Showing posts with label ஒட்ஸ். Show all posts
Showing posts with label ஒட்ஸ். Show all posts
Friday, 4 October 2013 | By: Menaga Sathia

மல்டிக்ரெயின் சுண்டல் /Multigrain Sundal

தே.பொருட்கள்

பொடித்த ஒட்ஸ்,பார்லி மாவு - தலா 1/4 கப்
கோதுமை மாவு,ராகி,சோயா மாவு - தலா 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு தலா - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*கொடுத்துள்ள அனைத்து மாவுகளைகளையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து சிறிது நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசையவும்.

*அதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*பின் தேங்காய்த்துறுவல்+தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சுண்டலில் சேர்க்கவும்.

Thursday, 5 April 2012 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் ஒட்ஸ் மோர்க்களி/MW Oats Morkali

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
புளித்த மோர் - 3/4 கப்
உப்பு -தேவைக்கு

அரைக்க

இஞ்சி துறுவல் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தமபருப்பு,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் -4
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.

*மோரில் ஒட்ஸை 10 நிமிடம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.அதனுடன் உப்பு+அரைத்த விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.

*மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மைக்ரோவேவில் ஹையில் 1 நிமிடம் வைத்தெடுத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.

*பின் ஒட்ஸ் கலவையை ஊற்றி 5 நிமிடங்கள் வைக்கவும்.இடையிடையே ஒவ்வொறு நிமிடத்திற்க்கும் எடுத்து கலக்கி விடவும்.

*வெந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.

Monday, 8 August 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் / Oats Cinnaman Rolls

தே.பொருட்கள்:

பப்ஸ் ஷீட் - 1
ஒட்ஸ் - 1/4 கப்
பட்டைத்தூள் - 1 டீஸ்பூன்
ப்ரவுன் சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த திராட்சை - 10
நெய் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
முட்டை - 1

செய்முறை:

*ஒட்ஸை நெய் விட்டு லேசாக வறுக்கவும்.ஆறியதும் இதனுடன் சர்க்கரை+திராட்சை+பட்டைத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*பப்ஸ் ஷீட்டில் வெண்ணையை உருக்கி தடவும்.அதன் மேல் ஒட்ஸ் கலவையை பரவலாக தூவி ஓரத்தில் கடைசிவரை மெதுவாக சுருட்டவும்.

*இதனை க்ளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரீசரில் 15 நிமிடம் வைத்தெடுத்து துண்டுகளாக வெட்டவும்.முட்டையை ஒரு கிண்ணத்தில் நன்கு கலந்து வைக்கவும்.

*அவன் டிரேயில் அடுக்கி முட்டை ப்ரஷ்ஷால் தடவி,210 °C முற்சூடு செய்த அவனில் பேக் செய்து எடுக்கவும்.

Monday, 18 July 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் வாங்கிபாத்/ Oats Vangibath

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
பொடியாக அரிந்த கத்திரிக்காய் -1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

வறுத்து பொடிக்க
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கொப்பரைத்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் குறைவாக
கிராம்பு,பட்டை-தலா 1

செய்முறை
*ஒட்ஸை எலுமிச்சை சாறு+தண்ணீர் சேர்த்து லேசாக பிசிறி வைக்கவும்.சிறிது நேரத்தில் உதிரியாகிவிடும்.

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம்+கத்திரிக்காய்+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*கத்திரிக்காய் வெந்ததும் பொடித்த பொடி+ஒட்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

Tuesday, 21 June 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் அவல் புட்டு / Oats Aval Puttu

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1/2  கப்
அவல் - 1 /2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்

செய்முறை
*அவல்+ஒட்ஸை மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.

*பின் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.கையால் உருண்டை பிடித்தால் உதிரும் பதத்திற்க்கு இருக்கவேண்டும்.

*பின் ஆவியில் வேகவைத்து சர்க்கரை+தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.


Wednesday, 6 April 2011 | By: Menaga Sathia

பேக்ட் ஒட்ஸ் மசால் வடை / Baked Oats Masal Vadai

தே.பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கப்
பொடித்த ஒட்ஸ் -3/4 கப்
கிராம்பு - 2
பட்டை - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.அதனுடன் உப்பு+கிராம்பு+சோம்பு+பட்டை+பூண்டு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*இதனுடன் பொடித்த+வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி இவைகளை சேர்த்து  கெட்டியக பிசையவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து வடைகளாக தட்டி ,ஒவ்வொன்றின் மீதும் 1 துளி எண்ணெய் விடவும்.

