Sunday 18 April 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் பாயசம்

தே.பொருட்கள்:
பால் - 4 கப்
ஒட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :
*கடாயில் பாதி நெய் விட்டு ஒட்ஸினை லேசாக வறுக்கவும்.மீதமுள்ள நெய்யில் முந்திரி,திராட்சையினை வறுத்து தனியாக வைக்கவும்.

*4 கப் பாலை 2 கப் பாலாக வரும் வரை நன்கு சுண்டக்காய்ச்சவும்.

*கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சர்க்கரை+ஒட்ஸினை சேர்த்து நன்கு கலக்கவும்.

*அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்த்தூள்+முந்திரி,திராட்சையினை சேர்த்து சூடாகவோ அல்லது சில்லுன்னு பரிமாறவும்.

*இந்த பாயசம் ஈஸியாக செய்வது மட்டுமில்லாமல் சுவையும் பிரமாதமாக இருக்கும்.

36 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

Super.Healthy treat.

Padma said...

Yummy and healthy payasam.

ஜெய்லானி said...

மேனகாக்கா! அந்த அளவு பொருமை இல்லை. ஓட்ஸுல சீனிய போட்டு கலக்கி அப்படியே சாப்பிட்டுடுவேன். அதான் என் பாலிஸி.

Chitra said...

Won't oats thicken the paayasam and make it look like a thick paste? I am just curious to know, before I try it.

Priya Suresh said...

My favourite paayasam...yumm!!

ஸாதிகா said...

சிம்பிள் பாயசம்.திடீர் விருந்தினர்கள் வந்தால் சுலபமாக செது கொடுத்து விடலாம்.

infopediaonlinehere said...

this is an interesting healthy tip on oa...great to see a sweet from oat

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. மூனு நாள் கழிச்சு இன்னிக்குத்தான் வந்தேன் பார்த்தா மூனு பதிவு மிஸ்ஸிங், அதுனால மூனையும் படிச்சிட்டேன். கத்திரிக்காய் சாதத்தை ஓட்ஸ் பாயசத்துடன் கொஞ்சமும். சோயா புலாவை தேங்காய் இரசத்துடன், டோபுவைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு. ஒரு குட்டித் தூக்கம் போட்டு. அப்புறம் எழுந்து பிரஷ்ஷாக மசாலா டீ அடிச்சாச்சி. எல்லா பதிவும் அருமை. எங்க ஷிவானிக் குட்டி எப்படி இருக்கா?

Pavithra Srihari said...

suvai mattum illama healthyaavaum irukkum

அன்புடன் மலிக்கா said...

பாயாசமுன்னாலே ஆயாசமா அமர்ந்து அம்முட்டையும் குடிச்சிபுட்டுதான் எழுந்திரிப்பேன் சூப்ப்ர் மேனகா
அதுசரி இப்புடி தன்னாலகுடிச்சா வயிறுவலிக்குமாமே..நெசமாவா வலிச்சதா...

'பரிவை' சே.குமார் said...

mmmmmmmm. sulapama seiyalam pola..

Kanchana Radhakrishnan said...

healthy payasam.

Shama Nagarajan said...

delicious kheer....please do participate in my kheer festival

karthik said...

சூப்பரான பாயசம் ரெடி
கலக்குங்க ......

கவிதன் said...

உங்கள் வலைத்தளம் ரொம்ப சுவையானதாக இருக்கிறது.... குட்டிபூவை விசாரித்ததாக சொல்லுங்கள்....!!!

geetha said...

ஓட்ஸ் பாயசம் கண்டிப்பாய் வெச்சிட வேண்டியதுதான். திடீர் விருந்தினர்களுக்கு செய்து கொடுக்க ரொம்ப எளிமையான முறையை கொடுத்திருக்கீங்க மேனு!
நன்றி!

Nathanjagk said...

