Sunday 23 August 2009 | By: Menaga Sathia

விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவசை வந்து 4 அல்லது 5 ம் நாள் வரும் சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

எந்த ஒரு பூஜை செய்தாலும் அல்லது நல்லகாரியம் செய்தாலும் விக்னேஸ்வர பூஜை செய்துவிட்டு தான் தொடங்குவார்கள்.

இவருக்கு செய்யவேண்டிய வைவேத்தியங்கள்

அவல்,பொரி,சோளம்,விளாம்பழம்,நாவல்பழம்,வடை,சுண்டல்,மோதகம்,வாழப்பழம்,ஆப்பிள்,கரும்பு.

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல்,விநாயகர் கவசம்,காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம்.காரிய சித்திமாலை துதியை 3 வேளைகள் அதாவது காலை,மதியம்,மாலை உரைப்பவர்கள் நினைத்த காரியம் கைக்கூடும்.8 நாட்கள் ஒதிவர மகிழ்ச்சி உண்டாகும்.சங்கடஹர சதுர்த்தியன்று 8 ஒதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும்,செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

"அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே" என்று இவர் முன் நின்றவுடன் தலையில்க் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது நம் மரபு.ஏன் இப்படித் தோப்புக்கரனம் போடவேண்டும் என்பதற்க்கு புராணக்கதை ஒன்று உள்ளது.


ஒருமுறை தவமுனிவரான அகத்தியர் கமண்டலமும் மையுமாக வந்துக் கொண்டிருந்தார்.அப்போது காக உருவெடுத்து வந்த விநாயகர் அக்கமண்டல நீரை தட்டிவிட்டு ஓடி விட்டார்.காகம் கவிழ்த்த கமண்டல நீர் ஆறாக ஒடியது.காகம் தட்டியதால் விரிந்து பரந்த நீராக ஒடியது என்பதால் "காவிரி" என்று பெயர் அந்நதிக்கு உண்டானது.அகத்தியர் தட்டிவிட்ட காகத்தை திரும்பி பார்த்தார்.அதைக் காணவில்லை.காகம் நின்ற இடத்தில் கொழுகொழு என்று ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அவர் தான் கணபதி.செய்த செயலுக்காக முனிவரைப் பார்த்து சிரித்தான்.

கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன் தான் கமண்டல நீரைக் கவிழ்த்தவன் என்ற எண்ணத்தில் அவனது தலையில் குட்ட முயன்றார்.ஆனால ச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் நின்றார்.குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர் அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு,மன்னிக்குமாறு வேண்டினார்.அது முதல் விநாயகருக்கு தோப்புகரணம் இடும் முறை உண்டானது.

பூஜை செய்யும் முறை

பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் போட்டு விநாயகர் படம் வைக்கவும்.அவர் முன் வாழையிலை வைத்து அதன்மேல் பச்சரிசி வைத்து கலசம் வைக்கவும்.கலசத்தில் நீர் அல்லது அரிசி போட்டு அதனுள் எலுமிச்சைபழம்,மஞ்சள்,குங்குமம்,வெற்றிலை,பாக்கு,பூ போட்டு அதன்மேல் தேங்காய் வைக்கவும்.அதன் பிறகு நைவேத்தியங்கள் செய்து,மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யவும்.பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை தொடர்ந்து பூஜௌ செய்ய வேண்டும்.அன்று மாலை சந்திரனைப் பார்த்தல் கூடாது,பூஜை முடிந்த பிறகு பார்த்தல் நலம்.


நாமும் முதல் கடவுளான விநாயகரை வணங்கி அனைத்து நலங்களும் பெறுவோமே.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

மாமி!நீங்க எனக்கு ஒரு 5மணிநேரம் முன்னாடி இருக்கிறது எவ்வளவு வசதி பார்த்தீங்களா?இப்போதான் எனக்கு விநாயகர் சதுர்த்தி,இனி தான் எல்லாம் செய்து படைக்கனும்,அதுக்கு முன்னால உங்ககிட்ட எப்படி என்ன செய்றதுனு பார்த்துட்டு போறது எனக்கு தான் வசதி!!நன்றி மாமி!!இப்போ போய் பூ வாங்கி வர போறேன், நம்ம கேட்ட பூ கிடைக்காது கிடைக்கிற பூ வச்சு செய்ய வேண்டியதுதான்!! எங்கள் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..

குறை ஒன்றும் இல்லை !!! said...

நன்றிங்க.. வாழ்த்துக்கள்!!!

Admin said...

நல்லதொரு இடுகை.. பல விடயங்களைப் பகிர்ந்து இருக்கின்றீர்கள். நன்றிகள்...

சிங்கக்குட்டி said...

எனக்கு பிடித்த முதல் கடவுளை பற்றி ஒரு நல்ல பதிவு. நன்றி.

Menaga Sathia said...

இந்த பதிவின் மூலம் நீங்க பயனடைவதில் மகிழ்ச்சிப்பா.உங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!!தங்கல் கருத்துக்கு மிக்க நன்றி மாமி!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

எனக்கும் விநாயகரை ரொம்ப பிடிக்கும்,தங்கள் கருத்துக்கு நன்றி சிங்கக்குட்டி!!

PriyaRaj said...

First time here.....ur recipes looks delicious......will be following u daily .....if get time make a stop in my blog tooo...

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ப்ரியாராஜ்!!

01 09 10