Friday 21 August 2009 | By: Menaga Sathia

லூர்துமாதா வரலாறு -2 பிரான்ஸ்

லூர்துமாதா வரலாறு -1 பிரான்ஸ்

ஊற்று நீர் பெருகுமிடத்தில் இருக்கும் மாதா

1858ம் ஆண்டு பிப்ரவரி பதினொன்றாம் தேதி தன் தோழிகளுடன் காட்டில் கள்ளிப் பொறுக்கவும்.ஆடு மேய்க்கவும் சென்றாள்.கேவ் நதிக்கரையில் பாறைகள் நிறைந்த காட்டில் தோழிகள் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது,பெர்னாடெட்டிற்கு காற்றில் ஒரு ரீங்கார ஒசை கேட்டது.நிமிர்ந்து பார்த்தவர்களுக்கு பாறையின் நடுவே ஒரு இளம்பெண்,கருணை முகத்துடன்,சுற்றிலும் ஒளிவட்டம் வீச நின்றிப்பது தெரிந்தது.என்னவென்று புரிந்து கொள்ளும் முன் அந்தப் பெண் மறைந்து விட்டாள்.

ஆர்வம் மேலிட,தொடர்ந்து அடுத்த நாள் அதே பகுதிக்குப் பெர்னாடெட் போன போது திரும்பவும் அதே காட்சியைக் கண்டாள்.3 ம் நாளும்,4 நாளும் காட்சித் தந்த பிறகு பெர்னாடெட்டிடம் அந்த இளம்பெண்,

"தொடர்ந்து உண்ணால் இந்தப் பாறைகள் நிறைந்த பகுதிக்குப் 15 நாட்களுக்கு வரமுடியுமா?" என்று கேட்டாள். "முடியும்" என்று பதிலளித்த பெர்னாட்டெட்டிடம் "உனக்கு இவ்வுலகில் சந்தோஷத்தை அளிக்க முடியாவிட்டாலும் அவ்வுலகில அளிப்பேன்" என்று கூறி மறைந்தாள்.

தொடர்ந்து 15 நாட்கள் கிரிட்டோவிற்க்குச் சென்ற போது,மேலும் மேலும் தரிசனங்கள் கிடைத்தன.8 தரிசனத்தின் போது "தவத்தில் ஈடுபடு! பாவப்பட்டவர்களுக்காக ஜபம் செய்!" என்ற ஆணை கிடைத்தது.9 வது முறை காட்சியளித்த போது அந்த இளம்பெண் பெர்னாடெட்டை அருகில் அழைத்து,"இக்குகையில் உள்ள மண்ணை உன் நகங்களினால் கீறு,அதில் தோன்றும் ஊற்று நீரில் உன் உடலைக் கழுவிய பிறகு அதனைப் பருகுவாயாக " என்று கூறினாள்.

அவள் வார்த்தைகளுக்குப் பதிலேதும் கூறாமல் அவ்வாறே செய்த போது,மண்ணாக இருந்த ஊற்று நீரைப் பருகியதும் உடலில் உள்ள வியாதியும்,அதனால் ஏற்பட்ட சோர்வும் நீங்கிய உணர்வைப் பெற்றாள்.ஆஸ்துமா நோயினால் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு மூச்சு நன்றாக விட முடிந்தது.புல்லரிப்புடன் திரும்பிப் பார்த்த போது ஊற்று நீர் குபுகுபுவெனப் பெருகத் தொடங்கியது.

இவர் தான் பெர்னாடெட்

அடுத்து வந்த தரிசனங்களில் அந்த ஊற்று நீரை பருகினால் உடலில் உள்ள நோய்கள் நீங்கப் பெறும் என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தினாள் அந்த இளம்பெண்.13 வது தரிசனத்தின் போது, "போய்ப் பாதிரியார்களையும்,பொது மக்களையும் திரளாக அழைத்து வந்து இங்கு எனக்கு ஒரு ஆலயம் எழுப்பச் சொல்"என்று அப்பெண் கூறினாள்.

அடுத்த 2 தரிசனங்களிலும் அதே வார்த்தைகளைக் கூறவே,யார் அந்த இளமங்கை என்றறியும் ஆவல் பெர்னாடெட்டிற்கு ஏற்பட்டது.16 வது முறை தரிசனம் தந்த போது, "ஒளி வெள்ளமாகத் திகழும் மாதாவே!தாங்கள் யார்? என்று பெர்னாடெட் கேட்டதும், "நான்தான் புனித தூயமேரி மாதா!" என்ற பதில் கிடைத்தது.

அறிவிலோ,செல்வத்திலோ,சுகத்திலோ,உடல்நலத்திலோ எந்தவிதத்திலும் தகுதியில்லாத ஏழையான தன்னைத் தேர்ந்தேடுத்து, ஒருமுறை, இருமுறையல்ல 18 முறை காட்சியளித்ததை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தாள் பெர்னாடெட்.

