Tuesday 30 September 2014 | By: Menaga Sathia

சோள சுண்டல் / SORGHUMN( JOWAR ) SUNDAL | NAVARATHRI RECIPES

சோளம் - இது ஒரு புல்வகையை சேர்ந்த தாவரம் . சிறுதாணியங்களில் ஒருவகை .இதனை அரிசிக்கு பதில் சாதம் போல வேகவைத்து சாப்பிடலாம்.

இதில் ரொட்டி,கஞ்சி,கூழ்,இட்லி தோசை,சாதம்,சப்பாத்தி என நிறைய செய்யலாம்.

இதில் மாவு சத்து,நார்சத்து அதிகம் உள்ளது.குளுட்டான் என்னும் வேதிப்புருள் இதில் இல்லை.கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில்  அதிகம் இருக்கு.

சர்க்கரையை குறைக்கும் தன்மை கொண்டதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளதால் கண்குறைபாடை சரி செய்யும்.

இதில் புரதம்,கொழுப்பு சத்து,இரும்புசத்து,கால்சியம்,மாவுசத்து,பீட்டா கரோட்டின் என நிறைய சத்துக்கள் இருக்கு.

இதில் சுண்டல் செய்வதை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

சோளம் -1 கப்
உப்பு - தேவைக்கு
தேங்காய் துறுவல் -1 டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட்+மாங்காய் - தலா 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க
எண்ணெய் -1டீஸ்பூன்
கடுகு + உளுத்தமபருப்பு - தலா 1/2டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை -சிறிது
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*சோளத்தை முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.

 *மறுநாள் குக்கரில் சோளம்+உப்பு+முழ்குமளவு நீர் சேர்த்து 7- 8 விசில் வரை வேக வைத்து நீரை வடிக்கவும்..

 *பின் கடாயில் என்னெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
 *கேரட்+மாங்காய்துறுவலை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி வேகவைத்த சோளத்தை சேர்த்து கிளறவும்.

 *பின் தேங்காய்துறுவலை சேர்த்து கிளறி இறக்கவும்.
பி.கு

சோளம் வேக நீண்ட நேரம் ஆகும். 7 விசில் வரை வேகவில்லை எனில் மேலும் 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
Friday 26 September 2014 | By: Menaga Sathia

3 வண்ண குடமிளகாய் சீஸ் பராத்தா/ TRICOLOUR CAPSICUM CHEESE PARATHA | KIDS LUNCHBOX RECIPES

இந்த குடமிளகாய் சீஸ் பராத்தா மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.ஒரு முறை குடமிளகாய் நாண் சாப்பிட்டேன்,ரொம்ப சுவையா இருந்தது.அதே போல் பராத்தாவில் செய்துருக்கேன்.

ஸ்டப்பிங்கில் சீஸ்+குடமிளகாய் சமமாக சேர்க்கவேண்டும். ஏதாவது ஒன்று குறைவாக சேர்த்தாலும் நன்றாக இருக்காது. இதில் குடமிளகாயை மிக பொடியாக நறுக்க வேண்டும்,இல்லையெனில் உருட்டும் போது ஸ்டப்பிங் வெளியே வந்து விடும்.

எப்போழுதும் ஸ்டப்பிங் பராத்தாவில்,ஸ்டப்பிங் வைத்து மூடிய பிறகு அதனை அடிப்பக்கம் வைத்து உருட்டினால் ஸ்டப்பிங் வெளியே வராது.


நான் இதில் 3 கலர் குடமிளகாய் சேர்த்து செய்துருக்கேன்.ஏதாவது ஒரு கலரில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப செய்யலாம்.

தே.பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்+சுடுவதற்கு

ஸ்டப்பிங் செய்ய

பொடியாக நறுக்கிய குடமிளகாய் -1/2 கப்
துருவிய சீஸ் -1/2 கப்
சீரகபொடி -1/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

சீஸில் உப்பு இருக்கும்,அதனல் உப்பின் அளவை பார்த்து சேர்க்கவும்.

செய்முறை

*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

 *கோதுமை மாவில் உப்பு+1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
 *பின் சிறு உருண்டைகளாக எடுத்து லேசாக  மாவினை தேய்க்கவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் அளவு ஸ்டப்பினை வைக்கவும்.
 *அதனை அப்படியே மேல் நோக்கி மடிக்கவும்.மடித்த பாகத்தினை அடிப்பக்கம் வைத்து மாவினை லேசாக தேய்க்கவும்.

