Monday 18 October 2010 | By: Menaga Sathia

அரிசி ரவை உப்புமா /Rice Rava Upma

தே.பொருட்கள்:அரிசி ரவை - 1 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

பொடிக்க:துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்

செய்முறை:*பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடித்து அரிசி ரவையில் கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் தேங்காய்த்துறுவல்+அரிசி ரவையை போட்டு கிளறி கெட்டியானதும் நெய் சேர்த்து இறக்கவும்.

34 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

காலை டிபன் ரெடி!!

எல் கே said...

செய்யறது ஈஸி

Asiya Omar said...

அரிசி ரவைன்னு இருக்கா?நல்லாயிருக்கு.

அமைதி அப்பா said...

சின்ன வயசுல எங்கள் வீட்டில் அடிகடி செய்வார்கள். இப்ப இது மறந்தே போச்சு, நினைவூட்டளுக்கு நன்றி.

புதிய மனிதா. said...

அசத்தல் அக்கா..

சாருஸ்ரீராஜ் said...

enga veetla ellorum virumbi sapidum uppuma pasanga likes it to eat with idli podi .but milagu seeragam serthgathu illai next time try pannuren ,

Kurinji said...

Rusikalam pola erukku!

'பரிவை' சே.குமார் said...

Easiya irukkum pola...

Chitra said...

நல்லா இருக்குதுங்க.. நன்றி.

சசிகுமார் said...

உப்புமா எனக்கு பிடிக்காத உணவு, இது கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது ட்ரை பண்ணுவோம்.

பவள சங்கரி said...

நல்ல ரெசிப்பிங்க....முயற்சிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

அரிசி ரவையை கூட்டுறவு கடைல தேடினதுதான் மிச்சம்.இன்னொரு முறை தேடிப்பார்க்கிறேன்.

யாரது சசிகுமார்?உப்புமா பிடிக்கலைன்னு கூவறது?

தொழில்நுட்ப பதிவா போட்டுகிட்டுருந்தா இப்படித்தான் உப்புமா புடிக்காம போகும்:)

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி எல்கே!!

நன்றி ஆசியாக்கா!! அரிசி ரவை என்பது அரிசியை கழுவி காயவைத்து மிஷனில் ரவைபோல் உடைத்து கொடுக்க சொன்னால் கொடுப்பாங்க..அல்லது வீட்டில் நாம் இடியாப்பமாவு தயாரிக்கும்போது ,மாவை ஈரத்துடன் அரைத்து சலிக்கும் போது ரவைப்பொல் வரும்,அதனை வறுத்து ஆறவைத்து உபயோகபடுத்தலாம்.பாம்பே ரவையை விட அரிசி ரவை உப்புமா சூப்பராயிருக்கும்..

Menaga Sathia said...

நன்றி அமைதி அப்பா!!

நன்றி புதிய மனிதா!!

நன்றி சாரு அக்கா!! மிளகு சீரகம் சேர்த்து செய்து பாருங்க,நல்லா காரசாரமா இருக்கும்.நான் சர்க்கரை தொட்டுதான் சாப்பிடுவேன்,அடுத்த முறை இட்லி பொடி சேர்த்து சாப்பிட்டு பார்க்கிறேன்...

Menaga Sathia said...

நன்றி குறிஞ்சி!!

நன்றி சகோ!!

நன்றி சித்ரா!!

நன்றி சசி!! எனக்கும் உப்புமான்னா பிடிக்காது,ஆனா அரிசி உப்புமா ரொம்ப பிடிக்கும்..செய்து பாருங்க...

Menaga Sathia said...

நன்றி மேடம்!! செய்து பாருங்கள்..

நன்றி சகோ!!எனக்கு தெரிஞ்சு கூட்டுறவு கடைல அரிசி ரவை விற்றதில்லை.வீட்டில்தான் தயாரித்து உபயோகபடுத்துவாங்க...

