Sunday 7 March 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் வாழைப்பழ தோசை



தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1/2 கப்
ரவை - 1/2 கப்
நன்கு பழுத்த வாழைப்பழம் - 1
சர்க்கரை - 1/4 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4டீஸ்பூன்
நெய் = தேவைக்கு
 
செய்முறை :

*பாத்திரத்தில் வாழைப்பழத்தைப் போட்டு மசிக்கவும்.

*அதனுடன் ஒட்ஸ்+ரவை+ஏலக்காய்த்தூள்+சர்க்கரை+பால் அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊறவிடவும்.

*மாவு கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது பால் சேர்த்து கலக்கவும்.

*மாவு ரொம்ப கெட்டியாகவும்,தண்ணீயாகவும் இல்லாமல் இருக்கனும்.

*தவாவில் நெய்விட்டு ஒரு கரண்டி மாவை விடவும்.தேய்க்கவேண்டாம்.அதுவே தானாக பரவிக்கொள்ளும்.

*ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

பி.கு:

இந்தளவு சர்க்கரை சரியாக இருக்கும்.இனிப்பு வேண்டுமானால் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

very innovative..very yummy too..

நாஸியா said...

நல்ல ஐடியா.. நாளைக்கு முயற்ச்சி செஞ்சு பார்க்கிறேன்

geetha said...

மேனு!
ஓட்ஸ் வாழைப்பழ தோசை இப்பதான் செய்து பார்த்தேன். ஆனா சீக்கிரமே தீய்ஞ்சு போச்சுப்பா!
இருந்தாலும் தட்டிலிருந்தும் தீர்ந்தும் போச்சு. டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு.
போன ஜென்மத்தில் நீங்களும் ஓட்ஸும் ஒட்டிப்பிறந்த ரெட்டைப்பிறவிகளாய் இருந்திருப்பீங்களோ

ஜெட்லி... said...

ட்ரை பண்ண சொல்றேன்...
இப்படி தான் கத்திரிக்காய் ப்ரை பண்ணா சொன்னேன்...
எங்க வீட்ல அதை மசியல் மாதிரி பண்ணிட்டாங்க!!

ஸாதிகா said...

சமையலில் புது புது உத்தி உங்களுக்கே உரித்தானது மேனகா

Malini's Signature said...

நல்ல சத்தான குறிப்பு மேனகா நன்றி

//போன ஜென்மத்தில் நீங்களும் ஓட்ஸும் ஒட்டிப்பிறந்த ரெட்டைப்பிறவிகளா? //...கீதா நீங்களும் தானே? :-)

mythoughts said...

வாழைபழம்னு சொன்னீங்களே... என்ன வாழைபழம் போடலாம்.?

நட்புடன் ஜமால் said...

வாழைபழமா!!!

ம்ம்ம்...

முயற்சி செய்திடுவோம் ...

Jaleela Kamal said...

கீதா, ஓட்ஸ் , வாழைப்பழம் போடுவதால் சீக்கிரம் தீய்ஞ்சி தான் போகும், நான் ஸ்டிக் தவ்வாவில் சிறிது எண்ணை விட்டு விட்டு பிறகுசுடனும், தீயின் தனலை கம்மியாக வைக்கனும், அதிக தனல் தீய்ந்து விடும்.

சாருஸ்ரீராஜ் said...

very nice and healthy dosa will try it soon , Happy womens Day

Priya Suresh said...

Oats, banana dosai looks really yummy..prefect for evening snacks..

geetha said...

ரொம்ப நன்றி ஜலீலா!
எனக்கும் அப்பறம் லேட்டாத்தான் புரிந்தது. அடுத்தமுறை நல்லா செய்திட்டா போச்சுன்னு மனசை தேத்திக்கிட்டேன்.
உங்க ப்ளாக் பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு. கூடியசீக்கிரம் பதிவுகளும் போட வருகிறேன்

geetha said...

ஹர்சினி அம்மா!
நலமா???
நீங்க எழுதின கமென்டுக்கு எனக்கு அர்த்தம் புரியல.
//"நீங்களும்தானே?:-)//

Priya said...

Nice & healthy dosai!

Trendsetters said...

nice combo

Thenammai Lakshmanan said...

அட இனிப்பு தோசை சாப்பிட்டு இருக்கேன் மேனகா

Jaleela Kamal said...
This comment has been removed by the author.
Jaleela Kamal said...

வாங்க கீதா அன்புடன் வரவேற்கிறேன்.

Malini's Signature said...

மன்னிக்கவும் கீதா

கீதா ஆச்சல்- தான் கீதா என்ரு தவராக நினைத்துவிட்டேன்... அவங்களும் நிறைய ஒட்ஸ் குறிப்புகளை தருவாங்க....மன்னிக்கவும்..:-)


ஆமாம் கீதா ஆச்சல் எங்கே கானாவே இல்லையே????

geetha said...

ஹர்சினி அம்மா!
எதற்கு மன்னிப்பெல்லாம்?
வேறு யாரோன்னு நினைச்சு எழுதியிருக்கீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
மேனு,
இன்னைக்கு மறுபடியும் ட்ரை பண்ணி நல்லா வந்திடுச்சு!

Kanchana Radhakrishnan said...

நல்ல சத்தான குறிப்பு

Menaga Sathia said...

அனைவரின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி!!

கீதா விடாமல் முயற்சி செய்து வெற்றியும் பெற்றுவிட்டீர்கள்.ரொம்ப்சந்தோஷமாயிருக்கு செய்து பார்த்து பின்னுட்டமிட்டதிற்க்கு..ஜலிலாக்கா சொன்னது சரிதான்.அவங்கலுக்கும் என் நன்றி!!

goma said...

இனிமே உங்கள் சமையலறைக்கு தினமும் வர முடிவு செய்து விட்டேன்.
ஸ்நாக்ஸ் செக்‌ஷன் அருமை

Menaga Sathia said...

தவறாமல் வரவும் .உங்கள் பாராட்டுக்கும்,வருகைக்கும் நன்றி கோமா!!

01 09 10