 *சூடான தவாவில் போட்டு 2 பக்கமும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
 *இதனை அப்படியே சாப்பிடவும் நன்றாக இருக்கும்.விரும்பினால் தயிர் தொட்டு சாப்பிடலாம்.

Sending to Kids lunch box recipes at Indusladies

Wednesday 24 September 2014 | By: Menaga Sathia

சோயா உருண்டை பிரியாணி /MEAL MAKER(SOYA CHUNKS) BIRYANI | KIDS LUNCH BOX RECIPES


print this page PRINT IT
சோயாவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.

தே.பொருட்கள்

சோயா உருண்டைகள் - 1 கப்
பாஸ்மதி - 2 கப்
நீர் - 3 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் -1
நறுக்கிய தக்காளி - 1
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க

பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
புதினா கொத்தமல்லி  - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 2

தாளிக்க

பட்டை - சிறுதுண்டு
ஏலக்காய் -2
கிராம்பு -2
பிரியாணி இலை -2

செய்முறை

*சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து குளிர்ந்த நீரில் 2-3 தடவை கழுவவும்.

*உருண்டைகள் பெரியதாக இருந்தால் 2ஆக நறுக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.

*சோயா உருண்டையில் தயிர்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+அரைத்த விழுது சிறிதளவு+உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பின் தக்காளி சேர்த்து வதக்கிய பின்+மீதமுள்ள அரைத்த விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும்.
*பின் ஊறவைத்த சோய உருண்டையை சேர்த்து 10 நிமிடங்கள் வரை வதக்கவும்.
*உப்பு+3 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*நீர்  கொதிக்கும் போது அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரை வேகவிடவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் நெய் சேர்த்து கிளறி பச்சடி அல்லது வறுவலுடன் பரிமாறவும்.

முகநூல் தோழி மகேஸ்வரி அவர்கள் இந்த ஈவெண்டில் கலந்துக்கொள்ளுமாறு சொன்னாங்க. நான் ப்ளாக்கற்ஸ் கூட கலந்துக்கலாம்.மேலும் விபரம் அறிய கீழ்கண்ட லிங்கினை பார்க்கவும்.

Sending to Indusladies Kids lunch box recipes

Monday 22 September 2014 | By: Menaga Sathia

லெமன் கேக் வித் சுவிஸ் மெரிங் ப்ராஸ்டிங் | LEMON CAKE WITH SWISS MERINGUE BUTTERCREAM FROSTING

இது என்னுடைய 900 வது பதிவு!!

சுவிஸ் மெரிங் ப்ராஸ்டிங்கில் முட்டையின் வெள்ளை கரு மட்டும் உபயோகித்து அதனுடன் சர்க்கரை+உப்பு சேர்த்து டபுள் பாய்லரில் சர்க்கரை கரையும் வரை கலந்து பின்  நன்கு பீட்டரால் அடிக்க வேண்டும்.பின் வெண்ணையை சிறு துண்டுகளாக வெட்டி சிறிது சிறிதாக சேர்த்து  10 நிமிடங்கள் வரைகலந்தால் ப்ராஸ்டிங் ரெடி.

வெண்ணைய் அறை வெப்ப நிலையில் இருக்க வேண்டும்,சிறிய துண்டுகளாக வெட்டினால் கலக்க  ஈசியாக இருக்கும்.

முட்டையின் வெள்ளை கரு நன்கு கலக்கும் போது பாத்திரத்தின் வெளிப்பகுதி குளிர்ந்த பின்னேரே வெண்ணெயை சேர்க்க வேண்டும். சூடாக இருக்கும் போது சேர்த்தால் வெண்ணெய் உருகி ப்ராஸ்டிங் சரியா வராது.

இந்த ப்ராஸ்டிங்கை ப்ரிட்ஜில் 3-5 நாட்கள் வரையிலும்,ப்ரீசரில் 1 மாதம் வரையிலும் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

கேக்கில் ப்ராஸ்டிங் செய்த பின் ப்ரிட்ஜில் வைத்திருந்தால் ,ப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து ரூம் டெம்ப்ரேச்சரில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

நான் ஒரு லேயரில் மட்டுமே செய்துள்ளேன்.

ப்ராஸ்டிங் செய்ய மட்டுமே பயன்படுத்தியிருக்கேன்,அதனால் கொஞ்சம் அதிக நேரம் ஆகும்.

