Monday 22 March 2010 | By: Menaga Sathia

எனக்குப் பிடித்த 10 பின்னூட்டங்கள் (தொடர் பதிவு)

இந்த தொடரை எழுத அழைத்த செல்விம்மாவுக்கு நன்றி!! அனைவருடைய பின்னுட்டமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.பின்னுட்டம் கொடுப்பது அவர்களின் ஆர்வத்துக்கு தூண்டுகோலாக அமைகிறது.நான் அவர்களின் பெயரை சொல்ல விரும்பி இந்த பதிவை எழுதுகிறேன்.
 
1. என்னுடைய முதல் பதிவுக்கு பின்னுட்டம் கொடுத்தவர் இக்பால் அவர்கள்.டிப்ஸ் டிப்ஸ் என்ற பதிவுக்காக கொடுத்தவர்

2.ஹர்ஷினி அம்மா என் முதல் இனிப்பு குறிப்புக்கு முதல் பதிவு கொடுத்தவர்.

3. பாயிஷாகாதர் அனைத்து பதிவுகளுக்கும் தவறாமல் பின்னூட்டம் கொடுக்கும் தோழி.

4.நட்புடன் ஜமால்,நவாஸூதீன்,ஷஃபிக்ஸ் இவர்கள் பின்னூட்டங்கள் பிடிக்கும்.

5.ஜலிலாக்கா இவரை அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.இவரும் தவறாமல் பின்னூட்டம் கொடுத்து ஊக்கமளிப்பவர்.

6. தேனம்மை லக்‌ஷமண் இவர் என்னை அவரின் தோழியாகவும்,தங்கையாகவும் நினைப்பவர்.இவர் டா,மா போட்டு உரிமையுடன் எழுதும் பின்னுட்டம் பிடிக்கும்.

7.சித்ரா,நிதுபாலா,கூல் லஸ்ஸி இவர்கள் இப்போழுதுதான் பாலோவர் ஆனாலும் தவறாமல் அனைத்து பதிவுகளுக்கும் பின்னுட்டம் கொடுப்பவர்கள்.

8.சசிகுமார்,வேலன் அண்ணா,பித்தனின் வாக்கு,குறை ஒன்றும் இல்லை,கக்கு மாணிக்கம்,அண்ணாமலையான்,டவுசர் பாண்டி இவர்களின் நகைச்சுவையான பின்னுட்டம் பிடிக்கும்.
 
9.கீதா ஆச்சல்,சாரு அக்கா,ஸாதிகா அக்கா,ஆசியாக்கா,இவர்களும் என் பதிவிற்க்கு தவறாமல் பின்னூட்டம் கொடுப்பது பிடிக்கும்.
 
10.கோபிநாத்,ப்ரியா,ப்ரியாராஜ் இவர்களின் பின்னூட்டமும் பிடிக்கும்.
 
அப்பாடா எப்படி எழுதுவது என்று யோசித்தே எழுதிட்டேன்.இதுபோல் அவரவர் பதிவுகளுக்கு வந்த பின்னுட்டங்களை சொல்லவும்.இதனை தொடர அழைக்கும் நபர்கள்..
சித்ரா
நாஞ்சில் ப்ரதாப்
ஸாதிகா அக்கா
ப்ரபாகர்
 

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

பின்னூட்டம் இட்ட பதிவர்களுக்கு மகுடம்.

Prathap Kumar S. said...

நான்தான் உங்க பிளாக் பக்கம் அதிகமா வர்றதே கிடையாதே... எப்படி என்னை ஞாபகம் வச்சுகூப்பிட்டீங்க...? ஒருவேளை அதுக்காக இப்படி பழி வாங்கறீங்களோ??:))

இராகவன் நைஜிரியா said...

எனக்கு பிடிச்ச பின்னூட்டங்கள்..

1. அருமை
2. சூப்பர்
3. பிரமாதம்
4. வாவ்
5. கலக்கட்டீங்க
6. எப்பூடி..
7. ஆஹா..
8. ஓஹோ..
9. பெண்டாஸ்டிக்..
10. தாங்க முடியலை.

இது எப்பூடி இருக்கு?

ஜெய்லானி said...

எது பிடிக்கும் என்பதை வித்தியாசமா சொல்லி இருக்கீங்க! :-))))))))

மதுரை சரவணன் said...

