Friday 13 June 2014 | By: Menaga Sathia

பஞ்சாபி வெஜ் தாளி / Punjabi Veg Thali | Thali Recipes

பஞ்சாபி சமையலில் அதிகம் பனீர்,பால் ,தயிர் , நெய் அல்லது வெண்ணெய் மற்றும் கரம் மசாலா சேர்த்து செய்வார்கள்.

இதில் நான் சமைத்திருப்பது  இடமிருந்து வலமாக

வெள்ளரிக்காய் சாலட்
அம்ரிஷ்சரி ஆலு குல்சா
பஞ்சாபி கறுப்புக்கடலை மசாலா
பஞ்சாபி வெஜ் பிரியாணி
வெள்ளரிக்காய் தக்காளி ராய்த்தா
மசாலா லஸ்ஸி மற்றும்
குலோப்ஜாமூன்

குலோப்ஜாமூனை மட்டும் முதல் நாளே செய்து வைக்கலாம்.குலோப்ஜாமூன் மற்றும் ஆலு குல்சா செய்வதற்கு மாவு ஊறவைக்கும் நேரம் தவிர இதனை மொத்தமாக சமைக்க 1 மணிநேரம் மட்டுமே ஆகும்.

பரிமாறும் அளவு - 3 நபர்கள்
சமைக்கும் நேரம் - 1 மணிநேரம்

பஞ்சாபி வெஜ் பிரியாணி / Punjabi Veg Biryani

இந்த பிரியாணியின் ஸ்பெஷல் தாளிக்கும் போது மிளகு சீரகம் சேர்க்கவேண்டும்.மற்றும் தக்காளியினை வதக்கி சேர்க்காமல் கடைசியாக சேர்க்க வேண்டும்.புதினா  சேர்க்ககூடாது.


தே.பொருட்கள்

பாஸ்மதி -2 கப்
கேரட்+பீன்ஸ்+பச்சை பட்டாணி - 1 1/2 கப்
வெங்காயம் -1
தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா -1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் - 2
கிராம்பு -4
மிளகு -5
சீரகம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை
*அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.வெங்காயம்+தக்காளி+கேரட்+பீன்ஸ் நறுக்கவும்.

*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் காய்கள்+ இஞ்சி பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

*பின் தயிர்+வெண்ணெய் சேர்த்து வதக்கவும்.
*இவைகள் வதங்கியதும் தூள் வகைகள்+ அரிசி சேர்த்து வதக்கி உப்பு+2 1/2 கப் நீர் சேர்க்கவும்.

*பின் நறுக்கிய தக்காளி+பிரியாணி மசாலா சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும்.
*பரிமாறும் போது கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.


பஞ்சாபி காலசன்னா மசாலா / Punjabi Kala Chana Masala


தே.பொருட்கள்

கறுப்புக்கடலை -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
தக்காளி விழுது -1
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தனியாத்தூள்+மிளகாய்த்தூள் - தலா 1 டீஸ்பூன்
கரம்மசாலா -1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
சீரகம் -3/4 டீஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -2
உப்பு+எண்ணெய் -தேவைக்கு

செய்முறை

*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் தேவைக்கு நீர் சேர்த்து+உப்பு+பட்டை+கிராம்பு+ஏலக்காய் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

*வெந்ததும் முழு கரம் மசாலாக்களை எடுத்து விடவும்.1/4 கப் வேகவைத்த கடலையை மட்டும்  அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் வேகவைத்த கடலை மற்றும் வேகவைத்த நீரோடு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை போனதும் அரைத்த கடலை விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

அம்ரிஷ்சரி ஆலு குல்சா / Amritsari Aloo Kulcha


தே.பொருட்கள்
மைதா - 1 கப்
பால் - 1/4 கப்
தயிர் - 1/4 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெண்ணெய் - சுடுவதற்கு

அம்ரிஷ்சரி ஆலு ஸ்டப்பிங் செய்ய

வேகவைத்த மசித்த உருளை - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
துருவிய இஞ்சி - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 3/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -1  டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*மைதா+பேக்கிங் சோடா+உப்பு+பேக்கிங் பவுடர் சேர்த்து 3 முறை சலிக்கவும்.

*அதனுடன் பால்+தயிர்+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசையவும்.தேவையென்றால் மட்டும் மேலும் பால் தெளித்து மாவை கொஞ்சம் தளர்த்தியாக பிசைந்து ஈரத்துணியால் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை மட்டும் ஒன்றாக கலந்து மசித்து வைக்கவும்.

*1 மணிநேரத்திற்கு பின் மாவினை நன்கு பிசைந்து 4 பெரிய உருண்டைகளை எடுக்கவும்.

*உருட்டும் கட்டையில் எண்ணெய் தடவி உருண்டையை லேசாக தேய்த்து அதன் மேல் உருளை ஸ்டப்பிங் வைத்து மூடவும்.

*மீண்டும் எண்ணெய் தடவி ஸ்டப்பிங் வெளியே வராதபடி மெலிதாக உருட்டவும்.

*நான்ஸ்டிக் கடாயில் இருபக்கமும் வேகவைத்து வெண்ணெய் தடவி பரிமாறவும்.

மசாலா லஸ்ஸி / Masala Lassi


தே.பொருட்கள்

தயிர் - 1 கப்
புதினா + கொத்தமல்லித்தழை - 1/4 கப்
இஞ்சி சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

* முதலில் புதினா + கொத்தமல்லித்தழை சேர்த்து அரைத்த பிறகு தயிர்+உப்பு +இஞ்சிசாறு சேர்த்து நன்கு ப்ளெண்டரில் அரைத்து பரிமாறவும்.

பி.கு
விரும்பினால் வறுத்துப் பொடித்த சீரகப்பொடியை தூவி பரிமாறலாம்.

வெள்ளரிக்காய் ராய்த்தா / Cucumber Raita

தே.பொருட்கள்
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் -1/2 கப்
விதை நீக்கி பொடியாக அரிந்த தக்காளி -1/4 கப்
தயிர் - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
பொடியாக நருக்கிய கொத்தமல்லித்தழை சிறிது - சிறிது
உப்பு - தேவைக்கு

செய்முறை
*பரிமாறும் போது அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

8 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

very tempting thali. it is really a feast

Ms.Chitchat said...

Wow, enjoyed the Punjabi thaali.

Sangeetha Nambi said...

Semma ! Semma !,

வல்லிசிம்ஹன் said...

அருமையான செய்முறைகள் ஸாதிகா. இதையே கோதுமை மாவில் செய்தால் நன்றாக வருமா. பார்க்கவே நல்ல ருசி தெரிகிறது.

Menaga Sathia said...

@வல்லிம்மா

குல்சா கோதுமை மாவிலும் செய்யலாம்,ஆனா மைதாவில் செய்வதை போல் அவ்வளவு சுவையாக இருக்காது.

Krishnaveni said...

wow, looks yum

Gita Jaishankar said...

Wow such an inviting platter...looks good dear :)

Priya Suresh said...

Wow, thali super Menaga, kulcha is my favourite.

01 09 10