ராஜ்மா(
Red kidney beans) ,இதில்
dietary fibre அதிகம் இருக்கு.மேலும்
Manganese ,Protein,Iron,Vitamin K,B1 (Thiamin) நிறைய தாதுக்கள் நிறைந்த தானியம் இது.கொலஸ்ட்ரால்,சர்க்கரையை குறைக்கிறது.ப்ரவுன் ரைஸ்,கோதுமை பாஸ்தா மற்ற தானியங்களை விட இதில் அதிகளவு ப்ரோட்டீன் இருக்கு.
இதனை தினமும் உண்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.மலச்சிக்கலுக்கு இது சரியான தீர்வு.யார் அதிகம்
most water-soluble dietary fiber உணவுகள் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு
12% less coronary heart disease (CHD) and 11% less cardiovascular disease (CVD) நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இதில் நார்சத்து மட்டுமில்லை
folate and magnesium கூட நிறைய இருக்கு .1 கப் ராஜ்மாவில்
57.3%folate,19.9% magnesium ,28.9% iron,18.7% Thiamin (Vitamin B1),30.7% Protein இருக்கு.வளரும் குழந்தைகளுக்கும்,மெனோபாஸ் பிரச்னை உள்ளவர்களுக்கும்,கர்பிணிகளுக்கும் இரும்புசத்து நிறைய தேவை.அவர்கள் இதனை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வது நல்லது.ஞாபக சக்திக்கும் இது நல்லது.
காய்ந்தது மற்றும் டின்களில் ராஜ்மா கிடைக்கிறது.காய்ந்த பருப்பினை குறைந்தது 1 வருடம் வரை பயன்படுத்தி சமைப்பதே நல்லது.டின்களில் இருக்கும் உணவு பொருட்களில் சத்துக்கள் குறைவாகவே இருக்கும்.காய்ந்த பருப்பினை குறைந்தது 6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது.வேகவைத்த பருப்பினை 3 நாட்கள்வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம்.
சோயாவைப் பற்றி தெரிந்துக்கொள்ள
இங்கே பார்க்கவும்.
இதில் நான் சமைத்த கொழுக்கட்டை குறிப்பினை பார்க்கலாம்.
தே.பொருட்கள்:ராஜ்மா - 1/2 கப்
சோயா உருண்டைகள் - 20
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியா நறுக்கிய பச்சை மிளகாய் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :*ராஜ்மாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.வடிகட்டிய நீரை சூப்பாக பயன்படுத்தி குடிக்கலாம்.
*சோயா உருண்டைகளை 10 நிமிடம் கொதி நீரில் போட்டு பின் குளிர்ந்த நீரில் 2-3 அலசி நீரை நன்கு பிழிந்துக் கொள்ளவும்.
*சோயா உருண்டைகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உதிர்த்துக் கொள்ளவும்.ராஜ்மாவையும் மிக்ஸியில் மசிக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி ஆறவைக்கவும்.
*வதக்கிய பொருள்+சோயா+ராஜ்மா+உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*மிகவும் மிருதுவாக இருக்கும் இந்த கொழுக்கட்டை.
பி.கு:விரும்பினால் தேங்காய் துறுவலும் சேர்த்து கொள்ளலாம்.