Monday 29 April 2013 | By: Menaga Sathia

சுரைக்காய் முருங்கை கீரை அடை/Bottle Gourd Drumstick leaves Adai

தே.பொருட்கள்

கொண்டைக்கடலை + பச்சை பயிறு+மைசூர் பருப்பு - தலா 1/2 கப்
முருங்கை கீரை - 1 கப்
துருவிய சுரைக்காய் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் -4
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு +உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

*பருப்பு வகைகளை குறைந்தது 6 மணிநேரம் ஊறவைத்து  காய்ந்த மிளகாய்+உப்பு+ சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை பொருட்களை தாளித்து வெங்காயம்+முருங்கை இலை சேர்த்து வதக்கி அரைத்த மாவில் சேர்க்கவும்.

*துருவிய சுரைக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.கெட்டியாக இல்லாமலும் தண்ணியாக இல்லாமலும் மாவு இருக்கவேண்டும்.

*தவாவில் எண்ணெய் விட்டு அடைகளாக வார்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

Thursday 25 April 2013 | By: Menaga Sathia

சிம்பிள் காஷ்மீர் புலாவ்/Simple Kashmir Pulao


காஸ்மீர் புலாவில் அன்னாசி,மாதுளைப்பழம்,ஆப்பிள் மற்றும் டிரை ப்ரூட்ஸ் சேர்த்து செய்வார்கள்.க்ரேவியுடன் பரிமாறியதால் நான் பழங்கள் சேர்த்து செய்யாமல் டிரை ப்ரூட்ஸ் மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.

தே.பொருட்கள்

பாஸ்மதி-  2 கப்
மஞ்சள்தூள்-  1/8 டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/4 கப்
நீர் - 2 3/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
குங்குமப்பூ  - சிறிது
நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை-  1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்


தாளிக்க‌

பிரியாணி இலை 2
கிராம்பு 3
ஏலக்காய் 3
பட்டை சிறுதுண்டு


செய்முறை

*வெங்காயத்தை பொன்னிறமாக எண்ணெயில் பொரிக்கவும்.வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.

*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து ஊறவைத்த அரிசியை சேர்த்து வதக்கி உப்பு+நீர்+மஞ்சள்தூள்+பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.

*பரிமாறும் போது வறுத்த முந்திரி திராட்சை+பொரித்த வெங்காயம் சேர்த்து பரிமாறவும்.

Sending to easy to prepare in 15 minutes @ Aathidhyam.
Monday 22 April 2013 | By: Menaga Sathia

உளுந்து சாதம்/Urad Dal Rice (Ulundhu Sadham)

Recipe Source :Umaskitchenexperiments

தே.பொருட்கள்

புழுங்கலரிசி - 1 கப்
உடைத்த கறுப்பு உளுந்து - 1/2 கப்
நீர் - 3 கப்
பூண்டுப்பல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*அரிசி+உளுந்து இவ்விரண்டையும் கழுவி 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*குக்கரில் ஊறவைத்த  அரிசி +உளுந்து மற்றும் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து 3 விசில்வரை வேகவைத்து எடுக்கவும்.

*இதற்கு காரகுழம்பு அல்லது வத்தக்குழம்பு பெஸ்ட் காம்பினேஷன்.

Thursday 18 April 2013 | By: Menaga Sathia

அரிசி தேங்காய் பாயாசம்/ Arisi Thengai(Rice Coconut) Payasam



தே.பொருட்கள்

தேங்காய்த்துறுவல்  - 1/2 கப்
பாஸ்மதி/பச்சரிசி -  2 டேபிள்ஸ்பூன்
துருவிய வெல்லம்  - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரி+திராட்சை = தேவைக்கு

செய்முறை

*அரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் தேங்காய்த்துறுவல் சேர்த்து நைசாக அரைக்கவும்.

*வெல்லத்தில் 1/4 கப் நீர் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டவும்.

*பாத்திரத்தில் 1 கப் நீர் சேர்த்து கொதிக்கவைத்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறுதீயில் கைவிடாமல் கிளறிவிடவும்.

*நன்கு கெட்டியாகி வரும்போது வடிகட்டிய வெல்லநீரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

*பாயாசம் தேவையானபதத்தில் வரும் போது இறக்கி ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

பி.கு
*விரும்பினால் பாயாசம் இளஞ்சூடாக இருக்கும் போது காய்ச்சி ஆறவைத்த பால் சேர்க்கலாம்.

