Tuesday 22 June 2010 | By: Menaga Sathia

கேரட் உசிலி

தே.பொருட்கள்:

துருவிய கேரட் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்^
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :
* கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+உப்பு+சோம்பு+பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஆவியில் வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காய்த்தை போட்டு வதக்கவும்.

*பின் கேரட்+உப்பு சேர்த்து நன்கு வதக்கி உதிர்த்த கடலைப்பருப்பை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

new one to me

Menaga Sathia said...

இப்பவும் நீங்கதான் பர்ஸ்ட்.நன்றி எல்கே!!

சாருஸ்ரீராஜ் said...

கேரட் ரெசிபி புதுசு செஞ்சு பார்திட்டு சொல்கிறேன்.

ஹைஷ்126 said...

புது ரிசிப்பி, செய்துதான் பார்க்கவேண்டும். நன்றி

GEETHA ACHAL said...

superb...nice recipe....

Umm Mymoonah said...

Nalla side dish Menaga, parka romba nalla irukku.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்.... yumm yummm

மாம்பழ கேக், காரட் உசிலி... இதெல்லாம் சாப்பிடவாவது
உங்க வீட்டுக்கு வரணும் போல இருக்கே ;-))

சூப்பர்...!!

Asiya Omar said...

புதுசாக எதுவும் செய்யனும்னால் சஷிகா தான்...

Cool Lassi(e) said...

Lovely carrot usili!

Life is beautiful !!! said...

Usili carrot vachu sencha nallathan irukum. Try panna poren. Thanks :)

Anonymous said...

கேரட் உசிலி பண்ணியிருக்கேன் ஆனா இந்த மாதிரி பண்ணினது கிடையாது ...நல்லா இருக்கு பண்ணி பார்த்திட்டு சொல்லறேன் ..நன்றி

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சகோ!!

நன்றி கீதா!!

நன்றி உம் மைமூனா!!

Menaga Sathia said...

நன்றி ஆனந்தி!! தாராளமாக வாங்க...எப்போ வர்ரீங்க சொல்லுங்க...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி கூல்!!

நன்றி மஞ்சு!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி சந்தியா!!செய்து பார்த்து எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க...

Pavithra Srihari said...

as usual unusual.. lovely menaga

Starjan (ஸ்டார்ஜன்) said...

கேரட் உசிலி பார்க்கும்போதே அழகா இருக்கு.. சாப்பிட்டால்.. செய்து சாப்பிடவேண்டியதுதான்

தெய்வசுகந்தி said...

பீன்ஸ்க்கு பதிலா கேரட்டா நல்லா இருக்குது மேனகா!!!!!

Chitra said...

You are very creative.... Super!

Unknown said...

Nice dish.. cabbage kooda pannalam..

Vijiskitchencreations said...

நல்ல ரெசிப்பி. குழந்தைகளுக்கு கேரட்டை சாப்பிட இந்த முறை நல்லா இருக்கு.

Niloufer Riyaz said...

arumayana recipe

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

நன்றி சகோ!! செய்து பாருங்கள்...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி விஜி!!

நன்றி நிலோபர்!!

ஸாதிகா said...

கேரட்டில் இப்படி செய்ததில்லை.நன்றி புது ரெஸிப்பிக்கு.

Priya Suresh said...

Tasty usili looks fabulous..

vanathy said...

arumai. nalla irukku.

01 09 10