Friday 28 June 2013 | By: Menaga Sathia

தபுலே/Tabouleh

இது ஒரு லெபனீஷ் சாலட்

தே.பொருட்கள்

குஸ்குஸ் - 1 கப்
விதை நீக்கி பொடியாக அரிந்த தக்காளி - 3
பொடியாக அரிந்த பார்ஸ்லி இலை - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்
எலுமிச்சை சாறு - 1/4 கப்

செய்முறை

*குஸ்குஸில் உப்பு+ஆலிவ் எண்ணெய் கலந்து 2 கப் கொதி நீரை ஊற்றி மூடிவைக்கவும்.

*15 நிமிடம் கழித்து மேற்கூறிய மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து ப்ரிட்ஜில் 1மணிநேரம் வைத்திருந்து பரிமாறவும்.

பி.கு

*இதனுடன் வெள்ளரிக்காய்+வெங்காயம்+பூண்டு இவற்றினை சேர்க்கலாம்.

*குஸ்குஸ் பதில் பல்கரிலும் செய்யலாம்.

Sending to Flavours of  cuisine -Middle Eastern guest  hosted @ asiya akka event by Julie
Thursday 27 June 2013 | By: Menaga Sathia

பெஸ்டினோஸ் /Pestinos(Spanish Pastry)


Recipe source: Simplespanishfood

தே.பொருட்கள்

மைதா -1 கப்
எண்ணெய் -  1/4 க‌ப் +பொரிக்க‌
எலுமிச்சை சாறு-  1டேபிள்ஸ்பூன்
நீர் - 1/4 கப்
ஆரஞ்ச் தோல்-  சிறிது
கிராம்பு -  2
சர்க்கரை - 1/4 கப்
ஐசிங் சர்க்கரை - மேலே தூவ‌

செய்முறை

*1/4 கப் எண்ணெயில் ஆரஞ்ச் தோல்+கிராம்பு சேர்த்து சூடு செய்து ஆறவைத்து வடிகட்டவும்.

*ஒரு பாத்திரத்தில் வடிகட்டிய எண்ணெய்+சர்க்கரை+எலுச்சை சாறு+நீர் சேர்த்து நன்றாக கலந்து மைதா சேர்த்து பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பின் அதனை இரு சம உருண்டைகளாக பிரித்து மெலிதாக உருட்டி தேவையான வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*சூடாக இருக்கும் போது ஐசிங் சர்க்கரை தூவி பரிமாறவும்.

பி.கு

*இதில் வெள்ளை ஒயினுக்கு பதில் எலுமிச்சை சாறு+சர்க்கரை+நீர் சேர்த்து செய்துள்ளேன்.

Monday 24 June 2013 | By: Menaga Sathia

அஞ்சப்பர் ஸ்டைல் சிக்கன் பிரியாணி/Anjappar Style Chicken Biryani



Recipe Source: Savitha's Kitchen

இது எப்பவும் நாம் பிரியாணிக்கு பயன்படுத்தும் பொருட்கள் போல் உபயோகபடுத்தவேண்டும் செய்முறை மட்டும் சிறிது மாறுபடும்.

இதில் தயிர் +தேங்காய்ப்பால் சேர்க்கதேவையில்லை.நெய் மட்டும் சிறிது அதிகமாக ஊற்றி செய்தால் அதே சுவையுடன் இருக்கும்.

எந்த பிரியாணி செய்தாலும் அரிசியை சிறிது நெய்யில் வருத்து சமைத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.

புதினா கொத்தமல்லியை வதக்கி சேர்க்காமல் அரிசி சேர்க்கும் போது சேர்க்கவேண்டும்.

தே.பொருட்கள்

சிக்கன் - 3/4 கிலோ
பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் -  2 பெரியது
தக்காளி -  3 பெரியது
நெய் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 6
வரமிளகாய்த்தூள்  - 1 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது  - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புதினா + கொத்தமல்லி -  தலா 1/2 கப்
உப்பு ‍-  தேவைக்கு
எண்ணெய் -  4 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌

பிரியானி இலை -  4
ஏலக்காய் -  5
கிராம்பு -  4
ஜாதிக்காய் - சிறுதுண்டு
பட்டை - 1 துண்டு

செய்முறை

*வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை துண்டுகளாகவும் ,பச்சை மிளகாயை நீளவாக்கிலும் நறுக்கவும்.

