Showing posts with label டிரிங்ஸ்/டெசர்ட் வகைகள். Show all posts
Showing posts with label டிரிங்ஸ்/டெசர்ட் வகைகள். Show all posts
Friday, 26 January 2018 | By: Menaga Sathia

கரும்பு ஜூஸ் / Sugarcane (Karumpu ) Juice

தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு  நிறைய கிடைக்கும் .கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும்.

அதில் சிறிதளவு எலுமிச்சையும்,இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
கரும்பு - 2 அங்குலத்துண்டு
இஞ்சி -சிறிய துண்டு
எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கரும்பின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

*அதனுடன் தோல் சீவிய இஞ்சி மற்ரும் நீர் சேர்த்து அரைக்கவும்.
*அதனை வடிகட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
Thursday, 30 November 2017 | By: Menaga Sathia

சுக்கு மல்லி காபி / Sukku Malli (Dry Ginger Coriander ) Coffee

மழைகாலங்களில் சுக்கு மல்லி காபி குடிப்பது ரொம்ப நல்லது.தொண்டை கரகரக்கும் போது,சளி பிடித்திருக்கும் போது இந்த காபி குடிப்பது இதமாக இருக்கும்.

இந்த பொடியை  செய்து காற்றுபுகாத டப்பாவில் வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.

தே.பொருட்கள்

கொத்தமல்லி விதை -1/4 கப்
மிளகு -1 டீஸ்பூன்
ஏலக்காய் -2
சுக்கு -1 அங்குல துண்டு
பனை வெல்லம்  - 1/3 கப்

செய்முறை

*வெறும் கடாயில் மல்லி விதை,மிளகு,ஏலக்காய் இவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

*சுக்கு தோலினை சுரண்டிவிட்டு லேசாக நசுக்கி கொள்ளவும்.

*அனைத்தையும் ஒன்றாக கொரகொரப்பாக பொடிக்கவும்.
 *பனை வெல்லத்தை துருவி நீர் ஊற்றி கொதிக்க வைத்த பின் வடிகட்டவும்.
 *பாத்திரத்தில் 1 கப் நீர் ஊற்றி 1 டேபிஸ்பூன் பொடித்த பொடியை போட்டு கொதிக்க வைக்கவும்.
*கொதித்த பின் வடிகட்டி பனை வெல்ல நீரை கலந்து சூடாக பருகவும்.
Monday, 12 December 2016 | By: Menaga Sathia

முட்டையில்லாத சாக்லேட் மூஸ் /Eggless Chocolate Mousse


தே.பொருட்கள்

Dark Chocolate(Chopped) - 1 கப்
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
ஹெவி விப்பிங் க்ரீம் - 1 கப்
ஐசிங் சர்க்கரை - 1/4 கப்
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்

செய்முறை
*ஒரு பவுலில் சாக்லேட்+வெண்ணெய் சேர்த்து டபுள் பாய்லர் அல்லது மைக்ரோவேவில் உருகி ஆறவைக்கவும்.


*விப்பிங் கீரிமில் ஐசிங் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

*இதில்  1/4 கப் விப்பிங் க்ரீமை அலங்கரிப்பதற்காக எடுத்து வைத்து மீதியில் இருக்கும் கீரிமில் பாதியை உருகிய சாக்லேட்டில் மிருதுவாக கலக்கவும்.
*பின் மீதி பாதி விப்பிங் கீரிமை கலந்து  பரிமாறும் பவுலில் வைத்து பிரிட்ஜில் 2 மணிநேரம் செட்டாகவைக்கவும்.
*பரிமாறும் போது மேலே விப்பிங் கீரிமை வைத்து அதன்மீது துருவிய சாக்லேட் தூவி பரிமாவும்.