*தேங்காய்விழுதை சேர்த்த பின் கைவிடாமல் கிளறிவிடவும் இல்லையெனில் கட்டிவிழும்.
Sending To Vimitha's Hearty N Healthy Event & Gayathri's WTML Event @Myhomemantra & Easy to prepare in 15 minutes @Aathidhyam
Monday 15 April 2013 | By: Menaga Sathia

கேரட் கோசுமல்லி/Carrot Kosumalli

தே.பொருட்கள்

துருவிய கேரட் - 1 கப்
பாசிபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு +பெருங்காயத்தூள்- தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை

*பாசிபருப்பை 15 நிமிடம் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.

*அதனுடன் மேற்கூறிய பொருட்கள்+தாளித்து சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

Sending To Vimitha's Hearty N Healthy Event & Easy 2 Prepare In 15 Minutes @ Aathidhyam& Gayathri's WTML Event @Myhomemantra.
Thursday 11 April 2013 | By: Menaga Sathia

வேப்பம்பூ பச்சடி/Neem Flower Pachadi


தே.பொருட்கள்

வேப்பம்பூ - 2 டீஸ்பூன்
மாங்காய்த்துறுவல் - 3/4 கப்
வெல்லம் - 1/2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த முந்திரி - தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை-சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மாங்காய் துறுவலை சேர்த்து நீர் விட்டு வேகவிடவும்.

*மாங்காய் நன்கு வெந்ததும் வெல்லக்கரைசலை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து முந்திரி சேர்த்து இறக்கவும்.

*வேறொரு கடாயில் நெய் விட்டு வேப்பம்பூவை கருகாமல் வறுத்தெடுத்து ஆறியதும்  பச்சடியில் சேர்க்கவும்.

பி.கு

மாங்காய்த்துறுவலுக்கு பதில் 1 கப் புளிகரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.பச்சை வாசனை போனதும்  டேபிள்ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து சேர்த்து புளிகரைசலில் ஊற்றி  கொதிக்கவைத்து கெட்டியாக  வரும்போது வெல்லகரைசல்+நெய்யில் வறுத்த வேப்பம்பூவை சேர்த்து இறக்கவும்.

Sending To Vimitha's Hearty n Healthy Event & Easy  2 Prepare in 15 minutes @Aathidhyam  & Gayathri's WTML Event @My homemantra

Tuesday 9 April 2013 | By: Menaga Sathia

மிக்ஸட் ப்ரூட் கஸ்டர்ட்/Mixed Fruit Custard


தே.பொருட்கள்

துண்டுகளாகிய பழத்துண்டுகள் - 2 கப்
பால் - 1+1/2 கப்
கஸ்டர்ட் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்(Vanilla Flavoured)
சர்க்கரை - 1/4 கப்

செய்முறை
*1/2 கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்.

*1கப் பாலில் சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து கஸ்டர் கலந்த பாலை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கிவிடவும்.

*சிறிது கெட்டியானதும் இறக்கி ஆறவைத்து ப்ரிட்ஜில் குளிரவைக்கவும்.

*பரிமாறும் போது பழத்துண்டுகளின் மீது குளிரவைத்த கஸ்டர்ட் பாலை ஊற்றி பரிமாறவும்.

பி.கு

*நான் வாழைப்பழம்+ஸ்ட்ராப்பெர்ரி+கிவி+அன்னாச்சிப்பழம்+ஆப்பிள்+ ஆரஞ்சு சேர்த்து செய்துள்ளேன்.

*அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை சேர்க்கவும்.

*இதனை செய்த உடனே சாப்பிடுவது சிறந்தது.

*கஸ்டர்ட் பவுடர் இல்லையெனில்  2   டேபிள்ஸ்பூன் சோளமாவு +1/2 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்க்கலாம்.

Sending to Vimitha's Hearty n Healthy Event &Easy 2 prepare in 15 minutes @Aathidhyam & Gayathri's WTML Event @ My homemantra
Sunday 7 April 2013 | By: Menaga Sathia

கேரட் தக்காளி சூப்/ Carrot Tomato Soup


தே.பொருட்கள்

கேரட் - 1
தக்காளி - 4 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 4
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெஷ் க்ரீம் - தேவைக்கு
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*குக்கரில் வெண்ணெய் போட்டு வெங்காயம்+பூண்டு+கேரட் சேர்த்து வதக்கவும்.

*அதனுடன் தக்காளியை முழுதாக போட்டு நீர் விட்டு 2 விசில் வரை வேகவைக்கவும்.

*தக்காளியை மட்டும் எடுத்து தோலுரித்து அதனுடன் மற்ற வேகவைத்த பொருட்களும் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

*உப்பு+மிளகுத்தூள் சேர்த்து ப்ரெஷ் க்ரீம் சேர்த்து பருகவும்.

