Monday, 29 December 2014 | By: Menaga Sathia

கருணைக்கிழங்கு பொடிமாஸ்/Karunaikizhangu(Yam) Podimas

தே.பொருட்கள்

கருணைக்கிழங்கு - 1/2 கி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*கருணைக்கிழங்கை தோல் சீவி கழுவி துருவிக்கொள்ளவும்.

*அதனை ஆவியில் 10-15 நிமிடங்கள் வேகவைத்தெடுக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் +மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு+ வேகவைத்த கருணைக்கிழங்கை சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை வதக்கி தேங்காய்த்துறுவல்+எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
Monday, 22 December 2014 | By: Menaga Sathia

ராஜ்மா கட்லட்/Rajma Cutlet

தே.பொருட்கள்

வேகவைத்து மசித்த ராஜ்மா - 1 கப்
வேகவைத்து மசித்த உருளை - 1 பெரியது
ப்ரெட் க்ரம்ஸ் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
காய்ந்த மாதுளம்பழ பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக பிசையவும்.

*விருப்பமான வடிவில் தட்டி தவாவில் எண்ணெய் விட்டு 2புறமும் வேகவைத்து எடுக்கவும்.

Friday, 19 December 2014 | By: Menaga Sathia

பஞ்சாபி பிந்தி(வெண்டைக்காய்) மசாலா /Punjabi Bhindi Masala



தே.பொருட்கள்

வெண்டைக்காய் - 1/4 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம்+தக்காளி  - தலா 1 
தனியாத்தூள் -  1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா+மஞ்சள்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கசூரி மேத்தி -  1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*வெண்டைக்காயை கழுவி துடைத்து 1 இஞ்ச் அள்வில் நறுக்கி,கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 நிமிடங்கள் வரை வதக்கி தனியாக வைக்கவும்.

*பின் அதே கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு+தூள்வகைகள் என ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் வரை சிறுதீயில் கிளறி கசூரி மேத்தி+ஆம்சூர் பொடி சேர்த்து இறக்கவும்.

*சாதம்(அ) ரொட்டியுடன் சூடாக பரிமாறவும்.

Monday, 15 December 2014 | By: Menaga Sathia

சேப்பங்கிழங்கு வறுவல் / Seppankizhangu Varuval | Colocasia (Taro Root / Arbi ) Fry

தே.பொருட்கள்

சேப்பங்கிழங்கு -4 பெரியது
வரமிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

செய்முறை

*சேப்பங்கிழங்கை ஆவியில் வேகவைத்து தோலுரித்து வட்டமாக நறுக்கவும்.

*அதனுடன் உப்பு+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள் சேர்த்து பிசைந்து 15நிமிடம் வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயத்தூள் போட்டு தாளித்து சேப்பங்கிழங்கை போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.

*பின் பொட்டுக்கடலை மாவை தூவி மேலும் 5 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
Thursday, 11 December 2014 | By: Menaga Sathia

உடுப்பி சாம்பார் / UDUPI SAMBAR | SIDE DISH FOR IDLI & DOSA

உடுப்பி  சாம்பாரில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் செய்வது தான் இதன் சிறப்பு.

இதில் கத்திரிக்காய்,கேரட்,முருங்கைக்காய்,வெள்ளை பூசணி சேர்த்து செய்துள்ளேன்.காய்கள் இல்லாமலும் செய்யலாம்.

இந்த சாம்பார் இட்லி,தோசை,சாதம் ,பொங்கல் என அனைத்துக்கும் நன்றாக இருக்கும்.

மசாலவை ப்ரெஷ்ஷாக பொடித்து செய்வதும்,கடைசியாக வெல்லம் சேர்ப்பதும்  சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.

தே.பொருட்கள்

புளிகரைசல் - 1 கப்
வெல்லம் -சிறுதுண்டு
உப்பு +எண்ணெய் -தேவைக்கு

பருப்புடன் சேர்த்து வேகவைக்க

துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் -1/2டீஸ்பூன்
காய்கள் -1/2 கப்

எண்ணெயில் வறுத்து பொடிக்க

தேங்காய்த்துறுவல் -1/4 கப்
காய்ந்த மிளகாய் -4
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
தனியா- 2 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்

 தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*பருப்புடன் கொடுக்கபட்ட பொருட்களை சேர்த்து வேகவைக்கவும்.
*பொடிக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காயை மட்டும் பொன்னிறமாக வருத்தும் மற்றவைகலை மிதமான சூட்டில் வருத்தும் பொடிக்கவும்.
 *பாத்திரத்தில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து புளிகரைசல்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.





*பச்சை  வாசனை அடங்கியதும் பொடித்த  பொடி மற்றும் வேகவைத்த பருப்பு கலவை மற்றும் தேவைக்கு நீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


* கடைசியாக வெல்லம் சேர்த்து இறக்கவும்.

பி.கு

*வெல்லம் சேர்ப்பதே இந்த சாம்பாரின் ஸ்பெஷல்.
*மசாலா பொடிக்கும் போது சோம்பு சேர்ப்பது இதர்கு தனி சுவையும் மணமும் கொடுக்கும்.
*இது சாதத்திற்கும் மிக நன்றாக இருக்கும்.



