Friday 30 May 2014 | By: Menaga Sathia

பாவ் பன்(டின்னர் ரோல்ஸ்)/Homemade Pav Buns (OR)Dinner Rolls

ஏற்கனவே பாவ் பன் நான் செய்திருந்தாலும் முன்பு செய்ததைவிட இது கொஞ்சம் செய்முறையில் வேறுமாதிரியானது.ப்ரெஞ்ச் சேனலில் டின்னர் ரோல்ஸ்  குறிப்பினை செய்து காட்டிய போது அதில் ROUX  சேர்த்து செய்திருந்தாங்க.பன்களை பார்க்கும் போதே அவ்வளவு மென்மையாக இருந்தது.. அவர்கள் கொடுத்த அளவிலிருந்து பாதி அளவில் செய்தேன்,ரொம்ப்ப்ப்  நன்றாகவும்,சாப்ட்டாகவும் இருந்தது.

ROUX  என்பது ஒரு பங்கு மாவில் 2 பங்கு நீர் சேர்த்து கலக்கி கஸ்டர்ட் சாஸ் போல செய்து அதனுடன் நாம் எப்பவும் பன் செய்வது போல் பொருட்களை சேர்த்து செய்ய வேண்டும்.

தே.பொருட்கள்

ஆல் பர்பஸ் மாவு - 3 கப்
வெண்ணெய் -50 கிராம் அறை வெப்பநிலையில்
ஈஸ்ட் - 1 டேபிஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
பால் -1/2 கப்
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு -3/4 டீஸ்பூன்

ROUX 

மைதா -1/2 கப்
நீர் -1 கப்

செய்முறை

*வெதுவெதுப்பான பாலில் சர்க்கரை+ஈஸ்ட் சேர்த்து கலக்கி 10 நிமிடம் வைக்கவும்.

*பாத்திரத்தில் ROUX  செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து கெட்டியில்லாமல் கலக்கி அதனுடன் வெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கட்டியில்லாமல் கலக்கவும்.

*ஆறியதும் அதனுடன் ஈஸ்ட் கலவை மாவு+உப்பு சேர்த்து பிசையவும்.தேவையானால் மட்டும் நீர் சேர்க்கவும்.

*மெல்லிய ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் மாவை வைக்கவும்.

*உப்பிய மாவை பிசைந்து மீண்டும் வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*பின் பேக்கிங் டிரேயில் எண்ணெய் தடவி மாவை சம உருண்டைகளாக எடுத்து அடுக்கி வைத்து மீண்டும் 1 மணிநேரம் வைக்கவும்.

*அவனை 180°C 10 நிமிடம் முற்சூடு செய்யவும்.

*பின் முட்டை/பால்/வெண்ணெய் தடவி 25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

Monday 26 May 2014 | By: Menaga Sathia

மிக்ஸட் சிறுதானிய அடை/ Mixed Millets Adai | Millet Recipes | 7 Days Millet Recipes # 7



தே.பொருட்கள்

குதிரைவாலி -1/4 கப்
வரகு -1/4 கப்
சாமை - 1/4 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் -2
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் -தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*அரிசி+பருப்பு இவற்றை 2 மணிநேரம் ஊறவைத்து உப்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி ஆறியதும் மாவில் கலக்கவும்.
*தவாவில் எண்ணெய் ஊற்றி அடைகளாக சுட்டெடுக்கவும்.
Sunday 25 May 2014 | By: Menaga Sathia

வரகு கஞ்சி / Varagu (Kodo Millet ) Kanchi |Millet Recipes | 7 Days Millet Recipes # 6


வரகு பயன்கள்

*வரகு அரிசியில் கோதுமையை விட நார்ச்சத்து அதிகம்.

*இதில் மாவு சத்து குறைவாக இருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிக நல்லதும் கூட.

*விரைவில் செரிமானம் அடைவதுடன்,உடலுக்கு தேவையான சக்தியையும் கொடுக்கும்.

*உடல் எடையை குறைக்ககூடியது,மாதவிடாய் பிரச்சினை உள்ள பெண்கள் வரகினை சமைத்து சாப்பிடுவது நல்லது.

