Showing posts with label இனிப்பு. Show all posts
Showing posts with label இனிப்பு. Show all posts
Monday, 22 October 2018 | By: Menaga Sathia

சோளமாவு அல்வா | Microwave Cornflour Halwa / Bombay Karachi Halwa | Diwali Recipes


சோளமாவு அல்வா மிக எளிதாக செய்ய கூடியது.நான் மைக்ரோவேவ் அவனில் சுலபமாக செய்துள்ளேன்.இதனை பாம்பே கராச்சி அல்வா என்றும் சொல்வார்கள்.

மைக்ரோவேவ் அவனின் ஹை பவரில் செய்ய வேண்டும்.

சோளமாவு :சர்க்கரை :நீர் இம்மூன்றும் 1:3:4 என்ற விகிததிதில் இருக்கவேண்டும்.எந்த கப்பில் அளக்கிறமோ அதே கப்பில் அனைத்தையும் எடுக்க வேண்டும்.

தே.பொருட்கள்
சோளமாவு- 1/2 கப்
சர்க்கரை- 1+ 1/2 கப்
நீர் -2 கப்
கேசரி கலர் -2 துளி
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி- 10,பொடியாக உடைத்தது
நெய்- 1 டீஸ்பூன்

செய்முறை

*மைக்ரோவேவ் கண்ணாடி பாத்திரத்தில் சோளமாவு,நீர்,சர்க்கரை இவற்றை கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.பின் கேசரிகலர் சேர்த்து கலக்கவும்.


*இப்பொழுது ஹை பவரில் 6 நிமிடங்கள் பாத்திரத்தை அவனில் வைக்கவும்.ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு இடையில் கலந்து விடவும்.

*பின் வறுத்த முந்திரி,நெய்,ஏலக்காய்தூள் சேர்த்து மேலும் 6 நிமிடங்கள் வைக்கவும்.மீண்டும் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு இடையே கலக்கி விடவும்.

*நெய் தடவில் தட்டில் ஊற்றி சமபடுத்தவும்.


*ஆறியதும் துண்டுகளாக போடவும்.

பி.கு
*சர்க்கரையின் அளவை குறைத்தால் அல்வா தன்மையும்,சுவையும் வராது.
Thursday, 11 October 2018 | By: Menaga Sathia

ஊட்டி வர்க்கி /Ooty Varkey | Tea Time Snacks

 வர்க்கி செய்வதற்கு ப்ரெஷ் ஈஸ்ட் முக்கியம் .வர்க்கியில் பாரம்,இனிப்பு,மசாலா,சதுர வடிவம் என பல வகைகள் உண்டு,இதில் நான் இனிப்பு வர்க்கி செய்து உள்ளேன்.எப்படி செய்றதுனு இந்த வீடியோவை பார்த்து செய்தேன்.

தே.பொருட்கள்
மைதா - 1 கப்+1/4 கப்
ப்ரெஷ் ஈஸ்ட் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன் +1/4 கப்

ப்ரெஷ் ஈஸ்ட் செய்ய
மைதா -1/4 கப்
தயிர் -1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்
நீர் -1/3 கப்

செய்முறை

*முதலில் ஈஸ்ட் செய்ய கொடுக்கபட்ட பொருட்களை கலந்து ,காற்றுபுகாத டப்பாவில் வெப்பமான இடத்தில் ,2 நாட்கள் வரை வைக்கவும்.

*பின் மாவு பொங்கி ப்ரெஷ் ஈஸ்ட் தயார்.

*ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா,உப்பு,சர்க்கரை,எண்ணெய்,ப்ரெஷ் ஈஸ்ட் 2 டேபிள்ஸ்பூன்,வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் இவற்றை ஒன்றாக கலக்கவும்.
 *பின் தேவைக்கு நீர் கலந்து மாவினை கொஞ்சம் இளக்கமாக பிசைந்து ,ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
 *பின் மாவினை மிக மெல்லியதா உருட்டவோ அல்லது பரோட்டாவுக்கு செய்வது போல் அடிக்கவும்.அதன் மீது சிறிது வெண்ணெய் தடவி,கொஞ்சம் மாவினை தூவி தடவவும்.
 *வலது,இடது ஒரங்களை மடத்து அதன்மீது மீண்டும் வெண்ணெய்,மைதா தடவவும்.
 *இதேபோல் 4 முறை செய்யவும்.நாம் எத்தனை முறை மடிக்கிறோமோ அத்தனை லேயர் வரும்.
 *அதன் பின் 1 இஞ்ச் தடிமன் அளவுக்கு தேய்த்து நீளவாக்கில் வெட்டவும்.வெட்டிய ஒரு நீளதுண்டை எடுத்து சிறிது சிறிதாக பிய்த்து வைக்கலாம் அல்லது சதுர துண்டுகளாக வெட்டி வைக்கலாம்.

*அவனை 180 டிகிரி செல்சியஸில் முற்சூடு செய்யவும்.

*பேகிங் டிரேயில் பட்டர் பேப்பர் வைத்து  வர்க்கிகளை அடுக்கி,25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*பார்க்கும் போது வேகாத மாதிரி இருக்கும்,ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்.

*நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
Saturday, 14 October 2017 | By: Menaga Sathia

சர்க்கரை நொக்கல் / Sugar Nokkal (Sugar Coated Sev) | Diwali Recipes

நொக்கல் என்பது சேவ் செய்து அதனை சக்கரை பாகில் போட்டு எடுப்பது..திருமணங்களில்  பந்தியில் இதனை முக்கியமாக  வைப்பாங்க.

இது என்னுடைய 1100 வது பதிவு !!

தே.பொருட்கள்

கடலைமாவு - 1 கப்
அரிசிமாவு -1/8 கப்
சோடா உப்பு -1 சிட்டிகை
வெண்ணெய் -2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் -பொரிக்க
சர்க்கரை -1 1/2 கப்
நீர் -1/4 கப்
பால் - 1/8 கப்

செய்முறை
*ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,அரிசிமாவு,உப்பு,வெண்ணெய்,சோடா உப்பு சேர்த்து பிசைந்த பின் நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*சேவ் அச்சு அல்லது தேன்குழல் அச்சியில் போட்டு காயும் எண்ணெயில் வெண்ணிறமாக பொரித்தெடுக்கவும்.



*ஒரு பாத்திரத்தில் சக்கரை+நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.சர்க்கரை கரைந்தவுடன் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு வடிகட்டவும்.

*பின் மீண்டும் அடுப்பில் கொதிக்க விடவும்.பாகினை தொட்டால் இரு விரல்களுக்கு இடையே 2 நூலிழை போல வரும்...அல்லது ஒரு சிறு கிண்ணத்தில் நீர் வைத்து பாகினை ஊற்றினால் கரையாது ,அதனை பந்து போல திரட்டமுடியும் ஆனால் கையால் எடுக்க முடியாது.இதுவே 2 கம்பி பதம்.

*2 கம்பி பதம் வந்ததும் அடுப்பினை அணைத்து பொரித்த சேவ் சேர்த்து கலக்கவும்.


*நன்றாக கலக்கி கொண்டே இருந்தால் பாகு சேவில் ஒட்டி பூத்தாற்போல இருக்கும்.

*நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

பி.கு

*2 கம்பிபதம் எடுத்தால் சக்கரை பூத்தாற் போல வரும்.

*பேக்கிங் சோடா அதிகம் சேர்த்தால் எண்ணெயில் பிழியும் போது கரைந்துவிடும்.

*சேவ்வினை பொன்னிறமாக பொரித்தாலும் பாகில் ஒட்டாது.


Monday, 9 October 2017 | By: Menaga Sathia

முட்டையில்லாத அச்சு முறுக்கு /Achu Murukku (No Maida &Eggless) | Diwali Recipes


அச்சு முறுக்கு கேரளாவில் மிக பிரபலமானது.சிறிது இனிப்பு சுவையுடன் இருக்கும்.சிறுவயது முதலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அம்மா இதனை முட்டையில்லாமலும்,மைதா சேர்க்காமலும் செய்வாங்க.ஒரு முறை ரெடிமேட் அரிசிமாவில் மைதா ,முட்டையில்லாமால் செய்த போது சரியாக வரவில்லை,சுவையும் பிடிக்கவில்லை.

