Thursday 30 November 2017 | By: Menaga Sathia

சுக்கு மல்லி காபி / Sukku Malli (Dry Ginger Coriander ) Coffee

மழைகாலங்களில் சுக்கு மல்லி காபி குடிப்பது ரொம்ப நல்லது.தொண்டை கரகரக்கும் போது,சளி பிடித்திருக்கும் போது இந்த காபி குடிப்பது இதமாக இருக்கும்.

இந்த பொடியை  செய்து காற்றுபுகாத டப்பாவில் வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.

தே.பொருட்கள்

கொத்தமல்லி விதை -1/4 கப்
மிளகு -1 டீஸ்பூன்
ஏலக்காய் -2
சுக்கு -1 அங்குல துண்டு
பனை வெல்லம்  - 1/3 கப்

செய்முறை

*வெறும் கடாயில் மல்லி விதை,மிளகு,ஏலக்காய் இவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

*சுக்கு தோலினை சுரண்டிவிட்டு லேசாக நசுக்கி கொள்ளவும்.

*அனைத்தையும் ஒன்றாக கொரகொரப்பாக பொடிக்கவும்.
 *பனை வெல்லத்தை துருவி நீர் ஊற்றி கொதிக்க வைத்த பின் வடிகட்டவும்.
 *பாத்திரத்தில் 1 கப் நீர் ஊற்றி 1 டேபிஸ்பூன் பொடித்த பொடியை போட்டு கொதிக்க வைக்கவும்.
*கொதித்த பின் வடிகட்டி பனை வெல்ல நீரை கலந்து சூடாக பருகவும்.
Sunday 26 November 2017 | By: Menaga Sathia

வெந்தய களி/ Vendhaya (Fenugreek Seeds ) Kali | Breakfast Recipe

வெந்தயகளி,இதனை காலை உணவாக பூப்பெய்தும் பெண்களுக்கு கொடுப்பார்கள்.வெயில் காலங்களில் உடம்பு குளிர்ச்சியடையவும் சாப்பிடுவார்கள்.

தே.பொருட்கள்
வெந்தயம் -100 கிராம்
புழுங்கலரிசி -400 கிராம்
வெள்ளை முழு உளுந்து -2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
பனைவெல்லம் -200 கிராம்
நல்லெண்ணெய் -100 மிலி
ஏலக்காய்தூள் -1/2 டீஸ்பூன்
சுக்குபொடி -1/4 டீஸ்பூன்

செய்முறை
*அரிசி+உளுந்து இவற்றை ஒன்றாகவும்,வெந்தயத்தை தனியாகவும் முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.
 *மறுநாள் வெந்தயத்தை தனியாக வெண்ணெய் மாதிரியும்,அரிசி உளுந்தினை மைய அரைக்கவும்.
 *பனைவெல்லதில் நீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைந்ததும் வடிகட்டவும்.மீண்டும் கொதிக்க வைத்து ஏலக்காய்தூள்+சுக்குபொடி சேர்த்து இறக்கவும்.
 *அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலக்கி பின் தேவையான நீர்  ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைக்கவும்.
 *கைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்,ஒட்டும் போது நெல்லெண்ணெய் ஊற்றி மீண்டும் கலக்கவும்.
 *இப்போழுது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போதோ அல்லது ஈரக்கையால் தொட்டால் மாவு ஒட்டாமல் வந்தாலோ அடுப்பிலிருந்து இறக்கவும்.

*மாவு கையில் ஒட்டினால் மீண்டும் கிளறவும்.
 *கிண்ணத்தில் களியை வைத்து அதன்மேல் பனைவெல்லத்தினை ஊற்றி பரிமாறவும்.

Sunday 5 November 2017 | By: Menaga Sathia

பரங்கிக்காய்(பூசணிக்காய்) பால் கூட்டு /Parangikai(Yellow Pumpkin) Paal Kootu

பரங்கிகாயில் சாம்பார்,கூட்டு,பொரியல்,சூப், குழம்பு என செய்யலாம்.

