Sunday 13 June 2010 | By: Menaga Sathia

மட்டன் உருண்டைக் குழம்பு

தே.பொருட்கள்:
உருண்டைக்கு:

மட்டன் கீமா - 1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
முட்டை - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
உப்பு - தேவைக்கு

குழம்புக்கு:

அரிந்த வெங்காயம் - 1பெரியது
அரிந்த தக்காளி - 1 பெரியது
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
பொடியாக அரிந்த புதினா கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சைசாறு - 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2

செய்முறை :

*கீமாவை கழுவி தண்ணியை நன்கு வடித்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள் போட்டு லேசாக வதக்கவும்.பின் கீமாவை போட்டு நன்கு நீர் வற்றும் வரை வதக்கி ஆறவிடவும்.

*அதனுடன் உப்பு+பொட்டுக்கடலை மாவு+சோம்புத்தூள்+முட்டை சேர்த்து பிசைந்து உருண்டைகளாகி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சிப்பூண்டு விழுது+பச்சை மிளகாய்+தககளி+தூள் வகைகள்+புதினா கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பின் தேங்காய்ப்பால்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் பொரித்த உருண்டைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு எலுமிச்சைசாறு சேர்த்து இறக்கவும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

பனித்துளி சங்கர் said...

எப்படித்தான் இதுபோன்று புதுமையான சமையல் தகவல்களை தருகிறீர்களோ அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி

Jayanthy Kumaran said...

your innovative dishes are excellent dear...loved this spicy touch ...!

ஜெய்லானி said...

அருமையான ரெஸிபி

athira said...

மேனகா மட்டின் உருண்டையில் குழம்போ? சூப்பர்.

Chitra said...

soooooooooopppppparungo!

Asiya Omar said...

சூப்பர் ருசி.மேனகா.

M.S.R. கோபிநாத் said...

நல்ல நான்வேஜ் ஐட்டம். நன்றி.

சசிகுமார் said...

எண்ணத்தில் தோன்றியவைகளை செயலில் செய்து காட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே அக்கா , உங்களுடைய ஒவ்வொரு பதிவும் வித்தியாசமாக உள்ளது. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

சமையல் ராணின்னு பட்டம் கொடுக்கலாம். ஆனா மத்தவங்கல்லாம் கோவிச்சுக்குவாங்களே... :)

ஸாதிகா said...

இப்படி அழகா சமைத்து அசத்துறீங்களே!படமும் செய்முறையும் சூப்பர்.

நட்புடன் ஜமால் said...

மட்டன் என்பதால் ப்ரஸண்ட் மட்டும் :)

SathyaSridhar said...

Hmm,,,kola urundai kulambu nalla seithurukeenga paa,,enakku unga recipe paartha udane kandippa intha week try pannanumnu mudivu paniten..en amma nalla seivanga antha kulambu apram urundai ippo miss pandrenga..

Umm Mymoonah said...

Mutton urundai kulambu naaku oorudu Menaga, enaku romba pidikkum.

ராஜ நடராஜன் said...

படத்துல ருசியாத்தான் இருக்குது.அம்மணி சமைச்சா குழம்பு தேறுவதில்லை.

பதிலாக வடை மாதிரி பொரிச்சா அப்படியே சாப்பிடுவேனாக்கும்.

Life is beautiful !!! said...

Migavum arumai :). I wanted to try it sometime. Looks yummy.

Sarah Naveen said...

looks so yummy yumm!!!

எம் அப்துல் காதர் said...

ரெஸிபி நல்லா இருக்கு மேடம். soooper

Menaga Sathia said...

நன்றி சங்கர்!!

நன்றி ஜெய்!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி அதிரா!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சகோ!!

நன்றி சசி!!

நன்றி அக்பர்!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சகோ!! ஏன் மட்டன் பிடிக்காதா உங்களுக்கு???

நன்றி சத்யா!! இந்த வீக் எண்ட் செய்து அசத்துங்க..

நன்றி உம் மைமூனா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி மஞ்சு!!

நன்றி சாரா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அப்துல்!!

Niloufer Riyaz said...

khuzhmbu migavum rusiyaga ulladu

GEETHA ACHAL said...

மட்டனில் உருண்டைகுழம்பு டாப் டக்கர்...அருமையான குறிப்பு...மேனகா உங்க வீட்டிக்கு வரட்டுமா...

Menaga Sathia said...

நன்றி நிலோபர்!!

நன்றி கீதா!! அதற்கென்ன தாராளமாக வீட்டுக்கு வாங்க...எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க...

vanathy said...

Menaga, super! I never heard about this recipe before.

Priya Suresh said...

Mutton urundai kuzhambu samachi naal aaguthu..delicious dish..

Anonymous said...

really nice images !!!!!!!!!!
motivate to cook n eat. thank u
me rajijayan

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி ப்ரியா!!

நன்றி ராஜிஜெயன்!!

Jaleela Kamal said...

மட்டன் உருண்டை குழம்பு எனக்கு ரொம்ப பிடித்த்து

01 09 10