Showing posts with label பார்லி. Show all posts
Showing posts with label பார்லி. Show all posts
Friday, 4 October 2013 | By: Menaga Sathia

மல்டிக்ரெயின் சுண்டல் /Multigrain Sundal

தே.பொருட்கள்

பொடித்த ஒட்ஸ்,பார்லி மாவு - தலா 1/4 கப்
கோதுமை மாவு,ராகி,சோயா மாவு - தலா 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு தலா - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*கொடுத்துள்ள அனைத்து மாவுகளைகளையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து சிறிது நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசையவும்.

*அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*பின் தேங்காய்த்துறுவல்+தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சுண்டலில் சேர்க்கவும்.

Wednesday, 6 October 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் பார்லி இட்லி/Oats Barley Idly

தே.பொருட்கள்:
ஒட்ஸ் - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*மேற்கூறிய பொருட்களில் ஒட்ஸ்+உப்பைத் தவிர பார்லி,உளுந்து+வெந்தயம் ஒன்றாக ஊறவைக்கவும்.

*ஊறியதும் பார்லி+உளுந்து மைய அரைக்கவும்.

*ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

*புளித்ததும் இட்லி(அ)தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
Sunday, 3 October 2010 | By: Menaga Sathia

பார்லி சூப்/Barley Soup

தே.பொருட்கள்:பார்லி - 3/4 கப்
விருப்பமான காய்கள் - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+வெண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*பார்லியை 1/2 மணிநேரம் 2 கப் நீரில் ஊறவைத்து அந்த நீருடனேயே குக்கரில் 5 விசில் வரை வேகவைக்கவும்.வெந்ததும் பார்லியை வடிகட்டவும்.1 கைப்பிடி வேகவைத்த பார்லியை மட்டும் அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம்+காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும் பார்லி வேகவைத்த நீர் +உப்பு சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் பாதி வேகவைத்த பார்லி + அரைத்த பார்லி அனைத்தையும் ஒன்றாக கலந்து மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

பி.கு:
அவரவர் விருப்பப்படி அனைத்தையும் ஒன்றாக வேகவைத்து அரைத்தும் செய்யலாம்.
Monday, 12 April 2010 | By: Menaga Sathia

முருங்கைக்காய் கட்லட் / Drumsticks Cutlet

இந்த கட்லட்டில் நான் எண்ணெயே சேர்க்காமல் பார்லி,ஒட்ஸில் செய்துள்ளேன்.பார்லி கொஞ்சம் கொழகொழப்பாக இருப்பதால் கட்லட் ஷேப் சரியாக வரவில்லை.நான் ப்ரெட் க்ரம்ஸில் புரட்டாமல் பேக் செய்துள்ளேன்.விருப்பமுள்ளவர்கள் அதில் புரட்டியும் பேக் செய்யலாம்.
 
தே.பொருட்கள்:
வேகவைத்த பார்லி - 1/4 கப்
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
முருங்கைக்காய் - 2
துருவிய கேரட் - 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி - 1/4டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*முருங்கைக்காயை அரிந்து வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.பார்லியை அரைக்கவும்.

*இதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.கலவை தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொடித்த ஒட்ஸ் சேர்க்கவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து 1/4 டீஸ்பூன் எண்ணெய் தடவி மாவை விருப்பமான வடிவங்களில் தட்டி வைக்கவும்.

*அவனை 270 டிகிரிக்கு முற்சூடு செய்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையில் கட்லட்டை ஒருபக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.

*இந்த கட்லட் மிகவும் நன்றாக இருக்கும்.
Sunday, 14 March 2010 | By: Menaga Sathia

பார்லி பெசரட்

தே.பொருட்கள்:

பச்சைபயிறு - 1 கப்
பார்லி குருணை - 3/4 கப்
அரிசி - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்


செய்முறை :

*பார்லி + பச்சை பயிறு,அரிசி இவைகளை தனித்தனியாக குறைந்தது 5 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் காய்ந்த மிளகாய்+இஞ்சி+சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*அடைமாவு பதத்திற்க்கு உப்பு சேர்த்து கரைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

*கார சட்னியுடன் சாப்பிட செம ருசி!!


Sunday, 28 February 2010 | By: Menaga Sathia

பார்லி உப்புமா / Barley Upma

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
ரவை - 1/2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*பார்லி+ரவை சிறிது நெய் விட்டு வறுக்கவும்
 
* கடாயில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் 3 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.

*நீர் கொதித்ததும் பார்லி+ரவையை கொட்டி கிளறவும்.

*நன்கு வெந்து பொலபொலவென வரும் போது இறக்கவும்.
 
