Monday 2 June 2014 | By: Menaga Sathia

பேக்ட் சமோசா / Baked Samosa | Oven Baked Veg Samosa |Kids Fast Food Series # 1

இந்த மாதம்  Friendship 5 Series -ல்  இடம்பெறுவது Kids Fast Food உணவுகள்..

தே.பொருட்கள்

ஸ்பிரிங் ரோல் /சமோசா ஷூட் - 5
மைதா -2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - மேலே தடவ

ஸ்டப்பிங் செய்ய

வேகவைத்த உருளைக்கிழங்கு -2 பெரியது
ப்ரோசன் பட்டாணி - 3/4 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
மாதுளம்பழ பொடி - 3/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் -1 டீஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து வேகவைத்த உருளையை மசித்து சேர்க்கவும்.

*பின் பட்டாணி மற்றும் மஞ்சள்த்தூள்+மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

*தூள் வாசம் போனதும் மாதுளம்பழ பொடி+கொத்தமல்லித்தழை தூவி இறக்கி ஆறவைக்கவும்.

*சமோசா ஷீட்டை 2 மணிநேரத்திற்கு முன் ப்ரீசரிலிருந்து எடுத்து ஈரத்துணியால் மூடிவைக்கவும்.

*ஒரு கிண்ணத்தில் மைதாவை நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.

* ஒரு சமோசா ஷீட்டினை 3 ஆக கட் செய்யவும்.
*ஷீட்டின் ஒரு ஒரத்தில் ஸ்டப்பிங்கை 1 டேபிள்ஸ்பூன் அளவில் வைக்கவும்.
*அதனை அப்படியே முக்கோணமாக படத்தில் உள்ளவாறு மடிக்கவும்.
*கடைசியாக வரும் முக்கோணத்தில் மைதா பேஸ்டினை தடவி ஒட்டவும்.
*சமோசாக்களை பேக்கிங் டிரேயில் அடுக்கி ஈரத்துணியால் மூடி வைக்கவும்.


*அனைத்தையும் செய்து முடித்த பின் சமோசா மீது வெண்ணெய் தடவி அவனை 200 டிகிரி முற்சூடு செய்து  15-20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
*இடையே ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வெண்ணெய் தடவி பேக் செய்யவும்.

பி.கு

*சமோசாக்களை செய்து ப்ரீசரில் வைத்து தேவைபடும் போது உபயோகபடுத்தலாம்.

*பேக் செய்யும் போது வெண்ணெய்க்கு பதில் எண்ணெய் தடவி செய்யலாம்,வெண்ணெய் தடவி செய்வது சுவையாக இருக்கும்.

*உருளைக்கு பதில் சிக்கன் மற்றும் மட்டன் சேர்த்து செய்யலாம்.

*மாதுளம்பழ பொடிக்கு பதில் ஆம்சூர் பொடி அல்லது எலுமிச்சைசாறு சேர்க்கலாம்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

Prachisvegkitch.blogspot.in said...

samosa looks great.......... also view my space http://prachisvegkitchen.blogspot.in/

nandoos kitchen said...

This looks super.. yumm..

Sangeetha Priya said...

healthy version!!!

Unknown said...

Samosa paakave romba azhaga irukku Menaga.

Priya Suresh said...

Baked samosas supera irruku Menaga, appadiye oru plateaa saapidalam..

Vysyas recipes said...

Yummy somasa's

01 09 10