Wednesday 9 June 2010 | By: Menaga Sathia

பைனாப்பிள் சேமியா கேசரி

எனக்கு பைனாப்பிள் போட்டு கேசரி செய்வது ரொம்ப பிடிக்கும்.அதன் வாசனைக்காகவும்,சுவைக்காகவும் ரொம்ப பிடிக்கும்...
 
தே.பொருட்கள்:

சேமியா - 1 கப்
வெந்நீர் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை -தேவைக்கு
பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 1/4 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கேசரி கலர் - 1 சிட்டிகை
 
செய்முறை :
*கடாயில் சிறிது நெய்யில் முந்திரி,திராட்சை மற்றும் பைனாப்பிள் துண்டுகளை வறுத்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் சிறிது நெய் விட்டு சேமியாவை வறுக்கவும்,பின் வெந்நீர் விட்டு வேகவிடவும்.சிறிது நீரில் கேசரிகலரை கரைத்து ஊற்றவும்.

*சேமியா வெந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு சுண்டும் வரை கிளறி எசன்ஸ்+ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
 
பி.கு:
சர்க்கரையின் அளவை அவரவர் தேவைக்கு போடவும்.இந்தளவு சர்க்கரை சரியாக இருக்கும்.சேமியா வேகவில்லையெனில் மேலும் சிறிது வெந்நீர் சேர்த்து வேகவிடவும்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

வேலன். said...

படம் பார்க்கும்போதே சாப்பிடனும்னு தோன்றுகின்றது..நல்ல குறிப்பு சகோதரி...வாழ்க வளமுடன்.வேலன்.

எல் கே said...

இதுவும் எனக்கு புதுசு.. பாப்போம்

Prema said...

Oh my ! wat a colourful and tempting Kesari...Wounderful.Pineapple and Semiya combination super...
Never tried kesari with fruits.Execellent idea!

GEETHA ACHAL said...

எனக்கும் பிடித்த கேசரி...அருமை...

ஜெய்லானி said...

பைனாப்பிள் எனக்கும் பிடிக்கும் அதன் வாசனையும் , டேஸ்டும்...ம்...

Asiya Omar said...

சூப்பர்,அப்படியே தளதளன்னு அருமையாக இருக்கு.

Mahi said...

looks yummmmmmmmy! :P :P
enna vishesham Menaga? ;)

சாருஸ்ரீராஜ் said...

சுப்பர் மேனகா...... செய்து பார்கிறேன்

Chitra said...

yummy yum..... gimme some!

பொன் மாலை பொழுது said...

தெரியாமல் தான் கேட்கிறேன், தூங்குவீர்களா இலலை அப்போது இதே சமையல் சிந்தனைதானா ?
எங்கிருந்துதான் இத்தனை ரெசிபிக்கள் உங்களுக்கு தொடந்து வருகிறேதோ!!
வித விதமாக ,அழகாக, அது ஒரு Creativity தான் சந்தேகம் இல்லாமல்.

Anonymous said...

Hi Menaga, Is fruit pudding & this same?

Aruna Manikandan said...

hmmmmm.....
looks delicious and very tempting dear :-)

Anonymous said...

பார்த்த உடன் சாப்பிட தூண்டறது அந்த கேசரி நான் மட்டும் தான் சாப்பிடுவேன் சொல்லிட்டேன் ...நல்லா இருக்கு இது வரை செஞ்சு பார்கலை .இன்னு செஞ்சு பர்கறேன்

Jayanthy Kumaran said...

yummy recipe...tempted to try soon..bookmarked.

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி எல்கே!! செய்து பாருங்கள்..

நன்றி பிரேமலதா!!கேசரியில் பழம் சேர்த்து செய்து பாருங்கள்,ரொம்ப சூப்பராயிருக்கும்..

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்லானி!! உங்களும் பைனாப்பிள் பிடிக்குமா...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி மகி!! ஒன்னுமில்லைப்பா,பைனாப்பிள் ஒன்னு அப்படியே என்னை பார்த்து சோகம இருந்துச்சு,அதான் அதை கேசரி செய்து சாப்டாச்சு..

நன்றி சாருக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

Menaga Sathia said...

நன்றி சித்ரா!! உங்களுக்கு இல்லாததா எடுத்துக்குங்க....

நன்றி சகோ!! விதவிதமாக செய்து பார்ப்பதில் ஒரு ஆர்வம்,அதுவும் என் குட்டி பொண்ணுக்கு செய்து கொடுப்பதில் சந்தோஷம்...

ப்ரூட்ஸ் புட்டிங் வேறு,இது நாம் சாதாரணமாக செய்யும் கேசரியில் பழம் சேர்த்து செய்வது.நன்றி அனானி!!

Menaga Sathia said...

நன்றி அருணா!!

நன்றி சந்தியா!!தாராளமா நீங்களே எல்லாத்தையும் சாப்பிடுங்க...

நன்றி ஜெய்!!

vanathy said...

Looking yummy. I love pineapples. Nice presentation.

Nithu Bala said...

enakku pidicha kesari..athula antha pineapple flavour than superb..roombha naal achu seidhu.pannanum..eppadi ellam sweets-sa pottu enghala tempt panni seiya vachu, sapda vachu enghala gunda agareengha..

Life is beautiful !!! said...

Miga arumaiyaga irukirathu. Naanum seithu parka vendum.

Unknown said...

En DH oda fave..Yumm!!!!!

Thenammai Lakshmanan said...

சுக்கு மாணிக்கம் சொன்னது ரிப்பீட்டூ..:))

சும்மா மினு மினுனு சூப்பரா கீது மேனகா

நட்புடன் ஜமால் said...

ச்சே சூப்பர் சகோ :) :) :)

Priya Suresh said...

Kesari supera irruku Menaga, naan rareaa than kesari semiya vachi pannuven..udane senji saapida solluthu unga kesari..

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி நிது!! ஆசையை கிளப்பிட்டேனா,அப்புறமென்ன சும்மா ஒருநாள் செய்து சாப்பிடவேண்டியதுதான்...

நன்றி மஞ்சு!!

நன்றி ரம்யா!!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!

நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!!சும்மா ஒரு மாறுதலுக்காக சேமியாவில் எப்போதாவது செய்வேன்...

ஸாதிகா said...

இந்த கேசரியில் பைனாப்பிள் துண்டங்களைப்போட்டல் சுவை அள்ளும்.படம் அழகாக உள்ளது.கேசரி சாப்பிடும் ஆவலை தூண்டிவிட்டீர்கள மேனகா.

ஹுஸைனம்மா said...

ரவை கேசரியில், பைனாப்பிள் அல்லது மிக்ஸட் ஃப்ரூட் போட்டு செய்வதுண்டு; சேமியாவிலும் போடலாம் என்பது புதுத் தகவல். நன்றி மேனகா.

Jey said...

நல்லா இரு தாயி, என் பங்காளியாவது நல்லா சப்டுட்டு நல்லாயிருக்கட்டும். னாங்க குடுத்துவச்சது அவ்வளுவுதான். ம்ஹூம்.

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஹூசைனம்மா!!

நன்றி ஜெய்!! ஏன் நீங்களும் செய்து சாப்பிடலாமே.செய்வதும் மிக எளிதுதானே....

Mahi said...

இது நானும் செய்துட்டேனே! நல்லா இருந்தது மேனகா!நன்றி!

01 09 10