Wednesday 12 August 2009 | By: Menaga Sathia

முறுக்கு / Murukku

தேவையான பொருட்கள்:

பதப்படுத்திய பச்சரிசி மாவு - 4 கப்
வறுத்த உளுத்த மாவு - 1 கப்
வறுத்த பயத்த மாவு - 1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
சீரகம் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு - தே.அளவு
எள் - 1 டேபிள்ஸ்பூன்


செய்முறை:

*அரிசி மாவு,உளுத்த மாவு,உருக்கிய நெய்,சீரகம்,உப்பு,பெருங்காயம்,எள்,பயத்தமாவு, எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும்.

*எண்ணெய் காயவைத்து (ரொம்ப புகை வரும்வரை காயக்கூடாது)தேன்குழல் அச்சில் போட்டு பொரித்தெடுக்கவும்.

மாவு பதப்படுத்தும் முறை:

பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து,கழுவி,தண்ணீரை வடிக்கட்டி துணியில் (நிழலில்) உலர்த்தவும்.உலர்ந்தபின் மிக்ஸியில் மாவாக அரைத்து சலிக்கவும்.சலித்த மாவை கடாயில் வாசம் வரும்வரை வறுக்கவும்.வறுத்த மாவை மீண்டும் சலித்து ஆற வைத்து காற்று புகாதவாறு எடுத்து வைக்கவும்.தேவையான போது உபயோகிக்கலாம்.


8 பேர் ருசி பார்த்தவர்கள்:

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னங்க இது/ தேன் சொன்னீங்க ஆனா பெருங்காயம் எல்லாம்? என்ன இது?

Jaleela Kamal said...

என்ன விஷேஷம் உங்கள் வீட்டில் ஒரே பலகாரம் பட்சணம் அசத்தலா இருக்கு.

Menaga Sathia said...

ஆஹா,அப்போ நீங்க செய்யும் போது தேன் சேர்த்து செய்துப் பாருங்க.நன்றி ராஜ்!!

Menaga Sathia said...

இன்னிக்கு கோகுலாஷ்டமி,அதான் பலகாரமெல்லாம் செய்தேன் ஜலிலாக்கா!!

Malini's Signature said...

கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் :))))

முருக்கு,சீடை எல்லாம் கிருஷ்ணருக்கு போக மீதி பார்சல் மறக்காமே அனுப்பிடுங்க மேனகா.....சிவானி குட்டி தான் கிருஷ்ணர் பாதம் வைக்க போறாங்களா?

Menaga Sathia said...

நன்றி ஹர்ஷினி அம்மா!!

நிச்சயம் கிருஷ்ணருக்கு போக மீதியை பார்சல் அனுப்பிவிட்டேன்பா.3 ச்டெப் வரை பாதம் அவங்க தான் போட்டாங்க,அதுக்கப்புறம் சரியா காட்டலைப்பா.அப்புறம் நானே போட்டுட்டேன்.

UmapriyaSudhakar said...

முறுக்கு சூப்பரா இருக்கு. நானும் இதே போல் தான் செய்வேன். நீங்க நெய்க்கு பதிலா பட்டர் சேர்த்தால் முறுக்கு கலர் மாறாமல் வரும்.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி உமா!!

//நீங்க நெய்க்கு பதிலா பட்டர் சேர்த்தால் முறுக்கு கலர் மாறாமல் வரும்.//சுட்டெடுக்கும் போது கலர் ஒருமாதிரி இருக்கேன்னு நினைத்தேன்.நீங்க சொன்னமாதிரி நெய் சேர்த்ததால் தான் கலர் மாறிவிட்டது போல.அடுத்த தடவை பட்டர் யூஸ் பண்றேன் உமா.கூடுதல் டிப்ஸ்க்கு நன்றி உங்களுக்கு!!

01 09 10