Thursday 4 July 2013 | By: Menaga Sathia

பிரியாணி கத்திரிக்காய் / Biryani Kathirikkai



தே.பொருட்கள்

கத்திரிக்காய் - 1 பெரியது
வெங்காயம்  -1 பெரியது
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள்  -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்  - 1 டீஸ்பூன்
தனியாத்தூள்  -1 டீஸ்பூன்
புளிவிழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க‌
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
வேர்க்கடலை  -2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌
கடுகு + உளுத்தம்ப‌ருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை -2
மிளகு  - 1/2 டீஸ்பூன்
பெ.சீரகம்  - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*கத்திரிக்காய்+வெங்காயம் இவற்றை நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் வெள்ளை எள்ளை மட்டும் வறுத்து அதனுடன் வேர்க்கடலை சேர்த்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

*பாதியளவு கத்திரிக்காய் வதங்கியதும் வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்ததும்  தூள் வகைகள்+உப்பு சேர்த்து மேலும் வதக்கி அரைத்த விழுதினை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*பின் புளிவிழுதினை சிறிது நீரில் கரைத்து ஊற்றி ,நன்கு கிளறி பச்சை வாசனை போனதும் இறக்கவும்.

பி.கு

*சிறிய கத்திரிக்காயில் சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

*சிறுதீயில் நீர் ஊற்றாமல் கத்திரிக்காயினை வதக்கவும்.இதில் எண்ணெய் குறைவாகவே பயன்படுத்தியிருக்கேன்.
This is off to  Priya's Vegan Thursday

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Akila said...

Very intersting

sathishsangkavi.blogspot.com said...

காலையிலேயே பசிக்குதுங்க... இதைப்பார்த்ததும்... இதையும் செய்து பார்க்கனும் சீக்கிரம்...

'பரிவை' சே.குமார் said...

பார்க்கும் போதே சாப்பிடத் தோணுது அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த பிரியாணி புதிது... நன்றி சகோதரி...

great-secret-of-life said...

so yummy I thought it is rice.. :-)

Asiya Omar said...

சூப்பர்.

Priya Anandakumar said...

Very very yummy and perfect accompaniment for biryani. How your hand now???? Do take care...

ராஜி said...

பார்க்கும்போது எச்சி ஊறுது.

Lifewithspices said...

wow authentic prep.. i simply loe tis one.. bookmarked to try it..

Vimitha Durai said...

Paakave supera irukku akka

Hema said...

Love this dish with briyani, looks awesome..

Mahi said...

பிரியாணி கத்தரிக்காய் செய்முறை புதுசா இருக்கு மேனகா! கத்தரிக்காய் இருப்பதே தெரிலை, கத்தரிக்காய் சாப்பிடாத ஆட்களை இப்படி செய்து குடுத்து ஏமாத்திடலாம்! ;) :) சூப்பர்ப்!

Priya Suresh said...

Omg, mouthwatering here, love love this beautiful dish.

Unknown said...

delicious looking birayani kathirikai :) yummy ... am your new follower :) do chk my blog too dear :)
http://desifiesta.blogspot.com/2013/07/watermelon-papaya-juice-vegan-thurday.html

ஸாதிகா said...

அருமை

மாதேவி said...

சுவைக்கின்றது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//S.Menaga July 5, 2013 at 4:38 AM
ஆம் உண்மைதான் ஐயா நல்ல மனங்களுக்கு மதம் இல்லை தான்...தங்கள் நட்பு தொடரட்டும் ஐயா!!

தாமதமான இனிய மணநாள் வாழ்த்துக்கள் ஐயா!! வணங்குகிறேன்...//

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, மேனகா.

தங்களின் இந்தப்படைப்பு மிகவும் ருசியாக உள்ளது.

If you don't mind please let me know your e-mail ID for conveying any urgent messages.

My e-mail ID is valambal@gmail.com

meena said...

super delicious.shld try it come day.

01 09 10