் /Modhagam

தே.பொருட்கள்:

மேல் மாவுக்கு:

 அரிசிமாவு - 2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

பூரணம் செய்ய:

கடலைப்பருப்பு - 3/4 கப்
ஏலக்காய் - 2
வெல்லம் - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்

செய்முறை:

*ஒரு பாத்திரத்தில் 4 கப் நீர் ஊற்றி உப்பு+எண்ணெய் போட்டு நன்கு கொதிக்கவிடவும்.

*பத்திரத்தில் அரிசிமாவு போட்டு கொதிக்கும் நீரை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பின்புறத்தால் நன்கு கிளறவும்.

*சப்பாத்தி மாவு பதத்திற்க்கு இருக்க வேண்டும். அதை ஈரத்துணியால் மூடிவைக்கவும்.மேல் மாவு ரெடி!!


*கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து மலர வேகவைக்கவும்.

*வெந்த பருப்பை நீர் இல்லாமல் வடிகட்டி ஒன்றிரண்டாக மிக்ஸியில் பொடிக்கவும்.

*வெல்லத்தை சிறிது நீர்விட்டு கரைத்து மண்ணில்லாமல் வடித்துக்கொள்ளவும்.

*ஏலக்காயை பொடிக்கவும்,தேங்காய்த்துறுவல்+மசித்த கடலைப்பருப்பு வெறும் கடாயில் வதக்கவும்.

*வெல்லத்தை 1 கம்பிபதம் அதாவது கையில் எடுத்தால் பிசுபிசுப்பாக இருக்கனும் எடுத்து ஏலக்காய் பொடி+கடலைப்பருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.பூரணம் ரெடி.

*மேல்மாவில் சப்பாத்தி மாவு அளவுக்கு உருண்டை எடுத்து எண்ணெய் தொட்டு சொப்பு போல் செய்து பூரணத்தை அதில் வைத்து மாவை அப்படியே மேல் நோக்கி இழுத்து விடவும்.பார்ப்பதற்க்கு தேங்காய்ப் போல் இருக்கும்.*இதே போல் எல்லா மாவையும் செய்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
Saturday, 22 August 2009 | By: Menaga Sathia

மெதுவடை /Medhu Vada

தே.பொருட்கள்:

முழு உளுந்து - 1 கப்
அரிசி - 1 டேபிள்ஸ்பூன்
ஜவ்வரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1 சிரியது
பச்சை மிளகாய்- 2
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பில்லை கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

*உளுந்து+அரிசி+ஜவ்வரிசி இவற்றை 3/4 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் தண்ணீரை வடித்து அதனுடன் பச்சை மிளகாய்+இஞ்சி+உப்பு சேர்த்து கெட்டியாக மைய அரைக்கவும்.

*அரைத்த மாவில் பொடியாக அரிந்த வெங்காயம்+கறிவேப்பில்லை கொத்தமல்லி கலக்கவும்.

*கடாயில் எண்ணெய் காயவைத்து அரைத்த மாவை வடைகளாக பொரிக்கவும்.

கவனிக்க :

மாவு தளர்த்தியாக இருந்தால் மைதாமாவு கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு வடைகளாக பொரிக்கலாம்.

கொண்டைக்கடலை சுண்டல் /Channa Sundal

தே.பொருட்கள்:

கொண்டைக்கடலை - 1 கப்
துருவிய கேரட்- 1டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் -தேவைக்கு
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1டீஸ்பூன்
வெ.உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை- 1 கொத்து
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவிட்டு நீரை வடிகட்டி வைக்கவும்.


*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து கேரட் சேர்த்து கிளறி கடலையை சேர்க்கவும்.


*தேங்காய்த்துறுவலை சேர்த்து இறக்கவும்.

லூர்துமாதா வரலாறு -3 பிரான்ஸ்

லூர்துமாதா வரலாறு -1 பிரான்ஸ்
லூர்துமாதா வரலாறு -2 பிரான்ஸ்

சுற்றி நின்றிருந்த மக்களுக்கு மாதாவைக் காண முடியாவிட்டாலும்,மாதாவை தரிசித்துக் கொண்டிருக்கும் பெர்னாடெட்டின் பரவசமான முகம் தெரியவே,அவர்கள் உடல் புல்லரித்தது.அதற்கு அடுத்த நாள், 18 வது தரிசனம் கேவ் நகரின் அக்கரையில் உள்ள புல்வெளியில் பெர்னாடெட்டுக்குக் கிடைத்தது,இதுவரை தன் வாழ்நாளில் என்றுமே கண்டிராத அளவு அழ்கும்,கருணையும் ததும்பும் மாதாவைக் கண்டாள்.

மூத்த பிஷப்புகளையும்,மூத்த பாதிரியர்களையும் பல பெரியோர்களையும் அறிஞர்களையும் தேடி சந்தித்து ,தனக்கு 18 முறை மாதா தரிசனம் அளித்ததையும்,ஊற்று நீரின் மகிமையை விளக்கியதையும்,தனக்கு கோயில் எழுப்புமாறு கூரியதையும் எடுத்துக் கூறினாள்.ஆனால் அவள் வார்த்தைகளை உடனே நம்ப அவர்கள் தயாராக இல்லை.

"மாதாவின் வார்த்தைகளை உங்களிடம் எடுத்துக் கூறுவது மட்டுமே என் வேலை.நம்புவதும்,நம்பாமலிருப்பதும் உங்கள் இஷ்டம் "என்று ஒதுங்கி விட்டாள் பெர்னாடெட்.அவளது வார்த்தைகளை வழக்காக பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.இதற்கிடையில் நோயினால் பாதிக்கப்பட்ட பலர்,ஊற்று நீரைப் பருகி,மாதாவை வேண்டி பல வகையான நோய்களிலிருந்து குணமடையத் தொடங்கினார்கள்.பொது மக்களின் நம்பிக்கை பெருகி,பலரும் மாதாவை தரிசித்த பெர்னாடெட்டை நாடி வணங்கத்தொடங்கினர்.

மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்த போதும்,தன்னையோ தன் குடும்பத்தையோ வியாபாரப் பொருளாக பொதுமக்கள் மாற்றுவதை விரும்பாத பெர்னாடெட் லூர்ட்ஸ் நகரிலிருந்து நெவர்ஸ் என்ற நகருக்குச் சென்று,அங்குள்ள கிறிஸ்துவ மிஷனின் கான்வெண்ட்டில் சேர்ந்து உடல்நலம் குன்றியவர்களுக்காகச் சேவை செய்யத் தொடங்கினாள்.திரும்ப லூர்ட்ஸ் நகருக்கு வராமலேயே 1879ம் ஆண்டில் தன் 35 வதுவயதில் உயிர்நீத்து அவ்வுலகில் இன்பம் பெற மாதாவை சரணடைந்தாள்.
நெவர்ஸ் கான்வெண்ட்டிலேயே புதைக்கப்பட்ட அவளது உடல்ன,கோயில் கட்டுவதற்காக வாதாடப்பட்ட வழக்கிற்காக 1909ம் ஆண்டு ஒரு முறையும்,1919ம் ஆண்டு ஒரு முறையும் வெளியே எடுக்கப்பட்டது.சிறிதளவு கூட பழுதடையாமல் அவள் உடல் இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.புனிதமேரி மாதாவின் அருள் பூரணமாகப் பெர்னாடெட்டின் மேல் இருப்பது அனைவருக்கும் தெளிவாயிற்று.

