Thursday 28 October 2010 | By: Menaga Sathia

டிரை ஜாமூன்(Dry Jamun)


தே.பொருட்கள்:பால் பவுடர் - 1 கப்
மைதா - 1/4 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
ரவை - 1 டீஸ்பூன்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையான அளவு
சர்க்கரை - 1/2 கப் + 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:* ஒரு பவுலில் ரவையை சிறிது பால் விட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*பின் அதனுடன் பால் பவுடர்+மைதா+நெய்+பேக்கிங் சோடா அனைத்தையும் ஒன்றாக கலந்து பால் விட்டு கெட்டியாக பிசையவும்.
*மாவு பதம் மிகவும் மிருதுவாக இருக்கவேண்டும்,கைகளில் ஒட்டக்கூடாது.
*சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரை+தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள்+எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.

*பொரித்த உருண்டைகளை சூடான சர்க்கரை பாகில் 1-2 மணிநேரங்கள் ஊறவிடவும்.
*ஒரு தட்டில் 1/4 கப் சர்க்கரையை கொட்டி ஊறிய ஜாமூன்களை ஒவ்வொன்றாக அதில் புரட்டி எடுக்கவும்.
*ப்ரிட்ஜில் சிறிதுநேரம் வைத்திருந்து பரிமாறவும்.சுவையான டிரை ஜாமூன் ரெடி!!
Wednesday 27 October 2010 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சித் தொக்கு/ Mango Ginger Thokku

தே.பொருட்கள்:
மாங்காய் இஞ்சி - 100 கிராம்
புளி - 1நெல்லிகாயளவு
காய்ந்த மிளகாய் - 6
வெல்லம் - 1 சிறுதுண்டு
வெந்தயத்தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
செய்முறை:
*கடாயில் தோல் சீவி நறுக்கிய மாங்காய் இஞ்சி+காய்ந்த மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி ஆறவைக்கவும்.

*அதனுடன் புளி+உப்பு தேவையானளவு நீர் சேர்த்து மைய அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கி வெந்தயத்தூள்+வெல்லம் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
Tuesday 26 October 2010 | By: Menaga Sathia

கோவைக்காய் பச்சடி/ Ivy Gourd Pachadi

தே.பொருட்கள்:
துருவிய கோவைக்காய் - 2 கப்
தயிர் - 250 கிராம்
தேங்காய்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சாட் மசாலா - மேலே தூவ
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*தேங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய் தயிர் சேர்த்து மைய அரைக்கவும்.

*ஒரு பவுலில் கோவைக்காய்+உப்பு++அரைத்த விழுது சேர்த்து ஒன்றாக கலந்து சாட் மசாலாவை மேலே தூவி விடவும்.

*புலாவ்,பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Monday 25 October 2010 | By: Menaga Sathia

பருப்பு உருண்டை ரசம்/ Paruppu Urundai Rasam

சாதரணமாக பருப்பு உருண்டைக்குழம்பு தான் செய்வோம்.அதுபோல் உருண்டைகளை ரச்த்தில் போட்டு செய்தால் இன்னும் சூப்பராகயிருக்கும்...
தே.பொருட்கள்:புளி கரைசல் - 1 1/2 கப்
தக்காளி - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பூண்டுப்பல் - 2
பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
ரசப்பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

உருண்டைக்கு:கடலைப்பருப்பு - 1 கப்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+சோம்பு+காய்ந்த மிளகாய்+பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*வெங்காயம்+கொத்தமல்லித்தழையை இதனுடன் கலந்து உருண்டைகளாக ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.பூண்டு+பச்சை மிளகாயை நசுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தக்காளி+மஞ்சள்தூள்+உப்புநசுக்கிய பூண்டு பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*பின் ரசப்பொடியை சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த உருண்டைகளைப்போட்டு 5 நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்.
Sunday 24 October 2010 | By: Menaga Sathia

பச்சை ஆப்பிள் ஊறுகாய்/ Green Apple Pickle

தே.பொருட்கள்:பச்சை ஆப்பிள் - 2
கடுகு+வெந்தயம் - தலா 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
 
செய்முறை:*ஆப்பிளை சிறுதுண்டுகளாக நறுக்கி(நான் தோல் சீவி நறுக்கியுள்ளேன்)எலுமிச்சை சாறு(நிறம் மாறாமல் இருக்க)+உப்பு+வரமிளகாய்த்தூள் கலக்கவும்.

*வெறும் கடாயில் கடுகு+வெந்தயம் வறுத்து பொடித்து ஆப்பிளில் கலக்கவும்.

*பின் நல்லெண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.

