Thursday 17 June 2010 | By: Menaga Sathia

பனீர் உருளைக்கிழங்கு பொடிமாஸ்

தே.பொருட்கள்:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
உதிர்த்த பனீர் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
நசுக்கிய இஞ்சி,பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+நசுக்கிய இஞ்சி பூண்டு+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+கரம் மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வெங்காயம் நன்கு வதங்கிய பின் மசித்த உருளை+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+உப்பு+பனீர் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

Sending this recipe CWS -Pepper by padma started by Priya & Healing Foods - Onions by Priya & Think - Spice Garam Masala by Sara started by Sunitha

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

பனித்துளி சங்கர் said...

நமக்கு உருளைக்கிழங்கு என்றாலே ரொம்ப பிடிக்கும் அதிலும் உங்கள் சமையல் மிகவும் அருமை . நாளைக்கு லீவுதான் பண்ணிட வேண்டியதுதான் . பகிர்வுக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

பனீர் சேர்ப்பது இப்பதான் பார்க்கிறேன்

:)

vanathy said...

மேனகா, அருமை. சோம்பு தூள் சேர்த்தால் அதன் சுவையே தனிதான்.

எல் கே said...

உருளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த சண்டே இதை முயற்சி பண்ணனும்

தெய்வசுகந்தி said...

Looks Good!!!!!!!!

வேலன். said...

இன்னும் பிரட்ரோஸ்ட்டோ செய்யவில்லை..அதற்குள் பொடிமாஸா...பதிவு அருமை சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Nithu Bala said...

lovely yummy recipe..love the combo..

சசிகுமார் said...

அக்கா உங்களுடைய கைவண்ணத்தில் உருவான பனீர் உருளைக்கிழங்கு பொடிமாஸ் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன் தம்பிக்கு ஒரு பார்சல் அனுப்புங்களேன்.

Padhu Sankar said...

Wow looks yummy !!

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு மேனகா.

Chitra said...

potato and paneer. - haven't tried this combo. before. Thank you for the recipe. :-)

Asiya Omar said...

சூப்பர்,பரோட்டா,சப்பாத்தி ரோல் க்கு அருமையாக இருக்கும்.

Life is beautiful !!! said...

Menaga, a very nice way to use paneer. Namma sapadu mathiriyum irukum, paneer use panna mathriyum irukum :)

Menaga Sathia said...

நன்றி சங்கர்!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சகோ!!

நன்றி வானதி!!

நன்றி எல்கே!!

நன்றி சுகந்தி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! ஒவ்வொன்றாக செய்து பாருங்கள்..

நன்றி நிது!!

நன்றி சசி!!அதற்கென்ன தாராளமாக உங்களுகு பார்சல் அனுப்பிட்டா போச்சு..

நன்றி பது!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி சித்ரா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி மஞ்சு!!

சிநேகிதன் அக்பர் said...

குப்பூஸுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Unknown said...

நீண்ட நாட்களுக்கு பின்பு உங்கள் வலைப்பூவில் சந்திக்கிறேன் நலமா? உருளைக்கிழங்கு என்றாலே ரொம்ப பிடிக்கும் பனீருடன் செய்வது புதிதாக இருக்கு செய்து பார்கிறேன்

GEETHA ACHAL said...

மிகவும் வித்தியசமாக இருக்கின்றது...சூப்பர்ப்....

Unknown said...

Adding paneer is really great.. looks perfect.. i love paneer..

Priya Suresh said...

Delicious podimas, very creative Menaga, romba nandri unga entriesku ellam..

Menaga Sathia said...

நன்றி அக்பர்!!

நன்றி சிநேகிதி!! நாங்கள் நலம்,நீங்களும் உங்க குட்டீஸ்களும் நலமா?செய்து பார்த்து சொல்லுங்கல்..

நன்றி கீதா!!

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி ப்ரியா!!

எல் கே said...

இன்னிக்கு இதுதான் செய்தோம். மிக அருமை... நன்றி மேனகா

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி + நன்றி எல்கே!!

Anonymous said...

I'm missing paneer so much, now when I read this recipe, I feel so bad! I want to eat this now!!!
It looks so good, I just love South Indian food:)
Thank you for sharing this recipe :)


Mythily.S

01 09 10