Sunday 27 December 2009 | By: Menaga Sathia

பார்லி - ரவை இனிப்பு பணியாரம்

தே.பொருட்கள்:

பார்லி குருணை -1/2 கப்
ரவை -1/2 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
வெல்லம் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1 சிட்டிகை
நெய் - தேவைக்கு


செய்முறை :

* பார்லியை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.பின் அதனுடன் ரவை சேர்த்து மேலும் சிறிது நேரம் ஊறவைக்கவும்.

*வெல்லத்தை கரைத்து மண்ணில்லாமல் வடிகட்டி பார்லியில் கலக்கவும்.அதனுடன் சுக்குத்தூள்+ஏலக்காய்த்தூள்+மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாக கலக்கவும்.
* நெய் விட்டு பணியாரகுழியில் மாவை ஊற்றி பணியாரமாக சுட்டெடுக்கவும்.

கவனிக்க:

பார்லியை 1 கப் நீர் ஊற்றி ஊறவைத்த பின் ரவை போடும் போது சிறிது நீர் விட்டு ஊறவைக்கவும்.அப்போழுது தான் கரைத்த வெல்லம் சேர்க்கும் போது மாவு கெட்டியான பதமா இருக்கும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

அண்ணாமலையான் said...

ம் உடம்புக்கு நல்ல விஷயம்.. வாழ்க...

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

Padma said...

Healthy and delicious paniyaram.

பித்தனின் வாக்கு said...

பார்க்க மிக அருமையாக நன்றாக உள்ளது. நாங்களும் செய்து பார்க்கின்றேம்.நன்றி.

R.Gopi said...

நல்லா இருக்கும் போல இருக்கு... பார்லி உடலுக்கு நல்லதுதான்...

டேஸ்ட் எப்படி இருக்கும்னு நீங்க அனுப்பியதை சாப்பிட்டு பார்த்து சொல்கிறேன்...

நன்றி...

S.A. நவாஸுதீன் said...

பார்க்கும்போதே ரொம்ப நல்லா இருக்கு.

Priya said...

ரொம்ப வித்தியாசமா இருக்கு!!!

Unknown said...

பார்க்கும்போதே ரொம்ப நல்லா இருக்கு.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா

Shiv said...

rommba nalla eruku, anything about pumpkin soup? and Veg Dum Biriyani? would be better...Thank You- Kalai Mathi

Priya Suresh said...

Healthy paniyaram..

. said...

நன்றாக இருந்தது. செய்து பார்த்தேன். நான் செய்யும் போது உப்பு தேவைப்பட்டது. மேலும் பார்லி குருணை கிடைக்கவில்லை. அதனால் பார்லி அரிசியை மிக்சியில் அரைத்து பின் ஊற வைத்தேன். அருமையாக இருந்தது.

01 09 10