Tuesday 8 June 2010 | By: Menaga Sathia

மிளகு சீரக சாம்பார்

தே.பொருட்கள்:

துவரம்பருப்பு - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1 சிறியது
பூண்டுப்பல் - 4
கீறிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:

மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்


தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*குக்கரில் துவரம்பருப்பு+மஞ்சள்தூள்+வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+பூண்டு நைத்தையும் நன்கு குழைய வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தள்ளவைகளைப்போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதித்ததும் வேகவைத்த பருப்பை ஊற்றி கொதிக்கும் போது பொடித்த மிளகு சீரகம் போட்டு 5 நிமிடம் கழித்து மல்லித்தழை தூவி இறக்கவும்.

Sending this recipe CWS - Pepper event by Padma started by Priya & Healing foods - onions hostedt by Priya started by Siri

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

kavisiva said...

அசத்தறீங்க மேனகா! இட்லி தோசைக்கு நல்லா இருக்குமா மேனு?! பதில் ப்ளீஸ் இன்னிக்கு செய்துடலாம்னு நினைக்கறேன் :)

Chitra said...

simple and hearty! :-)

Prema said...

Another healthy and innovative recipe,super.Really it sounds gud.

vanathy said...

super recipe.

Asiya Omar said...

நல்லாயிருக்கு மேனகா.

ஸாதிகா said...

மிளகு,சீரகத்தில் ரசம் வைப்போம்.இப்ப சாம்பாருமா..ம்ம்..அசத்துங்க மேனகா.

Anonymous said...

சூப்பர் டேஸ்ட் நல்லா இருக்கு .நான் தான் பிரஸ்ட் டேஸ்ட் பண்ணே அதினால் எல்லா சாம்பாரும் எனக்கே ...

Menaga Sathia said...

நன்றி கவி!! இட்லி,தோசை,சாதம் அனைத்துக்குமே நன்றாகயிருக்கும்பா.செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சித்ரா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஸாதிகாக்கா!! காய் இல்லைனா இப்படிதான் செய்வேன்..

நன்றி சந்தியா!! தாராளமா எல்லாத்தையும் எடுத்துக்குங்க...

SathyaSridhar said...

hmm,,,milagu seeraga sambar vidhyasamaana sambar seithururkeenga,,,winter time kku nalla irukkum..

அன்புடன் மலிக்கா said...

ஆகா கலக்குறீங்கப்பா. சமையலில். சூப்ப்ர்

Admin said...

எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது....

Vijiskitchencreations said...

மேனகா அசத்திட்டிங்க. நானும் முதல் முறையா கேள்விபடுகிறேன். நல்ல ஐடியா.

malarvizhi said...

நல்லா இருக்கு,மேனகா.அவசியம் செய்து பார்க்கிறேன்.

Menaga Sathia said...

நன்றி சத்யா!!

நன்றி மலிக்கா!!

நன்றி சந்ரு!!

நன்றி விஜி!!

நன்றி மலர்விழி!! செய்து பாருங்கள்...

Unknown said...

Milagu jeera rasam thaan pannirukken..Idhu romba pudhusa irukku..So Innovative

சிநேகிதன் அக்பர் said...

மிளகு சீரக ரசம் கேள்விப்பட்டிருக்கேன். சாம்பாரும் இருக்கா. டேஸ்ட் பண்ண வேண்டியதுதான்.

M.S.R. கோபிநாத் said...

சூப்பர் ரசம். அருமை.

Priya Suresh said...

SUper sambar Sathya, thanks for sending..

Menaga Sathia said...

நன்றி ரம்யா!!

நன்றி அக்பர்!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி சகோ!! இது ரசம் இல்லைங்க சாம்பார்....

நன்றி ப்ரியா!!

GEETHA ACHAL said...

மிகவும் வித்தியசமாக இருக்கின்றுது...கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டியது தான்...

நட்புடன் ஜமால் said...

மிளகு சீரக இரசம் தான் கேள்வி பட்டுள்ளேன்

இப்ப சாம்பாருமா - பார்க்கவே யம்மியா இருக்கே :)

kavisiva said...

மேனகா மிளகு சீரக சாம்பார் செய்து சாப்பிட்டாச்சு. சுவை ரொம்ப நல்லா இருந்தது. இனி அடிக்கடி செய்வேன். நன்றி

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி சகோ!!

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சியும்,நன்றியும் கவி!!

01 09 10