*இதில் இரும்பு,கால்சியம்,விட்டமின் பி சத்துக்கள் அதிகம் இருக்கு.


தே.பொருட்கள்
வரகு -1 கப்
பூண்டுப்பல் -5
சீரகம் -1/2 டீஸ்பூன்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் -1/2 கப்
உப்பு - தேவைக்கு


செய்முறை
*குக்கரில்  மேற்கூறிய பொருட்களில் தேங்காய்பால் தவிர அனைத்து பொருட்களையும்  சேர்த்து 3 கப் நீர் ஊற்றி 4-5 விசில் வரை வேகவைக்கவும்.

*வெந்ததும் தேவைக்கு நீர் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
*பின் தேங்காய்ப்பால் சேர்த்து பரிமாறவும்.தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்கவிடக்கூடாது.

Saturday 24 May 2014 | By: Menaga Sathia

சாமை இனிப்பு புட்டு /Saamai (Little Millet ) Sweet Puttu | Millet Recipes | 7 Days Millet Recipes # 5

சாமை பயன்கள்

*சாமையில் 7 மடங்கு நார்ச்சத்து நெல்லரிசியை விட அதிகம் உள்ளது.

*இது நீரிழிவு நோயினை கட்டுபடுத்தவும்,வராமல் தடுத்திடவும் பயன்படுகிறது.

*இரத்த சோகை வருவதை தடுக்கிறது.அதனால் பெண்களின் முக்கிய உணவாக அமைகிறது.

*தாது பொருட்களை அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தே.பொருட்கள்

சாமை அரிசி - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
நெய் -1 டீஸ்பூன்

செய்முறை

* சாமை அரிசியை நாம் சாதரணமாக அரிசி மாவு தயார் செய்வதைப்போல் செய்யவும்.அல்லது சாமை மாவு ரெடிமேடாக  கிடைக்கிறது.அதை பயன்படுத்தலாம்.
*மாவில் உப்பு 1 சிட்டிகை கலந்து சிறிது நீர் தெளித்து பிசையவும்.கையால் பிடித்தால் மாவு உருண்டையாகவும்,உதிர்த்தால் கட்டியில்லாமலும் மாவு இருக்க வேண்டும்.

*அதனை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*சூடாக இருக்கும் போதே கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து கலந்து பரிமாறவும்.

Wednesday 21 May 2014 | By: Menaga Sathia

தினை கல்கண்டு பொங்கல்/ Thinai (Foxtail Millet) Kalkandu Pongal | Millet Recipes | 7 Days Millet Recipes # 3


தினை பயன்கள்

*இதில் புரதம்,கொழுப்புசத்து,கனிமசத்து,ஈரப்பதம்,நார்ச்சத்து,மாவுச்சத்து என நிறைய இருக்கு.

*இது உடலின் வெப்பத்தை அதிகரிக்கும்,எனினும் உடலை காக்கும் தன்மையுடையது.

*இதில் இரும்புச்சத்து  அரிசி,கோதுமை,ராகியை விட 2 மடங்கு அதிகம் உள்ளது.

தே.பொருட்கள்

தினை அரிசி -1 கப்
பாசிப்பருப்பு -1/4 கப்
பால் - 1 கப்
கல்கண்டு -3/4 கப்
ஏலக்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் -1 டீஸ்பூன்

செய்முறை
*குக்கரில் 1/2 டீஸ்பூன் நெய்யில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து அதனுடன் தினை+பால்+நீர் 1 1/4 கப் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் நன்கு மசித்து,கல்கண்டை பொடித்து சேர்க்கவும்.
*கல்கண்டு கரைந்து கெட்டியாகி வரும் போது பச்சை கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
*பின் மீதமுள்ள நெய்+ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.
*கொஞ்சம் நீர்க்க இருக்கும் போதே இறக்கவும்,ஆறியதும் பொங்கல் கெட்டியாகி விடும்.

