Showing posts with label மைக்ரோவேவ் சமையல். Show all posts
Showing posts with label மைக்ரோவேவ் சமையல். Show all posts
Thursday, 21 August 2014 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் கேசர் பேடா / MICROWAVE KESAR PEDA WITH INSTANT KHOYA | MICROWAVE RECIPES


print this page PRINT IT

தயாரிக்கும் நேரம் : 7 நிமிடங்கள்

தே.பொருட்கள்

இன்ஸ்டன்ட் கோவா - 1/2  கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
வெதுவெதுப்பான பால் - 2 டீஸ்பூன்
குங்குமப்பூ -சிறிது
பிஸ்தா துண்டுகள் - அலங்கரிக்க

செய்முறை

* பால் பவுடரில் இங்கு கொடுக்கபட்டுள்ள செய்முறையில் மைக்ரோவேவில் கோவா தயாரித்துக் கொள்ளவும்.

*பாலில் குங்குமப்பூவை கரைக்கவும்.

 *குங்குமப்பூ பாலை கோவாவில் கலந்து மேலும் 1 நிமிடம் ஹையில் மைக்ரோவேவில் வைக்கவும்.
 *இப்போழுது கோவா டிரையாக இருக்கும்.இதனை ஆறவிடவும்.
 *ஆறியதும் பொடித்த சர்க்கரை சேர்த்து கிளறவும்.
 *கையில் நெய் தடவி சிறு உருண்டையாக உருட்டி சிறிது பிஸ்தா துண்டுகளை நடுவில் வைத்து அழுத்தவும்.
பி.கு

*கோவா சூடாக இருக்கும் போது சர்க்கரை சேர்க்ககூடாது.

*இதையே அடுப்பில் வைத்து செய்வதாக இருந்தால் கோவாவை கைவிடாமல் கிளறி செய்யவும்.
Monday, 5 November 2012 | By: Menaga Sathia

மக்கன் பேடா /Makkan Peda With Instant Khoya (Arcot Sweet)

இது ஒரு பிரபலமான ஆர்காட் ஸ்வீட்.குலோப்ஜாமூன் செய்முறை போலவே நட்ஸ் வைத்து ஸ்டப்பிங் செய்வதுதான் இந்த பேடா.

குலோப்ஜாமூன் மிக்ஸ்லயும் செய்யலாம்.அதை விட கோவாவில் செய்வது மிக சுவையாக இருக்கும்.

கோவா செய்முறையினை இங்கே பார்க்கவும்.இதனை நான் இன்ஸ்டண்ட் கோவாவில் செய்துள்ளேன்.

மைக்ரோவேவ் இன்ஸ்டண்ட் கோவா செய்ய

பால் பவுடர் - 1 கப்
தண்ணீர் - 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*மேற்கூறிய பொருட்களை மைக்ரோவேவ் பவுலில் ஒன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.

*இதனை மைக்ரோவேவில் ஹையில் 6 நிமிடங்கள் வரை வைக்கவும்.ஒவ்வொரு 2 நிமிடங்கள் ஒருமுறை எடுத்து கிளறி  விடவும்.

*இப்போழுது இன்ஸ்டண்ட் இனிப்பில்லாத கோவா ரெடி!!
 பேடா செய்ய

தே.பொருட்கள்

இன்ஸ்டண்ட் இனிப்பில்லாத கோவா - 1 கப்
மைதா - 1/4 கப்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
பால் - தேவைக்கு
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

சர்க்கரை பாகு

சர்க்கரை - 1 கப்
நீர் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் - 1 துளி

ஸ்டப்பிங் செய்ய

பாதாம் -5
முந்திரி - 10
பிஸ்தா பருப்பு -10
திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
சாரைப்பருப்பு - 1 டீஸ்பூன்

இவற்றை மிக பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

 செய்முறை

*பவுலில் இன்ஸ்டண்ட் கோவா+மைதா+நெய்+பேக்கிங் சோடா இவற்றை ஒன்றாக கலந்து தேவைக்கு பால் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
 *சிறு உருண்டையாக எடுத்து 1 டீஸ்பூன் அளவில் ஸ்டப்பிங் வைத்து உருண்டையை லேசாக அழத்தவும்.
 *இதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
 *சர்க்கரை பாகு செய்ய 1 கம்பி பதம் வந்ததும் எசன்ஸ் +ஏலக்காய்த்தூள் +பொரித்த பேடா சேர்த்து 3-4 மணிநேரங்கள் வரை ஊறவிட்டு பரிமாறவும்.
பி.கு

*ஸ்டப்பிங் செய்ய மிக முக்கியமானது பூசணி மற்றும் வெள்ளரி விதைகள் தான்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.