பி.கு

*இங்கு நான் 85% டார்க் சாக்லேட்  பயன்படுத்தியிருப்பதால் சர்க்கரை சேர்த்து இருக்கேன்.அதற்கு பதில்Semi Sweet Chocolate  பயன்படுத்தினால் சர்க்கரை சேர்க்கதேவையில்லை.
Monday, 8 June 2015 | By: Menaga Sathia

ஃபலூடா / Falooda Recipe With Homemade Falooda Sev | Homemade Falooda


print this page PRINT IT 
ஃபலூடா செய்வதற்கு சேவ் & சப்ஜா விதை முக்கியமானது.கடையில் விற்கும் சேவ் ஜவ்வரிசி மாவில் செய்து விற்பார்கள்.இங்கு நான் செய்திருப்பது சோளமாவு.இனி சேவ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தே.பொருட்கள்

சோளமாவு- 1/2 கப்
நீர்- 1 1/2 கப்
சர்க்கரை- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*ஒரு பாத்திரம் நிறை ஐஸ் கட்டிகளை போட்டு வைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் சோளமாவு+சர்க்கரை+நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.

*அப்படியே அடுப்பில் வைத்து கட்டியில்லாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.

*கெட்டியாக கலர் சற்று வெளிர் நிறத்தில் மாறி வரும் போது ஓமப்பொடி அச்சியில் போட்டு ஐஸ்கட்டி போட்டிருக்கும் பாத்திரத்தில் அப்படியே பிழியவும்.



*பயன்படுத்தும் வரை சேவ்வினை ஐஸ்தண்ணிரிலேயே வைத்திருக்கவும்.

பி.கு
*இதில் விரும்பிய பிலேவர்ஸ் அல்லது கலர் சேர்க்கலாம்.நான் பிலெயினாகவே பயன்படுத்திருக்கேன்.

*கலர் சேர்ப்பதாக இருந்தால் சோளமாவு கெட்டியாக நிறம் மாறி வரும் போது சேர்த்து பயன்படுத்தவும்.

பலூடா செய்ய தே.பொருட்கள்

பலூடா சேவ் - 1/3 கப்
சப்ஜா விதை - 1/2 டேபிள்ஸ்பூன் (இதனை நீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்,ஊறிய பிறகு 2 டேபிள்ஸ்பூன் அளவில் வரும்)
ரோஸ் சிரப் -4 டேபிள்ஸ்பூன்
குளிர்ந்த பால்- 2 கப்
வெனிலா ஐஸ்கீரிம்- 1 ஸ்கூப்
பொடியாக நறுக்கிய பிஸ்தா -1 டீஸ்பூன் (அலங்கரிக்க)

செய்முறை

*மிக உயரமான கண்ணாடி டம்ளரில் 2 டேபிள்ஸ்பூன் சிரப் ஊற்றவும்.

*பின் 1 டீஸ்பூன் ஊறவைத்த சப்ஜா விதை சேர்க்கவும்.

*அதன் மீது 2 டேபிள்ஸ்பூன் பலூடா சேவ் போடவும்.

*நான் மிக உயரமான டம்ளர் பயன்படுத்தியிருப்பதால் 2 லேயராக போட்டுள்ளேன்.

*சிறிய டம்ளர் என்றால் 1 லேயர் போதும்.பின் அதன் மீது பொறுமையாக பாலினை ஊற்றவும்.

*அதன் மூது ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம்+பிஸ்தா தூவி உடனடியாக பரிமாறவும்.
Sunday, 15 February 2015 | By: Menaga Sathia

தண்டை / THANDAI (SPICED ALMOND MILK ) | HOLI RECIPES


print this page PRINT IT
 இது வடஇந்தியாவின் ஸ்பெஷல் பானகம்.மஹாசிவராத்திரி மற்றும் ஹோலி அன்று செய்வார்கள்.

தண்டை மசாலா பொடியினை மொத்தமாக பொடித்து வைத்துக் கொண்டால் தேவையான போது செய்யலாம்.

நான் கொஞ்சமாக செய்ததால் மசாலாவினை அரைத்து செய்துள்ளேன்.