லூர்ட்ஸ் நகரில் மாதாவின் விருப்பபடி மிகப் பெரிய ஆலயம், 3 நிலையில் எழுப்பப்பட்டுள்ளது.உலகெங்கிலிருந்தும் மக்கள் திரளாக வந்து மாதாவை வணங்கி ஊற்றுநீரைப் பருகி பலவிதமான நோய்களிலிருந்து குணமடைந்துள்ளனர்.நோயாளிகள் பலர் மாதாவின் கருணையை நாடி ஸ்ட்ரெச்சரில் டிரிப் பாட்டிலுடனும்,சக்கர வண்டிகலீல் ஊனமுற்றவர்களும் திரளாக வருவதை இங்கு காணலாம்.

கைகால் முறிவு,கண்பார்வை பாதிப்பு,காசநோய்,ஆஸ்துமா,பாரிசவாயு,உடலில் பல இடங்கலீல் ஏற்பட்டுள்ள ட்யூமர் என்ற கட்டிகள் எனப் பலவித நோய்களில் இருந்து குணமடைந்த, பல நோயாளிகள் ஊற்று நீரின் பிரசித்ததை கோயிலின் ரிஜிச்தரில் பதிவு செய்துள்ளனர்.பிப்ரவரி 12ம் தேதி பெர்னாடெடிற்க்கு மாதாவின் முதல் தரிசனம் கிடைத்த நாள் "உலக நோயாளிகளின் நாளா"கக் கருதப்படுகிறது.

4,000 மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த லூர்ட்ஸ் நகரம் இன்ரு மிக் முக்கியமான புண்ணியஸ்தலமாக பிரபலமடைந்துவிட்டது.பல்வேறு யாத்ரீகர்கள் வந்து தங்குவதால்.பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரத்திர்க்கு அடுத்தபடியாக இங்குதான் 270 ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு சீஸன் எனப்படும் பருவகாலத்திலும் 6 மில்லியன் கடிதங்கள் நோயாளிகளிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் பிரார்த்தனையாக வந்து சேர்கிறது.இண்டர்நெட்டின் மூலமாகவும் பிரார்த்தனைகள் பதிவு செய்யப்படுகின்றன.அவை மாதாவின் பாதத்தில் சமர்ப்பிக்கபடுகின்றன.

இந்த ஆலயம் அமைந்துள்ள ஊரினை "துலூஸ்" (TOULOUSE) என்றா நகரத்திற்கு விமானம் மூலம் சென்ரால்,அங்கிருந்து சாலை வழியாக சென்றடையலாம்.வழியெங்கும் இயற்கை காட்சிகளே நம்மை நோயிலிருந்து பாதி விடுபடச்செய்யும்.போகும் போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டியது புனித ஊற்றுநீரை நிரப்பி வரத் தேவையான பாட்டிலகள் அல்லது ஜெரிகேன்கள்!மாதா பெர்னாடெட்டிற்கு காட்சியளித்த குகையைத் தொட்டுப் பரவசமடையலாம்.பெழுகுவர்த்திகளை நாமே பணம் போட்டு எடுத்துச் சென்று மாதாவின் முன் ஏற்றலாம்.

யாத்ரீகர்களின் பேரில் ஆலயம் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையினால் நம்மைக் கட்டுப்படுத்த,மெழுகுவர்த்தி விற்க, புனித நீரை நிரப்ப எங்கும் ஆட்களில்லை.புனிதநீர் சிறிய ஊற்றில் பொங்குவதை கண்ணாடி வழியே காணலாம்.அந்நீரை பல்வேரு குழாய்களில் பொதுமக்கள் சிரமமின்றி பிடித்துக் கொள்ள குழாய்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விஞ்ஞான யுகத்தில் இன்னும் நடந்து கொண்டிருக்கும் தெய்வீக அற்புதங்களஒ அங்கு காணலாம்.இந்த புனிதமாதாவை தரிசிக்க விரும்புபவர்கள் இந்தியாவில் கூட தரிசிக்கலாம்.புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்னும் நகரத்தில் லூர்துமாதா கோயில் இருக்கு.பிரான்ஸ் நாட்டிலிருந்து மாதாவின் சிலை வரவைக்கப்பட்டு இங்கு கோயில் அமைந்துள்ளது.நாமும் மாதாவை தரிசித்து அவர்களின் அருளை பெறுவோம்.
Friday, 21 August 2009 | By: Menaga Sathia

லூர்துமாதா வரலாறு -2 பிரான்ஸ்

லூர்துமாதா வரலாறு -1 பிரான்ஸ்

ஊற்று நீர் பெருகுமிடத்தில் இருக்கும் மாதா

1858ம் ஆண்டு பிப்ரவரி பதினொன்றாம் தேதி தன் தோழிகளுடன் காட்டில் கள்ளிப் பொறுக்கவும்.ஆடு மேய்க்கவும் சென்றாள்.கேவ் நதிக்கரையில் பாறைகள் நிறைந்த காட்டில் தோழிகள் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது,பெர்னாடெட்டிற்கு காற்றில் ஒரு ரீங்கார ஒசை கேட்டது.நிமிர்ந்து பார்த்தவர்களுக்கு பாறையின் நடுவே ஒரு இளம்பெண்,கருணை முகத்துடன்,சுற்றிலும் ஒளிவட்டம் வீச நின்றிப்பது தெரிந்தது.என்னவென்று புரிந்து கொள்ளும் முன் அந்தப் பெண் மறைந்து விட்டாள்.

ஆர்வம் மேலிட,தொடர்ந்து அடுத்த நாள் அதே பகுதிக்குப் பெர்னாடெட் போன போது திரும்பவும் அதே காட்சியைக் கண்டாள்.3 ம் நாளும்,4 நாளும் காட்சித் தந்த பிறகு பெர்னாடெட்டிடம் அந்த இளம்பெண்,

"தொடர்ந்து உண்ணால் இந்தப் பாறைகள் நிறைந்த பகுதிக்குப் 15 நாட்களுக்கு வரமுடியுமா?" என்று கேட்டாள். "முடியும்" என்று பதிலளித்த பெர்னாட்டெட்டிடம் "உனக்கு இவ்வுலகில் சந்தோஷத்தை அளிக்க முடியாவிட்டாலும் அவ்வுலகில அளிப்பேன்" என்று கூறி மறைந்தாள்.