*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரைவடிக்கவும்.

*குக்கரில் சிறிது நெய் ஊற்றி அரிசியை லேசாக வறுத்தெடுக்கவும்.


*பின் சிறிது  நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


*வதங்கியதும் தக்காளி+உப்பு சேர்த்து வதக்கவும்.

*தக்காளி நன்கு வெந்ததும் சுத்தம் செய்த சிக்கன்+இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

*சிக்கன் வெந்து வெள்ளை கலரில் நிறம் போது மிளகாய்த்தூள் சேர்த்து அதிகதீயில் வதக்கவும்.அதேநேரம் சிக்கன் முழுதாக வெந்துவிடவும் கூடாது.



*பின் 4 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவைத்து அதனுடன் வறுத்த பாஸ்மதி+புதினா+பாதி கொத்தமல்லித்தழை +தேவைக்கு உப்பு சேர்க்கவும்.

*மூடி போட்டு வேகவிடவும் நீர் நன்கு சுண்டி வரும் போது மீதமுள்ள நெய் சேர்த்து தம்மில் 10 நிமிடம் போடவும்.

*சாதம் வெந்ததும் வேறொரு பாத்திரத்தில் மாற்றி மீதமிள்ள கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டு பரிமாறவும்.



பி.கு

*இதே முறையில் மட்டனில் செய்யும் போது முதலில் மட்டனை வேகவைத்த பின் மேற்கூறிய செய்முறையில் செய்யவேண்டும்.
Thursday 20 June 2013 | By: Menaga Sathia

பேக்ட் பாகற்காய் பகோடா/Baked Bitter Gourd Pakoda


 தே.பொருட்கள்
பாகற்காய் - 1/4 கிலோ
கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1  டேபிள்ஸ்பூன்
பெருங்சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்

செய்முறை
*பாகற்காயை வட்டமாக மெலிதாக நறுக்கி உப்பு சேர்த்து பிசிறி 15 நிமிடங்கள் வைத்து கழுவி நீரில்லாமல் வடிகட்டவும்.

*இப்படி செய்வதால் கசப்புதன்மை குறையும்.

*மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் போட்டு எண்ணெய் தடவி பாகற்காய்களை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் அடுக்கவும்.

*அவனை 210°C முற்சூடு செய்து 20-25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.10 நிமிடத்திற்கு ஒருமுறை திருப்பிவிடவும்.
Monday 17 June 2013 | By: Menaga Sathia

ஸ்டப்டு வெண்டைக்காய்/Stuffed Ladies Finger(Okra)- Bhindi Sambhariya (Gujarathi Recipe)

Recipe Source : Tarladalal.

தே.பொருட்கள்

பிஞ்சு வெண்டைக்காய் - 20 எண்ணிக்கை
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
பெருங்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

ஸ்டப்பிங் செய்ய

தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 5 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 6 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தனியா - சீரகத்தூள் = 2 டீஸ்பூன்
எள்- 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடலை மாவை வெறும் கடாயில் 5 நிமிடம் வதக்கவும்.

*ஆரியதும் அதனுடன் ஸ்டப்பிங் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலக்கவும்.

*வெண்டைக்காயை கழுவி துடைத்து நடுவில் கீறி ஸ்டப்பிங்கை 1 டீஸ்பூன் அளவில் வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பெருங்காயம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து ஸ்டப்டு வெண்டைக்காய் சேர்த்து சிறுதீயில் மூடி போட்டு 20 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

*நடுநடுவே கிளறி விடவும்.


பி.கு

*விரும்பினால் ஸ்டப்பிங் பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் வேர்க்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்க்கலாம்.