*வெந்தய மாங்காய் ஊறுகாய் போல இருக்கும்.தயிர் சாதத்திற்க்கு சூப்பர் ஜோடி.அப்படியே கூட சாப்பிடலாம்.

பி.கு:
1 நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்,அதற்க்குமேல் நன்றாகயிருக்காது..
Thursday 21 October 2010 | By: Menaga Sathia

பன்/Bun

தே.பொருட்கள்:ஆல் பர்பஸ் மாவு - 3 கப்
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 1/4 கப்
பால் - 1/4 கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
முட்டை - 1
வெள்ளை எள் - மேலே தூவ
 
செய்முறை:*வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*ஒரு பவுலில் வெதுவெதுப்பான பால்+வெண்ணெய்(பாலின் சூட்டிலேயே உருகிவிடும்)+உப்பு+ஈஸ்ட் தண்ணீர் அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.
*மாவை கொஞ்சகொஞ்சமாக கலக்கவும்.தற்று தளர்த்தியான பதத்தில் இருக்கவேண்டும்.
*ஈரமானதுணியால் மூடி வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.

*பொங்கியிருக்கும் மாவை மீண்டும் நன்கு பிசைந்து 1/2 மணிநேரம் வெப்பமான இடத்தில் வைக்கவும்.
*பின் அவன் டிரேயில் வெண்ணெய் தடவி இடைவெளி விட்டு மாவை விருப்பமான வடிவில் உருட்டி ஈரத்துணியால மூடி 3/4 மணிநேரம் வைக்கவும்.

*பின் முட்டையில் சிறிது தண்ணீர் கலந்து உப்பியிருக்கும் பன்களின் மீது தடவி எள்ளை தூவி விடவும்.
*190°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
Wednesday 20 October 2010 | By: Menaga Sathia

இட்லி சாம்பார்/Idli Sambhar

தே.பொருட்கள்:
துவரம்பருப்பு - 3/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 15
தக்காளி - 1 பெரியது
முருங்கைக்காய் - 1
கத்திரிக்காய் - 2 சிறியது
வெல்லம் - 1 சிறுகட்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - 3/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:
*வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

*பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*காய்களை தேவையானளவு நறுக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பாதி சாம்பார் வெங்காயம்+நறுக்கிய தக்காளி+காய்கள் அனைத்தையும் நன்றாக வதக்கி வேகவைத்த பருப்புடன் சேர்த்து குக்கரில் 1 விசில் வரை வேகவைக்கவும்.

*அதே கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மீதமுள்ள வெங்காயம்+அரைத்த விழுது சேர்த்து வதக்கி காயுடன் வேகவைத்த பருப்பை ஊற்றி கொதிக்கவிட்டு கொத்தமல்லித்தழை+வெல்லம் சேர்த்து இறக்கவும்.
Monday 18 October 2010 | By: Menaga Sathia

அரிசி ரவை உப்புமா /Rice Rava Upma

தே.பொருட்கள்:அரிசி ரவை - 1 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

பொடிக்க:துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்

செய்முறை:*பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடித்து அரிசி ரவையில் கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் தேங்காய்த்துறுவல்+அரிசி ரவையை போட்டு கிளறி கெட்டியானதும் நெய் சேர்த்து இறக்கவும்.
Sunday 17 October 2010 | By: Menaga Sathia

மைசூர் ரசம் / Mysore Rasam

தே.பொருட்கள்:
துவரம்பருப்பு - 1/4 கப்
தக்காளி - 1 பெரியது
புளி - எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தேங்காய்த்துறுவல் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1/2+1/4 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 1/2 டீஸ்பூன்

எண்ணெயில் வறுத்து பொடிக்க:
தனியா - 1 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.புளியை ஊறவைத்து 1 1/2 கப் அளவில் கரைக்கவும்.

*எண்ணெயில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களுடன் தேங்காய் சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

*பாத்திரத்தில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு துண்டுகளாகிய தக்காளி+சிறிது கொத்தமல்லித்தழை போட்டு நன்கு வதக்கி புளித்தன்ணீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் பொடித்த பொடியை தூவி 5 நிமிடத்திற்க்கு பின் வேகவைத்த துவரம்பருப்பை ஊற்றி நுரை வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*பின் நெய்+1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.
Thursday 14 October 2010 | By: Menaga Sathia

பாதுஷா /Badusha

Jasu ப்ளாகில் பார்த்து சில மாறுதலுடன் முதன்முறையாக செய்தது...
தே.பொருட்கள்:
மைதா - 1 1/2 கப்
வெண்ணெய் - 1/2 கப்
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
பாகு செய்ய:சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1 சிட்டிகை

செய்முறை:
* மைதா+பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை சலித்துக் கொள்ளவும்.