இந்த முறை செய்யும் போது அரிசிமாவை வீட்டிலேயே செய்து,முறுக்கு செய்ததில் நான் எதிர்பார்த்த சுவையில் இருந்தது.

இதற்கு அரிசி மாவு ஈரபதத்துடன் இருக்கவேண்டும்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1 கப்
பொடித்த சர்க்கரை -1/4 கப்
2 ஆம் தேங்காய் பால் -1/4 கப்
உப்பு-1 சிட்டிகை
ஏலக்காய் பொடி -1/4 டீஸ்பூன்
கறுப்பு எள் -1/2 டீஸ்பூன்
நீர் -1/2 கப்+1/8 கப்
எண்ணெய் -பொரிக்க

செய்முறை
*அரிசியை கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்த பின் நீரினை வடிக்கவும்.பின் துணியில் ஈரம் போக உலர்த்தவும்.

 *மிகஸியில் மாவினை நைசாக பொடித்து சலிக்கவும்.
 *பாத்திரத்தில் சலித்த மாவு மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
 *மாவின் பதம் மிக முக்கியம்,கெட்டியாகவோ அல்லது நீர்க்கவோ இருக்ககூடாது.
 *கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும்.அதனுடன் அச்சினையும் சேர்த்து நன்கு காய வைக்கவும்.

*அச்சு காய்ந்த பின் மாவினுள் 1/2 பகுதி வரை முழ்கி எடுத்து உடனே காயும் எண்ணெயில் வைக்கவும்.

 *அச்சினை லேசாக ஆட்டினால் முறுக்கு தனியாக வந்துவிடும்.
 *மறுபடியும் அச்சினை காயும் எண்ணெயிலேயே போட்டு வைக்கவும்.இப்போழுது முறுக்கினை திருப்பி விட்டு 1 நிமிடங்களில் எடுத்து விடவும்
 *எண்ணெயிலிருந்து முறுக்கு எடுக்கும் போது மிருதுவாக இருக்கும்,ஆறியதும் மொறுமொறுப்பாக இருக்கும்.

*நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
பி.கு
*இதற்கு ஈர அரிசி மாவினையே சேர்க்கவும்.அரிசி மாவினை வறுக்க தேவையில்லை.தேங்காய் பால் 2 ஆம் பாலினை சேர்க்கவும்.

*அதிக சர்க்கரை/கெட்டி தேங்காய் பால் சேர்த்து முறுக்கு சிவந்துவிடும்.

*அச்சினை மாவினுல் வைக்கும் போது முழுதாக நனைத்து சுட்டால் முறுக்கு எடுக்க வராது

*அச்சி நன்றாக காய்ந்தால் தான் மாவு ஒட்டும்.

*புது அச்சியாக இருந்தால் செய்வதற்கு 1 வாரம் முன்பு எண்ணெயில் அச்சினை ஊறவைத்து செய்தால் சுடுவதற்கு எளிது.

*மாவு பதம் கெட்டியாக இருந்தால் முறுக்கு கடினமாகவும்,நீர்க்க இருந்தால் அச்சினுள் மாவும் ஒட்டாது.

*ஒவ்வொரு முறையும் அச்சினை நன்றாக காயவைத்த பின் மாவினுள் நனைத்து முறுக்கு சுடவும்,அதேபோல் ஒவ்வொரு முறையும் மாவினை நன்கு கலக்கியபின் அச்சினை மாவில் வைக்கவும்.




Sunday, 1 January 2017 | By: Menaga Sathia

உருளை அல்வா / Potato (Aloo ) Halwa | Sweet Recipe


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

பதிவுகள் எழுதி நீண்டநாட்களாகிவிட்டது.3 மாதமாக டிராப்ட் போஸ்ட் மட்டுமே போட்டேன்.

இனி உருளை அல்வாவின் செய்முறையை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

உருளை -3 நடுத்தர அளவு
சர்க்கரை- 1/2 கப் +2 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ -2 சிட்டிகை
பால்- 1/3 கப் +2 டேபிள்ஸ்பூன்
நெய்- 1/2 கப்

செய்முறை

*உருளையை கழுவி நன்கு வேகவைத்து தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.

