Monday 31 August 2009 | By: Menaga Sathia

சோயா பொடிமாஸ்

தே.பொருட்கள்:

சோயா உருண்டைகள் - 25
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
கேரட் துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணேய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை :

*சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து நீரை ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் என்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாயை வதக்கவும்.

*பின் சோயா+கேரட் துறுவலை சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கவும்.

பி.கு:

இந்த பொடிமாஸ் சத்து நிறைந்தது.டயட்டில் இல்லாதவர்கள் தேங்காய்த்துறுவலையும் சேர்க்கலாம்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான ரெசிபி மேனகா

Jaleela Kamal said...

டயட்டுக்கு ஏற்ற குறிப்பு மேனகா

குறை ஒன்றும் இல்லை !!! said...

Appo ithu Diet fooda illeyaa?

SUFFIX said...

சமீபத்தில் முதன்முறையா எங்க வீட்டுல இந்த சோயா உருண்டைகள் (விஜய் பிரேன்ட்) மட்டன் சமைக்கிர மாதிரி சமச்சாங்க, எதிர்பார்த்த அந்த அளவு டேஸ்ட் இல்லை, உங்க செய்முறையை முயற்சி செய்து பார்த்துடுவோம். நன்றி.

GEETHA ACHAL said...

மிகவும் வித்தியசமாக இருக்கின்றது....இதுவரை சோயாவினை வைத்து இப்படி செய்தது இல்லை..

கண்டிப்பாக செய்து பார்கின்றேன்...சோய உருண்டைகள் நிறைய வீட்டில் இருக்கின்றது...

Priya Suresh said...

Puthusa irruku intha soya podimas...loos great!

Unknown said...

ஆரோக்கியமான குறிப்பு மேனகா

sakthi said...

புது வகை குறிப்பு கண்டிப்பாக முயன்று பார்க்கிறேன்

தெய்வசுகந்தி said...

என் பையனுக்கு சோயா ரொம்பா பிடிக்கும்கறதால நான் முடிஞ்சவரை எல்லாத்திலயும் சேர்த்துருவேன்.இந்த ரெசிபியும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

Menaga Sathia said...

செய்து பாருங்கள் சாரு,தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

ஆமாம் நீங்க சொல்வது சரிதான்.நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

ஆமாம் ஆமாம் டயட் குறிப்புதான்.தாராளமா டயட்டில் உள்ளவர்கள் சாப்பிடலாம் ராஜ்,நன்றி!!

Menaga Sathia said...

இந்த முறையில் செய்துப் பாருங்கள் கறி சமையல் மாதிரியே இருக்கும்.நன்றி ஷஃபி சகோதரரே!!

Menaga Sathia said...

நிச்சயம் செய்து பாருங்கள் கீதா,மிகவும் நன்றாகயிருக்கும்.நன்றி கீதா!!

Menaga Sathia said...

புது ரெசிபி தான்,செய்துப் பாருங்கள்.தங்கள் கருத்துக்கு நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாயிஷா!!

Menaga Sathia said...

முயற்சி செய்து பாருங்கள்,ஆரோக்கியமானதும் கூட.நன்றி சக்தி தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

Menaga Sathia said...

நன்றி சிங்கக்குட்டி தங்களின் பதிவுக்கு..

Menaga Sathia said...

செய்து பாருங்கள் தெய்வசுகந்தி,நன்றி தங்கள் கருத்துக்கு..

நட்புடன் ஜமால் said...

சோயாவுல இம்பூட்டு இருக்கா

ம்ம்ம்ம் செய்திடுவோம்

ப்ரியமுடன் வசந்த் said...

// நட்புடன் ஜமால் said...
சோயாவுல இம்பூட்டு இருக்கா

ம்ம்ம்ம் செய்திடுவோம்//

அண்ணா பொய்யெல்லாம் சொல்லக்கூடாது நமக்குத்தான் சமைச்சு பழக்கமில்லியே....ஹி ஹி ஹி

ப்ரியமுடன் வசந்த் said...

எப்டி மேடம் இப்படி தினமும் புதுசு புதுசா வித்யாச உணவுகளை அறிமுகப்படுத்துறீங்க...

தொடர் பதிவுகள் நிறைய இருக்கு கொஞ்ச பொறுத்துக்கோங்க விரைவில் எழுதுகிறேன்......

Chitra said...

Superb recipe..I have lots of chunks..Will sure try this :)

Menaga Sathia said...

ஆமாம் ஜமால் சோயாவில் இன்னும் நிறைய செய்யலாம்.தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உங்களுக்கு என் நன்றி!!

Menaga Sathia said...

//// நட்புடன் ஜமால் said...
சோயாவுல இம்பூட்டு இருக்கா

ம்ம்ம்ம் செய்திடுவோம்//

அண்ணா பொய்யெல்லாம் சொல்லக்கூடாது நமக்குத்தான் சமைச்சு பழக்கமில்லியே....ஹி ஹி ஹி//
இப்படி ஜமாலை அநியாயத்துக்கு மாட்டிவிட்டுட்டீங்களே வசந்த்.

நான் வீட்டில் என்ன சமையல் டெய்லி செய்கிறனோ அதைதான் எழுதுகிறேன்.நேரமிருக்கும் போது எழுதுங்க வசந்த்.
தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து வரும் உங்களுக்கும் என் நன்றி!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள் சித்ரா,நன்றாகயிருக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி!!

01 09 10