அக்காவிடம் கற்றுக் கொண்ட குறிப்பு..
இதில் ரவையை வெண்ணெயில் வறுத்து 5 நாள் ஊறவைத்து செய்யவேண்டும்.மேலும் உலர் பழங்களையும் ரம் அல்லது ஆரஞ்சு ஜூஸில் கேக் செய்ய 5 நாள் முன்பு ஊறவைக்கவேண்டும்.
இதில் கப் அளவு நான் பயன்படுத்தியிருப்பது ரைஸ்குக்கர் கப்.
தே.பொருட்கள்
ரவை - 2 கப்
சர்க்கரை - 1 கப்
வெண்ணெய் -150 கிராம்
ரம் - 1/4 கப்
கேரவே சீட்ஸ் / Caraway Seeds - 1 டீஸ்பூன்
டூட்டி ப்ரூட்டி -1/4 கப்
முந்திரி - 1/4 கப்
திராட்சை -1/8 கப்
முட்டை - 4
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
செய்முறை
*ரவையை 150 கிராம் வெண்ணெயில் வறுத்து சூடு ஆறியதும் மூடி வைத்து 5 நாள் ஊறவிடவும்.தினமும் கிளறிவிடவும்.
*டூட்டி ப்ரூட்டி+முந்திரி+திராட்சை இவற்றை ஒன்றாக கலந்து ரம்மில் 5 நாள் ஊறவைக்கவும்.
*அவனை 180°C முற்சூடு செய்யவும்.
*முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவினை தனியாக பிரிக்கவும்.
*வெள்ளை கருவினை நன்கு பீட்டரால் நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் சர்க்கரை +மஞ்சள் கரு சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு பீட்டரால் கலக்கவும்.
*சர்க்கரை கரைந்ததும் வெனிலா எசன்ஸ் +ஊறவைத்து உலர் பழங்கள் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.
*இவற்றுடன் ஊறவைத்த ரவை மற்றும் வெள்ளை கரு என மாற்றி மாற்றி சேர்த்து கலக்கவும்.கடைசியாக கேரவே விதைகளை சேர்த்து கலக்கவும்.
*கேக் பானில் வெண்ணெய் தடவி ஊற்றி 50- 55 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.