Tuesday 11 August 2009 | By: Menaga Sathia

அய்யோ கீரையா என சொல்பவரா?


அதில் நிறைய பயன்கள் இருப்பது மறுக்கமுடியாத உண்மை.கீரையை பத்தி தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது.இந்தியாவில் கீரையை பலவகை பெயர்களில் அழைக்கப்படுகிறது.இதில அதிகளவு நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.இதை இரவில் மட்டும் உண்ணக்கூடாது காரணம் கீரை செரிப்பதற்க்கு 18 மணிநேரம் ஆகும்.

ஆக மதியம் 12 மணியளவில் கீரை சாப்பிட்டால் மறுநாள் காலை 6 மணியாகும் செறிப்பதற்க்கு.அதனால்தான் இரவில் கீரையை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றாங்க.

முதன்முதலில் கீரை நேபாலில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டது.10 நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகி பிரான்ஸ்,இங்கிலாந்து, அமெரிக்கா என ப்ரபலாமனது.

இதில் அதிகளவு இரும்புசத்து+கால்சியம் இருக்கு.மேலும் இதில் விட்டமின் A,B9,C,E,K,புரதசத்து அதிகளவில் இருக்கு.விட்டமின் A 52% இருப்பதால் கண்பார்வைக்கு ரொம்ப நல்லது.சோர்வை நீக்கி ரத்தவிருத்திக்கு உதவுகிறது.கீரையில் பலவகைகள் இருக்கு.

கீரையை நல்ல பச்சை கலரில் இருப்பதை தான் வாங்கவேண்டும்.பழுப்புடைந்து மற்றும் கீரையின் பின்பக்கம் திருப்பிப்பார்த்தால் வெள்ளைக்கலர் முட்டைபோல் இருந்தால் வாங்ககூடாது.எவ்வளவுக்கெவ்வளவோ ப்ரெஷ்ஷா சமைக்கிறோமோ அவ்வளவு நல்லது.சத்தும் வீணாகாது.தண்டு மெலிதாக இருந்தால் இளசு.

எல்லோரும் கீரையை நறுக்கிவிட்டுதான் அலசுவாங்க.அப்படிசெய்தால் சத்து வீணாகும்.அதற்க்கு பதில் ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் ஊற்றி அப்படியே முழுசாக போட்டு அலசி எடுக்கவும்.மண்னெல்லாம் தங்கிவிடும்.அதன்பிறகு அதை நருக்கி சமைக்கவும்.


கீரையை அதிக நேரம் வேகவைக்ககூடாது.சாம்பல் கலருக்கு மாறிவிடும்.சமைக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வேகவைத்தால் கலர் மாறாது.வேகவைக்கும் போது அதிகளவு தண்ணீர் ஊற்றக்கூடாது.

கீரையில் பலவகைகள் இருக்கு.

அவை முருங்கைக்கீரை,அரைக்கீரை,சிறுகீரை,முளைக்கீரை,மணத்தக்காளிகீரை,தூதுவளை கீரை,பொன்னாங்கன்னி கீரை,அகத்திக்கீரை,வல்லாரைக்கீரை,பசலைக்கீரை,முடக்கத்தான் கீரை,வெந்தயக்கீரை,இன்னும் நிறைய வகைகீரைகள் இருக்கு.
பசலைக்கீரைப்பத்தி இப்போ பார்க்கலாம்.

இதில் அதிகளவு கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.இதில் இரும்புசத்து,பீட்டா கரோட்டின் அதாவது விட்டமின் A,போலிக் ஆசிட்,கால்சியம் எல்லாம் இதில் இருக்கு.போலோசின் நோய்த்தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் உதவுகிறது.

ரத்தத்தின் சிவப்பு அணுக்கள்,ஹுமோகுளோபின் அதிகமாக உற்பத்தி செய்ய உதவுகிறது.ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.

அதேசமயம் இதயநோயாளிகள் இக்கீரையை அதிகளவு சாப்பிடகூடாது ஏனென்றால் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் ஆசிட் உடலில் இரும்பு+கால்சியம் சேராமல் தடுக்கிறது.

கீரையை வைத்து பருப்பு கடைசல்,புளி கடைசல்,பொரியல்,சாலட்,சாம்பார்,குழம்பு,துவையல் எனபலவிதமாக செய்து சாப்பிடலாம்.

தினமும் பலவகை கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.இனி எல்லோரும் கீரை சாப்பிடுவீங்க தானே

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

மேனகா கீரைய பற்றி அலசி ஆராய்ந்து பதிவு போட்டு இருக்கீங்க அருமையான தகவல்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கடைந்தோ அல்லது சூப் வைத்தோ கொடுக்கலாம்.

Jaleela Kamal said...

கீரை எப்படி வாங்கனும் என்றும் அழகாக விளக்கி இருக்கீங்க. கலக்குங்க.

GEETHA ACHAL said...

அருமையான தகவல்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

உங்க கட்டுரையை படித்த பின் இனிமேல் எல்லோரும் அய்யா கீரை என்றே கூறுவர்!!

Unknown said...

கீரை!!அப்பாடா இத்தன கீரையா?எனக்கு 2கூட தெரியாது so sad..ஆனால் இப்பவும் இது தான் இந்த கீரைனு தெரியாதே? சரி கூகிள் எதுக்கு இருக்கு? பார்க்கிறேன்,ரொம்ப நன்றி மாமி!!

. said...

ரொம்ப நன்றிங்க... :) அருமையான பகிர்வு!

வால்பையன் said...

நாங்கெல்லாம் “அய் கீரை”ன்னு சொல்ற டைப்புங்க அம்மணி!

Admin said...

நல்லதொரு பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்..

இராகவன் நைஜிரியா said...

அய்யோ கீரை என்று நாங்க சொல்ல மாட்டோங்க... ஹையா கீரை என்றுதான் சொல்லுவோம்... ஏன்னா தங்கமணி கீரை வைத்து அவ்வளவு வைரட்டி செஞ்சுப் போடுவாங்க...

இராகவன் நைஜிரியா said...

அய்யோ கீரை என்று நாங்க சொல்ல மாட்டோங்க... ஹையா கீரை என்றுதான் சொல்லுவோம்... ஏன்னா தங்கமணி கீரை வைத்து அவ்வளவு வைரட்டி செஞ்சுப் போடுவாங்க...

Menaga Sathia said...

உங்களுடைய டிப்ஸ்க்கும்,கருத்துக்கும் நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

Menaga Sathia said...

//உங்க கட்டுரையை படித்த பின் இனிமேல் எல்லோரும் அய்யா கீரை என்றே கூறுவர்!!// குறும்பு ராஜ்!! ஹீ ஹீ ஹீ

Menaga Sathia said...

மாமி கூகிளிலில் தேடி பாருங்க,நிறைய வகைகள் வரும்.நன்றி மாமி!!

Menaga Sathia said...

நன்றி பிரியங்கா தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும்.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி வால்பையன்!!

உங்களை எப்படி கூப்பிட?

Menaga Sathia said...

நன்றி சந்ரு!!

Menaga Sathia said...

நீங்களும் வால்பையன் கட்சிதானா?தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி இராகவன்!!

01 09 10