தொடர்ந்து 15 நாட்கள் கிரிட்டோவிற்க்குச் சென்ற போது,மேலும் மேலும் தரிசனங்கள் கிடைத்தன.8 தரிசனத்தின் போது "தவத்தில் ஈடுபடு! பாவப்பட்டவர்களுக்காக ஜபம் செய்!" என்ற ஆணை கிடைத்தது.9 வது முறை காட்சியளித்த போது அந்த இளம்பெண் பெர்னாடெட்டை அருகில் அழைத்து,"இக்குகையில் உள்ள மண்ணை உன் நகங்களினால் கீறு,அதில் தோன்றும் ஊற்று நீரில் உன் உடலைக் கழுவிய பிறகு அதனைப் பருகுவாயாக " என்று கூறினாள்.

அவள் வார்த்தைகளுக்குப் பதிலேதும் கூறாமல் அவ்வாறே செய்த போது,மண்ணாக இருந்த ஊற்று நீரைப் பருகியதும் உடலில் உள்ள வியாதியும்,அதனால் ஏற்பட்ட சோர்வும் நீங்கிய உணர்வைப் பெற்றாள்.ஆஸ்துமா நோயினால் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு மூச்சு நன்றாக விட முடிந்தது.புல்லரிப்புடன் திரும்பிப் பார்த்த போது ஊற்று நீர் குபுகுபுவெனப் பெருகத் தொடங்கியது.

இவர் தான் பெர்னாடெட்

அடுத்து வந்த தரிசனங்களில் அந்த ஊற்று நீரை பருகினால் உடலில் உள்ள நோய்கள் நீங்கப் பெறும் என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தினாள் அந்த இளம்பெண்.13 வது தரிசனத்தின் போது, "போய்ப் பாதிரியார்களையும்,பொது மக்களையும் திரளாக அழைத்து வந்து இங்கு எனக்கு ஒரு ஆலயம் எழுப்பச் சொல்"என்று அப்பெண் கூறினாள்.

அடுத்த 2 தரிசனங்களிலும் அதே வார்த்தைகளைக் கூறவே,யார் அந்த இளமங்கை என்றறியும் ஆவல் பெர்னாடெட்டிற்கு ஏற்பட்டது.16 வது முறை தரிசனம் தந்த போது, "ஒளி வெள்ளமாகத் திகழும் மாதாவே!தாங்கள் யார்? என்று பெர்னாடெட் கேட்டதும், "நான்தான் புனித தூயமேரி மாதா!" என்ற பதில் கிடைத்தது.

அறிவிலோ,செல்வத்திலோ,சுகத்திலோ,உடல்நலத்திலோ எந்தவிதத்திலும் தகுதியில்லாத ஏழையான தன்னைத் தேர்ந்தேடுத்து, ஒருமுறை, இருமுறையல்ல 18 முறை காட்சியளித்ததை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தாள் பெர்னாடெட்.

அடுத்த நாள் ஊர் மக்களையும்,படித்தவர்களையும்,பெரியோர்களையும் கிரிட்டோவிற்கு அழைத்து வந்தாள் பெர்னாடெட்.அவளுக்கு மாதாவின் தரிசனம் கிடைத்த போது மாதாவின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி நின்றாள்.பெழுகுவர்த்தி உருகி பெர்னாடெட்டின் கையிலேயே 10 நிமிடங்கள் எரிந்தது.ஆனால் பெர்னாடெட்டின் கையைப் பாதிக்கவில்லை.

(மீதி அடுத்த பதிவில்)

Scrumptious Blog Award

என்னுடைய தோழி திருமதி.“கீதா ஆச்சல் மற்றும் சாருஸ்ரீராஜ் ” அவர்கள் எனக்கு அளித்த அவர்ட். மிகவும் நன்றி கீதா மற்றும் சாரு!!

It is the Scrumptious Blog Award -a blog award given to people who:
Inspire you
Encourage you
May give Fabulous information
A great read
Has Scrumptious recipes
Any other reasons you can think of that make them Scrumptious!


இந்த அவார்டினை, என்னுடைய ப்ளாக் நண்பர்களுக்கு வழங்குகின்றேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

1.பிரியமுடன் வசந்த்

2.நட்புடன் ஜமால்

3.சூர்யா கண்ணன்

4.இராகவன் நைஜிரியா

5.சம்பத்குமார்

6.சந்ரு

7. தேவன்மாயம்

8.பொன்மலர்

9.திருமதி அனிதா(Blog Reader)

10.திருமதி உமாப்ரியா சுதாகர்


அவார்ட் வாங்கி அனைவரும் மேலும் இதனை 10 ப்ளாக் நண்பர்களுக்கு வழங்கவும்.

தக்காளி தோசை

தே.பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/4 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
அரிசி - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 2
காய்ந்தமிளகாய் - 4
முளைகட்டிய பயிறு வகைகள் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:

*கடலைப்பருப்பு+துவரம்பருப்பு+அரிசி+காய்ந்த மிளகாய் இவற்றை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

* ஊறியதும் இதனுடன் உப்பு+முளைகட்டிய பயிறு வகைகள்+தக்காளி சேர்த்து அரைக்கவும்.

*தக்காளி சேர்ப்பதால் தண்ணீர் ஊற்றி அரைக்கத் தேவையில்லை.

*அரைத்த மாவை 1 மணிநேரம் புளிக்க வைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றவும்.

கவனிக்க:

இதற்க்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை,அப்படியே சாப்பிடலாம் புளிப்பு சுவையுடன் மிருதுவாக நன்றாக இருக்கும்.காரம் வேண்டுமானால் அதிகமாக மிளகாய் போட்டுக் கொள்ளவும்.
Thursday, 20 August 2009 | By: Menaga Sathia

கோதுமை ரவை கிச்சடி

தே.பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
கேரட் - சிறியது
பீன்ஸ் - 5
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டேபிள்ஸ்பூன்


தாளிக்க:

பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் நீளவாக்கில் அரியவும்.கேரட்டை துறுவவும்,பீன்ஸை நடுத்தர சைஸில் நறுக்கவும்.

*கோதுமை ரவையை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.

*குக்கரில் தாளிக்க குடுத்துள்ளவைகளாஇ போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் துருவிய கேரட்+பட்டானி+பீன்ஸ் போட்டு நன்கு வதக்கவும்.

*பின் 1 கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் மற்றூம் காய் வேக 1/2 கப் தண்ணீர் மொத்தம் 2 1/2 கப்தண்ணீர் வைத்து ரவை+உப்பு போட்டு குக்கரை மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் வைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் கிச்சடியை கிளறி விடவும்.