தே.பொருட்கள்

பரங்கிக்காய் துண்டுகள் -2 கப்
அரிசி மாவு -2 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 1டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய்- 2

செய்முறை

*தேங்காய் துறுவலை மைய அரைக்கவும்.அரிசி மாவினை சிறிது நீரில் கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் பரங்கிகாய் துண்டுகளை போட்டு முழ்குமளவு நீர் ஊற்றி வேகவைக்கவும்.

*காய் வெந்ததும் உப்பு,நாட்டு சர்க்கரை  மற்றும் கரைத்து வைத்த அரிசி மாவினை சேர்த்து கிளறவும்.


*பின் தேங்காய் விழுதினை சேர்த்து கிளறி பின்  2 நிமிடங்களில் இறக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.

பி.கு
காரகுழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Saturday 14 October 2017 | By: Menaga Sathia

சர்க்கரை நொக்கல் / Sugar Nokkal (Sugar Coated Sev) | Diwali Recipes

நொக்கல் என்பது சேவ் செய்து அதனை சக்கரை பாகில் போட்டு எடுப்பது..திருமணங்களில்  பந்தியில் இதனை முக்கியமாக  வைப்பாங்க.

இது என்னுடைய 1100 வது பதிவு !!

தே.பொருட்கள்

கடலைமாவு - 1 கப்
அரிசிமாவு -1/8 கப்
சோடா உப்பு -1 சிட்டிகை
வெண்ணெய் -2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் -பொரிக்க
சர்க்கரை -1 1/2 கப்
நீர் -1/4 கப்
பால் - 1/8 கப்

செய்முறை
*ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு,வெண்ணெய்,சோடா உப்பு சேர்த்து பிசைந்த பின் நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சேவ் அச்சு அல்லது தேன்குழல் அச்சியில் போட்டு காயும் எண்ணெயில் வெண்ணிறமாக பொரித்தெடுக்கவும்.



*ஒரு பாத்திரத்தில் சக்கரை+நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.சர்க்கரை கரைந்தவுடன் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு வடிகட்டவும்.

*பின் மீண்டும் அடுப்பில் கொதிக்க விடவும்.பாகினை தொட்டால் இரு விரல்களுக்கு இடையே 2 நூலிழை போல வரும்...அல்லது ஒரு சிறு கிண்ணத்தில் நீர் வைத்து பாகினை ஊற்றினால் கரையாது ,அதனை பந்து போல திரட்டமுடியும் ஆனால் கையால் எடுக்க முடியாது.இதுவே 2 கம்பி பதம்.

*2 கம்பி பதம் வந்ததும் அடுப்பினை அணைத்து பொரித்த சேவ் சேர்த்து கலக்கவும்.


*நன்றாக கலக்கி கொண்டே இருந்தால் பாகு சேவில் ஒட்டி பூத்தாற்போல இருக்கும்.

*நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

பி.கு

*2 கம்பிபதம் எடுத்தால் சக்கரை பூத்தாற் போல வரும்.

*பேக்கிங் சோடா அதிகம் சேர்த்தால் எண்ணெயில் பிழியும் போது கரைந்துவிடும்.

*சேவ்வினை பொன்னிறமாக பொரித்தாலும் பாகில் ஒட்டாது.


Monday 9 October 2017 | By: Menaga Sathia

முட்டையில்லாத அச்சு முறுக்கு /Achu Murukku (No Maida &Eggless) | Diwali Recipes


அச்சு முறுக்கு கேரளாவில் மிக பிரபலமானது.சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும்.சிறுவயது முதலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அம்மா இதனை முட்டையில்லாமலும்,மைதா சேர்க்காமலும் செய்வாங்க.ஒரு முறை ரெடிமேட் அரிசிமாவில் மைதா ,முட்டையில்லாமால் செய்த போது சரியாக வரவில்லை,சுவையும் பிடிக்கவில்லை.