*ஒரு பவுலில் உருக்கிய வெண்ணெய்+தயிர்+சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்க்கவும்.

*மாவை மிருதுவாக கெட்டியாக பிசையவும்.இந்த பதமே சரியாக இருக்கும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது நீர் தெளித்துக் கெட்டியாக பிசையவும்.
*குறைந்தது 15 நிமிடம் வரை மாவை நன்கு கைகளால் மிருதுவாக பிசையவும்.
*பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஒரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டில் கட்டை விரலால் குழிபோல் செய்யவும்.
*பானில் எண்ணெயை காயவைக்கவும்.மாவை சிறிது கிள்ளிபோட்டால் மாவு மேலே எழும்பி வரும்போது,எண்ணெய் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போடவும்.
* பாதுஷா மேலே எழம்பி வரும்போது மீண்டும் பானை அடுப்பில் வைத்து சிறுதீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும்போது குங்குமப்பூ+எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
*பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
*சர்க்கரை பாகு காய்ந்ததும் பரிமாறவும்.

பி.கு:
*செய்த அன்றைக்கு சாப்பிடுவதைவிட மறுநாள் சாப்பிட நன்றாகயிருக்கும்.
*பட்டரின் அளவைக்குறைத்தால் பாதுஷா சரியாக வராது.
*வடிவத்தை அவரவர் விருப்பம்போல் செய்துக்கொள்ளலாம்.சர்க்கரை பாகு மீதமிருந்தால் பாதுஷா போல் ஊற்றி விடவும்,காய்ந்த பிறகு பார்க்கும் போது சர்க்கரை பூத்து அழகாய் இருக்கும்.
*விரும்பினால் இதன்மேல் சாக்லேட் வெரிமிசில்லியை தூவி விடலாம்.
Wednesday 13 October 2010 | By: Menaga Sathia

மாதுளம்பழ லெமனேட்

தே.பொருட்கள்:
மாதுளம்பழம் - 1
எலுமிச்சை பழம் - 6
சர்க்கரை - 3/4 = 1 கப்

செய்முறை:
*மாதுளம்பழத்தில் முத்துக்களை எடுத்து அரைத்து சாறெடுத்து வடிக்கட்டவும். எடுக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறெடுக்கவும்.

*அடுப்பில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு 4 கப் நீர் விட்டு பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் இறக்கவும்.

*ஆறியதும் மாதுளை+எலுமிச்சை சாறுடன் ஒன்றாக கலந்து ப்ரிட்ஜில் வைத்திருந்து சில்லென்று பருகவும்.

பி.கு:
மாதுளம்பழத்தை கொட்டையுடன் சாப்பிடுவதுதான் நல்லது.இதுபோல் எப்பவாவது செய்து குடிக்கலாம்.
Tuesday 12 October 2010 | By: Menaga Sathia

ஹைதராபாத் மட்டன் பிரியாணி /Hyderabad Mutton Biryani

தே.பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
பாஸ்மதி - 4 கப்
பச்சை மிளகாய் - 3
வறுத்த வெங்காயம் - 1/4 கப்
தயிர் - 150 கிராம்
வரமிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு+நெய் = தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
இளஞ்சூடான பால் - 1 டேபிள்ஸ்பூன்
குங்கமப்பூ - சிறிதளவு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
ரம்பை இலை - 2
ஏலக்காய் -2

பிரியாணி மசாலா தயாரிக்க:
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டீஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பச்சை ஏலக்காய் - 3
கறுப்பு ஏலககய் - 2
பிரியாணி இலை - 3
ஜாதிபத்திரி - 1
வறுத்த வெங்காயம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*மசாலாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.

*சுத்தம் செய்த மட்டனில் பிரியாணி மசாலா+தயிர்+உப்பு+வரமிளகாய்த்தூள்+கீறிய பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும் அல்லது முதல்நாள் இரவே கலந்து வைக்கலாம்.

*ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் பட்டை+கிராம்பு+ஏலக்காய்+ரம்பை இலை+ உப்பு+அரிசி சேர்த்து 3/4 பதமாக வடித்து ஆறவைக்கவும்.

*பிரஷர் பானில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு+புதினா கொத்தமல்லியை லேசாக வதக்கி ஊறவைத்த மட்டனை சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

*ஒரு பாத்திரத்தில் வேகவைத்த மட்டன் கலவை+சாதம்+நெய்+வறுத்த வெங்காயம்+ வறுத்த முந்திரி(விரும்பினால்)போட்டு எலுமிச்சை சாறு +பாலில் சிறிது குங்கமப்பூ கரைத்து ஊற்றவும்.

*இப்படியாக கலவையை போட்டதும் 10 நிமிடம் தம்மில் போடவும் அல்லது 190°C முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.
 
