Monday 3 June 2013 | By: Menaga Sathia

வெள்ளை நவரத்ன குருமா / Navaratna Kurma In White Gravy


தே.பொருட்கள்

வெங்காயம் -1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது  - 1 டீஸ்பூன்
பனீர் துண்டுகள்-  100 கிராம்
துண்டுகளாகிய உருளை - 1/2 கப்
துண்டுகளாகிய கேரட் - 3/4 கப்
துண்டுகளாகிய பீன்ஸ்-  3/4 கப்
காலிபிளவர் பூக்கள் - 3/4 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பால் - 1 கப்
முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன்
தயிர்-  1/2 கப்
தேங்காய்பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி+திராட்சை - தலா 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌

பட்டை -  சிறுதுண்டு
கிராம்பு - 2
ஏலககய் - 3
பிரியானி இலை-  3
அன்னாசிப்பூ - 1

செய்முறை

*வெங்காயத்தை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் வேகவைத்து ஆறியதும் விழுதாக அரைக்கவும்.

*காய்களை தனிதனியாக வேகவைத்துக் கொள்ளவும்.

*சிறிது சுடுநீரில் தேங்காய்பவுடரை சேர்த்து கரைத்து அதனுடன் முந்திரிவிழுது+தயிர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயவிழுது+இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் காய்கள்+தயிர் கலவை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பால்+உப்பு சேர்த்து சிறிதீயில் கொதிக்கவைத்து வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.

*புலாவ்,சப்பாத்தியுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

பி.கு

*இதில் குடமிளகாயும் சேர்க்கலாம்.என்னிடம் இல்லாததால் பீன்ஸ்+குடமிளகாய் சேர்க்கவில்லை.

*தேங்காய் பவுடர் பதில் தேங்காய் அரைத்து சேர்க்கலாம்.

*விரும்பினால் அன்னாச்சிபழ துண்டுகள் சேர்த்து பரிமாறலாம்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

வாவ்... சூப்பர்...



நன்றி...

Asiya Omar said...

simply superb.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன் மேனகா.

Priya Anandakumar said...

Super kurma Menaga, romba nalla irrukku...

great-secret-of-life said...

looks creamy and yummy!

Vimitha Durai said...

Creamy and yummy curry

வை.கோபாலகிருஷ்ணன் said...

படமும், செய்முறைப்பக்குவமும் அருமையோ அருமை. பாராட்டுக்கள்.

Shanthi said...

awesome...looking yummy...

Shanavi said...

Indha kurma enga veetla most fav dish..Supera iruku menaga, apdiye ore roti kodunga, finish panniduvein

virunthu unna vaanga said...

looks so rich and yummy...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான சமையல் குறிப்புக்குப் பாராட்டுக்கள்..

Akila said...

Simply superb

Hema said...

Paarkve supera irukku..

Priya Suresh said...

Super kurma, highly aromatic and inviting Menaga.

மாதேவி said...

மிகவும் சுவையானது.

01 09 10