Thursday 27 August 2009 | By: Menaga Sathia

வாழைக்காய் வடை

தே.பொருட்கள்:

வாழைக்காய் -1 பெரியது
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
கொத்தமல்லித்தழை - சிறிது
கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்
அரிசிமவு - 1/2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:

*வாழைக்காயை தோலோடு கொதிக்கும் நீரில் வேகவைக்கவும்.

*வெந்ததும் தோலை நீக்கிவிட்டு மசிக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லி அனைத்தையும் பொடியாக அரிந்து வாழைக்காயோடு சேர்த்து மாவு வகைகளை உப்பு+சோம்பு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.

*பிசைந்த மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

பி.கு:

இந்த வடை ரொம்ப ஸாப்டாக இருக்கும்.அதுவும் மிளகாய் சாஸோடு சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை.

இந்த அளவில் 8 வடைகள் வந்தது.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

இங்கே வந்து பார்க்கவும்..
http://geethaachalrecipe.blogspot.com/2009/08/blog-post_27.html

Jaleela Kamal said...

வாழ‌க்காய் வ‌டை பார்க்க‌ ந‌ல்ல‌ இருக்கு
மேனகா நோன்புக்காக பஜ்ஜிக்கு நிறைய வாழக்காய் வாங்கி வைத்துள்ளேன் செய்து பார்க்கிறேன்.

Nandinis food said...

First time to your blog! You have wonderful collections.

GEETHA ACHAL said...

நானும் இதே மாதிரி வாழைக்காய் வடையினை செய்வேன்...மிகவும் சுவையாக இருக்கும்...

வேகவைத்த வாழைக்காயினை மசிக்க எனக்கு சிறிது கஷ்டமாக இருக்கும் என்பதால் நான் வாழைக்காயினை கேரட் துறுவலில் துறுவி விடுவேன்...

Priya Suresh said...

Arumai!!vazhakaai vadai pakkave saapdinam pola irruke..Next time vaazhkaai vangina try panniduven..

சாருஸ்ரீராஜ் said...

மேனகா வித்யாசமான ரெசிபி , செய்து பார்கிறேன்.

PriyaRaj said...

Vazhaikai vadai romba nalla eruku ....oru plate enga anupu inga pa....Vazhai poo vadai naan try panne erukayen .....aana Vazhaikai diff aa eruku...

Pavithra Elangovan said...

Wow thats really tempting vadai... feel like grabbing one from the screen

Unknown said...

romba nalla irukku..podimass than pannuven. this is new dish .. next time try pannaren...

Menaga Sathia said...

தங்கள் விருதுக்குக்கும்,கருத்துக்கும் நன்றி கீதா!!

Menaga Sathia said...

செய்துப்பார்த்து சொல்லுங்கள்,தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நந்தினி!!

Menaga Sathia said...

அடுத்த தடவை நிச்சயம் செய்துபாருங்கள் ப்ரியா.தங்கள் கருத்துக்கு நன்றி!!

Menaga Sathia said...

செய்துப் பாருங்க சாரு,நன்றி!!

Menaga Sathia said...

வாழைக்காய் வடை செய்துப்பாருங்கள் ப்ரியாராஜ்,நன்றி தங்கள் கருத்துக்கு.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

அடுத்தமுறை நிச்சயம் செய்துபாருங்கள்.தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி ஸ்ரீகர்!!

Anonymous said...

மேனகா வாழைப்பூ வடைதான் தெரியும் வாழைக்காய் வடை இப்போ தான் கேள்வி படுகிறேன்..கண்டிப்பாக ஒருநாள் செய்து பார்க்கணும்.

அன்புடன்,
அம்மு.

Menaga Sathia said...

செய்துப்பார்த்து சொல்லுங்கள் அம்மு,நன்றி தங்கள் கருத்துக்கு!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

மேனகா வாழைப்பூ வடைதான் தெரியும் வாழைக்காய் வடை இப்போ தான் கேள்வி படுகிறேன்..கண்டிப்பாக ஒருநாள் செய்து தர சொல்லணும்.. இப்ப வேர டையட்ல இருக்கேன்!!:(

Menaga Sathia said...

எப்போ வேணும்னு சொல்லுங்க,செய்து தரேன் .டயட்டாவது மண்ணாவது அதெல்லாம் மூட்டைக் கட்டுங்க.செய்து தரேன் சாப்பிடுங்க ராஜ்!!

01 09 10