Wednesday 13 May 2009 | By: Menaga Sathia

ஜவ்வரிசி கஞ்சி வத்தல் / Sago Kanchi Vathal

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 4 கப்
உப்பு - தேவைக்கு

அரைக்க:

சீரகம் - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - 7

செய்முறை:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தன்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*கொதித்ததும் அரைத்த விழுது+உப்பு+ஜவ்வரிசி சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை ஒரு ஸ்பூனால் கொஞ்ச கொஞ்சமா ஊற்றி எடுக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

பி.கு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.
4. பாதி தண்ணீர்+ பாதி தக்காளி சாறு சேர்த்து செய்தால் தக்காளி ஜவ்வரிசி வத்தலாகும். இன்னும் நல்லாயிருக்கும்.

9 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா. எனக்காக இந்த குறிப்பினை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி. கண்டிப்பாக இந்த வெயில் காலத்திற்கு செய்ய வேண்டிய குறிப்பு.

GEETHA ACHAL said...

மிகவும் நன்றி மேனகா. எனக்காக இந்த குறிப்பினை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி. கண்டிப்பாக இந்த வெயில் காலத்திற்கு செய்ய வேண்டிய குறிப்பு.

Menaga Sathia said...

அக்‌ஷதாவுக்கு செய்துகுடுங்க.ரொம்ப பிடிக்கும்.பாப்பாவுக்கு பிடித்திருந்தால் எனக்கும் சந்தோஷமே!!

Unknown said...

அடிக்கும் வெயிலை வீண்ணாக்காமல் வடகம் போடலாம்.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி பாயிசா!!

Jaleela Kamal said...

மேனகா என் அம்மா நாங்க வெளி ஊரில் இருந்து சென்னை வரும் போது எல்லோருக்கும் பெரிய பெரிய அரிசி டின்னில் போட்டு எடுத்து வருவார்கள்.

பழைய ஞாபகம் இதேல்லாம் மாடியில் காயவைத்து பாது காக்கும் வேலை என்னுடையது அப்போ.


இப்ப பிராண்ஸில் இதை செய்ததா?


இங்குச‌ரியான‌ வெயில் ஆனால் இது போல் காய‌வைத்தால் பொடி ம‌ண் அதிக‌ம் எல்லாம் வீணாகிடும்.

Menaga Sathia said...

எங்கம்மாவும் வெயில் காலத்தில் நிறைய போட்டு வைப்பாங்க.எனக்கு வத்தல்ன்னா ரொம்ப உயிர்.ஆமாக்கா இந்த வத்தலை நான் இங்கு பிரான்சில் போட்டது தான்.

ஏன் நீங்கள் கொஞ்ச கொஞ்ச போட்டு வெயிலில் ஒரு டேபிளில் துணி போட்டு போடலாமே.

என் தோட்டத்தில் சிமெண்ட் போட்டதால் நான் தரையில் தான் போட்டேன்.நீங்கள் நான் சொன்ன மாதிரி செய்து பாருங்கக்கா.

ஸாதிகா said...

அருமையான வத்தல்.மாவில் எலுமிச்சை ரசம் சிறிது சேர்க்கலாமே?

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!! எலுமிச்சை சாறு எதர்க்கு அக்கா சேர்க்கனும்?? சொல்லுங்களேன்...நிறம் வெள்ளையாக இருப்பதற்க்காகவா??

01 09 10