இந்த பிரியாணியில் வெங்காயம்+தக்காளி+காரம்+நெய் +புதினா+கொத்தமல்லி எதுவும் சேர்க்க தேவையில்லை.இதன் ஸ்பெஷலே வெள்ளை கலரில் தான் இருக்கும்.
காரம் இல்லாததால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.தயிர் பச்சடியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.இதை நான் சிக்கன் குருமாவுடன் பரிமாறினேன்.
Recipe Source : Anisha
தே.பொருட்கள்
முழு கோழி - 1
சிக்கன் ஸ்டாக் செய்ய
பூண்டுப்பல் - 5
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
சோம்பு +தனியா தலா - 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 1பிரியாணி இலை - 1
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 8
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நீர் - 2 கப்
செய்முறை
*குக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு+ஏலக்காய்+இஞ்சி பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
*நறுக்கிய வெங்காயம் + பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின் சிக்கன் தோல்+சிக்கன் துண்டுகள் சிறிது சேர்த்து வதக்கவும்.
*பின் 2 கப் நீர்+உப்பு+தனியா+சோம்பு + மிளகு சேர்த்து 4 5 விசில் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.
தே.பொருட்கள்
பாஸ்மதி - 2 கப்
தயிர் - 3/4 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைக்க
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 10
பட்டை - 1சிறுதுண்டு
ஜாதிக்காய் - 1 துண்டு(சிறிதளவு)
தாளிக்க
மிளகு - 1/2 டீஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 2
செய்முறை
*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் கறிதுண்டுகளை சேர்த்து வதக்கி பின் தயிர் சேர்த்து வதக்கவும்.
*உப்பு+சிக்கன் ஸ்டாக் +பாஸ்மதி+நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
பி.கு
*இந்த அளவு அரிசிக்கு 3 கப் நீர் (சிக்கன் ஸ்டாக் 3 கப் குறைவாக இருந்தால் மேலும் நீர் சேர்த்து கொள்ளவும்)தேவைப்படும்.
*சிக்கன் ஸ்டாக்கில் உப்பு இருப்பதால் தேவைக்கு பிரியாணி செய்யும் போது உப்பு சேர்க்கவும்.
*இதே போல் ஸ்டாக் மட்டனிலும் செய்யலாம்,கூடுதல் நேரம் வேகவைத்து எடுக்கவும்.
*இதில் முழுஜாதிக்காயில் கால்வாசி சேர்த்தால் போதும்,அதிகம் சேர்த்தால் சுவை மாறிவிடும்.