*ஒரிஜினல் ரெசிபியில் 6 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துறுவலுக்கு பதில் நான் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துறுவல்+5 டேபிள்ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்துள்ளேன்.





Thursday 13 June 2013 | By: Menaga Sathia

சாட் பூரி /How To Make Puri For Chaat


தே.பொருட்கள்

ரவை - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்
நீர் -1/4 கப்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பவுலில் நீர் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திதிற்க்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி 20 நிமிடங்கள் வைக்கவும்.
*20 நிமிடங்கள் கழித்து மாவை நன்கு பிசைந்து எலுமிச்சை பழளவு உருண்டை எடுத்து நன்கு மெலிதாக  உருட்டி குக்கீ கட்டரால் வெட்டு எடுக்கவும்.

*உருட்டும் போது மாவு ஒட்டினால் நெய் தடவி உருட்டவும்.
*பூரிகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*உப்பிய பூரிகளை பானி பூரி ,தஹி பூரிக்கும்,உப்பாத பூரிகளை பேல்பூரிக்கும் பயன்படுத்தலாம்.

பி.கு

*விரும்பினால் பூரி பொன்னிறமாக வேண்டுமானால் மாவு பிசையும் 1 டேபிள்ஸ்பூன் உளுத்தமாவு சேர்த்து பிசையலாம்.

*பூரிகளை காற்றுபுகாத டப்பாவில் 10 நாள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*இந்த அளவில் 16 பூரிகள் வரும்.
Monday 10 June 2013 | By: Menaga Sathia

வேகன் மார்பிள் கேக்/Vegan Mango Chocolate Marble Cake For HBC -2

தே.பொருட்கள்

பாகம் 1

ஆல் பர்பஸ் மாவு -  1 1/2 கப்
உப்பு -  1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்  - 1 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -  1/2 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 1/4 கப்

பாகம் 2

மாம்பழ கூழ் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
எண்ணெய்  - 1/4 கப்
எலுமிச்சை சாறு -  1 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் -  1 டீஸ்பூன்

செய்முறை
*பாகம் - 1 ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் கோகோ பவுடரை தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து 3 முறை நன்றாக சலிக்கவும்.

*பாகம் - 2ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எலுமிச்சை சாறு தவிர அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் சலித்த மைதாமாவு+எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

*இதில் பாதியளவு மாவினை தனியாக எடுத்து,கோகோ பவுடரை 1/4 கப் வெந்நீரில் கலந்து ஒரு பாதி மாவில் கலக்கவும்.

*அவனை 180°C  முற்சூடு செய்யவும்,பேக்கிங் டிரேயில் எண்ணெய் தடவி முதலில் மாம்பழ கலவையை ஊற்றி அதன்மேல் கோகோ கலவையை ஊற்றி முள்கரண்டியில் லேசாக கலக்கி விட்டு 50  நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.


பி.கு

*இங்கு ரெடிமேட் மாம்பழ கூழ் உபயோகித்ததால் சர்க்கரையின் அளவை குறைத்து சேர்த்துள்ளேன்.ஒரிஜினல் ரெசிபியில் கொடுத்துள்ளபடி 3/4 கப் சர்க்கரை சேர்க்கலாம்.

*பேக்கிங் டிரேயில் ஊற்றும் போது கோகோ கலவையை ஊற்றி பின் மாம்பழ கலவையை ஊற்றியும் செய்யலாம்.


The HBC challenge was Started by Priya suresh & this 2 nd month challenge was given by Sangee Vijay ,she suggest mango chocolate marble cake with both egg & eggless version. I tried with vegan method.we enjoyed it a lot.


Dry Ingredients

All Purpose Flour - 1 1/2 Cups
Salt -1/4 Tspn
Baking Soda - 1/2 Tspn
Baking Powder - 1 1/2 Tspn
Cocoa Powder -1/4 Cup(Mix with 1/4 cup warm water)

Wet Ingredients

Mango Pulp -1 Cup ( I used Store Bought Pulp)
Sugar - 1/2 Cup
Oil -1/4 cup
Vanilla Essence - 1 Tspn
Lemon Juice - 1 Tbspn

 Method

*Preheat the  oven at 180 °C & grease the baking pan with oil.

