Friday 25 June 2010 | By: Menaga Sathia

மாம்பழ ஐஸ்க்ரீம்

கூகிளில் பல சைட்களில் தேடி முதல்முறையாக ஐஸ்க்ரீம் செய்தேன்.ரொம்ப நன்றாக வந்தது.
தே.பொருட்கள்:
மாம்பழ கூழ் - 2 கப்
பால் - 2 கப்
கெட்டி தேங்காய்ப்பால் - 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
செய்முறை :
* அனைத்தையும் ஒன்றாக கலந்து ப்ளெண்டரில் நன்கு அடித்து ஒரு சில்வர் பாக்ஸில் ஊற்றி ப்ரீசரில் 6 மணிநேரம் வைக்கவும்.

*பின் 6 மணிநேரம் கழித்து மறுபடியும் ப்ளெண்டரில் நன்கு அடித்து 6 மணிநேரம் ப்ரீசரில் வைக்கவும்.

*இந்த மாதிரி 2 அல்லது 3 முறை 6 மணிநேரத்துக்கு ஒருமுறை செய்து ப்ரீசரில் செட் செய்து பரிமாறவும்.
பி.கு:
இதில் நான் ரெடிமேட் மாம்பழகூழ் சேர்த்துள்ளேன்.ப்ரெஷ் மாம்பழ கூழ் சேர்த்தால் இன்னும் நன்றாகயிருக்கும்.

Sending this recipe to Sizzling Summer Contest by Spicy Tasty.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

சூப்பர் ஆ இருக்கு ஒரு கப் எனக்கும் கொடு தோழி...

Prema said...

Mango ice cream yummy yum.,adding coconut milk really super...

ஹைஷ்126 said...

வெய்யிலுக்கு சூப்பரா இருக்கு.

Gayathri said...

wow great recipe!will try soon..

Unknown said...

WOW.. Adding coconut milk really nice idea.. looks perfect..

Cool Lassi(e) said...

Mango ice-cream looks delicious. I include whipped cream in my version.

தெய்வசுகந்தி said...

super recipe for the summer!!!

Chitra said...

yummy treat!

GEETHA ACHAL said...

ஒரே மாம்ப்ழம் + கேரட் குறிப்புகளாக போட்டு அசத்துகின்றிங்க...மாம்பழம் ஐஸ்கீரிம் சூப்பர்ப்...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்...நன்றி

athira said...

Very nice.

Niloufer Riyaz said...

ice cream migavum rusiyaga ulladu. tasty

ஜெய்லானி said...

வாவ் ..!! ரெண்டு பிளேட்டா தாங்க...ஒன்னு எனக்கு கட்டு படியாகாது..

சசிகுமார் said...

அக்கா அருமை சீசனுக்கு ஏத்த மாதிரி பதிவு நல்லா இருக்கு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

புது முயற்சி , முதல் ஐஸ் கீரிம் வாழ்த்துக்கள்

பார்க்கவே பிஸ் தாஅ பிளேக்ஸ் உடன் அருமை.

சிநேகிதன் அக்பர் said...

பகிர்வுக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

படம் மட்டுமே கொடுக்கும் இந்த கூகில் இலவசமா டெலிவரியும் செஞ்சா ...

நெசச்சாலே இந்த ஐஸ்க்ரீம் கைக்கருகில் போல் நாக்கூறுதே ...

சாருஸ்ரீராஜ் said...

சுப்பரா இருக்கு ஈசியாகவும் இருக்கு செய்து பார்திட்டு சொல்கிறேன்

Menaga Sathia said...

நன்றி சந்தியா!! உங்களுக்கு இல்லாமலா...தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்...

நன்றி பிரேமலதா!!

நன்றி சகோ!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி காயத்ரி!!

நன்றி ஸ்ரீப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி சித்ரா!!

நன்றி கீதா!! நீங்கள் சொல்லிய பிறகு தான் நானே கவனித்தேன்...செய்து பார்த்து சொல்லுங்கள்..

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி நிலோபர்!!

நன்றி ஜெய்லானி!!ஓ கே உங்கலுக்கு 2 பிளேட்டாகவே கொடுத்திடுறேன்..

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி அக்பர்!!

நன்றி சகோ!! // படம் மட்டுமே கொடுக்கும் இந்த கூகில் இலவசமா டெலிவரியும் செஞ்சா ...!// அதானே அப்ப்டியிருந்தால் எப்படியிருக்கும்..ஆஹா..

நன்றி சாரு அக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Priya Suresh said...

Adikura veyil'ku yetha icecream...super..

தக்குடு said...

mango ice cream thakkuduvukku kittumaa???....:) nice one akka!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி தக்குடுபாண்டி!! உங்களுக்கு இல்லாமலா...தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்..

ஹுஸைனம்மா said...

வழக்கம்போல லேட் & வழக்கம்போல சந்தேகம்:

1. தேங்காய்ப்பால் புதுசா இருக்கு. தேங்காய்ப்பால் சேர்க்கும் பதார்த்தங்கள் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பிருக்கு. இதிலயும் சூடாக்காமலேதான் சேர்த்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். ஒண்ணும் செய்யாதா?

2. ஃப்ரீஸர்ல இருந்து எடுத்து, உடனே ப்ளெண்டரில் அடிக்கணுமா அல்லது கொஞ்ச நேரம் வெளியில் வைத்து உருகிய பிறகு அடிக்கணுமா?

3. ஒவ்வொரு முறையும் ப்ளெண்டரில் எத்தனை நிமிஷம், எவ்வளவு ஸ்பீடில் அடிக்கணும்? (ஹேண்ட்)பிளெண்டருக்குப் பதில் மிக்ஸி பயன்படுத்தலாம்தானே?

Menaga Sathia said...

//1. தேங்காய்ப்பால் புதுசா இருக்கு. தேங்காய்ப்பால் சேர்க்கும் பதார்த்தங்கள் சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்பிருக்கு. இதிலயும் சூடாக்காமலேதான் சேர்த்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். ஒண்ணும் செய்யாதா?// தேங்காய்ப்பால் சூடாகமால்தான் சேர்க்கனும்..சுவை கொடுக்கும்...ப்ரீசரில் வைப்பதால் கெட வாய்ப்பில்லை..மேலும் என் வீட்ல் ஐஸ்க்ரீம்லாம் 1 வாரம் வரை இருக்குமானுன்னு சந்தேகம் தான்...சோ கெட வாய்ப்பிலை..

//2. ஃப்ரீஸர்ல இருந்து எடுத்து, உடனே ப்ளெண்டரில் அடிக்கணுமா அல்லது கொஞ்ச நேரம் வெளியில் வைத்து உருகிய பிறகு அடிக்கணுமா?// ப்ரீசரிலிருந்து எடுத்து 10 நிமிடம் வெளியில் வைத்த பிறகுதான் ப்ளெண்டரில் அடிக்க முடியும்...

//3. ஒவ்வொரு முறையும் ப்ளெண்டரில் எத்தனை நிமிஷம், எவ்வளவு ஸ்பீடில் அடிக்கணும்? (ஹேண்ட்)பிளெண்டருக்குப் பதில் மிக்ஸி பயன்படுத்தலாம்தானே?// ஒவ்வொரு முறையும் ஹை ஸ்பீடில் 10 நிமிடம் அடித்தால் போதும்....பிளெண்டருக்கு பதில் மிக்ஸியிலும் அடிக்கலாம்..மிக்ஸியில் விப்பர் போடில் பயன்படுத்தனும்...நன்றி ஹூசைனம்மா!!

Mahi said...

அருமையா இருக்கு மேனகா!

01 09 10