பி.கு:

இந்த கிச்சடி மிகவும் நன்றாக இருக்கும்.விருப்பப்பட்டால் தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.
Wednesday, 19 August 2009 | By: Menaga Sathia

லூர்துமாதா வரலாறு -1 பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் தென் - மேற்கு பகுதியில் Midi - Pyrénéees என்னும் மாநிலத்தில் லூர்து நகரம் அமைந்துள்ளது.அமெரிக்கா என்றால் நமக்கு சுதந்திர தேவியின் சிலை ஞாபகம் வருவது போல் ப்ரான்ஸ் என்றால் அனைவருக்கும் லூர்து மாதா கோயில் தான் ஞாபகம் வரும்.கடந்த வியாழக்கிழமை 6ந் தேதி நான்,கணவர்,பொண்ணு மூணு பேரும் காரில் லூர்துக்கு போனோம்.

இது நான் 2 வது தடவை அந்த கோயிலுக்கு போவது.முதல் தடவை 2003 ல் அம்மா,அக்கா கூட போனேன்.கணவருடன் முதல் தடவையாக இந்த வருடம் போய்ட்டு வந்ததில் ஒரு திருப்தி.எனக்கு இந்த கோயிலைப் பற்றி ப்ளாக்கில் எழுத ஆசை.எனக்கு ஒரளவுதான் தெரியும் எப்படி எழுதுவதுன்னு யோசித்துகிட்டே உட்கார்ந்திருந்தேன் அப்போ ஒரு தமிழர் வந்து ஒரு தாள் குடுத்துத்து போனார்.

என்னன்னு படித்துபார்த்தா அந்த கோயிலின் வரலாறு இருந்தது அதுவும் தமிழில்,எனக்கு அப்படியே மெய் சிலிர்த்துவிட்டது.மாதாவின் சக்தியை நினைத்து வியந்தேன்
கோயிலின் அழகான முகப்புத் தோற்றம்.

அந்த கோயிலின் வரலாறை பார்ப்போம்

இயற்கை அழகு கண்கொள்ளாத வண்ணம் அமைந்திருக்கும் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது "லூர்ட்ஸ்" என்ற சின்னஞ்சிறு நகரம்.தென்மேற்கு ப்ரான்ஸ் பகுதியில் "Midi - Pyrénéees" என்ற மலைத்தொடரின் மத்தியப் பகுதியில் உள்ள இந்தச் சிறிய ஊரை,ஒவ்வொரு வருடமும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகிறார்கள்.இந்த சின்னஞ்சிறு ஊரில் அப்படியென்ன விசேஷம்?


லூர்ட்ஸ் என்னும் இவ்வூரில் அமைந்துள்ள மாதா கோயில்,கோயிலின் அடிவாரத்தில் உள்ள "கிரிட்டோ" எனப்படும் குகை,அந்தப் பகுதியில் குபுகுபுவென பொங்கி வரும் கற்கண்டாய் இனிக்கும் தெளிவான புனிதமான ஊற்று நீர்.ஊரின் நடுவே மிகவும் ப்ரம்மாண்டமாக மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது புனித லூர்து மாதா கோயில்

உலகெஞ்கும் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாஸ்லிகாக்களில் ஒன்றான இந்த ஆலயத்தை மாதாவே விரும்பி அமைத்துக் கொண்ட கதையை பார்க்கலாம்.

மேலே இருக்கும் படம் தான் லூர்து மாதா,கோயிலின் உள்ளே சிறிது தூரம் நடந்தால் மாதாவைக் காணலாம்.

19ம் நூற்றாண்டில் கேவ் நதியின் கரையில் பல மாவு மில்கள் அமைக்கப்பட்டிருந்தன.அத்தகைய மில் ஒன்றில் பணி புரிந்து வந்த பிரான்ஸிஸ் தன் மனைவி லூயிஸ் சௌபிரஸ் மர்றும் 4 குழந்தைஅக்ளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.இனிமையான இவர்களின் வாழ்வில் திடீரென துன்பங்கள் தொடர்ந்து வரத்தொடங்கின.

மில்லில் வேலை செய்யும் போது சிறு கல் ஒன்று பிரான்ஸிஸ்ஸின் இடதுகண்ணில் புகுந்து கண்பார்வை பறிபோயிற்று.2 மூட்டைகள் மாவினை திருடியதாக அவர்மேல் தவறான பழி விழு,எட்டு தினங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.ஊரெங்கும் பஞ்சமும்,காலரா நோயிம் பரவிற்று.

இந்நோய் பிரான்ஸிஸ்ஸின் மூத்த மகளான பெர்னாடெட்டையும் தாக்கிற்று.வசதியில்லாத காரணத்தினால் நடுத்தெருவிற்க்கு வந்த குடும்பத்தினரைப் பார்த்து பரிதாபப்பட்டு,அவர்களின் உறவினர் ஒருவர் பழைய சிறையான "காசோட்" என்ற அறையை அவர்கள் தங்குவதற்க்காக அளித்தார்.

தந்தை முதலில் சிறைக்கு சென்றார்,இப்போது குடும்பத்துடன் அனைவருமே சிறையில் தங்குகிறார்கள் என ஊரில் பலர் அவர்களைக் கேலி செய்தனர்.உடல்நலமில்லாததாலும்,ஊர்ப் பேசிய கேலியினாலும்,பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டாள் பெர்னாடெட்.பதினான்கு வயதாகியும் பள்ளிக்குச் செல்லாததால் ஆங்கிலத்திலோ,ப்ரெஞ்சிலோ பேச,படிக்க,எழுத தெரியாது.

அவளுக்குப் பேசத் தெரிந்தது கூட மாறுபட்ட பிரெஞ்சு மொழிதான்.அவள் மான்க்கவலைகளை வாரா வாரம் மாதா கோயிலுக்கு சென்று முறையிட்டு அழுவாள்.

(மீதி அடுத்த பதிவில்)

வாழைப்பழ கேசரி

இது என்னோட 100வது பதிவு!!என் ப்ளாக்கை படிப்பவர்கள்,பின்னூட்டமிடுபவர்கள்,பாலோவர்ஸாக இருப்பவர்கள் அனைவருக்கும் நன்றி,நன்றி!!

தே.பொருட்கள்:

கனிந்த வாழைப்பழம் - 2
ரவை - 3/4 கப்
சக்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 3
முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் -2 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் -1/4 டீஸ்பூன்
பாதாம் பருப்பு - 8
தண்ணீர் -3/4 கப்

செய்முறை:

* பாதாமை தோலெடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.ஏலக்காயை பொடிக்கவும்.

*வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளவும்.

*1டீஸ்பூன் நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் ரவையை வறுக்கவும்.3/4 கப் கொதித்த தண்ணீரை ரவையில் சேர்க்கவும்.

*அத்துடன் மசித்த வாழைப்பழத்தை சேர்த்து விடாமல் கிளறி சர்க்கரையை சேர்க்கவும்.

