Tuesday 26 October 2010 | By: Menaga Sathia

கோவைக்காய் பச்சடி/ Ivy Gourd Pachadi

தே.பொருட்கள்:
துருவிய கோவைக்காய் - 2 கப்
தயிர் - 250 கிராம்
தேங்காய்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சாட் மசாலா - மேலே தூவ
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*தேங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய் தயிர் சேர்த்து மைய அரைக்கவும்.

*ஒரு பவுலில் கோவைக்காய்+உப்பு++அரைத்த விழுது சேர்த்து ஒன்றாக கலந்து சாட் மசாலாவை மேலே தூவி விடவும்.

*புலாவ்,பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

நான் தான் பர்ஸ்ட்டா அப்ப பச்சடி கொஞ்சம் அதிகமா கொடுங்க ஹி ஹி ஹி

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட இது கூட நல்லாயிருக்கே...

புவனேஸ்வரி ராமநாதன் said...

nice.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கோவைக்காய் என நீங்கள் குறிப்பிடுவது; கொவ்வைக்காயா?
தயவு செய்து அக்காயின் படம் போட முடியுமா? குழப்பமாக இருக்கு!
நான் ஈழத்தவன்.

எல் கே said...

//கோவைக்காய் என நீங்கள் குறிப்பிடுவது; கொவ்வைக்காயா? //

athe athe

Kurinji said...

New recipe...

Menaga Sathia said...

நன்றி சசி!! தாராளமா அதிகமாவே கொடுக்கிறேன்..

நன்றி வெறும்பய!!

நன்றி புவனேஸ்வரி!!

Asiya Omar said...

பச்சடி அருமை.

Menaga Sathia said...

யோகன் நீங்களும் பாரிஸில்தான் இருக்கிங்கன்னு நினைக்கிறேன்.எல்லா இந்தியன் மளிகைக்கடையில் கிடைக்கும் இந்த காய்.கோவைக்காய் தான் கொவ்வையா என தெரியாது.கொய்யா வேறு கோவைக்காய் வேறு..கோவைக்காயை ஆங்கிலத்தில் Tindora/Ivy guard ந்னு சொல்லுவாங்க.என்னிடம் தற்சமயம் அந்த காயின் படம் இல்லை அதனால் கூகிள் இமேஜில் தேடி லிங்க் கொடுக்கிறேன்,பாருங்கள்.நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த காய் ரொம்ப நல்லது.http://www.google.com/images?hl=en&source=imghp&q=tindora&gbv=2&aq=f&aqi=g8&aql=&oq=&gs_rfai=.உங்கள் சந்தேகம் தீர்ந்ததா என சொல்லவும்.இல்லையெனில் வாங்கிய பிறகு படம் இணைக்கிறேன்.

Menaga Sathia said...

கொவ்வையும்,கோவைக்காயும் ஒன்னுதானா எல்கே!!நன்றிங்க..

நன்றி குறிஞ்சி!!

நன்றி ஆசியாக்கா!!

Umm Mymoonah said...

I din't know we can eat kovakai raw, very delicious one.

சாருஸ்ரீராஜ் said...

பச்சடி சூப்பர்...

Gayathri Kumar said...

Very interesting.I didn't know that kovaikkai can be eaten raw.

Vijiskitchencreations said...

நல்ல பச்சடி மேனகா. பச்சையா சாப்பிட்டது இல்லை.
சூப்பர் ரெசிப்பி
சீக்கிரமா தீபாவளி பலகாரம் போடுங்கப்பா. ஏதாவது சிம்பிளா இருந்தால் செய்ய்லாம் என்று தான்.

Prema said...

Kovakkai pachaidi dhool menaga,kalakurenga...

Akila said...

kovaikai pachadi superb and this pachadi is very new to me... simply love it...

Event: Dish Name Starts with C
Dish Name Starts with B - Roundup
Learning-to-cook

Kanchana Radhakrishnan said...

நல்லாயிருக்கே.