ஒரு மாசமா
வீட்டில் அப்படியே இருக்கிற
ஒரு கிலோ ஓட்ஸ்ஸை
ஒரேயடியா காலி பண்ணறதுக்கு
ஐடியா கொடுத்திருக்கீங்க..!
(கவிதை)
.....
ஹிஹி!!

Nathanjagk said...

ஜெய்லானி ​சொன்னது...
//மேனகாக்கா! அந்த அளவு பொருமை இல்லை. ஓட்ஸுல சீனிய போட்டு கலக்கி அப்படியே சாப்பிட்டுடுவேன். அதான் என் பாலிஸி.//

ஜெய்லானி,​ரொம்ப டிப்ரண்ட்டான 'ரெஸிபி'யா இருக்கும் போலிருக்கே. இதையே ஒரு இடுகையா போடுங்களேன். ப்ளீஸ் :))))

Asiya Omar said...

ஓட்ஸ் பாயாசம் பார்க்க அருமையாக இருக்கு,கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்த்து பாருங்க ருசி தூக்கும்.

சாருஸ்ரீராஜ் said...

very nice payasam...

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்ரீவிஜி!!

நன்றி பத்மா!!

//மேனகாக்கா! அந்த அளவு பொருமை இல்லை. ஓட்ஸுல சீனிய போட்டு கலக்கி அப்படியே சாப்பிட்டுடுவேன். அதான் என் பாலிஸி.// அட இந்த டிப்ஸ்சும் அருமையாக இருக்கே.நன்றி ஜெய்லானி!!

Menaga Sathia said...

ஒட்ஸ் சாதரணமாக கொழுகொழுப்பு தன்மையுடையதுதான்.நெய்யில் வறுத்து போடுவதால் அந்த அளவுக்கு திக்காக இருக்காது.ஜவ்வரிசி பாயசம் போல் இருக்கும்.செய்து பாருங்கள் அப்புறம் அடிக்கடி இந்த பாயசம்தான் செய்வீங்க.நன்றி சித்ரா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஸாதிகா அக்கா!!ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் விருந்தாளிகளுக்கு செய்து கொடுக்கலாம்.

ஹுஸைனம்மா said...

நானும் ஓட்ஸ் கஞ்சி செய்வதுண்டு; சுண்டிய பாலில் சேர்த்தால் இன்னும் அடர்த்தியாகி (திக்-ஆக) விடாதா மேனகா?

Menaga Sathia said...

நன்றி Infopedia Online!!

//அதுனால மூனையும் படிச்சிட்டேன். கத்திரிக்காய் சாதத்தை ஓட்ஸ் பாயசத்துடன் கொஞ்சமும். சோயா புலாவை தேங்காய் இரசத்துடன், டோபுவைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு. ஒரு குட்டித் தூக்கம் போட்டு. அப்புறம் எழுந்து பிரஷ்ஷாக மசாலா டீ அடிச்சாச்சி. எல்லா பதிவும் அருமை. // சூப்பரா கலந்துகட்டி படித்து எழுதிருக்கிங்க.நன்றி சுதா அண்ணா!! ம்ம்ம் உங்க மருமக நல்லா இருக்காங்க என்னை வேலை வாங்கி கொண்டு....

Menaga Sathia said...

நன்றி பவித்ரா!!

//பாயாசமுன்னாலே ஆயாசமா அமர்ந்து அம்முட்டையும் குடிச்சிபுட்டுதான் எழுந்திரிப்பேன் சூப்ப்ர் மேனகா
அதுசரி இப்புடி தன்னாலகுடிச்சா வயிறுவலிக்குமாமே..நெசமாவா வலிச்சதா...// அது எப்படி வலிக்கும்,நான் மட்டும் குடிக்கலியே நாங்க 3 பேரும் தான் குடித்தோம் ஆனாலும் எனக்கு அப்போ குடிக்கும்போது வயிறு வலித்தது.ஏன் வலித்தது என்று காரணம் இப்பதானே புரியுது...நன்றி மலிக்கா!!

