Monday 29 December 2014 | By: Menaga Sathia

கருணைக்கிழங்கு பொடிமாஸ்/Karunaikizhangu(Yam) Podimas

தே.பொருட்கள்

கருணைக்கிழங்கு - 1/2 கி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*கருணைக்கிழங்கை தோல் சீவி கழுவி துருவிக்கொள்ளவும்.

*அதனை ஆவியில் 10-15 நிமிடங்கள் வேகவைத்தெடுக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் +மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் உப்பு+ வேகவைத்த கருணைக்கிழங்கை சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை வதக்கி தேங்காய்த்துறுவல்+எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சுவையான உணவு பற்றிய செய்முறை குறிப்பு நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... ரொம்பச் சுலபமான செய்முறையா இருக்கே... வாழ்த்துக்கள்.

விச்சு said...

எளிமையான குறிப்பு. நன்று.

திண்டுக்கல் தனபாலன் said...

செய்து பார்க்கிறோம்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரி...

Unknown said...

Looks so good

01 09 10