Ravi kumar Karunanithi said...

seiyalam. but neengale vandhu senji kodutha innum super'ah irukum pa.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி!
தெளிந்தேன். ஆனால் இதை ஈழத்தில் கொவ்வைக்காய் என்போம். அதைவிட இதைச் சமையல் செய்வதேயில்லை. இதன் இலையை ஆட்டுக்குப் போடுவோம்; சிறுவராக இருந்தபோது இதன் பழத்தை உண்டதுண்டு. காய் கசப்பதால் உண்பதில்லை.
இங்கு பாரிசில் உள்ள அத்தனை இந்திய இலங்கை மளிகைக் கடைகளில் நீங்கள் குறிப்பிடுவதுபோல் கிடைக்கிறது. இதைப் பெருவாரியாக பாண்டிச்சேரித் தமிழ் அன்பர்கள் வாங்கிச் செல்வதை அவதானித்து
ஒரு தடவை அவர்களிடம் சமையல் முறை கேட்டபோது பொரித்துக் குழம்பு வைக்கலாம் எனவும் கூறினார்கள்.நான் இன்றுவரை முயற்சி செய்யவில்லை.
எனினும் என் மனவிக்கு சக்கரை வியாதியுள்ளதால் இதைச் சமையலில் உங்கள் ஆலோசனைப்படி சேர்க்கலாம் என எண்ணுகிறேன்.
அத்துடன் ஈழத்தில் உள்ள உறவுகளுக்கும் இதன் மருத்துவக் குணம் பற்றிக் கூறலாம் என எண்ணுகிறான்.
கூகிளாண்டவரில் படம் பார்த்தேன். அதே அது தான்.

தெய்வசுகந்தி said...

சூப்பர் பச்சடி!

Unknown said...

Pachadi looks creamy and delicious!

Menaga Sathia said...

நன்றி ஆயிஷா!! பச்சையாக சாப்பிடலாம்,வெள்ளரிக்காய் போல் இருக்கும்..

நன்றி சாரு அக்கா!!

நன்றி காயத்ரி!!

நன்றி விஜி!! நிச்சயம் போடுகிறேன்...

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி அகிலா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி தோசை!! தாராளமா நானே உங்களுக்கு செய்து தருகிறேன்..

Menaga Sathia said...

தங்கள் சந்தேகம் தீர்ந்ததில் சந்தோஷம் யோகன்!! இந்த காயை சாம்பார்,பொரியல் என செய்யலாம்...

நன்றி தெய்வசுகந்தி!!

Priya Suresh said...

Pachadi with ivygourd looks super delicious..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்

இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.//இது அப்பர் தேவாரம்...கொவ்வைப்பழம் போல் போல் சிவந்த வாய், கொவ்வைப்பழம் அழகான சிவப்பு நிறம்.உங்களுக்கு பதில் போட்டபின் என் நினைவடுக்கில் இதைக் கோவைக்காய் என்பதல்ல கொவ்வைக்காயே சரி , நமது இலக்கியத்தில் எங்கோ சொல்லப்பட்டுள்ளதே என வீடுதிரும்பும்போது சிந்தனை வயப்பட்டபோது நினைவில் தட்டுப்பட்டது. அந்தப் பக்தி இலக்கியச் சான்று.சிவந்த கொவ்வைப் பழம் வாய்க்கு உவமானமாகக் கூறப்பட்டது.அதனால் இக்காயை எல்லோருமே கொவ்வைக்காய் என்போம்.அது இந்தியாவோ, ஈழமோ கொவ்வையாக இருப்பது வரும் காலச்சந்ததிக்கு குழப்பத்தைத் தவிர்க்கும்.கூகிளாண்டவரும் படத்தில் கோவைக்காய் எனத் தான் குறிப்பிட்டுள்ளார்.அப்பர் கூற்றை ஆதாரப்படுத்தி அதைக் கொவ்வை என மாற்றுவதும் அழைப்பதுமே! நன்று.இரு மாதிரியும் சொல்லலாம் என மேலும் குழப்பிவிடாதிருப்பது முக்கியம்.

Krishnaveni said...

very easy recipe, looks yummy

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

Kovaikayil pachchadiyaa?? puthusaa irukkuppaa.. senchu paakanum :)

PriyaRaj said...

pachadi with kovai kai sounds diff...

Chitra said...

வெள்ளரிக்காய் பச்சடி மாதிரி நல்லா இருக்குதே....

vanathy said...

recipe sounds delicious!

ஸாதிகா said...

கோவைக்காயில் பச்சடி..அசத்துங்க

01 09 10