Thursday 29 August 2013 | By: Menaga Sathia

புளி பொங்கல்/உப்புமா - Puli Upma(Tamarind Pongal)



தே.பொருட்கள்

அரிசி நொய் - 1 கப்
புளிகரைசல் - 3 கப்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 2
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்


செய்முறை

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது அரிசி நொய் சேர்த்து கிளறி வெந்ததும் இறக்கவும்.

*இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை,அப்படியே சாப்பிட செம ருசி..

This is off to Priya's Vegan Thursday.
Tuesday 27 August 2013 | By: Menaga Sathia

அவல் லட்டு / Aval(Poha) Laddu



தே.பொருட்கள்

அவல் -  1 கப்
சர்க்கரை -  1/4 கப்
நெய் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 8
திராட்சை - 8

செய்முறை

*முந்திரியை பொடியாக உடைத்து சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

*அதே கடாயில் சிறிது நெய் விட்டு அவலை வறுத்து,ஆறியதும் நைசாக பொடிக்கவும்.சர்க்கரையையும் நைசாக பொடிக்கவும்.



*பவுலில் பொடித்த அவல்+சர்க்கரை+ஏலக்காய்த்தூள்+வறுத்த முந்திரி+திராட்சை  சேர்த்து கலந்து சூடான நெய் ஊற்றி லட்டுகளாக பிடிக்கவும்.


பி.கு

*இங்கு நான்  Thin Aval உபயோகித்துள்ளேன்.1/4 கப் சர்க்கரையே போதுமானது,விரும்பினால் 1/2 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

*இந்த அளவில் 7 உருண்டைகள் வரும்.


Thursday 22 August 2013 | By: Menaga Sathia

காக்டெயில் /Cocktail Of Mango Raspberry syrup without alcohol:


பரிமாறும்  அளவு : 2 நபர்கள்

தயாரிக்கும் நேரம் : 10 - 15 நிமிடங்கள்


தே.பொருட்கள்

மாம்பழம்  - 2
லைம்  - 1
ராஸ்பெர்ரி சிரப்  - 1/2கப்
லெமனேட்  - தேவைக்கு

செய்முறை

*மாம்பழத்தை தோல் +கொட்டை நீக்கி விழுதாக சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.

*க்ளாசில் சிறிது ஐஸ்கட்டிகள் போட்டு கால் கப் ராஸ்பெர்ரி சிரப் ஊற்றவும்.

*பாதி லைம் பிழியவும்,பின் மாம்பழ சாறு பாதியளவு ஊற்றவும்.

*பின் லெமனேட் ஊற்றி பரிமாறவும்.

பி.கு

*மாம்பழத்துக்கு பதில் மெலன் அல்லது தர்பூசணி பயன்படுத்தலாம்.
Monday 19 August 2013 | By: Menaga Sathia

மாம்பழ மில்க்க்ஷேக் /Mango Milkshake

தே.பொருட்கள்  

மாம்பழ கூழ் - 1 கப்
குளிர்ந்த பால் - 2 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை


*மிக்ஸியில் மாம்பழ கூழ் +சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.




*பின் பால் சேர்த்து நன்கு அடித்து பரிமாறவும்.

பி.கு

*இங்கு நான் ரெடிமேட் மாம்பழ கூழினை பயன்படுத்திருக்கேன்..

*ப்ரெஷ் மாம்பழம் சேர்த்து செய்தால் சர்க்கரை அளவினை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

*எப்போழுதும் குளிர்ந்த பாலினையே சேர்க்கவும்.
Friday 16 August 2013 | By: Menaga Sathia

South Indian Mini Breakfast Thali

தென் இந்திய காலை சிற்றுண்டியில் இடம் பெறும் முக்கிய மெனு

இட்லி, வெண்பொங்கல் ,ரவா கேசரி,தேங்காய் சட்னி, சரவணபவன் ஹோட்டல் சாம்பார்  ,மெதுவடை, காபி...

இவையில்லாமல் பூரி,தோசை,மசால் தோசை, ஆப்பம், உப்புமா,கிச்சடி போன்ற இதர டிபன் ஐயிட்டங்களும் இடம் பெறும்.

ரவா கேசரி


தே.பொருட்கள்

ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
நீர் - 1 1/2 கப்
கேசரி கலர் - 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி-  10
திராட்சை -  8
நெய் - 1/4 கப்

செய்முறை

* கடாயில் சிறிது நெய் விட்டு வையை 2 நிமிடங்கள் நிறம் மாறாமல் வறுக்கவும்.


*வேறொரு பாத்திரத்தில் நீர்+உப்பு+கேசரி கலர் சேர்த்து கொதிக்கவிடவும்.


*ரவை வறுபட்டதும் முந்திரி திராட்சை சேர்த்து கிளறி  கொதிநீரை ஊற்றி கிளறவும்.ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.