Recipe Source :
Tarladalal

தே.பொருட்கள்

பால் -3 கப்
சர்க்கரை -1/2 கப்
குங்குமப்பூ -சிறிதளவு
பிஸ்தா பருப்பு -அலங்கரிக்க‌
ரோஸ் எசன்ஸ் -2 துளி (விரும்பினால்)


தண்டை மசாலா செய்ய‌

பாதாம் பருப்பு -30
மிளகு -15
கசகசா+சோம்பு -தலா 1 1/2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் -7

செய்முறை

*பாலினை காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆறவைக்கவும்.

*சிறிதளவு வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.

*தண்டை மசாலா செய்ய கொடுத்துல்ள பொருட்களை 1/2 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.


*பால் ஆறியதும் மசாலாவினை சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

*பின் அதனை சூப் வடிகட்டியில் வடிகட்டி ரோஸ் எசன்ஸ்+குங்குமப்பூவை கலந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.

*பரிமாறும் போது பிஸ்தா பருப்பு கலந்து பரிமாறவும்.

பி.கு

*தண்டை மசாலாவினை சேர்ததும் 30 நிமிடம் வைத்திருந்து வடிகட்டினால் மசாலாவின் மணம் நன்கு ஊறியிருக்கும்.

*எப்போழுதும் குளிரவைத்து பரிமாறவும்.

*ரோஸ் எசன்ஸ் சேர்ப்பது நல்ல மணம் கொடுக்கும்.சிலர் காய்ந்த ரோஜா இதழ்களை சேர்ப்பார்கள்.
Saturday, 4 October 2014 | By: Menaga Sathia

துளசி தீர்த்தம் (பெருமாள் கோவில் தீர்த்தம் /) THULASI THEERTHAM | PERUMAL KOVIL THEERTHAM

பெருமாள் கோவில் துளசி தீர்த்தம் பற்றி அனைவரும் அறிந்ததே.புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசி தீர்த்தம் செய்வது மிகச் சிறப்பு

தே.பொருட்கள்

நீர் - 1 கப்
ஏலககாய் -3
குங்குமப்பூ - சிறிது
பச்சை கற்பூரம் - 1 பின்ச்
துளசி இலைகள் - 2 அல்லது 3

செய்முறை

*ஏலக்காயை தட்டிக் கொள்ளவும்.மீதமுள்ள  அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து  1 மணிநேரம் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தவும்.
 பி.கு

*பச்சை கற்பூரம் வாசனைக்காக சிறிதளவே சேர்க்கவும்.

*துளசி,குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது.அதனால் இந்த நீரை தினகும் குடிப்பது நல்லது.

இன்று புரட்டாசி 3 வது சனிக்கிழமையில் நான் பெருமாளுக்கு செய்த தளிகை

துளசி தீர்த்தம், ஜவ்வரிசி பாயாசம் ,மிளகு வடை ,  கறுப்புக் கடலை சுண்டல், மாவிளக்கு, கறிவேப்பிலை துவையல் ,  சர்க்கரை பொங்கல் ,தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தேங்காய் சாதம்,  உருளை வருவல் மற்றும் உப்பு சேர்க்காமல் பொங்கிய சாதம்+தயிர்+வெல்லம்( நடுவில் இருப்பது)

Tuesday, 22 July 2014 | By: Menaga Sathia

ராகி சாக்லேட் மில்க்க்ஷேக்/Ragi Chocolate Milkshake | Chocolate Flavoured Finger Millet Milkshake| Millet Recipes

இந்த மில்க் ஷேக்கில் ராகி மாவு சேர்த்து செய்ததில் மிக நன்றாக இருந்தது.

Recipe Source : Cooklikepriya

தே.பொருட்கள்

குளிர்ந்த பால் -2 கப்
கேழ்வரகு மாவு- 2 டேபிள்ஸ்பூன்
கோகோ பவுடர்+சர்க்கரை -தலா 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*பாத்திரத்தில் கோகோ பவுடர்+கேழ்வரகு மாவு+1 கப் நீர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.


