Tuesday 15 December 2009 | By: Menaga Sathia

தேங்காய் கட்லெட்


தே.பொருட்கள்:
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
பொடித்த ஒட்ஸ் - 1/4 கப்
காய்ந்த தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*தேங்காய்த்துறுவல்+மசித்த உருளைக்கிழங்கு+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை+உப்பு+பட்டாணி அனைத்தையும் கெட்டியாக பிசையவும்.

*பொடித்த ஒட்ஸையும்,காய்ந்த தேங்காய்த்துறுவலையும் ஒரு தட்டில் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*பிசைந்த வைத்துள்ள மாவை சிரு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து ஒட்ஸ் கலவையில் புரட்டி எடுக்கவும்.

*அதனை ப்ரிட்ஜில் 15 நிமிடம் வைக்கவும்.ஏனெனில் வறுக்கும் தேங்காய்த்துறுவல் கொட்டாது.

*பிறகு தவாவில் எண்ணெய் விட்டு கட்லெட்டுகளாக சுட்டெடுக்கவும்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

அண்ணாமலையான் said...

செய்முறை எளிமையாக 5 குறிப்பாக உள்ளது. சொந்தமாக தயாரித்ததா புத்தக உபயமா?

Priya Suresh said...

Superb cutlet Menaga, oorula irrupingala new yearku..enjoy enjoy..nalla saapitu nalla thoongitu, rest yeduthutu vanga...Take care!

Padma said...

Very crispy cutlets... nice addition of coconut and oats... would have made them more crunchy.

Kanchana Radhakrishnan said...

புதுமையா இருக்கு

M.S.R. கோபிநாத் said...

அருமையான ஸ்னாக்

Anonymous said...

nice idea.

Jaleela Kamal said...

அட புது விதமான தேங்காய் கட்லட், நல்ல படியாக ஊருக்கு போய்வாங்க.

உங்களுக்கு ஓட்டு போட முடியவில்லை.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப எளிமையா இருக்கு மேனகா . என்ன திடிரென்று ஊருக்கு வரிங்க, நல்ல மழை நேரத்தில். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

SUFFIX said...

மிக மிக எளிமையான செய்முறை, சுவையாகவும் நிச்சயம் இருக்கும்னு தோணுது. மகிழ்ச்சி.

குறை ஒன்றும் இல்லை !!! said...

வித்தியாசமா இருக்கே.. இந்த தடவ கோவிலுக்கு போரப்ப ஒரு சிதறு தேங்காய கூட விடக்கூடாது..

my kitchen said...

Different cutlet,looks delicious

01 09 10