Sunday 29 November 2009 | By: Menaga Sathia

அரைத்துவிட்ட சிக்கன் குழம்பு

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
நறுக்கிய தக்காளி - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்செய்முறை :

*அரைக்க கொடுத்துள்ளவைகளை முதலில் பொடித்து பின் நீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

*சிக்கனில் தயிர் + 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+மீதமிருக்கும் இஞ்சிபூண்டு விழுது+தக்காளி+கரம் மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் அரைத்த மசாலா விழுதினை போட்டு நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

*பின் சிக்கனை போட்டு வதக்கி உப்பு+மஞ்சள்தூள் தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதிக்கும் போது தோல்சீவி துண்டுகளாகிய உருளைக்கிழங்கைப்போடவும்.

*குழம்பு நன்கு கொதித்து சிக்கனும் உருளையும் நன்கு வெந்ததும் இறக்கவும்.

*கமகமக்கும் சிக்கன் குழம்பு ரெடி.
Thursday 26 November 2009 | By: Menaga Sathia

கீரை பட்டாணி புலாவ்


தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
ப்ரோசன் பச்சைப்பட்டாணி - 1/4 கப்
கீறிய பச்சை மிளகாய் - 6
பொடியாக அரிந்த பசலைக்கீரை - 1 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - 1 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்


செய்முறை :

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் கீரை+பட்டாணி சேர்த்து லேசாக வதக்கி அரிசி+தேங்காய்ப்பால்+தண்ணீர்+உப்பு சேர்த்து வேகவிடவும்.

*3 விசில் அல்லது வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.

*ஈஸியான கீரை பட்டாணி புலாவ் ரெடி.

*இதற்க்கு முட்டை தொக்கு,உருளை வறுவல் நன்றாகயிருக்கும்.


பி.கு:

பட்டாணிக்கு பதில் கேரட் துறுவல் சேர்த்தும் செய்யலாம்.
Wednesday 25 November 2009 | By: Menaga Sathia

விருதுகள்!!


இசைச்செல்வி,சுஸ்ரீ,சுதாகர் அண்ணா மூவரும் எனக்கு விருது கொடுத்திருக்காங்க.அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இந்த விருதினை

பாயிசாகாதர்
கீதா ஆச்சல்
ஹர்ஷினி அம்மா
ஜலிலாக்கா
மலிக்கா
பவித்ரா
மலர் காந்தி
தேனம்மை லக்‌ஷ்மண்
நித்யா
ஷாமா நாகராஜன்
திவ்யா விக்ரம்
ப்ரியாராஜ்
மலர்விழி
சித்ரா
அம்மு மது
ஸ்ரீப்ரியா
டவுசர் பாண்டி
இராகவன் நைஜிரியா
ஸாதிகா அக்கா
சாருஸ்ரீராஜ்
தமிழ்நாடான்
ராஜ்
சந்ரு
கிருத்திகா
சிங்கக்குட்டி
சஞ்சய் காந்தி
சம்பத்குமார்
தேவன்மாயம்
சிவனேசு
சூர்யா கண்ணன்
ஜெட்லி
ப்ரியமுடன் வசந்த்
நாஸியா
நவாஸுதின்
ஷஃபிக்ஸ்
கோபிநாத்
கோபி
ஜெகநாதன்
கிருத்திகன்
ஹூசைனம்மா

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிவு இட்டு கலக்குறாங்க.யாரையும் தவிர்க்க முடியவில்லை.அதனால் என்னால் முடிந்த வரை அனைவருக்கும் கொடுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்.நீங்களும் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
Tuesday 24 November 2009 | By: Menaga Sathia

பரோட்டா&முட்டைக் குருமா

சகோதரர் தமிழ்நெஞ்சம் அவர்களின் தளத்தில் 3 நிமிடத்தில் பரோட்டா செய்வதெப்படி? என்று ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார்.அதைப் பார்த்து நான் செய்த பரோட்டா ஒரளவுக்கு நன்றாக வந்தது.இப்போழுது தான் முதன்முதலில் பரோட்டா செய்தேன்.வீடியோவுடன் எளிதாக இருந்ததில் செய்வதற்க்கு ஈஸியாக இருந்தது.அவருக்கு மனமார்ந்த என் நன்றி!!