*சக்கரை கரைந்து சுண்டி வரும் போது ஏலக்காய்த்தூள்+எசன்ஸ்+வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும்.

பி.கு:

அசத்தலான சுவையில் இருக்கும் இந்த கேசரி.
Tuesday, 18 August 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் பிஸிபேளாபாத்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1கப்
அரிந்த கத்திரிக்காய்,முருங்கைக்காய்
பீன்ஸ்,கேரட் கலவை -- 1 கப்
வேகவைத்த துவரம் பருப்பு - 1/2 கப்
புளிகரைசல் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மஞ்சள்தூள் -1 சிட்டிகை

தாளிக்க:

கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம் தலா - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை,பெருங்காயம் -சிறிது
மோர் மிளகாய் - 2

வறுத்து பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 1
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

*வறுத்து பொடிக்க குடுத்துள்ள பொருட்களை வெரும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.

*ஒட்ஸை சிறிது வெந்நீர் ஊற்றி பிசிறிக் கொள்ளவும்.

*காய்களை சிறிது மஞ்சள்தூல்,உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

*துவரம்பருப்பு+ஒட்ஸ்+வெந்ந்த காய்கறி+உப்பு+புளிகரைசல்+வறுத்தரைத்த பொடி கலந்து அடுப்பில் சிரிது நேரம் வைத்துக் கிளறவும்.

*எல்லாம் சேர்ந்து வந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொட்டவும்.

*வாசனையான ஒட்ஸ் பிஸிபேளாபாத் ரெடி.

கவனிக்க:

டயட்டில் இல்லாதவர்கள் தாளிக்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.வாசனை கமகமக்கும்.

ஒட்ஸ் -- சிறு குறிப்பு

ஓட்ஸ் (Oats) ஒரு தானியப் பயிர் வகை ஆகும்.இதில் மதம் (Gluten) கிடையாது. ஆகையால் பாண் (ரொட்டி) தயாரிப்பது இயலாதது. ஆனால் ஓட்ஸ் கூழ் / ஓட்ஸ் கஞ்சி (Oatmeal Porridge) ஓர் ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. ஓட்ஸ் ஈரட்டி (OAT COOKIES) ஒரு பிரபலமான இனிப்பு வகை ஆகும். இது கொழுப்புச்சத்து குறைவானது.ஓட்ஸின் பாரம்பரிய தமிழ் சொல் "காடைக்கண்ணி" ஆகும்.


பார்லி,கோதுமைக்கு அடுத்து ஒட்ஸ் தானியப் பயிர் வகையில் 2 வது இடத்தில் இருக்கு.ஐஸ்லாண்டில் அதிகம் பயிரிடபடுகிறது.இதில் மொத்தம் 11 வகை இருக்கு.ஆஸ்திரேலியன் ஒட்ஸ் என்பதே உயர்ந்த வகையாக கருதப்படுகிறது.சற்று விலை அதிகம் என்றாலும் இது ரொம்ப சுவையானது.

இங்கிலாந்தில் குதிரைகளுக்குத் தீனியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.ஸ்காட்லாந்து மக்களின் முக்கிய உணவு தானியமே ஒட்ஸ் தான்.

"ஒட்ஸ்,குதிரைகளுக்கும் ஸ்காட்லாந்து மக்களுக்கும்தான் சரிப்பட்டு வரும்" -- இங்கிலாந்து பழமொழி.

"இங்கிலாந்தில் குதிரைகளும் ஸ்காட்லாந்தில் மக்களும் ஆரோக்கியமாக இருக்க ஒட்ஸே காரணம் "- இது ஸ்காட்லாந்து பழமொழி.

ஒட்ஸை மூலப் பொருளாக கொண்டு,சில கம்பெனிகள் சருமப் பாதுகாப்பு லோஷன்களைத் தயாரிக்கின்றன.ஒட்ஸினுடைய தவிடு கொழுப்பு சத்தை குறைப்பதால்,பெரும்பாலும் பாலிஷ் செய்து தவிட்டை நீக்காமல்தான் அதைப் பயன்படுத்துகின்றனர்.உலகளவில் ஒட்ஸ் பொத்தம் 24.6 மில்லியன் மெட்ரிக் டன்கள் பயிரிடப்படுகிறது.

ஒட்ஸ் விளைச்சலில் ரஷ்யவின் பங்கு 20 சதவிகிதத்துக்கும் மேல்.ஒட்ஸில் புரதச்சத்து இருப்பதால் சைவபிரியர்கள் இறைச்சி,முட்டை போன்றவற்றுக்கு பதிலாக ஒட்ஸ் சாப்பிடலாம்.

முதன்முதலில் ஒட்ஸ் கிழக்கு ஐரோப்பாவில் விளைந்தாலும்,மேற்கு நாடுகளில்தான் முதன்முதலில் இதை தானியமாக பயன்படுத்தத் தொடங்கினர்.விவசாயிகளுக்கு பிடித்த தானியம் ஒட்ஸ் தான் காரணம் இதை பூச்சிகள் அரிப்பது மிகமிக அரிது.பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் ஒட்ஸ் கலக்கப்படுகிறது.

இது குளிர்ப்ரதேசங்களில் நன்றாக வளரும்.பனிக் காலத்தில் இது அழிவதில்லை.மிகவும் வேகமாலவும் வீரியமாகவும் வளரக்கூடிய ஒட்ஸ்,தன்னோடு வளரும் களைகளின் வள்ர்ச்சியையும் குறைத்துவிடும்.ஆயிர்வேத சிக்கிச்சையின் மூலம் பச்சை ஒட்ஸ் டிகாஷனைப் பயன்படுத்தி 45 நாட்களுக்குள் போதை பழக்கத்திலிருந்து விடுபட முடியும் என்று சொல்கிறார்கள்.

சமச்சீரான சத்துக்களைக் கொண்டிருப்பதால் நரம்புத்தளர்ச்சி,மலச்சிக்கல் போன்றவற்றுக்கு ஒட்ஸ் மருந்தாகவும் பயன்படுத்தபடுகிறது.பெரும்பாலான மருத்துமனைகளில் ஒட்ஸைதான் உணவாக கொடுக்கிறார்கள்.இதை சமைக்காமலும் சாப்பிடலாம்.

கோதுமை,பார்லி போன்ற பயிர்களுக்கு இடையே முளைக்கும் தேவையற்ற களையாகவே ஒட்ஸ் பலநூற்றாண்டு வரை கருதப்பட்டது.

100 கிராம் ஒட்ஸில் கார்போஹைட்ரட் 66 கிராம்,புரதச்சத்து 7 கிராம்,கொழுப்பு 7 கிராம்,மக்னீசியம்,இரும்புச்சத்தும் இருக்கு.இது உடம்பில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கிறது.
Monday, 17 August 2009 | By: Menaga Sathia

கோதுமை ரவா ஓட்ஸ் அடை

தே.பொருட்கள்:

கோதுமை ரவை - 1 கப்
ஒட்ஸ் -1/2 கப்
தோல் பாசிப்பருப்பு -1/4 கப்
சன்னா - 1 கைப்பிடி
கொள்ளு - 1/4 கப்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
பெருங்காயம் -சிறிது
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

*சன்னாவை முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.