*அதனை 220°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.இடையே 15 நிமிடங்களில் திருப்பி விட்டு மீண்டும் 1துளி எண்ணையை வடைகளில் தடவவும்.
Sunday, 23 January 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் கீரை கொழுக்கட்டை/ Oats Keerai Khozhukattai

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
முருங்கை கீரை - 1/2 கப்
வெங்காயம் - 1
வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய்ப்பல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*சிறிது நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கொதிக்கும் போது கீரையைப்போட்டு நன்கு சுருள கிளறி பாசிப்பருப்பு சேர்த்து இறக்கவும்.

*இதனுடன் ஒட்ஸ்+தேங்காய்ப்பல் சேர்த்து பிசையவும்.தேவையானால் மட்டும் நீர் சேர்த்து பிசையவும்.

*உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
எந்த கீரை வேணுமானாலும் சேர்த்து செய்யலாம்.பருப்பை மலர வேகவைத்து சேர்க்கவும்.

Wednesday, 6 October 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் பார்லி இட்லி/Oats Barley Idly

தே.பொருட்கள்:
ஒட்ஸ் - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*மேற்கூறிய பொருட்களில் ஒட்ஸ்+உப்பைத் தவிர பார்லி,உளுந்து+வெந்தயம் ஒன்றாக ஊறவைக்கவும்.

*ஊறியதும் பார்லி+உளுந்து மைய அரைக்கவும்.

*ஒட்ஸை சிறிது நேரம் தண்ணிரில் ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்.

*புளித்ததும் இட்லி(அ)தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
Tuesday, 14 September 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் உப்புமா/ Oats Upma

நொடியில் செய்து சாப்பிடலாம்..
தே.பொருட்கள்:ஒட்ஸ் -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க‌:
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை ‍-சிறிது
கடலைப்பருப்பு- 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*ஒட்ஸை வெறும் க‌டாயில் வ‌றுத்து ஆற‌விட‌வும்.

*பின் உப்பு க‌ல‌ந்து நீர் தெளித்து புட்டு மாவு பிசைவ‌து போல‌ உதிராக‌ பிசைய‌வும்.

*க‌டாயில் எண்ணெய் விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளைப் போட்டு வெங்காய‌ம்+ப‌ச்சை மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

*வ‌த‌ங்கிய‌ பின் உதிராக‌ பிசைந்த‌ ஒட்ஸை போட்டு கிள‌றி இற‌க்க‌வும்.

Thursday, 22 July 2010 | By: Menaga Sathia

ஸ்ப்ரவுட்ஸ் கீரை கட்லட்

தே.பொருட்கள்:
முளைக்கட்டிய பசைப்பயிறு - 1 கப்
பொடியாக அரிந்த மணத்தக்காளிக்கீரை - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்
ஒட்ஸ் - தேவைக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*முளைக்கட்டிய பச்சைபயிறை மெல்லிய துணியில் மூட்டை கட்டி கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் வெந்துவிடும்.

*அதனுடன் உப்பு+சோம்பு சேர்த்து மைய அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+கீரை+உப்பு+கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.கீரை வதங்கியதும் அரைத்த பச்சை பயிறு விழுதை சேர்த்து நன்கு கிளறி ஒட்டாமல் வரும் போது கடலைமாவு சேர்த்து கிளறி இறக்கவும்.

*ஆறியதும் சிறு உருண்டையை எடுத்து விருப்பமான வடிவில் செய்து ஒட்ஸில் பிரட்டவும்.

*தவாவில் எண்ணெய் விட்டு 2 புறமும் வேகவிட்டு எடுக்கவும்.

*எந்த கீரையிலும் இந்த கட்லட்டை செய்யலாம்.

Sending this recipe Let's Sprout Event by Priya & Iftar Moments Hijri 1431 Event by Ayeesha.

ஒட்ஸ் கலாகண்ட்


லேடீஸ் ஸ்பெஷல் ஜூலை மாத இதழில் வெளிவந்த குறிப்பு இது..

தே.பொருட்கள்:
பனீர் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 2 கப்
ஒட்ஸ் - 1/2 கப்
பாதாம்,பிஸ்தா துண்டுகள் - அலங்காரத்துக்கு
 
செய்முறை :
* கடாயில் 2 கப் பாலை கொதிக்க விட்டு 1 கப் ஆகும் வரை நன்கு காய்ச்சவும்.

*நன்கு 1 கப் பாலானதும் பனீரை சேர்த்து நன்கு கிளறவும்.

*திக்காக வரும்போது சர்க்கரையினை சேர்த்து விடாமல் கிளறி கெட்டியாக வரும்போது ஒட்ஸினை தூவி வேறொரு தட்டில் 1/2 இன்ஞ் அளவில் தடிமனாக பரத்தி ஆறவிடவும்.ஆறியதும் அதன் பேல் பாதாம் துண்டுகள் தூவி கட் செய்யவும்.