தே.பொருட்கள்:


பரோட்டாவுக்கு:

மைதா - 5 கப்
சர்க்கரை - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபில்ஸ்பூன்+தேவைக்கு
நெய் 2 டேபிள்ஸ்பூன்

குருமாவுக்கு:

முட்டை - 6
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மல்லித்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2


செய்முறை :

*மைதா+உப்பு+நெய்+சர்க்கரை+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மாவை நன்கு தளர பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி ஊறவிடவும்.

*ராத்திரி செய்வதாக இருந்தால் காலையிலேயே பிசைந்து வைக்கலாம்.

*ஊறிய மாவை நன்கு அடித்து தேவையான அளவில் உருண்டைகள் போடவும்.

*ஒவ்வொரு உருண்டையின் போல் எண்ணெய்த் தடவி மறுபடியும் ஈரத்துணியால் மூடி 1/2 மணிநேரம் ஊறவிடவும்.

*பின் உருண்டையை பூரிக்குத் தேய்ப்பது போல் தேய்த்து கையால் நன்கு அடிக்கவும்.அதாவ்து கிழிந்த பனியன் போல நன்கு அடிக்கவும்.

*அதை அப்படியே சுருட்டி அதன் மேல் எண்ணெய்த் தடவி வைக்கவும்.இப்படியாக அனித்து உருண்டைகளை செய்யவும்.

* கடாய் காயவைத்து உருட்டிய உருண்டையை எண்ணெய் தொட்டு கையால் தட்டி வேகவைத்து எடுக்கவும்.

*4 பரோட்டக்கள் சுட்டதும் 2 கையாலும் பரோட்டகளை தட்டவும்.அப்போழுது தான் லேயராக வரும்.

*முட்டையின் வெள்ளைகரு+மஞ்சள்கரு தனியாக பிரிக்கவும்.

*வெள்ளைகரு நன்கு அடித்து கடாயில் ஊற்றி பொடிமாஸ் போல கொத்தி எடுத்து தனியாக வைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காய்ம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+கரம்மசாலா+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*தேவையானளவு நீர் விட்டு கொதிக்க விடவும்.

*கொதித்ததும் மஞ்சள்கருவை ஒவ்வொன்றாக ஊற்றி வேகவிடவும்.

*மஞ்சள் கரு வெந்ததும் பொடித்த வெள்ளைக்கருவினை போட்டு ஒரு கொதி கொதித்ததும் இறக்கவும்.

*பரோட்டவுடன் பறிமாறவும்.
Sunday 22 November 2009 | By: Menaga Sathia

ஆப்பம் / Appam

செய்துட்டேன் செய்துட்டேன் நானும் ஆப்பம் செய்து சாப்பிட்டேன்.கிட்டத்தக்க 3 வருஷமாச்சு ஆப்பம் சாப்பிட்டு.இந்த வருஷம் எங்கண்ணி ஆப்பசட்டியும்,பணியாரகல்லும் வாங்கி வந்து கொடுத்தாங்க.அந்த ஆப்பசட்டிக்கு இப்பதான் நேரம் வந்துச்சு.யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக...

சுதாகர் அண்ணா அவர் பதிவில் மென்மையான ஆப்பம் பதிவிட்டிருந்தார்.அதிலிருந்து ஆப்பத்துல மேல ஒரு கண்ணு.ஆவ்ருடைய ஆப்ப பதிவால் தான் எனக்கு ஆப்பம் செய்ய தோனுச்சு.அதனால் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!!.அந்த பதிவைப் பார்த்து சில மாற்றங்களுடன் நான் செய்த ஆப்பம்...

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 1/2 கப்
புழுங்கலரிசி - 1 1/2 கப்
உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்
ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல் - 1/4 கப்
இளநீர் - 1
உப்பு - தேவைக்கு


செய்முறை :

*அரிசி வகைகள்+உளுந்து+ஜவ்வரிசி அனைத்தையும் 4 மணிநேரம் ஊறவைத்து இளநீர்+தேங்காய்த்துறுவல் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.