*மிகவும் சுவையாக இருக்கும் இந்த பொங்கல்.கல்கண்டு பதில் வெல்லம் சேர்த்து செய்யலாம்.
Tuesday 20 May 2014 | By: Menaga Sathia

கம்பு கார கொழுக்கட்டை/Kambu (Pearl Millet ) Kozhukattai | Millet Recipes | 7 Days Millet Recipes # 2


கம்பு பயன்கள்

*இதில் புரதம்,கொழுப்புசத்து,தாது உப்புக்கள்,நார்ச்சத்து மற்றும் மாவுசத்து இருக்கு.
*உடல் உஷ்ணமடைய செய்வதை தடுக்கிறது.
*வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.
*உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்,நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.
*கண் நரம்புகளுக்கு புத்துணர்வை தந்து பார்வையை தெளிவாக்கும்..

தே.பொருட்கள்

கம்பு -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
இஞ்சித்துறுவல் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*கம்பை 2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*பின் ஈரம் போக துணியில் நன்கு உலர்த்தி மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி சேர்த்து வதக்கவும்.

*பின் வெங்காயம் வதங்கியதும் உப்பு+2 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*நீர் கொதிக்கும் போது பொடித்த கம்பினை தூவி நன்கு வேகவைத்து இறக்கவும்.

*ஆறியதும் உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*இதனை அப்படியே சாப்பிடலாம்,விரும்பினால் காரசட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

பி.கு

*இதில் கம்புக்கு பதில் கம்பு மாவினை பயன்படுத்தலாம்.
Monday 19 May 2014 | By: Menaga Sathia

ராகி மஞ்சூரியன் / Ragi (Finger Millet ) Manchurian | Millet Recipes | 7 Days Millet Recipe # 1


கேழ்வரகு பயன்கள்

*ட்ரிப்டோஃபேன் (Tryptophan)  என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
*கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
*சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
*லெசித்தின் (Lecithin) மற்றும் மெத்தியோனைன் (Methionine) போன்ற அமினோ அமிலங்கள் (Amino acids)  னோ கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி கொழுப்பின் அளவை குறைக்கிறது.
*இரும்புச்சத்து மற்றும் ரத்தசோகையை குணப்படுத்துகிறது.
*உடலின் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
*குடலுக்கு வலிமை அளிக்கவும்,உடலுக்கு நைட்ரஜன் நிலையை சமபடுத்தவும் உதவுகிறது.
*உயர் இரத்த அழுத்தம்,ஆஸ்துமா,கல்லீரல் மற்றும் இதயநோய் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும்.

Recipe Source :SathviFoods

என்னுடைய சுவைக்கு தகுந்த மாதிரி சிறு மாற்றங்களுடன் செய்திருக்கேன்.

தே.பொருட்கள்

கேழ்வரகு மாவு - 1/2 கப்
ஒட்ஸ் மாவு -1/2 கப்
பொட்டுக்கடலை மாவு -1/4 கப்
உப்பு -தேவைக்கு

மஞ்சூரியன் செய்ய

எண்ணெய் -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 
பொடியாக நறுக்கிய இஞ்சி+பூண்டு  -தலா 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் -1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் -சிறிது
சோயா சாஸ் -1 டீஸ்பூன்

செய்முறை

*கொடுக்கபட்ட பொருட்களை ஒன்றாக கலந்து தேவைக்கு நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

* அதனை சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்+இஞ்சி+பூண்டு+வெங்காயம் என் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் குடமிளகாய்+சாஸ்+தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த உருண்டையை சேர்த்து கிளறி  நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து கிளறி இறக்கவும்.

*மிகவும் சுவையாக இருக்கும் இந்த மஞ்சூரியன்.
Thursday 15 May 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு கோழி ரசம் /Chettinad Kozhi Rasam | Chettinad Recipes


இந்த ரசம் சளி மற்றும் காய்ச்சல் வரும் போது குடித்தால் உடனே சரியாகிவிடும்.

தே.பொருட்கள் 

சிக்கன் எலும்பு துண்டு -100 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் -6
நறுக்கிய தக்காளி -1 பெரியது
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1டீஸ்பூன்

ரசப்பொடிக்கு

மிளகு+சீரகம் - தலா 1 டீஸ்பூன்
தனியாத்தூள் -1/2 டீஸ்பூன்
சோம்பு -1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -3
பூண்டுப்பல் -3

தாளிக்க
எண்ணெய் -1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
*குக்கரில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து 4 கப் நீர்  வைத்து  சிறிது உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.