*வேகவைத்த மசித்த உருளையை 1/2 கப் அளவில் எடுத்துக் கொள்ளவும்.

*2 டேபிஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும்.

*நான்ஸ்டிக் கடாயில் 1/2 கப் நெய் ஊற்றி மசித்த உருளையை  சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் பால் + ஊறவைத்த குங்குமப்பூ  சேர்த்து வேகவைத்த பின் சர்க்கரை சேர்க்கவும்.

*சர்க்கரை இளகி ஓரங்களில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதத்தில் இறக்கவும்.

*சுவையான அல்வா தயார்...
Monday, 4 January 2016 | By: Menaga Sathia

நெய் பாயாசம் / Nei Payasam ( Sharkara Payasam ) /Aravana Payasam | Kerala Recipe

print this page PRINT IT
இதனை சர்க்கரை பாயாசம் / அரவனை பாயாசம் /பகவதி சேவை பாயாசம் எனவும் சொல்வார்கள்.

இது நாம் செய்யும் சர்க்கரை பொங்கல் தான்,ஆனால் இதில் அரிசியை மசிக்காமல் செய்வார்கள்,மேலும் இதில் விரும்பினால் மட்டும் முந்திரி திராட்சை சேர்க்கலாம்.

நெய் அதிகமாகவும்,தேங்காயை பல்லாக நறுக்கியும் சேர்ப்பார்கள்.மேலும் இதில் கேரளா பச்சரிசியில் செய்வார்கள்.

தே.பொருட்கள்

பச்ச‌ரிசி -1/2 கப்
நீர்- 1 கப்
நெய் -1/4 கப்
வெல்லம்- 1 கப்
ஏலக்காய்த்தூள்- 1/8 டீஸ்பூன்
சுக்குப்பொடி- 1/8 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் -1/8 கப்

செய்முறை

*குக்கரில் அரிசி+நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*பாத்திரத்தில் வெல்லம்+சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் வெல்ல நீரை வேகவைத்த அரிசியில் சேர்த்து கொதிக்கவிடவும்.

*இடையே 1/8 கப் நெய்யினை சிறிது சிறிதாக  சேர்க்கவும்.

*பாயாசம் கெட்டியாக வரும் போது ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி சேர்த்து இறக்கவும்.

*மீதமுள்ள நெய்யில் தேங்காய்ப்பல்லினை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.

பி.கு

*வெல்லம்+நெய் அதிகம் சேர்த்திருப்பதால் இதனை சிறிதளவே சாப்பிடமுடியும்.

*பாயாசம் ஆறிவிட்டால் லேசாக சூடு செய்து பரிமாறவும்.
Monday, 7 December 2015 | By: Menaga Sathia

திருவாதிரை களி / THIRUVADHIRAI KALI | THIRUVADHIRAI SPL


print this page PRINT IT
தே.பொருட்கள்

பச்சரிசி- 1/2 கப்
பாசிபருப்பு -2 டேபிள்ஸ்பூன்
வெல்லம்- 1/2 கப்
நெய்- 1/8 கப்
முந்திரி -தேவைக்கு
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*அரிசி+பருப்பு இவற்றை கழுவி தனிதனியாக வெறும் கடாயில் வறுக்கவும்.


*ஆறியதும் ரவை பதத்தில் உடைக்கவும்.

*வெல்லத்தில் சிறிது நீர் விட்டு கரைத்து வடிகட்டவும்.

*குக்கரில் உடைத்த அரிசி+பருப்பு சேர்த்து வடிகட்டிய வெல்ல நீருடன் மேலும் நீர் சேர்த்து 1 1/2 கப் அளவு வருமாறு சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*அல்லது இதனை நேரடியாக பாத்திரத்தில் வைத்தும் கிளறி செய்யலாம்.

*வெந்ததும் ஏலக்காய்த்தூள்+தேங்காய் துறுவல் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி பரிமாறவும்.


பி.கு
* 1 பங்கு அரிசிக்கு 3 பங்கு நீர் என்ற அளவில் சேர்க்கவும்.

01 09 10