*நன்கு சுருண்டு வரும் போது ஏலக்காய்த்தூள் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு

*ரவையில் கொதிக்கும் நீர் ஊற்றி கிளறுவதால் கட்டிவிழாமல் இருக்கும்,கிளறுவதற்க்கும் ஈசியா இருக்கும்.

*கொடுத்துள்ள அளவுபடி நெய் சேர்த்தால் நன்றாக இருக்கும்.





Wednesday 14 August 2013 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு சுண்டல் /Moongdal Sundal

தே.பொருட்கள்

பாசிப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் + சுக்குத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*பருப்பை உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவைத்து நீரை வடிக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பாசிப்பருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு

*பருப்பு வேகவைத்த நீரை வீணாக்காமல் சூப்,ரசம் செய்ய பயன்படுத்தலாம்.
Monday 12 August 2013 | By: Menaga Sathia

நீராகாரம் /Neeraagaram

நீராகாரம் = நீர்+ஆகாரம். முதல் நாள் இரவில் மீதமான சாதத்தில் தண்ணீர் +சாதம் வடித்த கஞ்சி இவற்றை ஊற்றி மறுநாள் காலையில் அதனை வெறும் வயிற்றில்  குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் வரும்.

அந்த நீரில் உடலும் நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைய உருவாக்குகிறது.

தே.பொருட்கள்

மீதமான சாதத்தில் ஊற்றிய நீர் - 2 கப்
தயிர்  - 1/2 கப்
எலுமிச்சை பழம் - 1/2
உப்பு - தேவைக்கு

செய்முறை

* மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து பருகவும்.
Friday 9 August 2013 | By: Menaga Sathia

வெல்ல புட்டு/Vella Puttu



தே.பொருட்கள்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
நீர் - 3/4 கப் + 1/4 கப்
வெல்லம் - 3/4  கப்
தேங்காய்த்துறுவல் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*அரிசிமாவை வெறும் கடாயில் லேசாக வறுக்கவும்.


*3/4 கப் நீரில் மஞ்சள்தூள் + உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து வறுத்த மாவில் கொஞ்சகொஞ்சமாக தெளித்து கட்டியில்லாமல் உதிரியாக பிசையவும்.

*மாவை கையால் எடுத்தால் உருண்டை பிடிக்க வரவேண்டும்,அழுத்தினால் பொலபொலவென கொட்டவேண்டும்.அதுவே சரியான பதம்.

*அதனை ஆவியில் 30-45 நிமிடங்கள் வேகவைத்து ஆறவைக்கவும்.

*வெல்லத்தை 1/4 கப் நீரில் சூடு செய்து,கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவைக்கவும்.


*பாகை நீரில் விட்டால் உருண்டை எடுக்கும் பதத்தில் வரவேண்டும்.

*அந்த பதத்தில் பாகை மாவில் கொட்டி கிளறி 5 நிமிடங்கள் வைக்கவும்.



* அதனுடன் தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.


Tuesday 6 August 2013 | By: Menaga Sathia

நெய் கோழி/Nei Kozhi(Ghee Chicken)

செஃப் ஜேக்கப்பின் ஆஹா என்ன ருசியில் பார்த்து செய்தது.செம சுவை!!

தே.பொருட்கள்

கோழி - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் - 2 டேபிள்ஸ்பூன்

அரைக்க‌

மிளகு+சீரகம் = தலா 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 12
நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை

*1 டேபிள்ஸ்பூன் நெய்யில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் மீதமுள்ள நெய் விட்டு சிக்கன் +மஞ்சள்தூள்+ உப்பு சேர்த்து வதக்கி
அரைத்த மசாலா+1/2கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் நன்கு சுருள கிளறி இறக்கவும்.
Monday 5 August 2013 | By: Menaga Sathia

தயிர் சாதம்/Curd Rice

தே.பொருட்கள்

பச்சரிசி - 1 கப்
பால் - 1/2  கப்
தயிர் -1/2 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*அரிசியை 2 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.

*பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து,வேகவைத்த சாதத்தில் சூட்டோடு பாலை ஊற்றி உப்பு சேர்த்து மசிக்கவும்.

*சாதம் ஆறியதும் தயிர்+கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து தாளித்து சேர்க்கவும்.

பி.கு 

பொதுவாக தயிர் சாதத்தில் பொடியாக நறுக்கிய‌ கேரட்+மாங்காய் தான் சேர்ப்பேன்,மாதுளை முத்துகள் சேர்த்தால் சுவை மாறிவிடும் என்பதால் அவைகளை நான் சேர்ப்பதில்லை..

Thursday 1 August 2013 | By: Menaga Sathia

சேனைக்கிழங்கு வறுவல்/Senaikizhangu Varuval

தே.பொருட்கள்

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

* சேனைக்கிழங்கை தோல் சீவி மெலிதாக நீளவாக்கில் நறுக்கி கழுவி நீரை வடிக்கவும்.

*அதில் எண்ணெய் தவிர மேற்கூறிய பொருட்கலை ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வறுத்தெடுக்கவும்.

This is off to Vegan Thursday.
01 09 10