Recipe Source : Here

தே.பொருட்கள்

லெமன் கேக் - 1

ப்ராஸ்டிங் செய்ய

முட்டை வெள்ளை கரு - 1/2 கப்
சர்க்கரை -1 கப்
உப்பு -1/8 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் - 1 கப் அறைவெப்பநிலை
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
பிங்க் கலர்-2 துளிகள் விரும்பினால்

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு+உப்பு+சர்க்கரை சேர்த்து கலந்து டபுள் பாய்லரில் வைக்கவும்.

*விஸ்க் மூலம் சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.பின் சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து நுரைபோல் பொங்கி வரும் போது இறக்கவும்.
*உடனே பீட்டரால் விடாமல் 20 நிமிடங்கள் வரை ஹை ஸ்பீடில் கலக்கவும்.
*நன்கு நுரை போல் பொங்கி வரும் போது,பாத்திரமும் சூடு ஆறியிருக்கும் போதும் வெண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து குறைவான ஸ்பீடில் அடிக்கவும்..

*அனைத்து வெண்ணையும் சேர்த்த பிறகு படத்தில் உள்ளவாறு இருக்கும்.
*பின் எசன்ஸ்+கலர் சேர்த்து மேலும் சிரிது நேரம் கலக்கவும்.
*கேக்கின் மேல் பாகத்தை வெட்டி விட்டு,கார்ட்போர்ட்டில் சிரிது ப்ராஸ்டிங் வைத்த பிறகு கேக்கினை வைக்கவும்.
*பின் கேக்கின் மேல் ப்ராஸ்டிங் தடவவும்.
*மேலே விரும்பிய டிசைன் செய்யவும்.நான் ரோஸ் டிசைன் செய்துள்ளேன்.

*முதலில் கேக்கின் வெளிப்புறத்தில் டிசைன் போட்டபின்,உள்புறத்தில் போட்டு முடிக்கவும்.

*பின் ஓரங்களில் டிசைன் செய்யவும்.டிசைன்களில் இடையே இடைவெளி இருந்தால் விரும்பிய டிசைனில் நிரப்பவும்.

Tuesday 16 September 2014 | By: Menaga Sathia

பானி பூரி / PANI PURI | GOLGAPPA | NORTH INDIAN STREET FOOD

இது வட இந்தியாவின் மிக பிரபலமான ஸ்நாக்ஸ்.. பூரி மற்றும் சட்னி வகைகள் தயாராக இருந்தால் உடனே செய்து சாப்பிடலாம்.

தே.பொருட்கள்

சாட் பூரி - 10
இனிப்பு சட்னி - தேவைக்கு

உருளை ஸ்டப்பிங் செய்ய

வேகவைத்து மசித்த உருளை - 2 பெரியது
வேகவைத்த முளைகட்டிய பச்சை பயிறு - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் -1/4 டீஸ்பூன்
கறுப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

புதினா சட்னி செய்ய

புதினா -1/2 கப்
கொத்தமல்லித்தழை -1/2 கப்
பச்சை மிளகாய் -2
இஞ்சி -சிறு துண்டு
எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு -1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி -1/2 டீஸ்பூன்

செய்முறை

* உருளை ஸ்டப்பிங் செய்ய கொடுக்கப்பட்ட பொருட்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து கலக்கவும்.

பானி செய்ய

*புதினா+கொத்தமல்லி+பச்சை மிளகாய்+இஞ்சி சேர்த்து மைய அரைக்கவும்.

*பின் 1 கப் நீர் சேர்த்து கலந்து வடிக்கட்டவும்.

*அதில் கறுப்பு உப்பு+எலுமிச்சை சாறு+சீரகத்தூள்+ஆம்சூர் பொடி சேர்த்து கலக்கவும்.

பரிமாறும் முறை

*பூரியை லேசாக உடைத்து அதனுள் உருளை ஸ்டப்பிங் வைத்து அதன்மேல் இனிப்பு சட்னி ஊற்றி பானியில் நனைத்து பரிமாறவும்.