*சுவையான ஒட்ஸ் கலாகண்ட் ரெடி!!
Wednesday, 5 May 2010 | By: Menaga Sathia

ப்ரெட் வடை

தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 5
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி தண்ணீரில் நனைத்து நன்கு நீரை பிழிந்துக் கொள்ளவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.மாவு பதம் தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது அரிசி மாவு சேர்க்கவும்.

*பின் எண்ணெய் காயவைத்து வடைகளாக தட்டி பொரித்தெடுக்கவும்.
Sunday, 18 April 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் பாயசம்

தே.பொருட்கள்:
பால் - 4 கப்
ஒட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
 
செய்முறை :
*கடாயில் பாதி நெய் விட்டு ஒட்ஸினை லேசாக வறுக்கவும்.மீதமுள்ள நெய்யில் முந்திரி,திராட்சையினை வறுத்து தனியாக வைக்கவும்.

*4 கப் பாலை 2 கப் பாலாக வரும் வரை நன்கு சுண்டக்காய்ச்சவும்.

*கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் சர்க்கரை+ஒட்ஸினை சேர்த்து நன்கு கலக்கவும்.

*அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்த்தூள்+முந்திரி,திராட்சையினை சேர்த்து சூடாகவோ அல்லது சில்லுன்னு பரிமாறவும்.

*இந்த பாயசம் ஈஸியாக செய்வது மட்டுமில்லாமல் சுவையும் பிரமாதமாக இருக்கும்.
Monday, 12 April 2010 | By: Menaga Sathia

முருங்கைக்காய் கட்லட் / Drumsticks Cutlet

இந்த கட்லட்டில் நான் எண்ணெயே சேர்க்காமல் பார்லி,ஒட்ஸில் செய்துள்ளேன்.பார்லி கொஞ்சம் கொழகொழப்பாக இருப்பதால் கட்லட் ஷேப் சரியாக வரவில்லை.நான் ப்ரெட் க்ரம்ஸில் புரட்டாமல் பேக் செய்துள்ளேன்.விருப்பமுள்ளவர்கள் அதில் புரட்டியும் பேக் செய்யலாம்.
 
தே.பொருட்கள்:
வேகவைத்த பார்லி - 1/4 கப்
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
முருங்கைக்காய் - 2
துருவிய கேரட் - 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
பொடியாக அரிந்த இஞ்சி - 1/4டீஸ்பூன்
எண்ணெய் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*முருங்கைக்காயை அரிந்து வேகவைத்து சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும்.பார்லியை அரைக்கவும்.

*இதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.கலவை தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொடித்த ஒட்ஸ் சேர்க்கவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து 1/4 டீஸ்பூன் எண்ணெய் தடவி மாவை விருப்பமான வடிவங்களில் தட்டி வைக்கவும்.

*அவனை 270 டிகிரிக்கு முற்சூடு செய்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையில் கட்லட்டை ஒருபக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.

*இந்த கட்லட் மிகவும் நன்றாக இருக்கும்.
Sunday, 7 March 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் வாழைப்பழ தோசை



தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1/2 கப்
ரவை - 1/2 கப்
நன்கு பழுத்த வாழைப்பழம் - 1
சர்க்கரை - 1/4 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4டீஸ்பூன்
நெய் = தேவைக்கு
 
செய்முறை :

*பாத்திரத்தில் வாழைப்பழத்தைப் போட்டு மசிக்கவும்.

*அதனுடன் ஒட்ஸ்+ரவை+ஏலக்காய்த்தூள்+சர்க்கரை+பால் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவிடவும்.

*மாவு கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது பால் சேர்த்து கலக்கவும்.

*மாவு ரொம்ப கெட்டியாகவும்,தண்ணீயாகவும் இல்லாமல் இருக்கனும்.

*தவாவில் நெய்விட்டு ஒரு கரண்டி மாவை விடவும்.தேய்க்கவேண்டாம்.அதுவே தானாக பரவிக்கொள்ளும்.

*ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

பி.கு:

இந்தளவு சர்க்கரை சரியாக இருக்கும்.இனிப்பு வேண்டுமானால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
Tuesday, 2 March 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் ஆனியன் ஊத்தாப்பம்

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1/2 கப்
கோதுமைரவை - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

*ஒட்ஸ்+கோதுமைரவை இவற்றை வெறும் கடாயில் வறுத்து 1/2 மணிநேரம் தேவையானளவு நீர் விட்டு ஊறவைக்கவும்.