Menaga Sathia said...

செய்வது ரொம்ப ஈஸிதான்,நன்றி சகோ!!

நன்றி காஞ்சனா!!

நன்றி ஷாமா!! நிச்சயம் பங்கேற்கிறேன்...

நன்றி கார்த்திக்!!

Menaga Sathia said...

//உங்கள் வலைத்தளம் ரொம்ப சுவையானதாக இருக்கிறது.... குட்டிபூவை விசாரித்ததாக சொல்லுங்கள்....!!!// நன்றி கவிதன்!!நிச்சயம் உங்கள் விசாரிப்பையும்,அன்பையும் மகலுக்கு தெரிவிக்கிறேன்...

//ஒரு மாசமா
வீட்டில் அப்படியே இருக்கிற
ஒரு கிலோ ஓட்ஸ்ஸை
ஒரேயடியா காலி பண்ணறதுக்கு
ஐடியா கொடுத்திருக்கீங்க..!
(கவிதை)
.....
ஹிஹி!!// அப்போ 1 கிலோ ஒட்ஸும் காலியாகபோகுதுன்னு சொல்லுங்க.பாயாசம் செய்தால் நம்ம மலிக்காவும் பார்சல் அனுப்பிடுங்க இல்லைன்னா வயிறு வலிக்கும்..

//ஜெய்லானி ​சொன்னது...
//மேனகாக்கா! அந்த அளவு பொருமை இல்லை. ஓட்ஸுல சீனிய போட்டு கலக்கி அப்படியே சாப்பிட்டுடுவேன். அதான் என் பாலிஸி.//

ஜெய்லானி,​ரொம்ப டிப்ரண்ட்டான 'ரெஸிபி'யா இருக்கும் போலிருக்கே. இதையே ஒரு இடுகையா போடுங்களேன். ப்ளீஸ் :))))// உங்களுக்காக போட்டுட்டா போச்சு.இல்லைன்னா ஜெய்லானி தம்பியே விரைவில் அவர் பதிவில் போடுவார்ன்னு நினைக்கிறேன்.நன்றி சகோதரரே!!

Menaga Sathia said...

நீங்கள் சொல்வதுபோல் தே.பால் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.அடுத்தமுறை செய்து பார்க்கிறேன்.டிப்ஸ்க்கும்,கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!!

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

//நானும் ஓட்ஸ் கஞ்சி செய்வதுண்டு; சுண்டிய பாலில் சேர்த்தால் இன்னும் அடர்த்தியாகி (திக்-ஆக) விடாதா மேனகா?// ஆகாது.நாம் சாதாரணமாக பாயசம் செய்வதற்க்கு சுண்டக்காய்ச்சிய பால் உபயோகப்படுத்துகிறோம் அல்லவா அதுபோல் தான்.அப்படி செய்தால் தான் பாயாசத்தின் சுவை கூடும்.ஒரு முறை செய்து பாருங்கள் இதன் ருசிக்கு அடிமையாகிடுவீங்க...நன்றி ஹூசைனம்மா!!

GEETHA ACHAL said...

என்னுடைய குறிப்பினை செய்து பார்த்து அனைவருடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி மேனகா...

Padhu Sankar said...

Simple and yummy payasam with oats!!

பனித்துளி சங்கர் said...

சூப்பருங்க !
எனக்கு ஒரு க்ளாஸ் ஒட்ஸ் பாயசம் கொடுத்திருங்க !

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி பது!!

நன்றி சங்கர்!! உங்களுக்கு 1 கப் பாயாசம் அனுப்பியாச்சு....

Gita Jaishankar said...

Superb dessert dear...healthy and yummy :)

koini said...

ஓட்ஸை வைத்து என்னவெல்லாம் செய்யணுமோ எல்லாம் செய்யுரீங்க....வெரி குட்.நன்றி.

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி கொயினி!!

01 09 10