*ஒட்ஸை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*கோதுமை ரவை+பாசிபருப்பு(தோலுடன் அரைக்கவும்)+கொள்ளு இவற்றை 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

*இவற்றுடன் சன்னா+காய்ந்த மிளகாய்+உப்பு+சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

*இதனுடன் பொடித்த ஒட்ஸை கலக்கவும்.

*அரைத்த மாவை மெல்லிய அடைகளாக ஊற்றி எடுக்கவும்.

*சட்னியுடன் பரிமாறவும்.

பி.கு:

1.விருப்பப்பட்டால் கடுகு+உளுத்தம்பருப்பு+வெங்காயம்+கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கலாம்.

2.டயட்டில் இல்லாதவர்கள் தேங்காய் சேர்த்து செய்யலாம்.
Friday, 14 August 2009 | By: Menaga Sathia

மட்டன் புளிக்குழம்பு

தே.பொருட்கள்:

மட்டன் - 1/2 கிலோ
முருங்கைக்காய் - 2
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
புளி - 1 எலுமிச்சை பழளவு
கலந்த மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
சீரகம் - 2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -10

எண்ணெயில் வறுத்து அரைக்க:

தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
வடகம் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு -3


செய்முறை:

*புளியை 1 கோப்பையளவு கரைத்து பூண்டுப்பல்+மிளகாய்த்தூள்+உப்பு+சுத்தம் செய்த மட்டன் போடவும்.

*வெங்காயம்+தக்காளி+முருங்கைக்காய் நறுக்கி வைக்கவும்.

*அரைக்க குடுத்துள்ளவைகளை அரைத்து அடஹ்னுடன் சீரகத்தை சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+தக்காளி வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.மட்டன் வெந்ததும் முருங்கைக்காய் போட்டு வேகவிடவும்.

*மட்டன்+காய் வெந்ததும் அரைத்த விழுது சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பி.கு:

இதனுடன் வெள்ளை முள்ளங்கியையும் சேர்க்கலாம்.அப்படி சேர்க்கும் போது தக்காளி வதங்கிய பின்னர் முள்ளங்கியைப் போட்டு வதக்கி புளிகரைசலை ஊற்றவும்.நல்ல வாசனையாகவும்,ருசியாவும் இருக்கும்.
Thursday, 13 August 2009 | By: Menaga Sathia

கோகுலாஷ்டமி

தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவன் கிருஷ்ணபரமாத்மா. அவர் ஜனித்த (பிறந்த)புண்ய தினமே கோகுலாஷ்டமி தினமாகும்.

கலாச்சாரங்களில் பின்னிப் பிணைந்தது நம் பாரதம்! இங்கு நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு பின்னணி உண்டு. இவை ஒவ்வொன்றும் நமக்கு பல உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன.

நமது பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்திக்கு என்றுமே தனி இடம் உண்டு. தென்னகத்தில் 'கோகுலாஷ்டமி' என்றும், வட இந்தியாவில் 'ஜென்மாஷ்டமி' என்றும் இது அழைக்கப்படுகிறது.

எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவு நேரத்தில்
சிறைக்குள் வசுதேவர்- தேவகிக்கு மகனாகக் கிருஷ்ணன் அவதரித்தார்.
பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் கிருஷ்ணன் காட்சியளித்தான். பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானான்.


கிருஷ்ண ஜனனம் பற்றி ஒரு சுவரஸ்யமான புராண கதை:

கண்ணனின் மாமன் கம்சன். அவன் கிருஷ்ணரின் தந்தை வசுதேவரையும், கிருஷ்ணரின் தாய் தேவகியையும் சிறையில் அடைத்து வைத்திருந்தான். தேவகிக்குபிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற சாபம் இருந்ததால் அவன் அவர்களை சிறையில் அடைத்து பிறந்து வரும்எல்லா குழந்தைகளையுமே கொன்று வந்தான்.

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் அவதரித்தார். அந்தக் குழந்தையை வசு தேவர் கோகுலதில் இருக்கும் தன் நண்பர் நந்த கோபன் வீட்டில் வளரவைப்பதற்காக கொட்டும் மழையில் ஒரு கூடையில் வைத்து எடுத்துச் சென்றார்.

அதே சமயம் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்ட கம்சன் குழந்தையை கொல்ல வருகிறான். அங்கு கிருஷ்ணனுக்கு பதிலாக அம்மன் குழந்தை ரூபத்தில்இருந்தார். கம்ச ன் அந்தக் குழந்தையை கொல்வதற்காக மேலே தூக்கி போட்ட போது அந்தக் குழந்தை மேலே சென்று ''கம்சா உன்னனக்கொல்வதற்காக பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. உனக்கு மரணம் அந்தக் குழந்தையால் தான்'' என்று கூறி மறைந்தது.

மூன்று வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் வயது கழிந்தது. தனது ஏழாவது வயதில் கம்சனை வீழ்த்தி, பெற்றோரையும் விடுவித்தான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் இளமைப் பருவம் கேட்பதற்கே இனிமையாக இருக்கும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்த கிருஷ்ணன், குறுப்புக்காரச் சிறுவனாகவும் இருந்தான்.

ஆயர்கள் கட்டி வைத்த கன்றுகளை அவிழ்த்து விடுவது, நீர் ஏந்தி வரும் பெண்களின் குடங்களை கல் விட்டு உடைப்பது, மண்ணைத் திண்பது, வெண்ணையை திருடி உண்பது போன்றவை அவரது விளையாட்டுக்களில் சில.


இந்த கோகுலாஷ்டமி நாளன்று வீட்டில் வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசிமாவை நீரில் கரைத்து அந்த மாவைக் கொண்டு சிறு குழந்தையின் காலைவரைவர். அதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் வருவதாகப் பொருள்.பூஜைக்குப் பின் வெண்ணெய்யை உண்டு பெண்கள் விரதம் முடித்துக் கொள்வார்கள்.


கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெயும் அவலும் வெல்லச்சீடை,உப்புச்சீடை போன்ற நிவேதப் பொருளுடன் சிறப்பான இடம் பிடித்திருக்கும், கோகுலத்தில் கண்ணன் கோபியர் வீடுகளில் வெண்ணெய் திருடித் தின்று லீலைகள் செய்தவன். கண்ணனது பால்ய சிநேகிதன் குசேலர் கண்ணனைக் காண வரும் போது அவர்கொண்டுவந்த அவலை கண்ணன் உண்ட போது குசேலரது வறுமை மறைந்து வளம் பெற்றதாகவும் புராணங்கள் மூலம் அறிகிறோம் . எனவே தான்வெண்ணெய்க்கும், அவலுக்கும் நிவேதனத்தில் சிறந்த இடம்.