*ஊறியதும் மிக்ஸியில் அரைத்து தோசைமாவு பதத்திற்க்கு உப்பு சேர்த்து கரைக்கவும்.

*தோசைக்கல்லில் மாவை தடினமாக எடுத்து ஊற்றி அதன் மேல் வெங்காயத்தை தூவி,சுற்றிலும் எண்ணெய் விடவும்.

*ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

*சூடாக சட்னி,சாம்பாருடன் பறிமாறவும்.
Wednesday, 24 February 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் மஞ்சூரியன்/ Oats Manchurian


தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
புட் கலர் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 3
பொடியாக அரிந்த குடமிளகாய் - 1 சிறியது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*ஒட்ஸை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*அதனுடன் சிறிது+நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதாமவு+உப்பு+கார்ன் மாவு+மிளகுத்தூள்+புட் கலர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் காயவைத்து ஒட்ஸ் உருண்டையை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டுப்பல்+குடமிளகாய் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

*பின் சோயாசாஸ் சேர்த்து சிறிது நீர் தெளித்து கொதித்த பின் பொரித்த ஒட்ஸ் உருண்டைகளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

*அசத்தல் சுவையில் இருக்கும் இந்த மஞ்சூரியன்...
Saturday, 20 February 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் லட்டு

நொடியில் செய்யக்கூடிய எளிதான லட்டு...

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3/4 கப்
முந்திரி,திராட்சை -தேவைக்கு
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
 
செய்முறை :

*ஒட்ஸை நெய்யில் வாசனை வரும் வறுக்கவும்.தனித்தனியாக ஒட்ஸையும்,சர்க்கரையும் மிக்ஸியில் பொடிக்கவும்.

*முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து ஒட்ஸ் மாவில் கலக்கவும்.அதனுடன் ஏலக்காய்த்தூளையும் கலந்து வைக்கவும்.

*நெய்யை லேசாக சூடு செய்து ஆறவிடவும்.இதனுடன் பொடித்த சர்க்கரையை கலக்கவும்.

*அப்போழுது சர்க்கரை லேசாக கரைய ஆரம்பிக்கும்போது ஒட்ஸை கலந்து லட்டுக்களாக பிடிக்கவும்.

பி.கு:

நார்மலாக 1 கப் ஒட்ஸ் = 1 கப் சர்க்கரைதான் சேர்ப்பாங்க. ஆனால் நான்3/4 கப் சர்க்கரை சேர்த்ததில் சரியாக இருந்தது.செய்பவர்கள் அவரவர் சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்க்கவும்.நெய்யுடன் சர்க்கரையை கலப்பதால் லட்டு பிடிக்க ஈஸியாக இருக்கும்.லட்டும் உடையாது.நெய்யும் அதிகம் செலவாகாது.
Sunday, 24 January 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் சாண்ட்விச்


தே.பொருட்கள்:

டோஸ்ட் செய்த ப்ரெட் ஸ்லைஸ் - 4
ஒட்ஸ் - 1/4 கப்
முளைகட்டிய பச்சைப்பயிறு - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :

*ஒட்ஸை 10 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்ளவும்.

*முளைப்பயிறை ஆவியில் வேகவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு அரிந்த வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் வதக்கவும்.

*அதனுடன் மசித்த முளைப்பயிறு+மிளகாய்த்தூள்+குடமிளகாய்+ஊறவைத்த ஒட்ஸ் அனைத்தையும் சுருள வதக்கவும்.

*கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*டோஸ்ட் செய்த ப்ரெட் ஸ்லைஸ் நடுவே இக்கலவையை வைத்து பரிமாறவும்.
 

Sunday, 10 January 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் இட்லி & தோசை /Oats Idli &Dosa

தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 2 கப்
உளுந்து - 1/2 கப்
உப்பு - தேவைக்கு


செய்முறை :

*உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து ஐஸ்தண்ணீர் தெளித்து இட்லிக்கு அரைப்பதுப்போல் நைசாக அரைக்கவும்.

*உப்பு+ஒட்ஸை உளுந்தை வழித்தெடுக்கும்போது சேர்த்து அரைத்தெடுக்கவும்.
*இந்த மாவை 8 மணிநேரம் புளிக்கவைத்து இட்லி,தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.


பி.கு:

இந்த ஒட்ஸ் இட்லி&தோசையை சூடாக சாப்பிடனும் ஆறிய பிறகு சாப்பிட்டால் ரப்பர் மாதிரி இருக்கும்.இதற்க்கு காரசட்னி பெஸ்ட் காம்பினேஷன்.
01 09 10