Wednesday 3 October 2018 | By: Menaga Sathia

ராமசேரி இட்லி / How To Make Ramaserry Idli

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவு..
கேரளாவில்,பாலக்காட்டில் இருக்கும் ராமசேரி இட்லி மிக பிரபலமானது.ரொம்ப நாளா செய்யனும்னு ஆசை.ஆனா என்னிடம் இடியாப்ப ஸ்டீமர் இல்லாததால் எப்படி செய்றதுனு தெரியல. யூடிபில் ஒரு விடியோவை பார்த்தபிறகு ஒரு ஐடியா கிடைத்தது.

ஒரு குட்டி/பெரிய பானையில் ,சுற்றளவில் கயிறு கட்டி,பின் பானையின் மேலே குறுக்கும்,நெடுக்குமாக கயிரினை கட்டி ,கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றில் முடிச்சுவிட்டால் ரெடி!!

பானையின் மேல் பாகத்திற்கு ஏற்ப துணியினை வெட்டவும் மற்றும் மேலே மூடுவதற்கு ஏற்ற பாத்திரம் இருந்தால் செய்யலாம்.

இது சிறிய ஊத்தாப்பம் போல இருக்கும்,ஸ்டீமர் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய இட்லி செய்யலாம்.

இட்லி மாவு எப்படி செய்வதுனு இங்கே பார்க்கவும்.

எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தே.பொருட்கள்:

இட்லி மாவு ‍-தேவைக்கு

செய்முறை

*படத்தில் காட்டியுள்ளவாறு தயார் படுத்திக் கொள்ளவும்.

*பானையில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும்,துணியை நனைத்து அதன் மேல் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக தேய்க்கவும்.

*பின் அதன்மேல் மூடி வேகவைத்து எடுத்தால் இட்லி ரெடி..


காரசட்னி செய்ய :

தே.பொருட்கள் :

சின்ன வெங்காயம் -15
காய்ந்த மிளகாய்- 6
உப்பு -தேவைக்கு
புளி -சிறிது
தேங்காய் எண்ணெய் -தேவைக்கு

செய்முறை:
*எண்ணெய் தவிர அனைத்தையும் பச்சையாக அரைத்து எண்ணெய் கலக்கவும்.

இட்லியை தேங்காய் சட்னி,கார சட்னியுடன் பரிமாறவும்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப வித்தியாசமான இட்லிதான்.

01 09 10