இந்த முறை செய்யும் போது அரிசிமாவை வீட்டிலேயே செய்து,முறுக்கு செய்ததில் நான் எதிர்பார்த்த சுவையில் இருந்தது.

இதற்கு அரிசி மாவு ஈரபதத்துடன் இருக்கவேண்டும்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1 கப்
பொடித்த சர்க்கரை -1/4 கப்
2 ஆம் தேங்காய் பால் -1/4 கப்
உப்பு-1 சிட்டிகை
ஏலக்காய் பொடி -1/4 டீஸ்பூன்
கறுப்பு எள் -1/2 டீஸ்பூன்
நீர் -1/2 கப்+1/8 கப்
எண்ணெய் -பொரிக்க

செய்முறை
*அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்த பின் நீரினை வடிக்கவும்.பின் துணியில் ஈரம் போக உலர்த்தவும்.

 *மிகஸியில் மாவினை நைசாக பொடித்து சலிக்கவும்.
 *பாத்திரத்தில் சலித்த மாவு மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
 *மாவின் பதம் மிக முக்கியம்,கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்ககூடாது.
 *கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும்.அதனுடன் அச்சினையும் சேர்த்து நன்கு காய வைக்கவும்.

*அச்சு காய்ந்த பின் மாவினுள் 1/2 பகுதி வரை முழ்கி எடுத்து உடனே காயும் எண்ணெயில் வைக்கவும்.

 *அச்சினை லேசாக ஆட்டினால் முறுக்கு தனியாக வந்துவிடும்.
 *மறுபடியும் அச்சினை காயும் எண்ணெயிலேயே போட்டு வைக்கவும்.இப்போழுது முறுக்கினை திருப்பி விட்டு 1 நிமிடங்களில் எடுத்து விடவும்
 *எண்ணெயிலிருந்து முறுக்கு எடுக்கும் போது மிருதுவாக இருக்கும்,ஆறியதும் மொறுமொறுப்பாக இருக்கும்.

*நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
பி.கு
*இதற்கு ஈர அரிசி மாவினையே சேர்க்கவும்.அரிசி மாவினை வறுக்க தேவையில்லை.தேங்காய் பால் 2 ஆம் பாலினை சேர்க்கவும்.

*அதிக சர்க்கரை/கெட்டி தேங்காய் பால் சேர்த்து முறுக்கு சிவந்துவிடும்.

*அச்சினை மாவினுல் வைக்கும் போது முழுதாக நனைத்து சுட்டால் முறுக்கு எடுக்க வராது

*அச்சி நன்றாக காய்ந்தால் தான் மாவு ஒட்டும்.

*புது அச்சியாக இருந்தால் செய்வதற்கு 1 வாரம் முன்பு எண்ணெயில் அச்சினை ஊறவைத்து செய்தால் சுடுவதற்கு எளிது.

*மாவு பதம் கெட்டியாக இருந்தால் முறுக்கு கடினமாகவும்,நீர்க்க இருந்தால் அச்சினுள் மாவும் ஒட்டாது.

*ஒவ்வொரு முறையும் அச்சினை நன்றாக காயவைத்த பின் மாவினுள் நனைத்து முறுக்கு சுடவும்,அதேபோல் ஒவ்வொரு முறையும் மாவினை நன்கு கலக்கியபின் அச்சினை மாவில் வைக்கவும்.