இந்த பண்டிகை தினத்தன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷபூஜைகள் நடைபெறும்.

இன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.

மாயக் கண்ணன் இளமையில் செய்த சேஷ்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும். அவற்றை போற்றும் வகையில், கிருஷ்ண ஜெயந்தியன்று உறியடித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

பாண்டவர்களுக்கு உதவியாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசித்த மொழிகளையே நாம் 'பகவத்கீதை'யாகப் போற்றி வருகிறோம்.

கண்ணன், முகுந்தன், கோபால கிருஷ்ணன், நந்த கோபாலன் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் குழந்தைக் கிருஷ்ணனை, கோகுலாஷ்டமி தினத்தன்று நாமும் நம் வீடுகளில் வரவேற்று, வளம் பெறுவோம்!

ஸ்ரீ கிருஷ்ணனுக்குச் செய்ய வேண்டிய நைவேத்தியங்கள்:

அவல்,வெல்லம்,வெண்ணெய்,பால்,தயிர்,வாழைப்பழம்,நாவல்பழம்,கொய்யாப்பழம்,விளாம்பழம்,சீடை,உப்புச்சீடை,வெல்லச்சீடை,முறுக்கு,லட்டு,மைசூர்பாகு,தேன்குழல்,தொட்டில்பயிறு,பொரிகடலை,வெல்லம் போட்ட உருண்டை,தட்டை,ஒமம்பொடி,தேங்காய்த் திரட்டிப்பால் ஆகியவை கிருஷ்ணனுக்குச் செய்ய வேண்டிய நைவேத்தியங்கள்.
கீதாசாரம்


இறால் தொக்கு

தே.பொருட்கள்:

சுத்தம் செய்த இறால் - 500கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை:

*வெங்காயம்+தக்காளியை கட் செய்யவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மிளகாய்த்தூள் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு+இறால் சேர்த்து மூடவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*5 நிமிடம் கழித்து திறந்துப் பார்த்தால் நீர் இருக்கும்,அது சுண்டும் வரை சுருள சுருள கிளறி இறக்கவும்.

*ஈஸி இறால் தொக்கு ரெடி.
Wednesday, 12 August 2009 | By: Menaga Sathia

முறுக்கு / Murukku

தேவையான பொருட்கள்:

பதப்படுத்திய பச்சரிசி மாவு - 4 கப்
வறுத்த உளுத்த மாவு - 1 கப்
வறுத்த பயத்த மாவு - 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
சீரகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தே.அளவு
எள் - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

*அரிசி மாவு,உளுத்த மாவு,உருக்கிய நெய்,சீரகம்,உப்பு,பெருங்காயம்,எள்,பயத்தமாவு, எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

*எண்ணெய் காயவைத்து (ரொம்ப புகை வரும்வரை காயக்கூடாது)தேன்குழல் அச்சில் போட்டு பொரித்தெடுக்கவும்.

மாவு பதப்படுத்தும் முறை:

பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து,கழுவி,தண்ணீரை வடிக்கட்டி துணியில் (நிழலில்) உலர்த்தவும்.உலர்ந்தபின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும்.சலித்த மாவை கடாயில் வாசம் வரும்வரை வறுக்கவும்.வறுத்த மாவை மீண்டும் சலித்து ஆற வைத்து காற்று புகாதவாறு எடுத்து வைக்கவும்.தேவையான போது உபயோகிக்கலாம்.


உப்புச்சீடை /Uppu seedai

தேவையான பொருட்கள்:

பதப்படுத்திய பச்சரிசி மாவு - 2 கப்
வறுத்த உளுத்த மாவு - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
எள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தே.அளவு


செய்முறை:

*அரிசி மாவு,உளுத்த மாவு,தேங்காய்ப்பால்,உருக்கிய நெய்,சீரகம்,உப்பு,பெருங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

*சிறுசிறு உருண்டைகளாக உருட்டி துணியில் 5 நிமிஷம் உலர்த்தவும்.

*எண்ணெய் காயவைத்து (ரொம்ப புகை வரும்வரை காயக்கூடாது) உருண்டைகளைப்போட்டு பொரித்தெடுக்கவும்.

*இந்த முறையில் பொரித்தால் சீடை வெடிக்காது.

மாவு பதப்படுத்தும் முறை:


பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து,கழுவி,தண்ணீரை வடிக்கட்டி துணியில் (நிழலில்) உலர்த்தவும்.உலர்ந்தபின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும்.சலித்த மாவை கடாயில் வாசம் வரும்வரை வறுக்கவும்.வறுத்த மாவை மீண்டும் சலித்து ஆற வைத்து காற்று புகாதவாறு எடுத்து வைக்கவும்.தேவையான போது உபயோகிக்கலாம்.

வெல்ல சீடை /Vella Seedai

தேவையான பொருட்கள்

பதப்படுத்திய பச்சரிசி மாவு - 1 கப்
வறுத்த உளுத்த மாவு - 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1/2  கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு


செய்முறை:

*அரிசி மாவு,உளுத்த் மாவு,நசுக்கிய ஏலக்காய்,தேங்காய்,உருக்கிய நெய் எல்லாவற்றையும் கலந்துக்கொள்ளவும்.

*வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சிக்கொள்ளவும் (அதில் மண் இருக்கும்).

*வெல்லத்தை வடிக்கட்டி கலந்த மாவில் ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி துணியில் 5 நிமிஷம் உலர்த்தவும்.

*எண்ணெய் காயவைத்து (ரொம்ப புகை வரும்வரை காயக்கூடாது) உருண்டைகளைப்போட்டு பொரித்தெடுக்கவும்.

*இந்த முறையில் பொரித்தால் சீடை வெடிக்காது.


மாவு பதப்படுத்தும் முறை:


பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து,கழுவி,தண்ணீரை வடிக்கட்டி துணியில் (நிழலில்) உலர்த்தவும்.உலர்ந்தபின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும்.சலித்த மாவை கடாயில் வாசம் வரும்வரை வறுக்கவும்.வறுத்த மாவை மீண்டும் சலித்து ஆற வைத்து காற்று புகாதவாறு எடுத்து வைக்கவும்.தேவையான போது உபயோகிக்கலாம்.

காடை ரோஸ்ட்

தே.பொருட்கள்:

சுத்தம் செய்த காடை - 4
இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது - 1 டேபில்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு


செய்முறை :

*சுத்தம் செய்த காடையில் மிளகாய்த்தூள்+உப்பு+விழுது அனைத்தையும் கலந்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*300 டிகிரி அவனை முற்சூடு செய்து 15 நிமிடம் அவன் டிரேயில் வேக வைத்து எடுக்கவும்.

