Wednesday 31 March 2010 | By: Menaga Sathia

சோயா மஞ்சூரியன்/ Soya Manchurian

தே.பொருட்கள்:

சோயா உருண்டைகள் - 30
மைதா மாவு - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
புட் கலர் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 2
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை நன்கு பிழிந்துக் கொள்ளவும்.

*அதனுடன் உப்பு+மைதா மாவு+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது+புட் கலர்+மிளகாய்த்தூள் அனைத்தும் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்+பூண்டுப்பல்+குடமிளகாய் சேர்த்து வதக்கி பொரித்த சோயா உருண்டைகள்+சோயா சாஸ் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

34 பேர் ருசி பார்த்தவர்கள்:

மன்னார்குடி said...

பார்த்த உடனே பசிய தூண்டுதே..

GEETHA ACHAL said...

superb recipe...nice click

kavisiva said...

மஞ்சூரியனை (மன்சூர் அலிகானை அல்ல) பார்த்து ஜொள்ளு விட்டுக்கிட்டு இருக்கேன் :)

Pavithra Srihari said...

Menaga ..mouth watering.. soya ennai(oil) kudikkuma ...

M.S.R. கோபிநாத் said...

சூப்பர் சைட் டிஷ் அண்ட் அப்படைசர்.

தெய்வசுகந்தி said...

wow Super menaga. Looks soooooooooooo good

Priya said...

பார்த்ததும் சாப்பிடனும் போல் இருக்கு!
அத்தனை அழகு படமும் உங்க குறிப்பும்!!!

Ann said...

Soya manchurian sounds yumm.

Chitra said...

right in time for Easter feast. Thank you.

சிநேகிதன் அக்பர் said...

தேர்வு அருமை.

தங்களை பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.முடிந்தால் கருத்து
சொல்லவும்.

http://blogintamil.blogspot.com/2010/03/3.html

சிநேகிதன் அக்பர் said...

தேர்வு அருமை.

தங்களை பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.முடிந்தால் கருத்து
சொல்லவும்.

http://blogintamil.blogspot.com/2010/03/3.html

Unknown said...

wow.. yummy recipe.. looks perfect..

Menaga Sathia said...

நன்றி மன்னார்குடி!!

நன்றி கீதா!!

நன்றி பவித்ரா!! சோயாவை நன்கு பிழிந்து விடுவதால் எண்ணெய் அதிகம் குடிக்காது..

Menaga Sathia said...

நன்றி கவி!! மஞ்சூர் அலிகான் மட்டும் பார்த்தால் அவ்வளவுதான்.நம்ம பேரை எப்படிலாம் சொல்றாங்கன்னு பொங்கி எழுந்துடுவார்..நீங்களாவது பரவாயில்லை எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் அக்கா இவர் பெயரை மைசூர் பாகுன்னு சொல்லுவாங்க.சரியாக சொல்ல வராது அவங்களுக்கு...

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி சுகந்தி!!

நன்றி ப்ரியா!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஆன்!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

கருத்துக்கும்,வலைச்சரத்தில் என்னை குறிப்பிட்டததிற்க்கு மிக்க சந்தோஷம் சகோ +நன்றியும் கூட.....

Padma said...

Looks mouthwatering.

ஜெட்லி... said...

சைட்டிஷ்..... எங்கே பண்றது...

Thenammai Lakshmanan said...

ரொம்பக் கலர்ஃபுல்லா இருக்குடா மேனகா

ஸாதிகா said...

அழகு ..அருமை..சுவை..

PS said...

looks perfect, send me some..

Nathanjagk said...

சஷிகா டச்!
இதைவிட ஓட்ஸ் மஞ்சூ.. ப்ப்பர்..!

மனோ சாமிநாதன் said...

அன்பு மேனகா!

சோயா உருண்டைகள் மிக அழகாக இருக்கின்றன. குறைவான பொருள்களில் அழகான ஒரு குறிப்பு!

geetha said...

இது ஏற்கெனவே நான் செய்திருக்கேன் மேனு. ஆனா, இப்ப கொஞ்சம்நாளாய் மறந்தே போச்சு. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி!
ஃபுட் கலர் போட்டு பார்க்கவே அசத்தலாய் இருக்கு.
கண்டிப்பாய் மறுபடியும் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கனும்!

Jaleela Kamal said...

இது சும்மா ஸ்டாட்டர்ஸ்ஸா?


ரொம்ப நல்ல் நல்ல இருக்கு.

karthik said...

superb recipe

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா , செய்து பார்த்துட்டு சொல்கிறேன்

Priya Suresh said...

Paathathume saapida soluthu..superb manchurian Menaga..

Ms.Chitchat said...

Never heard of soya manchurian before. Looks very colorful and sure to taste good too.

Menaga Sathia said...

நன்றி பத்மா!!

நன்றி ஜெட்லி!!

நன்றி தேனக்கா!!

நன்றி ஸாதிகா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி பிஎஸ்! உங்களுக்கு இல்லாததா நிச்சயம் பார்சல் அனுப்புகிறேன்..

நன்றி சகோ!!

நன்றி மனோ அம்மா!!

நன்றி கீதா!! செய்து கொடுங்கள்.என் பொண்ணுகூட விரும்பி சாப்பிட்டாங்க.கறி உருண்டை மாதிரியே இருந்தது.

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!! இதை சாப்பாட்டுடன் சாப்பிட்டேன்..

நன்றி கார்த்திக்!!

நன்றி சாரு அக்கா!! செய்து பாருங்கள்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

நன்றி ப்ரியா!!

நன்றி சிட்சாட்!!

my kitchen said...

Yummy manchurian,will try soon

Menaga Sathia said...

செய்து பாருங்கள் நன்றாகயிருக்கும்.நன்றி செல்வி!!

01 09 10