Sunday 10 October 2010 | By: Menaga Sathia

பகோடா குழம்பு

தே.பொருட்கள்:
புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 5
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

பகோடாவுக்கு:
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
 
செய்முறை:
*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிகட்டி சோம்பு+உப்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக நீர் விடாமல் அரைக்கவும்.

*அதனுடன் வெங்காயம்+கொத்தமல்லித்தழை சேர்த்து பகோடாகளாக பொரித்தெடுக்கவும்.

*பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வடகத்தைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+சாம்பார் பொடி+உப்பு சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*குழம்பு நன்கு கொதித்ததும் பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

பி.கு:
கடலைமாவிலும் பகோடாவை செய்து போடலாம்.

Thursday 7 October 2010 | By: Menaga Sathia

ஜாங்கிரி /Jangri

தே.பொருட்கள்:
வெள்ளை முழு உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய:
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ரோஸ் எசன்ஸ் - 2 துளி
எலுமிச்சை சாறு - 1/2 டேபிஸ்பூன்

செய்முறை:
*உளுந்தை 1 மனிநேரம் ஊறவைத்து நன்கு வெண்ணெய் போல் சிறிது நீர் விட்டு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*அதனுடன் அரிசிமாவு+சிறிது நீரில் புட்கலர் கலக்கவும்.மாவு ஒட்டையில் விழும் பதமாக இருக்க வேண்டும்.
*ஒரு ஜிப்லாக் கவரில், ஒரு கம்பி எடுத்து லேசாக சூடு செய்து ஒட்டையை மெலிதாக போடவும்.

*ஒட்டை போட்ட கவரில் மாவை நிரப்பி படத்தில் உள்ளவாறு பிழியவும்.முதலில் 2 வட்டங்கள் போட்டு அதன்மேல் குட்டி குட்டி வளையங்கள் போல் பிழியவும்.2,3 முறை போட்டவுடன் அழகாக வரும்.
*எண்ணெய் காயவைத்து நேரடியாக மாவை பிழியவும்.ஒரு புறம் வெந்ததும்,மறுபுறம் திருப்பி வேகவிடவும்.ரொம்பவும் முறுகலாக எடுக்ககூடாது.
*இன்னொரு அடுப்பில்,பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் எலுமிச்சை சாறு+ரோஸ் எசன்ஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*பொரித்த ஜாங்கிரிகளை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*1/2 மணிநேரம் கழித்து பரிமாற அனைவருக்கும் பிடித்த சுவையான ஜாங்கிரி ரெடி!!
பி.கு:
*ஒட்டையை மிக மெலிதாக போடவும்.மாவு சரியாக பிழிய வரவில்லையெனில் சிறிதளவு நீர் சேர்த்து கலக்கவும்.

*சர்க்கரை பாகு தண்ணீயாக இல்லாமலும்,கெட்டியாக இல்லாமலும் இருக்கனும்.

*பொரித்த ஜாங்கிரியும்,சர்க்கரை பாகும் சூடாக இருக்கனும்.
Wednesday 6 October 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் பார்லி இட்லி/Oats Barley Idly

தே.பொருட்கள்:
ஒட்ஸ் - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*மேற்கூறிய பொருட்களில் ஒட்ஸ்+உப்பைத் தவிர பார்லி,உளுந்து+வெந்தயம் ஒன்றாக ஊறவைக்கவும்.

*ஊறியதும் பார்லி+உளுந்து மைய அரைக்கவும்.

*ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

*புளித்ததும் இட்லி(அ)தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
Tuesday 5 October 2010 | By: Menaga Sathia

வாழைப்பழ ப்ரெட்

தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப்
கோதுமைமாவு - 1 1/2 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டைதூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை(அ)தேன் - 1 1/4 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை:
* வெதுவெதுப்பான சிறிது நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

* ஒரு பவுலில் மாவு வகைகள்+உப்பு+உருக்கிய வெண்ணெய்+மசித்த வாழைப்பழம்+பட்டைதூள்+ஈஸ்ட் அனைத்தையும் ஒன்றாக கலந்து வெப்பமன இடத்தில் ஈரத்துணியால் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

*பின் 2 மடங்காக உப்பியிருக்கும் மாவை கைகளால் நன்கு பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.

*ப்ரெட் பானின் நீளம் அகலத்திற்கேற்ப மாவை வடிவில் உருட்டி ப்ரெட் பானில் ஒருதுணியால் மூடி 3/4 மணிநேரம் வைக்கவும்.

*முற்சூடு செய்த அவனில் 200°C க்கு 25-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*ஆறிய பிறகு துண்டுகள் போடவும்.


01 09 10