*ரசப்பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக பொடிக்கவும்.
*குக்கர் ப்ரெஷர் அடங்கியதும்  எலும்புதுண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் தாலிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வடிகட்டிய  நீரினை சேர்க்கவும்.
*ரசப்பொடி மற்றும் தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
*சூப்பாகவோ குடிக்கலாம்அல்லது சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

பி.கு

*வேகவைத்த எலும்பு துண்டுகளை வறுத்து சாப்பிடலாம்,அல்லது குழம்பில் கடைசியாக சேர்க்கலாம்.
Wednesday 14 May 2014 | By: Menaga Sathia

மிக்ஸட் லெட்டூஸ் சாலட் / Mixed Lettuce Salad With French Vinaigrette | French Salad Recipes


ப்ரெஞ்ச் சாலட் டிரெஸிங் செய்ய இந்த Dijon Mustard, Red Wine Vinegar & échalotes  3 பொருட்களும் மிக முக்கியம்.சுவையும் மிக நன்றாக இருக்கும்.

échalotes என்பது ஒரு வகை வெங்காயம்,ப்ரெஞ்ச் சமையலில் அதிகம் பயன்படுத்தபடும் வெங்காயம் இது.

சாலட் டிரெஸிங் செய்ய தே.பொருட்கள்

ஆலிவ் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு -1/4 டீஸ்பூன்
Dijon Mustard - 1/2 டீஸ்பூன்
Red Wine Vinegar  -1 டேபிள்ஸ்பூன்
échalotes - 1 சிறியது.
ப்ரெஷ் மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
ப்ரெஷ் ஹெர்ப்ஸ் -சிறிது விரும்பினால் சேர்க்கலாம்.

இந்த அளவு   டிரெஸிங் 1/4 கப் வரும்.

செய்முறை

*Dijon Mustard + ஆலிவ் எண்ணெய்  சேர்த்து கலக்கவும்.

*Red Wine Vinegar  சேர்க்கவும்.
*நன்கு கலந்த பின் மிளகுத்தூள்+உப்பு சேர்க்கவும்.
*விரும்பினால் ப்ரெஷ் ஹெர்ப்ஸ் சேர்க்கலாம்,நான் சேர்க்கவில்லை.
*பரிமாறும் போது மட்டும்  échalotes  மிகப் பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கவும்.
சாலட் செய்ய

மிக்ஸட் லெட்டூஸ் -250 கிராம்
சாலட் சீஸ் -125 கிராம்
செர்ரி தக்காளி - 8
வேகவைத்த சோளம் -1/2 கப்
சாலட் டிரெஸிங் -1/4 கப்


செய்முறை

*இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பரிமாறும் போது சாலட் டிரெஸ்ஸிங் சேர்த்து பரிமாறவும்.
Monday 12 May 2014 | By: Menaga Sathia

உடுப்பி ஹோட்டல் வெள்ளை சட்னி /Udupi Hotel White Chutney |Side Dish For Idli& Dosa |Restaurant Recipes


print this page PRINT IT



இந்த சட்னியின் ஸ்பெஷல் சுவைக்கு சிறிது புதினா இலையும்  தேங்காய் அரைபடுவதற்காக  சிறிதளவு பொட்டுக்கடலை சேர்க்கவேண்டும்.

தே.பொருட்கள்

தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பச்சை மிளகாய் -1
புதினா -4 இலைகள்
பொட்டுக்கடலை -3/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -4 இலைகள்

செய்முறை

*கொடுக்கபட்டுள்ள பொருட்களை சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாகவும்,நைசாகவும்  அரைக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ள  பொருட்களை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

*மிக சுவையாக இருக்கும் இந்த சட்னி.

Technorati Tag :Chutney Recipes, Udupi Hotel White Chutney,White Chutney, Restaurant Recipes,Side Dish For Idli&Dosa, Karnataka Cuisine,
01 09 10