பி.கு

*சூப் தண்ணியாக இருந்தால் சிறிது சோளமாவை நீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவைத்து பருகவும்.
Sending to Vimatha's Hearty n Healthy Event & Easy 2 Prepare in 15 minutes @Aathithyam & Gayathris WTML Event @My homemantra.

Thursday 4 April 2013 | By: Menaga Sathia

காலிபிளவர் மஞ்சூரியன் (டிரை) /Cauliflower Manchurian (Dry Version)



தே.பொருட்கள்

காலிபிளவர்‍‍  - 1 நடுத்தர அளவு
மைதா - 1/2 கப்
சோளமாவு - 1/8 கப்
மிளகுத்தூள்  - 1/2 டீஸ்பூன்
உப்பு-  தேவைக்கு
எண்ணெய் -  பொரிக்க+1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் -  1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சோயா சாஸ்-  1/2 டீஸ்பூன்
வினிகர் -  1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - 1

செய்முறை

*காலிபிளவரை சிறுப்பூக்களாக பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*மைதா+சோளமாவு+மிளகுத்தூள்+உப்பு இவற்றை ஒன்றாக கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூக்களை நனைத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டுப்பல்+ வெங்காயம்+பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் வெள்ளைப் பகுதி இவற்றை சேர்த்து வதக்கவும்.

*பின் பசை மிளகாய்+தக்காளி சாஸ்+தக்காளி கெட்சப்+சோயா சாஸ்+வினிகர்+1 டீஸ்பூன் சோளமாவு+சர்க்கரை+உப்பு என இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி பொரித்த காலிபிளவரை சேர்த்து நன்கு கிளறவும்.

*பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி பரிமாறவும்.

பி.கு
*காலிபிளவரை பொரிக்கும் போது பொன்னிறமாக பொரித்தால் தான் நீண்ட நேரம்வரை மொறுமொறுப்பாக இருக்கும்.

*பச்சை மிளகாய் பதில் 1 டீஸ்பூன் பூண்டு சில்லி சாஸ் சேர்க்கலாம்.

Tuesday 2 April 2013 | By: Menaga Sathia

திருநெல்வேலி கோதுமை அல்வா(சுலப‌ செய்முறை)/Tirunelveli Wheat Halwa(Easy Method)



இன்றோடு  நான் வலைப்பூவில் எழுத தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைகின்றது..

கோதுமை பாலை கடாயில் விட்டு நீண்ட நேரம் கிண்டுவதைவிட குக்கரில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுலபம் என முன்பு ஒரு வலைப்பூவில் கமெண்டில் எப்போதோ படித்ததாக ஞாபகம்.அதன்படி செய்ததில் வேலை சுலபமாக முடிந்துவிட்டது.

தே.பொருட்கள்

முழு கோதுமை - 1/2 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
கேசரி கலர் - சிறிதளவு
நெய்  - 3/4 கப்-  1 கப்
ஏலக்காய்த்தூள் -  1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி -  தேவைக்கு

செய்முறை

*கோதுமையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் கிரைண்டரில் அரைத்து 3 முறை பால் எடுக்கவும்.

*அரைத்த பாலை 2 மணிநேரம் அப்படியே வைத்திருந்தால் கெட்டிபால் அடியில் தங்கி நீர் மேலோடு தங்கியிருக்கும்.அந்த நீரை மேலோடு  ஊற்றிவிடவும்.

*குக்கரில் வைக்கும் அளவில் ஒரு பாத்திரத்தில் கோதுமைபால்+சர்க்கரை+கேசரி கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

*குக்கரில் தேவையான நீர் ஊற்றி அதனுள் இந்த மாவு பாத்திரத்திஅ வைத்து மூடி போட்டு 3 விசில் வரை வேகவிடவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரின் உள்ளே இருக்கும் பாத்திரத்தை எடுத்து 1/2 கப் நீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல்  கரைக்கவும் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கடாயில் சிறிது நெய் ஊற்றி வெந்த மாவை ஊற்றி சிறு தீயில் கிளறவும்.இடையிடையே நெய் ஊற்றவும்.

*மாவு நன்கு வெந்து கெட்டியாகி நெய் விட ஆரம்பிக்கும் நேரத்தில் ஏலக்காய்த்தூள்+முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

*விரும்பினால் தட்டில் சமப்படுத்தி துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

பி.கு

பாலை குக்கரில் வேகவைக்காமல் சர்க்கரை பாகு 1 கம்பி பதம் வைத்து மாவை ஊற்றி இடைவிடாமல் கிளறியும் செய்யலாம்.இந்த முறையில் இடைவிடாமல்  கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.இதைவிட மேலே நான் சொன்ன செய்முறை ரொம்ப ஈசியானது.

Sending To Gayathri's WTML Event @My homemantra
01 09 10