*Mix the Dry ingredients Except Cocoa powder,sieve together well with 3 times.

*Mix the wet ingredients except lemon juice,until the sugar dissolves.

*Gently mix the flour mixture to the wet ingredients,then finally add lemon juice  &mix everything very well.

*Divide the batter in 2 bowls,mix cocoa powder with 1/4 cup warm water  then add this paste to one part of  the batter.

*Pour the mango batter in the loaf  & then cocoa batter, make swirls lightly.

*Gently tap the pan to set the batter evenly & bake  it for 50 mins or until done.

Notes

* Here i used store bought mango pulp,so i reduced the sugar to 1/2 cup ,if  you are a sweet tooth then add 3/4 cup sugar.


Thursday 6 June 2013 | By: Menaga Sathia

குடமிளகாய் உசிலி /Capsicum Usili


தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய பச்சை+சிகப்பு குடமிளகாய் - தலா 1/2 கப்
கடலைப்பருப்பு+துவரம்பருப்பு - தலா 1/4 கப்
காய்ந்த மிளகாய்  - 3
சோம்பு -  1 டீஸ்பூன்
கடுகு +உளுத்தம்ப‌ருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -  2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடலைப்பருப்பு+துவரம்பருப்பு இவற்றை 1 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+காய்ந்தமிளகாய்+உப்பு சேர்த்து அரைக்கவும்.

*அதனை ஆவியில் வேகவைத்து நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டு  உப்பு+ குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கி தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து உதிர்த்த பருப்பினை சேர்த்து நன்கு வதக்கவும்.

*பொலபொலவென வரும்போது வதக்கிய குடமிளகாய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பி.கு

*விரும்பினால் தேங்காய்த்துறுவல் சேர்க்கலாம்.

*குடமிளகாயை 4-  5 நிமிடங்கள் வதக்கினால் போதும். இல்லையெனில் Crunchiness போய்விடும்.

Sending to Priya's Vegan Thursday.
Monday 3 June 2013 | By: Menaga Sathia

வெள்ளை நவரத்ன குருமா / Navaratna Kurma In White Gravy


தே.பொருட்கள்

வெங்காயம் -1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது  - 1 டீஸ்பூன்
பனீர் துண்டுகள்-  100 கிராம்
துண்டுகளாகிய உருளை - 1/2 கப்
துண்டுகளாகிய கேரட் - 3/4 கப்
துண்டுகளாகிய பீன்ஸ்-  3/4 கப்
காலிபிளவர் பூக்கள் - 3/4 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பால் - 1 கப்
முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
தயிர்-  1/2 கப்
தேங்காய்பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி+திராட்சை - தலா 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌

பட்டை -  சிறுதுண்டு
கிராம்பு - 2
ஏலககய் - 3
பிரியானி இலை-  3
அன்னாசிப்பூ - 1

செய்முறை

*வெங்காயத்தை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் வேகவைத்து ஆறியதும் விழுதாக அரைக்கவும்.

*காய்களை தனிதனியாக வேகவைத்துக் கொள்ளவும்.

*சிறிது சுடுநீரில் தேங்காய்பவுடரை சேர்த்து கரைத்து அதனுடன் முந்திரிவிழுது+தயிர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயவிழுது+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் காய்கள்+தயிர் கலவை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பால்+உப்பு சேர்த்து சிறிதீயில் கொதிக்கவைத்து வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

*புலாவ்,சப்பாத்தியுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

பி.கு

*இதில் குடமிளகாயும் சேர்க்கலாம்.என்னிடம் இல்லாததால் பீன்ஸ்+குடமிளகாய் சேர்க்கவில்லை.

*தேங்காய் பவுடர் பதில் தேங்காய் அரைத்து சேர்க்கலாம்.

*விரும்பினால் அன்னாச்சிபழ துண்டுகள் சேர்த்து பரிமாறலாம்.
01 09 10