Tuesday 3 October 2017 | By: Menaga Sathia

பொரிச்ச ரசம்/ Poricha Rasam | Rasam Recipes

இந்த ரசத்தின் சிறப்பு புளியில்லாமல் தக்காளி அதிகம் சேர்த்து செய்வது.
உபவாசம் இருக்கும் நாட்களில் புளியில்லாமல் இந்த ரசம் செய்வார்கள்

தே.பொருட்கள்
தக்காளி -2 பெரியது
வேகவைத்த துவரம்பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி -சிறிது
கறிவேப்பிலை -1 கொத்து
துருவிய தேங்காய் -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/8 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

நெய்யில் வதக்க
காய்ந்த மிளகாய் -2
கடலைபருப்பு -2 டீஸ்பூன்
மிளகு -1 1/2 டீஸ்பூன்
சீரகம் -2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1 டீஸ்பூன்

செய்முறை

*நெய்யில் வதக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி தேங்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் 3 கப் நீர் ஊற்றி நறுக்கிய  தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*தக்காளி வெந்ததும் அரைத்த மசாலா,உப்பு மற்றும் வேகவைத்த பருப்பு சேர்க்கவும்.


*மேலே நுறைத்து வரும் போது தேவையான நீர் ஊற்றி கறிவேப்பிலை+கொத்தமல்லி சேர்த்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.
Tuesday 26 September 2017 | By: Menaga Sathia

சிகப்பு முளைகீரை பொரியல்/ Red Amaranth Leaves(Sikappu Mulaikeerai) Poriyal

சென்ற வருடம் இந்தியா சென்றிருந்தபோது சிகப்பு முள்ளங்கி வாங்கி சமைத்து படம் எடுத்ததோடு பதிவு போடவே மறந்துவிட்டேன்.

தே.பொருட்கள்
சிகப்பு முள்ளங்கி கீரை - 1 கட்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
தேங்காய் துறுவல் - 1/3 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு -1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2

செய்முறை

*கீரையை மண்ணில்லாமல் நன்கு கழுவி நீரை நன்கு வடிக்கவும்.

*அதன் பிறகு பொடியாக தண்டோடு சேர்த்து நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் நருக்கிய கீரை மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவைக்கவும்.

*நீர் சேர்க்க வேண்டாம்,கீரையிலுள்ள நீரே வேக சரியாக இருக்கும்.

*5 நிமிடங்களில் கீரை வெந்து இருக்கும்,தேங்காய் துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
Wednesday 13 September 2017 | By: Menaga Sathia

காராமணி வாழைக்காய் தோல் தோரன்/ Cowpeas & Plaintain Peel Thoran

நேந்திரங்காய் சிப்ஸ் பதிவில் ,வாழைக்காய் தோலில் பொரியல் செய்யலாம் என சொல்லியிருந்தேன் .இதனுடன் வேகவைத்த காராமணி சேர்த்துள்ளேன்.

தே.பொருட்கள்
2 வாழைக்காய் தோல்
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி -1/4 டீஸ்பூன்
வேகவைத்த காராமணி -1/3 கப்
உப்பு-தேவைக்கு

நசுக்கி கொள்ள

வெங்காயம் - 1சிறியது
பூண்டுப்பல் -3
இஞ்சி -1/2 டீஸ்பூன்

தாளிக்க
தேங்காய் எண்ணெய் -2 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய்- 2

அரைக்க
தேங்காய்துறுவல் -1/2 கப்
சீரகம் -3/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -2

செய்முறை
*வாழைக்காய் தோலினை மிக பொடியாக நறுக்கி மஞ்சள்தூள்+சிறிது தயிர் கலந்து நீரில் போட்டு வைக்கவும்.

*அரைக்க கொடுத்து பொருட்களை கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து நசுக்கிய பொருட்களை சேர்த்து வதக்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் நறுக்கிய தோலினை சேர்க்கவும்.

*பின் மஞ்சள்தூள்,உப்பு,சாம்பார் பொடி சேர்த்து சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேகவைக்கவும்.


*5 நிமிடங்களில் வெந்ததும் வேகவைத்த காராமணி மற்றும்  அரைத்த தேங்காயினை சேர்த்து கிளறி 1-2 நிமிடங்களில் இறக்கவும்.






01 09 10