பி.கு:
வெறும் பார்லியில் மட்டும் உப்புமா செய்தால் நன்றாகயிருக்காது.இதனுடன் ரவை அல்லது அவல் சேர்த்து செய்தால் தான் நன்றாகயிருக்கும்.
Sunday, 27 December 2009 | By: Menaga Sathia

பார்லி - ரவை இனிப்பு பணியாரம்

தே.பொருட்கள்:

பார்லி குருணை -1/2 கப்
ரவை -1/2 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கு


செய்முறை :

* பார்லியை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.பின் அதனுடன் ரவை சேர்த்து மேலும் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

*வெல்லத்தை கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டி பார்லியில் கலக்கவும்.அதனுடன் சுக்குத்தூள்+ஏலக்காய்த்தூள்+மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கவும்.
* நெய் விட்டு பணியாரகுழியில் மாவை ஊற்றி பணியாரமாக சுட்டெடுக்கவும்.

கவனிக்க:

பார்லியை 1 கப் நீர் ஊற்றி ஊறவைத்த பின் ரவை போடும் போது சிறிது நீர் விட்டு ஊறவைக்கவும்.அப்போழுது தான் கரைத்த வெல்லம் சேர்க்கும் போது மாவு கெட்டியான பதமா இருக்கும்.
Sunday, 8 November 2009 | By: Menaga Sathia

பார்லி கேசரி

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி திராட்சை - விருப்பத்துக்கு
பால் பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
கேசரி கலர் - 1 சிட்டிகை



செய்முறை :

*நான் ஸ்டிக் கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பார்லியை வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும்.

*முந்திரி திராட்சையை வறுக்கவும்.பாலை நன்கு சுண்ட காய்ச்சவும் அதாவது 1/2 கப் ஆகும் வரை காய்ச்சவும்.

*அதே கடாயில் தண்ணீர்+பால் விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் கொதிக்கும் போது கேசரிகலர்+பார்லியை சேர்க்கவும்.

*பார்லி நன்கு வெந்து வரும் சமயத்தில் சர்க்கரை சேர்க்கவும்.

*சர்க்கரை கரைந்து அனைத்தும் நன்கு சுண்டி வரும் போது ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+பால் பவுடர்+மீதமிருக்கும் நெய் சேர்த்து இறக்கவும்.


பி.கு:

இதன் சுவை ரொம்ப நல்லாயிருந்தது.என்ன் கொஞ்சம் அல்வாபோல் கொழகொழன்னு இருந்தது.
Wednesday, 23 September 2009 | By: Menaga Sathia

பார்லி - முளைப்பயறு புட்டு

தே.பொருட்கள்:

பார்லி குருணை -1/2 கப்
முளைபயறு கொண்டைக்கடலை,பச்சைப்பயறு - 1/2 கப்
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1சிரு துண்டு
பூண்டுப்பல் -4
கொத்தமல்லித்தழை - சிறிது
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பார்லியை 1 மணிநேரம் ஊறவைத்து தண்ணியை வடித்துக்கொள்ளவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கவும்.

*முளைப்பயறுடன் உப்பு+பூண்டுப்பல்+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+உப்பு+அரைத்த பயறு சேர்த்து உதிரியாக வரும்வரை கிளறவும்.

*அப்போழுது ஊறவைத்த பார்லி+எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறி பொலபொலவென வரும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


பி.கு:

இந்த புட்டு மிகவும் சுவையாக இருக்கும்.
Friday, 18 September 2009 | By: Menaga Sathia

பார்லி டோக்ளா

தோழி கீதா ஆச்சல் ஒட்ஸில் டோக்ளா செய்திருந்தாங்க.எனக்கும் டோக்ளா சாப்பிட ஆசை வந்துடுச்சு,விடுவோமா நாமெல்லாம் என்ன சாப்பிட ஆசைப்படுறொமோ அதை செய்து சாப்பிட்டு தான் மறுவேலை.அதனால நான் பார்லியில் இந்த டோக்ளாவை செய்துப் பார்த்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.நீங்களும் செய்துப் பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க.

தே.பொருட்கள்:

பார்லி குருணை - 1 கப்
ஒட்ஸ் - 1 கப்
தயிர் - 1 கப்
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லித்தழை -சிறிது


தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*முதலில் பார்லி குருணை+தயிர்+உப்பு+மஞ்சள்தூள் கலந்து குறைந்தது 3 அல்லது 4 மணிநேரமாவது ஊறவைக்கவும்.

*பின் அதனுடன் ஒட்ஸ்+பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.

*கலவை கெட்டியாக இருக்கும் கொஞ்சம் நீர் சேர்த்து மேலும் 1/2 மணிநேரம் ஊறவிடவும்.

*ஊறியதும் கலவை கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்க்கவும்.

*அதனை இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டில் அல்லது அலுமினியம் பார்சல் டிரேயில் ஊற்றி ஆவியில் வேகவைக்கவும்.

*வெந்து ஆறியதும் விருப்பமான வடிவத்தில் கட் செய்து தாளிக்க குடுத்துள்ளவைகளை தாளித்து அதன்மேல் கொட்டவும்.

கவனிக்க:

பார்லி கண்டிப்பாக 4 மணிநேரமாவது ஊறினால்தான் வேகும்.கடைகளில் உடைத்த பார்லி கிடைக்கிறது.அதனை வைத்துதான் இந்த டோக்ளா செய்தேன்.
01 09 10