Shama Nagarajan said...

quick comfort upma

Nithu Bala said...

enakku pidicha upma..nanum ethey matirithaan seiven..

Mahi said...

உப்புமா நல்லாருக்கு மேனகா! அரிசியை ஊறவைத்து அரைத்து,சலித்து..வறுத்து..ஆறவைத்து..அப்பாடி!!! கொஞ்சம் வேலைஅதிகமாத்தேன் தெரியுது!!

தண்ணில கொட்டி கிளரும்போது கட்டி தட்டாதா? பாம்பே ரவை=வெள்ளை ரவை???

சாரி.. நிறைய கேள்வி கேட்டுட்டேன்.:) :)

தெய்வசுகந்தி said...

சின்ன வயசுல வீட்டுல செய்வாங்க! அப்போ என்க்கு பிடிக்கவே பிடிக்காது. இப்ப ஒரு முறை செய்து பார்க்க வேண்டும்.

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி நிது!!

நன்றி மகி!! ஆமாம்பா கொஞ்சம் வேலை அதிகம்னாலும் இந்த ரவையில் செய்யும் உப்புமா செம சூப்பராயிருக்கும்...தண்ணீல கொட்டி கிளறும் போது கட்டிபடாது,நான் அப்படிதான் செய்வேன் இல்லைனா ரவையை கொட்டி சூடு தண்ணீர் ஊற்றி கிளறலாம்..

பாம்பே ரவை = வெள்ள ரவை 2ம் வேறன்னு நினைக்கிறேன்பா..வெள்ளை ரவை சாதரணமாக வெள்ளை கலரில் இருக்கும்,பாம்பே ரவை நல்லா பொடியாக வெளிர் மஞ்சள் கலரில் இருக்கும்..இங்கு எனக்கு அந்த ரவைதான் கிடைக்கும்...சாரியெல்லாம் எதுக்கு சந்தேகத்தை தெளிவுபடுத்துவது நல்லது தானே...

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

யம்மி... ரெசிபி பா..
இதுக்கு கொத்சு, அல்லது சட்னி வைத்து சாப்பிட... ஹ்ம்ம்ம்.... சூப்பர்..

Thenammai Lakshmanan said...

அரீசி ரவை உப்புமா மணக்குது மேனகா..

Thenammai Lakshmanan said...

அரீசி ரவை உப்புமா மணக்குது மேனகா..

Gayathri Kumar said...

I love Upma. I will surely try your recipe.

சாருஸ்ரீராஜ் said...

இன்று காலை டிபன் , நீங்க சொன்ன மெத்தட்ல செய்தேன் , ரொம்ப நல்லா இருந்தது, நானும் சர்க்கரை வைத்து தான் சாப்பிடுவேன் , இன்று நாட்டு சர்க்கரை வைத்து சாப்பிட்டோம் ரொம்ப நல்லா இருந்தது . பகிர்வுக்கு நன்றி மேனகா.

thiyaa said...

நல்லா இருக்குதுங்க..

Kanchana Radhakrishnan said...

easy recipe.Thanks for sharing.

Menaga Sathia said...

நன்றி ஆனந்தி!! உப்புமாவை கொத்சுவுடன் சேர்த்து சாப்பிட்டதில்லை.அடுத்த முரை அப்படி செய்து சாப்பிட்டு பார்க்கனும்..

நன்றி தேனக்கா!!

நன்றி காயத்ரி!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னூட்டமிட்டதிற்க்கு மிக்க நன்றி சாரு அக்கா!! சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை தொட்டு சாப்பிட நன்றாகதானிருக்கும்...

நன்றி தியாவின் பேனா!!

நன்றி காஞ்சனா!!

Priya Suresh said...

Adikadi yenga pannuvanga, naan kuda last week arusi rava vanginen..Beautiful dish...

Mahi said...

நானும் செய்து பார்த்துட்டேன் மேனகா! நன்றாக இருந்தது.

Menaga Sathia said...

மிக்க நன்றி மகி செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு..

01 09 10