*1 கம்பிபதம் என்பது 2 விரல்களுக்கிடையே பாகை தொட்டு பார்த்தால் ஒரு நூலிழை போல் வரும்.
Friday, 20 April 2012 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் பாப்கார்ன் /MW Popcorn

தே.பொருட்கள்
காய்ந்த சோள முத்துக்கள் -1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய்+உப்பு கலந்து மைக்ரோவேவில் 1 நிமிடம் வைக்கவும்.


*அதனுடன் சோளத்தைக் கலந்து பாத்திரத்தை மூடி மீண்டும் 3 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்.

*4 நிமிடத்தில் சுவையான பாப்கார்ன் ரெடி!!


Thursday, 5 April 2012 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் ஒட்ஸ் மோர்க்களி/MW Oats Morkali

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
புளித்த மோர் - 3/4 கப்
உப்பு -தேவைக்கு

அரைக்க

இஞ்சி துறுவல் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தமபருப்பு,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
மோர் மிளகாய் -4
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை கொரகொரப்பாக அரைக்கவும்.

*மோரில் ஒட்ஸை 10 நிமிடம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.அதனுடன் உப்பு+அரைத்த விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.

*மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மைக்ரோவேவில் ஹையில் 1 நிமிடம் வைத்தெடுத்து தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து மீண்டும் 1 நிமிடம் வைக்கவும்.

*பின் ஒட்ஸ் கலவையை ஊற்றி 5 நிமிடங்கள் வைக்கவும்.இடையிடையே ஒவ்வொறு நிமிடத்திற்க்கும் எடுத்து கலக்கி விடவும்.

*வெந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போடவும்.

Thursday, 22 March 2012 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் ரிக்கோட்டா சீஸ் பால்கோவா /Microwave Ricotta Cheese Palghova

 இதுதான் என்னுடைய முதல் மைக்ரோவேவ் சமையல்.யாஸ்மினின் குறிப்பை பார்த்து மைக்ரோவேவ்வில் செய்தது.நன்றி யாஸ்மின்!!

தே.பொருட்கள்
ரிக்கோட்டா சீஸ் - 250 கிராம்
பால் பவுடர் -1 கப்
தயிர் -1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -3/4 கப்
வெண்ணெய் -4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*மைக்ரோவேவில் பாத்திரத்தில் வெண்ணையைப் போட்டு 1 நிமிடம் வைத்து உருகவைக்கவும்.

*அதனுடன் ரிக்கோட்டா சீஸ்+சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி 6-8 நிமிடங்கள் வரை வைக்கவும்.
*ஒவ்வொரு 1 நிமிடத்திற்க்கும் ஒரு முறை கலக்கி விடவும்.

*பின் தயிர்+பால்பவுடர் சேர்த்து கலக்கி மேலும் 3 நிமிடம் வைக்கவும்.இடையிடையே கலக்கி விடவும்.

*இப்போழுது வெண்ணெய் பிரிந்து ,பால்கோவா உதிரியாக இருக்கும்.ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கிவிடவும்.

*இன்னும் கெட்டியாக வேண்டுமெனில் மேலும் 1 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.சுவையான பால்கோவா ரெடி!!

பி.கு

*தயிர் சேர்த்தால் தான் பால்கோவா உதிரியாக வரும்.

*ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பாதியளவு தண்ணீர் ஊற்றி ஹையில் 3 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் பாத்திரம் சுடக்கூடாது.அதுவே மைக்ரோவேவில் சமைக்க ஏற்றது.

01 09 10