*அரைத்த மாவிலிருந்து 2 கரண்டி மாவெடுத்து 1 கப் நீர்விட்டு கரைத்து ராகி கூழ் போல காய்ச்சவும்.

*ஆறியதும் அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்கவிடவும்.மாவு தோசைமாவு பதத்திற்க்கு இருக்கனும்.

*நான் ஸ்டிக் ஆப்பக் கடாயில் ஒரு குழிக்கரண்டி மாவு ஊற்றி ஆப்பசட்டியால் ஒரு சுற்று சுற்றி மூடி வேகவிடவும்.

*வெந்ததும் எடுக்கவும்.திருப்பி போடக்கூடாது.தேங்காய்ப் பாலுடன் பறிமாறவும்.

பி.கு

மாவை கூழ் போல் காய்ச்சி ஊற்றுவதால் ரொம்ப சாப்டா இருந்தது.சீக்கிரம் புளித்துவிட்டது.
Thursday 19 November 2009 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு காலா ஜாமூன்

தே.பொருட்கள்:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1/4 கப்
பால் பவுடர் - 1 கப்
மைதாமாவு - 3/4 கப்
பால் - சிறிதளாவு
எண்ணெய் - பொரிக்க
புட் கலர் - 1 சிட்டிகை
நெய் - 1 1/2 டீஸ்பூன்

சர்க்கரை பாகு செய்ய

சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

*3/4 கப் பால் பவுடர்+ 1/4 கப் மைதா+மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து மிருதுவாக கெட்டியாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது பால் தெளித்து பிசையவும்.இந்த கலவை வெள்ளைக்கலரில் இருக்கனும்.

*மீதமிருக்கும் பால் பவுடர்+மைதா+கலர் சேர்த்து பால் கலந்து கெட்டியாக மிருதுவாக பிசையவும்.

*வெள்ளைக் கலரில் இருக்கும் மாவை பெரிய உருண்டைகளாக உருட்டி,அதனுள் கலர் உருண்டையை பட்டாணி அளவு எடுத்து ஸ்டப் செய்யவும்.

*இப்படியாக உருண்டைகளை உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

*திரும்பவும் ஒருமுறை உருண்டைகளை எண்ணெயில் பொரிக்கவும்.அப்பொழுது கறுப்பு கலரில் இருக்கும்.

*சர்க்கரை நீர் விட்டு காய்ச்சி பிசுப்பு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்+நெய்++பொரித்த் உருண்டைகள் சேர்க்கவும்.

*3 அல்லது 4 மணிநேரம் கழித்து பரிமாறலாம்.
Tuesday 17 November 2009 | By: Menaga Sathia

வாழைப்பழ அப்பம்

தே.பொருட்கள்:

கனிந்த வாழைப்பழம் - 1
ஏலக்காய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
ரவை - 2டேபிள்ஸ்பூன்
கோதுமைமாவு - 1/2 கப்
உப்பு -1 சிட்டிகை
எண்ணெய் -பொரிக்க

செய்முறை :

*வெல்லத்தை சிறிது நீர்விட்டு கரைத்து மண்ணில்லாமல் வடிக்கட்டவும்.
*ஒரு பாத்திரத்தில் வாழப்பழத்தைப் போட்டு மசிக்கவும்.

*அதனுடன் தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்ப் பொடி+ரவை+உப்பு+கோதுமைமாவு+வெல்லம் கரைத்த நீர் சேர்த்து இட்லிமாவு பதத்திற்க்கு கரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் காயவிட்டு மாவை ஒரு ஸ்பூனால் எடுத்து ஊற்றவும்.

*ஒரு அப்பம் மேலே எழும்பி வந்ததும் இன்னொன்று ஊற்றவும்.

*இப்படியாக மாவை அப்பங்களாக ஊற்றி எடுக்கவும்.

