Friday 27 December 2013 | By: Menaga Sathia

கிறிஸ்துமஸ் ரவை கேக் /CHRISTMAS RAVA CAKE | VIVIKUM CAKE | PONDICHERRY SPL VIVIKUM CAKE

அக்காவிடம் கற்றுக் கொண்ட குறிப்பு..

இதில் ரவையை வெண்ணெயில்  வறுத்து 5 நாள் ஊறவைத்து செய்யவேண்டும்.மேலும் உலர் பழங்களையும் ரம் அல்லது ஆரஞ்சு ஜூஸில் கேக் செய்ய 5 நாள் முன்பு ஊறவைக்கவேண்டும்.

இதில் கப் அளவு நான் பயன்படுத்தியிருப்பது ரைஸ்குக்கர் கப்.

தே.பொருட்கள்

ரவை - 2 கப்
சர்க்கரை - 1 கப்
வெண்ணெய் -150 கிராம்
ரம் - 1/4 கப்
கேரவே சீட்ஸ் / Caraway Seeds - 1 டீஸ்பூன்
டூட்டி ப்ரூட்டி -1/4 கப்
முந்திரி - 1/4 கப்
திராட்சை -1/8 கப்
முட்டை -  4
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்


செய்முறை

*ரவையை 150 கிராம் வெண்ணெயில் வறுத்து சூடு ஆறியதும் மூடி வைத்து 5 நாள் ஊறவிடவும்.தினமும் கிளறிவிடவும்.



*டூட்டி ப்ரூட்டி+முந்திரி+திராட்சை இவற்றை ஒன்றாக கலந்து ரம்மில் 5 நாள் ஊறவைக்கவும்.

*அவனை 180°C முற்சூடு செய்யவும்.

*முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவினை தனியாக பிரிக்கவும்.

*வெள்ளை கருவினை நன்கு பீட்டரால் நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் சர்க்கரை +மஞ்சள் கரு சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு  பீட்டரால் கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் வெனிலா எசன்ஸ் +ஊறவைத்து உலர் பழங்கள் சேர்த்து மிருதுவாக கலக்கவும்.

*இவற்றுடன் ஊறவைத்த ரவை மற்றும் வெள்ளை கரு என மாற்றி மாற்றி சேர்த்து கலக்கவும்.கடைசியாக கேரவே  விதைகளை சேர்த்து கலக்கவும்.

*கேக் பானில் வெண்ணெய் தடவி ஊற்றி 50- 55 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.





16 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

great-secret-of-life said...

looks so yumm! new to me

Prema said...

Delicious cake menga...luks superb.

Asiya Omar said...

Wow ! அருமையாக வந்திருக்கு மேனகா.

Shama Nagarajan said...

yummy cake

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள மேனகா, வணக்கம்.

எனக்கு இந்த கேக் வேண்டாம். என் பங்கையும் நீங்களே சாப்பிடுங்கோ.

என் தொடரின் பகுதி-99, 100/1, 100/2 ஆகிய மூன்றுக்கும் உடனே வாங்கோ. என் கணக்குப்பிள்ளைக் கிளி அர்ஜண்டாக உங்களை கூப்பிடுகிறது.

அதன் பிறகு 101, 102 க்குப் பொறுமையா வாங்கோ, போதும்.

அன்புடன் VGK

'பரிவை' சே.குமார் said...

ஆஹா.... இப்பவே சாப்பிடணும் போல இருக்கு.

Thenammai Lakshmanan said...

woww super da Menaga :)

Sangeetha M said...

that's so rich and flavorful fruit cake...love semolina cakes and definitely will try it with orange juice sometime soon..cake looks yummy :)

Priya said...

arumaiyana cake menaga akka.

ADHI VENKAT said...

அருமையாக உள்ளது ரவா கேக்... பாராட்டுகள்.

Unknown said...

Cake looks so good. Nice idea of soaking rava.

Unknown said...

wow thats an fantastic rava chritmas cake :)

Vimitha Durai said...

I will surely try this. Nice one

மாதேவி said...

அருமையாக உள்ளது.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் said...

அருமை...

01 09 10