*நடுவில் ஒருபக்கம் வெந்ததும் திருப்பி விடவும்.

*சுவையான காடை ரோஸ்ட் ரெடி

கவனிக்க:

காடை சீக்கிரம் வெந்துவிடும் என்பதால் அவரவர் அவனுக்குஏற்ப டைம் செட் செய்து வேகவைத்து எடுக்கவும்.சீக்கிரம் செய்து விடலாம்.
Tuesday, 11 August 2009 | By: Menaga Sathia

அய்யோ கீரையா என சொல்பவரா?


அதில் நிறைய பயன்கள் இருப்பது மறுக்கமுடியாத உண்மை.கீரையை பத்தி தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது.இந்தியாவில் கீரையை பலவகை பெயர்களில் அழைக்கப்படுகிறது.இதில அதிகளவு நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.இதை இரவில் மட்டும் உண்ணக்கூடாது காரணம் கீரை செரிப்பதற்க்கு 18 மணிநேரம் ஆகும்.

ஆக மதியம் 12 மணியளவில் கீரை சாப்பிட்டால் மறுநாள் காலை 6 மணியாகும் செறிப்பதற்க்கு.அதனால்தான் இரவில் கீரையை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க.

முதன்முதலில் கீரை நேபாலில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது.10 நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகி பிரான்ஸ்,இங்கிலாந்து, அமெரிக்கா என ப்ரபலாமனது.

இதில் அதிகளவு இரும்புசத்து+கால்சியம் இருக்கு.மேலும் இதில் விட்டமின் A,B9,C,E,K,புரதசத்து அதிகளவில் இருக்கு.விட்டமின் A 52% இருப்பதால் கண்பார்வைக்கு ரொம்ப நல்லது.சோர்வை நீக்கி ரத்தவிருத்திக்கு உதவுகிறது.கீரையில் பலவகைகள் இருக்கு.

கீரையை நல்ல பச்சை கலரில் இருப்பதை தான் வாங்கவேண்டும்.பழுப்புடைந்து மற்றும் கீரையின் பின்பக்கம் திருப்பிப்பார்த்தால் வெள்ளைக்கலர் முட்டைபோல் இருந்தால் வாங்ககூடாது.எவ்வளவுக்கெவ்வளவோ ப்ரெஷ்ஷா சமைக்கிறோமோ அவ்வளவு நல்லது.சத்தும் வீணாகாது.தண்டு மெலிதாக இருந்தால் இளசு.

எல்லோரும் கீரையை நறுக்கிவிட்டுதான் அலசுவாங்க.அப்படிசெய்தால் சத்து வீணாகும்.அதற்க்கு பதில் ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் ஊற்றி அப்படியே முழுசாக போட்டு அலசி எடுக்கவும்.மண்னெல்லாம் தங்கிவிடும்.அதன்பிறகு அதை நருக்கி சமைக்கவும்.


கீரையை அதிக நேரம் வேகவைக்ககூடாது.சாம்பல் கலருக்கு மாறிவிடும்.சமைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வேகவைத்தால் கலர் மாறாது.வேகவைக்கும் போது அதிகளவு தண்ணீர் ஊற்றக்கூடாது.

கீரையில் பலவகைகள் இருக்கு.

அவை முருங்கைக்கீரை,அரைக்கீரை,சிறுகீரை,முளைக்கீரை,மணத்தக்காளிகீரை,தூதுவளை கீரை,பொன்னாங்கன்னி கீரை,அகத்திக்கீரை,வல்லாரைக்கீரை,பசலைக்கீரை,முடக்கத்தான் கீரை,வெந்தயக்கீரை,இன்னும் நிறைய வகைகீரைகள் இருக்கு.
பசலைக்கீரைப்பத்தி இப்போ பார்க்கலாம்.

இதில் அதிகளவு கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.இதில் இரும்புசத்து,பீட்டா கரோட்டின் அதாவது விட்டமின் A,போலிக் ஆசிட்,கால்சியம் எல்லாம் இதில் இருக்கு.போலோசின் நோய்த்தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் உதவுகிறது.

ரத்தத்தின் சிவப்பு அணுக்கள்,ஹுமோகுளோபின் அதிகமாக உற்பத்தி செய்ய உதவுகிறது.ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

அதேசமயம் இதயநோயாளிகள் இக்கீரையை அதிகளவு சாப்பிடகூடாது ஏனென்றால் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் ஆசிட் உடலில் இரும்பு+கால்சியம் சேராமல் தடுக்கிறது.

கீரையை வைத்து பருப்பு கடைசல்,புளி கடைசல்,பொரியல்,சாலட்,சாம்பார்,குழம்பு,துவையல் எனபலவிதமாக செய்து சாப்பிடலாம்.

தினமும் பலவகை கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.இனி எல்லோரும் கீரை சாப்பிடுவீங்க தானே
Monday, 10 August 2009 | By: Menaga Sathia

சென்னா+கொள்ளு வடை (அவன் செய்முறை ) /Channa Horsegram Vadai

தே.பொருட்கள்:

சென்னா(கொண்டைக்கடலை) - 1 கப்
கொள்ளு - 1/2 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிது
பெருஞ்சீரகம் - 1டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:

*சென்னா+கொள்ளு முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

*மறுநாள் ஊறவைத்த பருப்புகளை உப்பு+பெருஞ்சீரகம் சேர்த்து நீர்விடாமல் கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும்.

*அதனுடன் பொடியாக அரிந்த வெங்காயம்+மிளகாய்+கொத்தமல்லித்தழை சேர்த்து பிசையவும்.

*அவன் ட்ரேயில் அலுமினியம் பேப்பரை போட்டு 1 டீஸ்பூன் எண்ணெய் தடவி விடவும்.
*மாவை வடைகளாக தட்டி அதில் வைத்து ஒவ்வொரு வடையின் மேல் 1 சொட்டு எண்ணெய் விடவும்.

*300° முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் வைக்கவும்.

*15 கழித்து அவனைத் திறந்து வடைகளை திருப்பிவிட்டு ஒவ்வொரு வடையின் மேல் 1 சொட்டு விடவும்.*மீண்டும் ஒரு 10 நிமிடம் கழித்து எடுக்கவும்.

*இப்போழுது சுவையான வடை ரெடி.

பி.கு:

இந்த வடை எண்ணெயில் பொரித்த மாதிரியே மிக நன்றாக இருக்கும்.
வடைகளை எண்ணெயில் பொரிப்பதாக இருந்தால் சென்னாவை மட்டும் முதல் நாள் இரவே ஊறவைக்கவும்,கொள்ளை காலையில் ஊறவைத்து செய்யவும் இல்லையெனில் வடை அதிகம் எண்ணெய் குடித்து சதசதன்னு இருக்கும்.
01 09 10