கவனிக்க:

மாவு ரொம்ப கெட்டியாக இல்லாமலும்,தண்ணியாக இல்லாமலும் இருக்கனும்.இந்த அப்பம் மிகவும் மென்மையானதாக இருக்கும்.
Sunday 15 November 2009 | By: Menaga Sathia

தக்காளி புலாவ்

தே.பொருட்கள்:

பாஸ்மதி - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1 பெரியது
தக்காளி விழுது - 1 1/2 கப்
கீறிய பச்சை மிளகாய் - 6
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் பால் - 1 1/2 கப்
புதினா - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2


செய்முறை :

*குக்கரில் நெய்+எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய்+புதினா ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் தக்காளி விழுது+மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வதக்கி தேங்காய்ப்பால்+1 கப் நீர்+உப்பு +அரிசி சேர்த்து வேகவிடவும்.

*3 விசில் அல்லது வெயிட் போட்டு 10 நிமிடத்தில் இறக்கவும்.

*ஈஸியான தக்காளி புலாவ் ரெடி.

*இதற்க்கு ராய்த்தா,உருளை வறுவல்,எண்ணெய் கத்திரிக்காய் நன்றாகயிருக்கும்.Saturday 14 November 2009 | By: Menaga Sathia

விருது


ஜலிலா அக்கா எனக்கு ஒரு விருது கொடுத்து சந்தோஷபடுத்தியிருக்காங்க.அவங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இந்த விருதினை மற்ற சமையல் ராணிகளுக்கு கொடுக்க விரும்புகிறேன்.

1.ப்ரியா
2.ப்ரியாராஜ்
3.பவித்ரா
4.நித்யா
5.ப்ரியா
6.சித்ரா
7.லஷ்மி வெங்கடேஷ்
8.ஸ்ரீவித்யா
9.ஷாமா நாகராஜன்
10.செல்வி
11.மலர் காந்தி
12.திவ்யா விக்ரம்

இந்த விருதினை மற்றவர்களுக்கும் பகிர்ந்துக்கலாம்..
Thursday 12 November 2009 | By: Menaga Sathia

ஒட்ஸ் பூரி & மசாலா

தே.பொருட்கள்:

பூரிக்கு

ஒட்ஸ் - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

உருளை மசாலா

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது


செய்முறை :

*ஒட்ஸை வெறும் கடாயில் லேசாக வறுத்து பொடிக்கவும்.அதனுடன் கோதுமைமாவு+உப்பு+வெந்நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சிறு உருண்டையாக எடுத்து மெல்லியதாக இல்லாமலும்,தடினமாக இல்லாமலும் தேய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய் நீளவாக்கில் அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு+மஞ்சள்தூள்+உருளைக்கிழங்கு சேர்த்து 1/4 கப் நீர் சேர்க்கவும்.

* ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

*சுவையான பூரி மசால் ரெடி!!

பி.கு:

பூரிக்கு மாவு பிசைந்தவுடன் அப்பவே தேய்த்து சுடனும்.தேய்க்கும் போது ரொம்ப மெல்லியதாக தேய்க்ககூடாது.அப்படித் தேய்த்தால் பூரி உப்பாது.

சப்பாத்திக்கு மாவு பிசைந்து எவ்வளவு நேரம் ஊறவைக்கிறோமோ அவ்வளவு சாப்டாக இருக்கும்.மெல்லியதாக தேய்க்கனும்.
Tuesday 10 November 2009 | By: Menaga Sathia

தக்காளி குருமா/Tomato Kurma


தே.பொருட்கள்:

வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிது
தனியாத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு

அரைக்க:

தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு -2
கசகசா -1/2 டீஸ்பூன்

செய்முறை :

*ஒரு தக்காளியை வெந்நீரில் போட்டு தோலெடுத்து அரைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் பொடியாக அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+அரைத்த தக்காளி விழுது+பச்சை மிளகாய்+தனியாத்தூள்+மஞ்சள்தூள் அனித்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் தேவையான நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் தேங்காய்விழுது சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இட்லி,தோசை,சப்பாத்தி அனைத்துக்கும் இந்த குருமா நன்றாக இருக்கும்.
Sunday 8 November 2009 | By: Menaga Sathia

பார்லி கேசரி

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி திராட்சை - விருப்பத்துக்கு
பால் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கேசரி கலர் - 1 சிட்டிகைசெய்முறை :

*நான் ஸ்டிக் கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பார்லியை வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும்.

