Tuesday 9 March 2010 | By: Menaga Sathia

கடலைமாவு மோர்குழம்பு

தே.பொருட்கள்:

தயிர் - 1கப்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
ஊப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:

சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
கீறிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*தேங்காயை மைய அரைத்துக் கொள்ளவும்.

*தயிரில் உப்பு+மஞ்சள்தூள்+கடலைமாவு+தேங்காய் விழுது அனைத்தையும் தேவையானளவில் நீர் கலந்து கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மோர்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிவந்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*இந்த மோர்குழம்பை ஈஸியாக செய்துவிடலாம்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

வெண்டைக்காயெல்லாம் போடத்தேவையில்லை ரொம்ப எளிமையா இருக்கே ...

சசிகுமார் said...

எனக்கு மோர் குழம்பு என்றால் மிகவு பிடிக்கும், இன்னும் நீங்கள் வித்தியாசமாக சொல்லி உள்ளீர்கள் உடனே வீட்டில் சொல்லி வச்சிட வேண்டியது தான்

அண்ணாமலையான் said...

கோடைக்கால குழம்பு

Shama Nagarajan said...

delicious healthy fry

Chitra said...

கடலை மாவு சேர்த்து செய்ததில்லை. I will try with that.

puduvaisiva said...

வணக்கம் சகோதரி

வெய்யில் காலத்துக்கு தேவையான குழம்பு, இது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை தரும் மேலும் எளிதில் செரிமானம் ஆகும் உணவு.

நன்றி!

mythoughts said...

கடலை மாவு மோர்குழம்பு செய்முறை படித்து நாவில் எச்சில் ஊருது. நல்ல பதிவு.
ஒரு சந்தேகம்: தயிர் ஒரு கப் சொன்னிங்க. ஆனா எருமை பால் தயிரா? பசும்பால் தயிரா? எத போடறது?

Malar Gandhi said...

I make them once in a while...whenever I have sour yogurts:)

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. படமும் சூப்பர். என்னங்க இன்னமும் என்ன புது வீட்டில் கனெக்ஷன் கிடைக்கவில்லையா?. சீக்கிரம் வந்து எங்களின் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் இடுங்கள். நான் கடந்த நாலு பதிவுகளைப் படிக்க வில்லை. இப்ப படித்தேன். ஓட்ஸ் தோசை பிரமாதம். நன்றி மேனகா சத்தியா.

Thenammai Lakshmanan said...

தயிர் பழசானா மோர்க்குழம்பு செய்வேன் ஆனா கடலப் பருப்பும் பச்சரிசியும் சிறிது ஊறவைத்து அரைத்து செய்வேன் மேனகா

வேலன். said...

எனக்கும் மோர்குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும்.சேப்பங்கிழங்கு,உளுந்துவடை,வெண்டாக்காய் என்றால் இன்னும் சூப்பராக சாப்பிடுவேன்.கடலைமாவு ரெசிபி புதிதாக உள்ளது. அருமை..வாழ்க வளமுடன்.வேலன்.

Unknown said...

Hi menaga thanks romba nallaa irukkum poola morkulambu.paarpoom....

ஸாதிகா said...

ஈசி மோர்க்குழம்புதான்!

Asiya Omar said...

மேனகா ரொம்ப ஈசியாக இருக்கே.அவசரத்திற்கு உதவும்.

Menaga Sathia said...

அனைவரின் கருத்துக்கும் மிக்க நன்றி.மறக்காமல் கருத்து தெரிவித்து ஊக்குவித்த உங்களுக்கு என் சந்தோஷத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

01 09 10