Thursday, 4 December 2014 | By: Menaga Sathia

பழனி பஞ்சாமிர்தம் / PALANI PANCHAMIRTHAM | PALANI KOIL SPL



print this page PRINT IT
இந்த ரெசிபியை பழனி கோயிலின் வெப்சைடில் பார்த்து செய்தது.

இந்த பஞ்சாமிர்ததில் விருப்பாச்சி என்னும் சிறிய வாழைப்பழைத்தை பயன்படுத்தி செய்வாங்க.விருப்பாச்சி என்பது பழனி அருகே இருக்கும் சிறிய ஊர்.

பெரிய வாழைப்பழத்திலும் செய்யலாம்,ஆனால் அந்தளவுக்கு சுவையும் நிறமும் வராது.

அதே போல் இதில் Kandasani sugar பயன்படுத்தி செய்துருந்தாங்க.நான் அதற்கு பதில் வெல்லம் சேர்த்து செய்துள்ளேன்.

அனைத்தையும் கையால் பிசைந்து செய்வது ஒரு சுவை.அப்படி செய்யும் ப்ரிட்ஜில் 3-4 நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

கரண்டியால் மசித்தால் அறைவெப்பநிலையிலேயே வைத்திருந்து பயன்படுத்தலாம்.

தயாரிக்கும் நேரம் - 10 நிமிடங்கள்

தே.பொருட்கள்

சிறிய வாழைப்பழம் - 2
பேரிச்சம்பழம் - 12
கற்கண்டு - 10
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
தேன் - 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்+1 டீஸ்பூன்

செய்முறை

*பேரிச்சம்பழத்தின் விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் வாழைப்பழம்+பேரிச்சம்பழம்+வெல்லம்+ஏலக்காய்த்தூள்+கற்கண்டு  சேர்க்கவும்.

*இவற்றை தேன் சேர்த்து கையால் பிசையவும்.

*கடைசியாக நெய் சேர்த்து கிளறவும்.




Wednesday, 3 December 2014 | By: Menaga Sathia

கூட்டாஞ்சோறு / Kootanchoru | Lunch Box Recipe



print this page PRINT IT
 Recipe Source:சமைத்து அசத்தலாம்

சமைக்கும் நேரம் - 30  நிமிடங்கள்
பரிமாறும் அளவு - 2 நபர்கள்

தே.பொருட்கள்

புழுங்கலரிசி -1/2 கப்
துவரம்பருப்பு -1/8 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
நறுக்கிய காய்கறிகள் - 1 கப்
முருங்கைக்கீரை - 1/2 கப்
புளி - சிறிய எலுமிச்சையளவு
உப்பு -தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -1 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
சின்ன வெங்காயம் -5

தாளிக்க

எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வடகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

நான் சேர்த்திருக்கும் காய்கள் முருங்கைக்காய்+கேரட்+கத்திரிக்காய்+மாங்காய்+அவரைக்காய்+காராமணிக்காய்

செய்முறை

*அரிசி+பருப்பை கழுவி 2 கப் நீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.குக்கரில் ஊறிய அரிசி பருப்பை ஊறவைத்து நீருடன் அடுப்பில் வைத்து மூடி மட்டும் போட்டு சிறு தீயில் வேகவிடவும்.பாதி அளவு வெந்து நீர் வற்றியிருக்கும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  நைசாக அரைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்களை சேர்த்து வதக்கவும்.பின் மஞ்சள்தூள் +உப்பு+கீரை சேர்த்து பிரட்டி அரைத்த மசால் சேர்த்து கொதிக்க விடவும்.

*காய்கள் பாதி வெந்ததும் புளியை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
*வெந்த அரிசி பருப்பில் வேகவைத்த காய்கலவை சேர்த்து மாங்காய்துண்டுகள்+தேவைக்கு உப்பு+மேலும் 1 கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.
*வெயிட் போட்டு  சிறுதீயில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
*பின் மீதமுள்ள‌ எண்ணெய்+நெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து சேர்க்கவும்.


Tuesday, 2 December 2014 | By: Menaga Sathia

கண்டத்திப்பிலி ரசம் /Kandathippilli Rasam | Rasam Recipes


print this page PRINT IT

இந்த மாதம் Friendship 5 Series ல் நாம் பார்க்க போவது கிராமத்து சமையல்

*கண்டத்திப்பிலி இது  மிளகு குடும்பத்தை சேர்ந்தது.

* சளி,இருமலுக்கு இந்த திப்பிலி ரசம் மிக நல்லது.

*உடல்வலி மற்றும் சோர்வு நீங்கவும் கண்டத்திப்பிலி மிக நல்லது.

தே.பொருட்கள்

புளிகரைசல் -2 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
பெருங்காயதூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

எண்ணெயில் வறுத்து பொடிக்க

 எண்ணெய் -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1
கண்டத்திப்பிலி - 4 குச்சிகள்
துவரம் பருப்பு -1 டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 3/4 டீஸ்பூன்


செய்முறை

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை பொடிக்கவும்.
*புளிகரைசலில் உப்பு+மஞ்சள்தூள்+பொடித்த பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் நெய்யில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

01 09 10