பின்னுட்டத்திற்க்கு முன்னூட்டம் கொடுத்து மகுடம் சூட்டியுள்ளீர்கள்

M.S.R. கோபிநாத் said...

மேனகா, என்னைத் தானே நம்பர் 10ல் சொல்லியிருக்கீங்க? ரெம்ப நன்றி..

Chitra said...

பின்னூட்டத்தில் இவ்வளவு இருக்கா? அசத்தல். என் பெயரும் தெரிகிற மாதிரி இருக்கே........!!! :-)

Unknown said...

கொஞ்ச நாள் உங்க பதிவு பார்க்க வரலன்னா இப்படி மறக்கலாமா? :-) இருக்கட்டும் என் மருமகளவிட்டு உங்கள உதைக்க சொல்றேன்..

தாராபுரத்தான் said...

எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடியுது,. எப்படியோ காலம் தள்ளலாம்.

PriyaRaj said...

Thanx for mentioning me Menaga ...

பித்தனின் வாக்கு said...

எல்லா நல்லா இருக்குங்க, ஆனா ஒன்னு மட்டும்தான் சந்தோகம். யோசித்து எழுதி விட்டேன் போட்டுருக்கீங்க.

அதான், நீங்க எப்படின்னூஊஊஊஉ டவுட்டா இருக்கு. ஹா ஹா

நல்ல பதிவு மேனகாசத்தியா. என்னையும் குறிப்பிட்டதுக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

பின்னூட்டர்களுக்கு ஒரு டானிக்

நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

என்னையும் ஞாபகம் வச்சு எழுதிடிங்க ரொம்ப சந்தோசம்.

ஸாதிகா said...

அட..பிடித்த பத்து பின்னூட்டங்கள்..நான் கொடுக்கும் பின்னூட்டமும் பிடிக்கும் என்று குறிப்பிட்டதோடு என்னையும் தொடர் இடுகைக்கு அழைத்து இருக்கின்றீர்கள்.நன்றி மேனகா.ஆசியாவும் அழைத்து இருந்தார்.இப்பொழுது நான் ஊரில் இல்லை.வளைகுடா நாடுகளை வலம் வந்து கொண்டிருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது இந்த சின்ன சின்ன பின்னூட்டங்களுடன் வந்து செல்கிறேன்.ஊருக்கு திரும்பியதும் பதிவிடுகிறேன்.நன்றி.

சசிகுமார் said...

ஆகா அருமை, பின்னூட்டம் தருபவர்களுக்கே ஒரு தொடர்பதிவு. ஆரம்பித்து வைத்தவர்களுக்கு நன்றி, அக்கா சூப்பர் (என் பேரும் சொல்லியிருகீங்கயில்ல அதான்). உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan said...

ரொம்ப தாங்க்ஸ்டா கண்ணம்மா என்னையும் குறிப்பிட்டதுக்கு ...உண்மையிலேயே விதம் விதமாக சமைத்து அதை பொறுப்பா புகைப்படம் எடுத்து அனைவருக்கும் பயன் தரும் வகையில் போடுறது ரொம்ப சிறப்பு மேனகா ..வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

அனைவரின் அன்பான பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றி!!

SUFFIX said...

அது சரி, இப்படியுமா? மிக்க மகிழ்ச்சி.

Priya Suresh said...

Mothalathula yellaraiyume pidikum appadi thana Menaga...:)

Jaleela Kamal said...

நான் இன்னும் பதிவு போடமா தலை பிச்சிக்கிட்டு இருக்கேன், நீங்க சுலபமா சொல்லி தப்பித்து கொண்டீர்கள்.
எல்லோரும் பிடித்த பத்தில் என்னையும் சேர்த்து கொள்கிறீர்கல் , எல்லார் மனதிலும் இடம் பிடித்துள்ளது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

athira said...

மேனகா, பிடித்த பின்னூட்டங்கள் எனச் சொல்லிப்போட்டு, பிடித்தவர்களைச் சொல்லி எல்லோரையும் எங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ கொண்டுபோய் விட்டுவிட்டீங்கள்... இதுவும் நல்ல முறைதான் கலக்கிட்டீங்க.. நான் பின்னூட்டத்தைச் சொன்னேன்.

Menaga Sathia said...

அனைவரின் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி!!

01 09 10