Friday 30 April 2010 | By: Menaga Sathia

பனீர் ஆனியன் குல்சா

தே.பொருட்கள்:

மைதாமாவு - 3 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
துருவிய பனீர் - 1 கப்
 
செய்முறை :
*மாவில் தேவையான உப்பு சேர்த்து சர்க்கரை+பட்டர்+தயிர்+எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து ஈரமான துணிபோட்டு மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை தேவையான உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

*பிசைந்த மாவில் சிறு உருண்டையாக எடுத்து உருட்டி அதனுள் ஸ்டப்பிங் கலவையை வைத்து மறுபடியும் மூடி லேசாக உருட்டு கட்டையில் தேய்க்கவும்.

*ஸ்டப்பிங் எல்லா இடத்திலும் இருக்குமாறு தேய்க்கவும்.

*தேய்த்த குல்சாவை நான் ஸ்டிக் கடாயில் போட்டு 2புறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.தேவைப்பட்டால் இருபுறமும் நெய் தடவி சுட்டு எடுக்கலாம்.

*மிகவும் அருமையாக இருக்கும்.2 குல்சா மேல் சாப்பிடமுடியாது.விருப்பமான சைட் டிஷுடன் சாப்பிடவேண்டியதுதான்..

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Aruna Manikandan said...

Khulcha with paneer and onion sounds very interesting!!!
Thx. for sharing :-)

சாருஸ்ரீராஜ் said...

very nice menega..

Priya said...

சுலபமான குறிப்பா இருக்கு, நன்றி!

சர்க்கரை சேர்க்காமலும் செய்யலாமா?

Chitra said...

Thank you for the recipe. :-)

Jayanthy Kumaran said...

A neat n perfect recipe for paneer onion gulsa. Hats off to you Menaga.

vanathy said...

மேனகா, நல்லா இருக்கு. பனீர் வாங்கி செய்து பார்க்க வேண்டும்.

Menaga Sathia said...

நன்றி அருணா!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி ப்ரியா!! சர்க்கரை சேர்த்து செய்தால்தான் மாவு வளவளன்னு சாப்டாக இருக்கும்.1 டீஸ்பூன் தானாவது சேர்த்து செய்தால்தான் நன்றாகயிருக்கும்...

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ஜெய்!!

நன்றி வானதி!! பனீர் வாங்கி செய்து பாருங்கள்....

Cool Lassi(e) said...

Aaha Arumai Arumai! Romba nalla irukku!

Asiya Omar said...

பனீர் ஆனியன் குல்சா பேரே சாப்பிட ஆசையை தூண்டுது.

மனோ சாமிநாதன் said...

பனீர் குல்சா அருமையாக இருக்கிறது, மேனகா! புகைப்படமும் அழகு!

Unknown said...

nalla recipe.. looks really yummy..

Gita Jaishankar said...

Kulcha looks good, very perfect and soft..thanks for sharing this :)

malarvizhi said...

ரொம்ப நல்லா இருக்கு .விரைவில் செய்து பார்க்கிறேன்.

Unknown said...

Romba supera irukku!Thanks for recipe.

karthik said...

happy may 1st

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி அம்மா!!

நன்றி ஸ்ரீப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி மலர்விழி!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி திவ்யா!!

வாழ்த்துக்கு நன்றி கார்த்திக்!! உங்களுக்கும் மேதின வாழ்த்துக்கள்!!

*இயற்கை ராஜி* said...

nallla irukku... senji parthuten.. nandri

'பரிவை' சே.குமார் said...

சுலபமான குறிப்பா இருக்கு, நன்றி!

Vijiskitchencreations said...

நான் பனீர் பராத்தா செய்திருக்கேன். இது செய்ததில்லை. அடுத்த தடவை செய்திட்டா போச்சு.

GEETHA ACHAL said...

எப்படி மேனகா...அருமை...பனீர் ஆனியன் குல்சா சூப்பர்ப்..கலக்கிட்டிங்க....அப்படியே சாப்பிட்டுவிடுவேன்...மேனகா எங்க வீட்டிற்கு பக்கதில் இருந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும்...என்னை குண்டாகிய புண்ணியம்..அய்யவோ பாவம்... உங்களை தான் சேரும்.....

Kanchana Radhakrishnan said...

very nice recipe

geetha said...

மேனு!
பனீர் குல்சா! பேரே சூப்பராய் இருக்கு. டேஸ்டும் சூப்பரான்னு செய்து பார்த்திட்டு சொல்றேன்.
அப்படியே இதற்கு சைட்டிஷ் என்ன பண்ணலான்னு நீங்களே சொல்லிடுங்க!
அபி இந்த மாதிரி ஐட்டத்துக்கு எல்லாம் சைட்டிஷ் எடுத்துக்காது.
ஆனா, உங்க அண்ணன் கேட்பார்.

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சியும்,நன்றியும் ராஜி!!

நன்றி சகோ!!

அடுத்தமுறை செய்து பாருங்கள்,எல்லோருக்கும் பிடிக்கும்.நன்றி விஜி!!

Menaga Sathia said...

//மேனகா எங்க வீட்டிற்கு பக்கதில் இருந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும்...என்னை குண்டாகிய புண்ணியம்..அய்யவோ பாவம்... உங்களை தான் சேரும்.....
// புண்ணியம் மாதிரி வரும்னு சொல்லி பாவம் வரும்னு சொல்லிட்டீங்களே..ஹி..ஹி..அதற்கென்ன வீட்டிற்கே வாங்க செய்து தருகிறேன்.நன்றி கீதா!!

நன்றி காஞ்சனா!!

இதற்கு நான் பனீர் கோப்தா செய்தேன்.அதை விறைவில் போஸ்ட் செகிறேன்பா.செய்து பார்த்து சொல்லுங்கள்.நார்மலா இதற்கு அவ்வளவு சைட் டிஷ் தேவைப்படாது.நான் அப்படியே குல்சா மட்டும்தான் சாப்பிட்டேன்.நன்றி கீதா!!

Priya Suresh said...

Kulcha looks fantastic...paneer and onion together goes awesome..

Jaleela Kamal said...

குல்சா உடனே சாப்பிடனும் போல் இருக்கு

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி ஜலிலாக்கா!!

01 09 10