*இதனை அடுப்பில் வைத்து விஸ்க் மூலம் தொடர்ந்து கட்டியில்லாமல் கலக்கவும்.

*நன்கு கெட்டியான பதத்தில் வரும் போது இறக்கி ஆறவைக்கவும்.

*மிக்ஸியில் பால்+சர்க்கரை+எசன்ஸ்+ஆறவைத்த கெட்டியான கேழ்வரகு மாவு தேவைக்கு  நன்கு கலந்து பரிமாறவும்.


Tuesday, 8 July 2014 | By: Menaga Sathia

பால் ஐஸ்( பாலைஸ்) /Paal Ice | Milk Kulfi | Ice Cream Recipes | Summer Spl Recipes

தே.பொருட்கள்

பால் - 2 கப்
கண்டெண்ஸ்ட் மில்க்- 1 கப்
விப்பிங் க்ரீம் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*பாலினை நன்றாக காய்ச்சிக் கொள்ளவும்.
*பின் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து மேலும் 5 நில்மிடம் காய்ச்சி நன்றாக ஆறவைக்கவும்.
*விப்பிங் க்ரீமை நன்றாக பீட்டரால் அடித்துக் கொள்ளவும்.

*பால் நன்றாக ஆறியதும் விப்பிங் க்ரீம்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து குல்பி மோடில் ஊற்றவும்.

*இதனை ப்ரீசரில் 6 - 8 மணிநேரம் வரை செட்டாக விடவும்.

*தேவைப்படும் போது குல்பி மோடினை 10 நிமிடம் நீரில் போட்டு எடுத்த பின் மோடினை எடுத்து விட்டு பரிமாறவும்.

பி.கு
*எப்போழுதும் பாலின் பாதி அளவில் கண்டென்ஸ்ட் மில்கினை சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.
Friday, 13 June 2014 | By: Menaga Sathia

பஞ்சாபி வெஜ் தாளி / Punjabi Veg Thali | Thali Recipes

பஞ்சாபி சமையலில் அதிகம் பனீர்,பால் ,தயிர் , நெய் அல்லது வெண்ணெய் மற்றும் கரம் மசாலா சேர்த்து செய்வார்கள்.

இதில் நான் சமைத்திருப்பது  இடமிருந்து வலமாக

வெள்ளரிக்காய் சாலட்
அம்ரிஷ்சரி ஆலு குல்சா
பஞ்சாபி கறுப்புக்கடலை மசாலா
பஞ்சாபி வெஜ் பிரியாணி
வெள்ளரிக்காய் தக்காளி ராய்த்தா
மசாலா லஸ்ஸி மற்றும்
குலோப்ஜாமூன்

குலோப்ஜாமூனை மட்டும் முதல் நாளே செய்து வைக்கலாம்.குலோப்ஜாமூன் மற்றும் ஆலு குல்சா செய்வதற்கு மாவு ஊறவைக்கும் நேரம் தவிர இதனை மொத்தமாக சமைக்க 1 மணிநேரம் மட்டுமே ஆகும்.

பரிமாறும் அளவு - 3 நபர்கள்
சமைக்கும் நேரம் - 1 மணிநேரம்

பஞ்சாபி வெஜ் பிரியாணி / Punjabi Veg Biryani

இந்த பிரியாணியின் ஸ்பெஷல் தாளிக்கும் போது மிளகு சீரகம் சேர்க்கவேண்டும்.மற்றும் தக்காளியினை வதக்கி சேர்க்காமல் கடைசியாக சேர்க்க வேண்டும்.புதினா  சேர்க்ககூடாது.


தே.பொருட்கள்

பாஸ்மதி -2 கப்
கேரட்+பீன்ஸ்+பச்சை பட்டாணி - 1 1/2 கப்
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா -1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு -4
மிளகு -5
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை
*அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.வெங்காயம்+தக்காளி+கேரட்+பீன்ஸ் நறுக்கவும்.