*முந்திரி திராட்சையை வறுக்கவும்.பாலை நன்கு சுண்ட காய்ச்சவும் அதாவது 1/2 கப் ஆகும் வரை காய்ச்சவும்.

*அதே கடாயில் தண்ணீர்+பால் விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதிக்கும் போது கேசரிகலர்+பார்லியை சேர்க்கவும்.

*பார்லி நன்கு வெந்து வரும் சமயத்தில் சர்க்கரை சேர்க்கவும்.

*சர்க்கரை கரைந்து அனைத்தும் நன்கு சுண்டி வரும் போது ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+பால் பவுடர்+மீதமிருக்கும் நெய் சேர்த்து இறக்கவும்.


பி.கு:

இதன் சுவை ரொம்ப நல்லாயிருந்தது.என்ன் கொஞ்சம் அல்வாபோல் கொழகொழன்னு இருந்தது.
Saturday 7 November 2009 | By: Menaga Sathia

பிடித்த பிடிக்காத 10

இத்தொடரை எழுத அழைத்த தோழி மலிக்காவுக்கு என் மனமார்ந்த நன்றி!!

இத் தொடர் இடுகையின் விதிகள்:

1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்

கவிஞர்

பிடித்தவர் –கண்ணதாசன்

பிடிக்காதவர்- பா.விஜய்பூ

பிடித்தது - ரோஜா,மல்லிகைப்பூ

பிடிக்காதது- வாசனையில்லாதப்பூக்கள் அனைத்தும்


இயக்குனர்

பிடித்தவர்- மகேந்திரன்

பிடிக்காதவர்- எஸ் .ஜே சூர்யா,பேரரசு


அரசியல்வாதி

பிடித்தவர்- ஜெயலலிதா[இவரின் துணிச்சலுக்காக பிடிக்கும்]

பிடிக்காதவர்-ராமதாஸ்,திருமாவளவன்


விளையாட்டு

பிடித்தது - ஹாக்கி,செஸ்

பிடிக்காதது - வாலிபால்

நடிகை

பிடித்தவர் - ஜோதிகா[மொழி படத்துக்காக]

பிடிக்காதவர் - லைலா

நடிகர்

பிடித்தவர்- விக்ரம்

பிடிக்காதவர்- தனுஷ்பேச்சாளர்

பிடித்தவர்- சாலமன் பாப்பையா

பிடிக்காதர்-விஜய டிராஜேந்தர்


எழுத்தாளர்

பிடித்தவர்- ரமணிச்சந்திரன்,ராஜேஷ் குமார்

பிடிக்காதவர்-ஆர்னிகா நாசர்


இசையமைப்பாளர்

பிடித்தவர் - இளையராஜா

பிடிக்காதவர்- தேவா.

நான் அழைக்கும் பதிவர்கள்

ஸாதிகா அக்கா

கோபிநாத்

ஆர்.கோபி
Thursday 5 November 2009 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சட்னி/Brinjal Chutney

தே.பொருட்கள்:


கத்திரிக்காய் - 1 பெரியது
புளி - 1 எலுமிச்சை பழளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கெட்டி தேங்காய்பால் - 1/2 கப்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*கத்திரிக்காய்+தக்காளி பொடியாக அரிந்து வேகவைத்து மசிக்கவும்.

*புளியை கெட்டியாக கரைக்கவும்.வெங்காயம்+பச்சை மிளகாய் பொடியாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+பச்சைமிளகாயை வதக்கவும்.

*பின் மசித்த கத்திரிக்காய்+உப்பு+மஞ்சள்தூள்+கெட்டியான புளிகரைசல்+தேங்காய்ப்பால் அனைத்தும் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இட்லி,தோசை,சாதம்,சப்பாத்தி அனைத்துக்கும் நன்றாகயிருக்கும்.