அடுத்த நாள் ஊர் மக்களையும்,படித்தவர்களையும்,பெரியோர்களையும் கிரிட்டோவிற்கு அழைத்து வந்தாள் பெர்னாடெட்.அவளுக்கு மாதாவின் தரிசனம் கிடைத்த போது மாதாவின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி நின்றாள்.பெழுகுவர்த்தி உருகி பெர்னாடெட்டின் கையிலேயே 10 நிமிடங்கள் எரிந்தது.ஆனால் பெர்னாடெட்டின் கையைப் பாதிக்கவில்லை.

(மீதி அடுத்த பதிவில்)

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

சப்ராஸ் அபூ பக்கர் said...

:-)

Unknown said...

//ஆஸ்துமா நோயினால் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு மூச்சு நன்றாக விட முடிந்தது//

சமீபத்தில் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது அந்த நீரைக் குடித்து ஆஸ்த்மா குணமாகியிருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும் .
என் தாயார் ஆஸ்த்மாவினால் மிகவும் அவதிப் படுகிறார். ஆனால் எந்த மருத்துவரும் லூர்து மாதா கோவிலின் தண்ணீரை ப்ரிஸ்க்ரீப் பண்ணவில்லை. அடுத்த முறை கன்சல்டேஷ்னில் கட்டாயம் கேட்டு எழுதி வாங்குவேனே ;-)))

Admin said...

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்....

பல விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது...

Menaga Sathia said...

நன்றி சப்ராஸ் அபூ பக்கர்!!

Menaga Sathia said...

//சமீபத்தில் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது அந்த நீரைக் குடித்து ஆஸ்த்மா குணமாகியிருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும் .
என் தாயார் ஆஸ்த்மாவினால் மிகவும் அவதிப் படுகிறார். ஆனால் எந்த மருத்துவரும் லூர்து மாதா கோவிலின் தண்ணீரை ப்ரிஸ்க்ரீப் பண்ணவில்லை. அடுத்த முறை கன்சல்டேஷ்னில் கட்டாயம் கேட்டு எழுதி வாங்குவேனே ;-)))//

உலகில் உள்ள எல்லோரும் அந்த கோயிலுக்கு போவதே அங்குள்ள குளத்தில் குளித்து புத்துனர்ச்சி பெறதான்.அந்த நீரில் இயற்கையான மூலிகை கலந்திருப்பதும் ஒரு காரணம்.அதுமட்டுமில்லாமல் நம்முடையை நம்பிக்கையும் முக்கியம்.

உங்கள் தாயார் விரைவில் குணம்பெற ப்ரார்த்திக்கிறேன்.
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி இளைய கரிகாலன்!!

Menaga Sathia said...

நன்றி சந்ரு!!

Biruntha said...

சகோதரர்,
என் உறவுக்காரர் ஒருவருக்கும் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமா இருந்து வந்தது. அவர் இரு வருடங்களுக்கு முன் லூர்ட்ஸ் சென்று அந்தப் புனித நீரில் குளித்த பின் குணமாகி விட்டது.
ஆனால் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை வைத்துச் செய்தால் கண்டிப்பாகக் குணமடையும்.

பிருந்தா

Menaga Sathia said...

நீங்கள் சொல்வதுப்போல் தெய்வநம்பிக்கையும் முக்கியம்.தங்கள் உறவுக்காரருக்கு குணமானதில் மிக்க மகிழ்ச்சி.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பிருந்தா!!

+Ve Anthony Muthu said...

இங்கே தமிழகத்தில், சேத்துப்பட்டு எனும் மலை சார்ந்த இடத்தில், லூர்து மாதா திருத்தலம் ஒன்று உள்ளது. என் தாயார் தானே பல அற்புதங்களை சந்தித்திருப்பதாக சொல்வார்கள். இளவயதில் ஒரு முறை அங்கு சென்று அந்தத் தாயை தரிசித்திருக்கிறேன்.

எனக்கு இப்படி ஆன பிறகு Bedsores குணமாக வேண்டி அங்குள்ள ஹாஸ்பிட்டலில் 1 மாதமும் தங்கி வைதியம் பார்த்திருக்கிறோம்.
வெகுவாய் ஆசைப்பட்டும் கோவிலுக்கு போக முடியவில்லை.

+Ve Anthony Muthu said...

உலகம் போற்றும் தாயாரைப் பற்றிய அற்புதமான பதிவு.
இன்னும் நிறைய நீங்கள் எழுத வேண்டும்.

Menaga Sathia said...

நீங்கள் சொல்லும் மாதா கோயிலை ஊருக்கு போனால் போக முயற்சிக்கிறேன்.தங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோதரரே!!.

தங்களின் ப்ரொபைல் படித்தேன்,மனசு கனத்து விட்டது.தாங்கள் நலமுடன் இருக்க ப்ரார்த்திக்கிறேன்.

01 09 10