*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் காய்கள்+ இஞ்சி பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

*பின் தயிர்+வெண்ணெய் சேர்த்து வதக்கவும்.
*இவைகள் வதங்கியதும் தூள் வகைகள்+ அரிசி சேர்த்து வதக்கி உப்பு+2 1/2 கப் நீர் சேர்க்கவும்.

*பின் நறுக்கிய தக்காளி+பிரியாணி மசாலா சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
*பரிமாறும் போது கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.


பஞ்சாபி காலசன்னா மசாலா / Punjabi Kala Chana Masala


தே.பொருட்கள்

கறுப்புக்கடலை -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
தக்காளி விழுது -1
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனியாத்தூள்+மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன்
கரம்மசாலா -1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
சீரகம் -3/4 டீஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -2
உப்பு+எண்ணெய் -தேவைக்கு

செய்முறை

*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தேவைக்கு நீர் சேர்த்து+உப்பு+பட்டை+கிராம்பு+ஏலக்காய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

*வெந்ததும் முழு கரம் மசாலாக்களை எடுத்து விடவும்.1/4 கப் வேகவைத்த கடலையை மட்டும்  அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் வேகவைத்த கடலை மற்றும் வேகவைத்த நீரோடு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் அரைத்த கடலை விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

அம்ரிஷ்சரி ஆலு குல்சா / Amritsari Aloo Kulcha


தே.பொருட்கள்
மைதா - 1 கப்
பால் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெண்ணெய் - சுடுவதற்கு

அம்ரிஷ்சரி ஆலு ஸ்டப்பிங் செய்ய

வேகவைத்த மசித்த உருளை - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
துருவிய இஞ்சி - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 3/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -1  டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*மைதா+பேக்கிங் சோடா+உப்பு+பேக்கிங் பவுடர் சேர்த்து 3 முறை சலிக்கவும்.

*அதனுடன் பால்+தயிர்+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசையவும்.தேவையென்றால் மட்டும் மேலும் பால் தெளித்து மாவை கொஞ்சம் தளர்த்தியாக பிசைந்து ஈரத்துணியால் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை மட்டும் ஒன்றாக கலந்து மசித்து வைக்கவும்.

*1 மணிநேரத்திற்கு பின் மாவினை நன்கு பிசைந்து 4 பெரிய உருண்டைகளை எடுக்கவும்.

*உருட்டும் கட்டையில் எண்ணெய் தடவி உருண்டையை லேசாக தேய்த்து அதன் மேல் உருளை ஸ்டப்பிங் வைத்து மூடவும்.

*மீண்டும் எண்ணெய் தடவி ஸ்டப்பிங் வெளியே வராதபடி மெலிதாக உருட்டவும்.

*நான்ஸ்டிக் கடாயில் இருபக்கமும் வேகவைத்து வெண்ணெய் தடவி பரிமாறவும்.

மசாலா லஸ்ஸி / Masala Lassi


தே.பொருட்கள்

தயிர் - 1 கப்
புதினா + கொத்தமல்லித்தழை - 1/4 கப்
இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

* முதலில் புதினா + கொத்தமல்லித்தழை சேர்த்து அரைத்த பிறகு தயிர்+உப்பு +இஞ்சிசாறு சேர்த்து நன்கு ப்ளெண்டரில் அரைத்து பரிமாறவும்.

பி.கு
விரும்பினால் வறுத்துப் பொடித்த சீரகப்பொடியை தூவி பரிமாறலாம்.

வெள்ளரிக்காய் ராய்த்தா / Cucumber Raita

தே.பொருட்கள்
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் -1/2 கப்
விதை நீக்கி பொடியாக அரிந்த தக்காளி -1/4 கப்
தயிர் - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
பொடியாக நருக்கிய கொத்தமல்லித்தழை சிறிது - சிறிது
உப்பு - தேவைக்கு

செய்முறை
*பரிமாறும் போது அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
01 09 10