பி.கு:

விதையில்லாத பெரிய கத்திரிக்காயில் செய்தால் இந்த சட்னி நன்றாகயிருக்கும்.
Wednesday 4 November 2009 | By: Menaga Sathia

முட்டை வேர்க்கடலை ப்ரை

நாம் சாதரணமாக வறுவல் வகைகளை எண்ணெய் விட்டு வறுப்போம்.அப்படி செய்யாமல் வேர்க்கடலையை மிக்ஸியில் மாவாக்கி அதில் செய்தால் எண்ணெய் விட்டு செய்யத் தேவையில்லை.வேர்க்கடலையில் விடும் எண்ணெயே போதும்.

என்ன இதற்க்கு கொஞ்சம் நேரமும்,பொறுமையும் வேணும்.நான் ஸ்டிக் கடாயில் செய்தால் நல்லது.முட்டையை எண்ணெய் விட்டு வறுக்கும் போது வெடிக்கும் ஆனால் வேர்க்கடலை மாவில் புரட்டி செய்தால் வெடிக்காது.கட்லட் கூட நிலக்கடலையில் பிரட்டி எண்ணெய் விடாமல் செய்யலாம்.நீங்களும் செய்து பாருங்களேன்.....


தே.பொருட்கள்:

வேக வைத்த முட்டை - 4
வேர்க்கடலை மாவு - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 3
உப்பு - தேவைக்கு


செய்முறை :

* முட்டையை இரண்டாக கட் செய்யவும்.அதில் உப்பு+மிளகாய்த்தூள்+நசுக்கிய பூண்டு சேர்த்துக் கலக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் முட்டையை வேர்க்கடலை மாவில் புரட்டி இருபுறமும் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

*இதற்க்கு கொஞ்சநேரம் ஆகும்.எண்ணெய்விடத்தேவையில்லை.வேர்க்கடலை விடும் எண்ணெயே போதுமானது.
Tuesday 3 November 2009 | By: Menaga Sathia

சிக்கன் இஞ்சி குழம்பு

தே.பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 10
பூண்டுப்பல் - 10
இஞ்சி - 2 அங்குலத்துண்டு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் - 1கப்
புதினா - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு


செய்முறை :

*சிக்கனை சுத்தம் செய்யவும்.இஞ்சி பூண்டு +பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி நீளவாக்கில் அரியவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது +பச்சை மிளகாய் விழுது+தக்காளி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் சிக்கன்+உப்பு+மஞ்சள்தூள்+தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

*சிக்கன் வெந்ததும் புதினா+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.


பி.கு:

* இதே போல் மட்டனிலும் செய்யலாம்.

* இந்த குழம்பிற்க்கு பூண்டை விட இஞ்சி அதிகமாக போடனும்.காரம் வேண்டுபவர்களுக்கு பச்சை மிளகாயை அதிகமாக போடவும்.
Sunday 1 November 2009 | By: Menaga Sathia

பீன்ஸ் கொள்ளு உசிலி

தே.பொருட்கள்:

பீன்ஸ் - 1/4 கிலோ
வெங்காயம் - 2 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

உசிலிக்கு:

கொள்ளு -1/2 கப்
காய்ந்த மிளகாய் -3
மிளகு - 6
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் -3


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பீன்ஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.

*கொள்ளை 5 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+காய்ந்த மிளகாய்+மிளகு+சோம்பு+பூண்டுப்பல் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சிறிது வெங்காயம் சேர்த்து வதக்கி பீன்ஸ்+உப்பு சேர்த்து தேவையான நீர் சேர்த்து வேக விடவும்.

*மற்றொரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு மீதமுள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்த கொள்ளினை சேர்த்து பொலபொலவென வரும் வரை வதக்கவும்.

*பீன்ஸ் வெந்ததும் வதக்கிய கொள்ளினை சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு:

*விருப்பப்பட்டால் தேங்காய் துறுவல் சேர்க்கலாம்.

*உசிலி துவரம்பருப்பில் செய்து போரடித்துவிட்டால் கொள்ளு,காராமணி சேர்த்து செய்யலாம்.
01 09 10