Thursday 11 September 2014 | By: Menaga Sathia

பீர்க்காங்காய் கடைசல் /Ridge Gourd (Peerkangai ) Kadaisal | Side Dish For Idli & Dosa


தே.பொருட்கள்

பிஞ்சு பீர்க்காங்காய் - 1
பாசிப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -10
தக்காளி -1
பச்சை மிளகாய் -3
பூண்டுப்பல் -2
உப்பு -தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பெருங்காயத்தூள் -சிறிது

செய்முறை

*குக்கரில் பாசிப்பருப்பு+மஞ்சள்தூள்+நறுக்கிய வெங்கயம்+தக்காளி+கீறிய பச்சை மிளகாய்+தோல் சீவிய துண்டுகளாகிய பீர்க்கங்காய் இவற்றை சேர்த்து முழ்குமளவு நீர் விட்டு குழைய வேகவைத்து எடுக்கவும்.
*வெந்ததும் நன்கு மசித்து தேவைக்கு நீர்+உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

பி.கு

பீர்க்காங்காய் தோலினை துவையல் செய்யலாம்.
Monday 8 September 2014 | By: Menaga Sathia

ஆவக்காய் ஊறுகாய் |ஆந்திரா ஸ்பெஷல் மாங்காய் ஊறுகாய்/AVAKKAI PICKLE | AVAKKAI URUKAI | ANDHRA SPECIAL RAW MANGO PICKLE

கொடுத்துள்ள அளவுபடியே செய்தால் ஊறுகாய் நன்றாக இருக்கும். நல்லெண்ணெய் பயன்படுத்தவும்.வேறு எண்ணெய் பயன்படுத்துவதாக இருந்தால் எண்ணெயை நன்கு காய்ச்சி ஆறவைத்து ஊறுகாயில் ஊற்றவும்.

பாட்டில்களை நன்கு சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து ஊறுகாயை வைத்து பயன்படுத்தவும்.

இந்த ஊறுகாய்க்கு மாங்காயை கொட்டையுடன் பயன்படுத்தவும்.

காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்தால் ஊறுகாய் நன்கு கலராக இருக்கும்,நான் சேர்க்கவில்லை.


தே.பொருட்கள்

மாங்காய் - 2 பெரியது
கடுகுபொடி - 3/4 கப்
வரமிளகாய்த்தூள் - 3/4கப்
பூண்டுப்பல் - 1 1/2 டேபிள்ஸ்பூன் + 1 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 3/4 டேபிள்ஸ்பூன் 
நல்லெண்ணெய் - 1 கப் + 1/8 கப்
உப்பு - 3/4 கப்  மைனஸ் 2 1/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*மாங்காயை கழுவி துடைத்து கொட்டையுடன் 2ஆக நறுக்கவும்.

*பின் கொட்டை+மெலிதாக இருக்கும் வெள்ளை தோல் இவற்றை நீக்கி கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*நறுக்கிய மாங்காய் துண்டுகள் 3 கப் அளவில் எடுத்துக் கொண்டால் மேற்சொன்ன மற்ற அளவுகள் சரியாக இருக்கும்.

*நறுக்கிய மாங்காய் துண்டுகளை துணியால் ஈரம் போக நன்கு துடைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் மாங்காய் துண்டைகளை எடுத்துக் கொள்ளவும்.


*கடுகுப்பொடி+வெந்தயம்+பூண்டுப்பல்  சேர்க்கவும்.
*மிளகாய்த்தூள்+உப்பு சேர்க்கவும்.
* நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.
*சுத்தம் செய்த பாட்டிலில் போட்டு ஊறவைக்கவும்.
*மறுநாள் ஊறுகாயை சுவைபார்க்கவும்.உப்பு+காரம் குறைந்தால் சேர்க்கவும்.

*இந்த அளவுபடியே செய்தால் எதுவும் சேர்க்க தேவையில்லை.

*ஊறுகாயின் மேலே 1/2 இஞ்ச் அளவு மிந்தந்தால் ஒகே,இல்லையெனில் 1/8 கப் மேலும் நல்லெண்ணெய் ஊற்றவும்.
பி.கு

*பயன்படுத்தும் போது ஊறுகாயை சிறிய பாட்டிலில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.

*1 வருடம்வரை வைத்திருக்கலாம்.

*ஈரமில்லாத கரண்டியை பயன்படுத்தவும்.

*ஊறுகாயை பாட்டில் அல்லது செரமிக் ஜாடியில் வைத்திருந்து பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு கெடாமலும்,நிறம் மாறாமலும் இருக்கும்.

*இதில் வெந்தயம் பதில் 3 டேபிள்ஸ்பூன் கறுப்பு கடலையை பயன்படுத்தலாம்.
01 09 10